Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Science Books Tamil Medium Plant and Animal Hormones

Samacheer Kalvi 10th Science Books Tamil Medium Plant and Animal Hormones

அறிவியல் : அலகு 16 : தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு ___________

  1. மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களைக் குட்டையாக்குவது.
  2. குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது
  3. வேர் உருவாதலை ஊக்குவிப்பது
  4. இளம் இலைகள் மஞ்சளாவது

விடை ; குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது

2. நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்

  1. சைட்டோகைனின்
  2. ஆக்சின்
  3. ஜிப்ரல்லின்
  4. எத்திலின்

விடை ; ஆக்சின்

3. பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?

  1. 2,4 D
  2. GA 3
  3. ஜிப்ரல்லின்
  4. IAA

விடை ; 2,4 D

4. அவினா முளைக்குருத்து உறை ஆய்வு ___________ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.

  1. டார்வின்
  2. N ஸ்மித்
  3. பால்
  4. F.W வெண்ட்

விடை ; F.W வெண்ட்

5. கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவை அதிகரிக்க அவற்றின் மீது ___________ தெளிக்கப்படுகிறது.

  1. ஆக்சின்
  2. சைட்டோகைனின்
  3. ஜிப்ரல்லின்கள்
  4. எத்திலின்

விடை ; ஆக்சின்

6. LH ஐ சுரப்பது _________.

  1. அட்ரினல் சுரப்பி
  2. தைராய்டு சுரப்பி
  3. பிட்யூட்டரியின் முன் கதுப்பு
  4. ஹைபோ தலாமஸ்

விடை ; பிட்யூட்டரியின் முன் கதுப்பு

7. கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்.

  1. பிட்யூட்டரி சுரப்பி
  2. அட்ரினல் சுரப்பி
  3. உமிழ் நீர் சுரப்பி
  4. தைராய்டு சுரப்பி

விடை ; உமிழ் நீர் சுரப்பி

8. கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?

  1. கணையம்
  2. சிறுநீரகம்
  3. கல்லிரல்
  4. நுரையீரல்

விடை ; கணையம்

9. கீழுகண்டவற்றுள் தலைமைச் சுரப்பி என கருதப்படுவது எது?

  1. பினியல் சுரப்பி
  2. பிட்யூட்டரி சுரப்பி
  3. தைராய்டு சுரப்பி
  4. அட்ரினல் சுரப்பி

விடை ; பிட்யூட்டரி சுரப்பி

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

1. செல் நீட்சியடைதல், நுனி ஆதிக்கம் ஆகியவற்றை உருவாக்குவதும், உதிர்தலை தடை செய்வதும் _________ ஹார்மோன் ஆகும்.

விடை ; ஆக்சின்

2. தாவர உறுப்புகளின் உதிர்தல் மற்றும் கனி பழுப்பதை துரிதப்படுத்தும் வாயு நிலை ஹார்மோன் _________ ஆகும்.

விடை ; எத்திலின்

3. இலைத்துளையை மூடச் செய்யும் ஹார்மோன் _________

விடை ; அப்சிலிக் அமிலம்

4. ஜிப்ரல்லின்கள் _________ தாவரங்களில் தண்டு நீட்சியடைவதைத் தூண்டுகின்றன.

விடை ;இலையடுக்கம் கொண்ட (அ) மக்காச்சோளம் மற்றும் பட்டாணி

5. நுனி ஆதிக்கத்தின் மீது எதிர்மறை விளைவு கொண்ட ஹார்மோன் _________ ஆகும்.

விடை ; சைட்டோகைனின்

6. உடலில் கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது _________.

விடை ; பாராதார்மோன்

7. லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள பீட்டா செல்கள்_________ ஐச் சுரக்கிறது.

விடை ; இன்சுலின்

8. தைராய்டு சுரப்பியின் வளர்ச்சி மற்றும் பணிகளை _________கட்டுப்படுத்துகிறது.

விடை ; தைராய்டைத் தூண்டும் ஹார்மோன்

9. குழந்தைகளில் தைராய்டு ஹார்மோன்களின் குறைவான சுரப்பின் காரணமாக _________ உண்டாகிறது.

விடை ; கிரிடனிசம்

III. பொருத்துக.

1.

பகுதி Iபகுதி IIபகுதி III
ஆக்சின்ஜிப்ரில்லா பியூஜிகுராய்உதிர்தல்
எத்திலின்தேங்காயின் இளநீர்கணுவிடைப் பகுதி நீட்சி
அப்சிசிக் அமிலம்முளைக் குருத்து உறைநுனி ஆதிக்கம்
சைட்டோகைனின்பசுங்கணிகம்பழுத்தல்
ஜிப்ரல்லின்கள்கனிகள்செல் பகுப்பு

விடை ; 1 – C – C, 2 – E – D, 3 – D – A, 4 – B – E, 5 – A – B

2.

ஹார்மோன்கள்குறைபாடுகள்
தைராக்சின்அக்ரோமேகலி
இன்சுலின்டெட்டனி
பாராதார்மோன்எளிய காய்டர்
வளர்ச்சி ஹார்மோன்டயாபடிஸ் இன்சிபிடஸ்
ADHடயாபடிஸ் மெல்லிடஸ்

விடை ; 1 – C, 2 – E, 3 – B, 4 – A, 5 – D

IV. சரியா அல்லது தவறா என எழுதவும். தவறாயின் சரியான கூற்றினை எழுதவும்

1. செல்பகுப்பைத் தூண்டி கனிம ஊட்ட இடப்பெயர்ச்சியை ஊக்குவிக்கும் தாவர ஹார்மோன் சைட்டோகைனின் ஆகும். ( சரி )

2. ஜிப்ரல்லின்கள் தக்காளியில் கருவுறாக் கனிகளை உருவாக்குகின்றன. ( சரி )

3. எத்திலின் இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் மூப்படைவதைத் தடை செய்கின்றது. ( தவறு )

  • எத்திலின் இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் மூப்படைவதைத் விரைவு செய்கின்றது.

4. எக்சாப்தல்மிக் காய்டர், தைராக்சின் மிகைச் சுரப்பின் காரணமாக ஏற்படுகிறது. ( சரி )

5. பிட்யூட்டரி சுரப்பி நான்கு கதுப்புகளாக பிரிந்துள்ளது. ( தவறு )

  • பிட்யூட்டரி சுரப்பி இரண்டு கதுப்புகளாக பிரிந்துள்ளது.

6. கார்பஸ் லூட்டியம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைச் சுரக்கிறது. ( தவறு )

  • கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோனைச் சுரக்கிறது.

V. கூற்று மற்றும் காரணம் வகை கேள்விகள்.

பின்வரும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாக குறிக்கவும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

1. கூற்று : சந்தைப்படுத்தப்படும் காய்கறிகளில் சைட்டோகைனினைத் தெளிப்பது அவை பல நாட்கள் கெடாமல் இருக்கச் செய்யும்.

காரணம் : சைட்டோகைனின்கள் கனிம ஊட்ட இடப்பெயர்ச்சியினால் இலைகள் மற்றும் ஏனைய உறுப்புகள் முதுமையடைவதைத் தாமதப்படுத்துகின்றன.

  • அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

2. கூற்று : பிட்யூட்டரி சுரப்பி “தலைமை சுரப்பி” என்று அழைக்கப்படுகிறது.

காரணம் : இது பிற நாளமில்லா சுரப்பிகளைக் கட்டுபடுத்துகிறது.

  • அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

3. கூற்று : டயாபடிஸ் மெல்லிடஸ் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

காரணம் : இன்சுலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

  • அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

VI. ஓரிரு வார்த்தைகளில் விடையளி

1. வெள்ளரியில் ஆண்மலர்கள் உற்பத்தியாவதைத் தூண்டும் ஹார்மோன் எது?

வெள்ளரியில் ஆண்மலர்கள் உற்பத்தியாவதைத் தூண்டும் ஹார்மோன் ஜிப்ரல்லின்கள் ஆகும்.

2. செயற்கை ஹார்மோன் ஒன்றின் பெயரினை எழுதுக.

2, 4 D – 2, 4 டைகுளோரா பீனாக்சி அசிட்டிக் அமிலம்

3. தக்காளியில் கருவுறாக் கனியைத் தூண்டும் ஹார்மோன் எது?

தக்காளியில் கருவுறாக் கனியைத் தூண்டும் ஹார்மோன் ஜிப்ரல்லின்கள் ஆகும்.

4. குழந்தைப் பேற்றிற்குப்பின் பால் சுரக்க காரணமான ஹார்மோன் எது?

குழந்தைப் பேற்றிற்குப்பின் பால் சுரக்க காரணமான ஹார்மோன் புரோலாக்டின் (அ) லாக்டோஜனிக் ஹார்மோன் ஆகும்.

5. மனிதரில் நீர் மற்றும் தாதுஉப்புக்களின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனின் பெயரைக் கூறு.

  • எபிநெஃப்ரின் (அட்ரினல்)
  • நார் எபிநெஃப்ரின் (நார் அட்ரினலின்)

இந்த இரண்டு ஹார்மோன்களளும் மனிதர்களின் அவசர காலத்தில் சுரப்பதால் இவை அவசரகால ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன.

6. மனிதர்களில் அவசர கால நிலைகளை எதிர் கொள்ள சுரக்கும் ஹார்மோன் எது?

கணையம்

7. செரித்தலுக்குரிய நொதிகளையும், ஹார்மோன்களையும் எந்த சுரப்பி சுரக்கிறது?

8. சிறுநீரகத்தோடு தொடர்புடைய பணிகளைச் செய்யும் ஹார்மோன்களின் பெயர்களைக் கூறு.

பிட்யூட்டரியின் பின் கதுப்பு (நியூரோஹைப்பபோபைஸிஸ்) சுரக்கும் ஹார்மோன்

  1. வாசோபிரஸ்ஸின்
  2. ஆக்ஸிடோசின்

VII. மிகக் குறுகிய விடையளி

1. செயற்கை ஆக்சின்கள் என்பவை யாவை? எ.கா தருக.

ஆக்சின்களை ஒத்த பண்புகளைக் கொண்ட செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஆக்சின்கள் செயற்கை ஆக்சின்கள் என அழைக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டு: 2, 4 D (2, 4 டைகுளோரோ பீனாக்சி அசிட்டிக் அமிலம்)

2. “போல்டிங்” என்றால் என்ன? அதை எப்படி செயற்கையாக ஊக்குவிக்கலாம்?

போல்டிங் என்பது தாவரங்களில் பூக்கும் தண்டினை உற்பத்தி செய்தல் ஆகும்.

நெருங்கிய இலையடுக்கம் கொண்ட தாவரங்களின் மீது ஜிப்பரலின்களைத் தெளிக்கும்போது திடீரென தண்டு நீட்சி அடைவதும் அதன் தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்கின்றன. இதற்கு போல்டிங் என்று பெயர்.

3. அப்சிசிக் அமிலத்தின் ஏதேனும் இரண்டு வாழ்வியல் விளைவுகளைத் தருக.

  • ABA உதிர்தல் நிகழ்வை (இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவை கிளையிலிருந்து தனித்து உதிர்ந்து விடுவது) ஊக்குவிக்கிறது.
  • நீர் இறுக்கம் மற்றும் வறட்சிக் காலங்களில் ABA இலைத் துளையை மூடச் செய்கிறது.

4. தாவரங்களில் இலை மற்றும் கனி உதிர்தலைத் தடைசெய்ய நீ என்ன செய்வாய்? தகுந்த காரணங்களுடன் கூறுக.

தாவரங்களில் இலை மற்றும் கனி உதிர்தலைத் தடைசெய்ய ஆச்சினைத் தெளிக்க வேண்டும்

காரணம் ; ஆக்சின்கள் உதர்தல் அடுக்கு உருவாதலை தடை செய்கின்றன.

5. வேதியியல் தூதுவர்கள் என்பவை யாவை?

செய்தி பரிமாற்றத்திற்கு உதவும் சேர்மம் வேதியியல் தூதுவர்கள் என அழைக்கப்படுகின்றன. ஹார்மோன்கள் வேதியில் தூதுவர்களாக செயல்புரிகின்றன. இவை சிறப்பான சுரப்பிகள் மூலம் உற்பத்தி செய்கின்றன.

6. நாளமுள்ளச் சுரப்பிக்கும், நாளமில்லாச் சுரப்பிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

நாளமுள்ளச் சுரப்பி

  1. நாளங்கள் இல்லை
  2. இவற்றின் சுரப்புகள் ஹார்மோன்கள் எனப்படும்.
  3. இரத்தின் மூலம் உடலில் பரவுகிறது.
  • பிட்யூட்டரி சுரப்பி
  • தைராய்டு சுரப்பி
  • பாரா தைராய்டு சுரப்பி
  • கணையம் (லாங்கர்ஹான் திட்டுகள்)
  • அட்ரினல் சுரப்பி ( கார்டக்ஸ் மற்றும் மெடுல்லா)
  • இனப்பெருக்க சுரப்பிகள் (விந்தகம் மற்றும் அண்டச் சுரப்பி)
  • தைமஸ் சுரப்பி

நாளமில்லாச் சுரப்பி

  1. நாளங்கள் உண்டு
  2. உமிழ்நீர் சுரப்பிகள், பால் சுரப்பிகள் மற்றும் வியர்வை சுரப்பிகள்
  3. உமிழ் நீர் சுரப்பியைத் தவிர மற்ற இரண்டு சுரப்பிகள் உடலின் வெளிப்புறத்தில் உள்ளன.

7. பாராதார்மோனின் பணிகள் யாவை?

மனித உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. இரத்தத்தில் கால்சியம் அளவை பராமரிப்பதற்காக எலும்பு, சிறுநீரகம் மற்றும் ஆகியவற்றில் செயலாற்றகிறது.

8. பிட்யூட்டரி சுரப்பியின் பின் கதுப்பில் சுரக்கும் ஹார்மோன்கள் யாவை? அவை எந்த திசுக்களின் மேல் செயல்படுகின்றன?

அ) வாசோபிரஸ்ஸின் அல்லது ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன் (ADH)

சிறுநீரக குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுதலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும் நீர் இழப்பைக் குறைக்கிறது. எனவே இது ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன் (சிறுநீர் பெருக்கெதிர் ஹார்மோன்) எனப்படுகிறது. ADH குறைவாக சுரப்பதால், நீர் மீள உறிஞ்சப்படுவது குறைவதால் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றும் நிலை (பாலியூரியா) உண்டாகிறது. இக்குறைபாடு டயாபடீஸ் இன்சிபிடஸ் எனப்படும்.

ஆ) ஆக்ஸிடோசின்

பெண்களின் குழந்தைப்பேற்றின் போது கருப்பையை சுருக்கியும், விரிவடையச் செய்தும், குழந்தைப்பேற்றுக்கு பிறகு பால் சுரப்பிகளில் பாலை வெளியேற்றுவதற்கும் காரணமாகிறது.

9. தைராய்டு ஹார்மோன்கள் ஏன் “ஆளுமை ஹார்மோன்கள்” என்று அழைக்கப்படுகின்றன?

உடல், மனம் மற்றும் ஆளுமை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது. இது “ஆளுமை ஹார்மோன்” என்றும் அழைக்கப்படுகிறது

10. எந்த ஹார்மோன் உற்பத்திக்கு அயோடின் அவசியமாகிறது? நாம் உட் கொள்ளும் உணவில் அயோடின் குறைவாக இருப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு அயோடின் அவசியமாகிறது. நாம் உட்கொள்ளும் உணவில் அயோடின் குறைவாக இருந்தால் எளிய காய்டர் ஏற்படும்.

VIII. குறுகிய விடையளி

1 அ. வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன் எது? தாவரங்களில் அதன் மூன்று செயல்பாடுகளை எழுதுக.

எத்திலின் ஒரு வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன்.

  • எத்திலின் கனிகள் பழுப்பதை ஊக்குவிக்கிறது.
  • எத்திலின் இருவிதையிலைத் தாவரங்களில் வேர் மற்றும் தண்டு நீட்சி அடைவதைத் தடைசெய்கிறது.
  • எத்திலின் இலைகள் மற்றும் மலர்கள் மூப்படைவதை விரைவுபடுத்துகிறது

ஆ தாவரங்களின் இறுக்க நிலை ஹார்மோன் என்று அழைக்கப்படுவது எது? ஏன்?

அப்சிசிக் அமிலம் (ABA) உதிர்தல் மற்றும் உறக்க நிலையை ஒழுங்குபடுத்தும் வளர்ச்சி அடக்கி ஆகும். இது பல்வேறு வகையான இறுக்க நிலைகளுக்கு எதிராக தாவரங்களின் சகிப்புத் தன்மையை அதிகரிக்கிறது. எனவே இது ‘இறுக்கநிலை ஹார்மோன்’ என அழைக்கப்படுகிறது. தாவரங்களின் பசுங்கணிகங்களில் இந்த ஹார்மோன் காணப்படுகிறது.

2. வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் முளைக் குருத்து உறையின் நுனியில் உற்பத்தி  செய்யப்படுகிறது என்பதை விளக்கும் ஆய்வினை விவரி.

  • ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட் (1903 – 1990) என்ற டச்சு நாட்டு உயிரியல் அறிஞர் தாவரங்களில் ஆக்சின் இருப்பதையும், அதன் விளைவுகளையும் விளக்கினார். அவர் அவினா முளைக்குருத்து உறையில் வரிசைக்கிரமமான பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
  • இவர் தனது முதல் ஆய்வில் ஓட்ஸ் (அவினா) தாவரத்தின் முளைக்குருத்து உறையின் நுனியை நீக்கினார். நுனி நீக்கப்பட்ட முளைக்குருத்து உறை வளரவில்லை. இது வளர்ச்சிக்குத்தேவையான ஏதோ ஒரு பொருள் முளைக்குருத்து உறையின் நுனியிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதைக் காட்டியது.
  • அவர் தனது இரண்டாவது ஆய்வில் அகார் துண்டை, நுனி நீக்கப்பட்ட முளைக்குருத்து உறையின் மீது வைத்தார். முளைக்குருத்து உறைநுனி எவ்வித பதில் விளைவையும் காட்டவில்லை. அவர் தனது அடுத்த ஆய்வில் முளைக்குருத்து உறையின் நுனியை வெட்டி எடுத்து, அதனை அகார் துண்டத்தின் மீது வைத்தார்.
  • ஒரு மணி நேரத்திற்கு பின்னர் நுனியை நீக்கிவிட்டு, அகார் துண்டத்தை நுனி நீக்கப்பட்ட முளைக்குருத்து உறையின் மீது வைத்தார். அது நேராக வளர்ந்தது. இந்த ஆய்வானது முளைக்குருத்து உறையின் நுனியில் இருந்து அகார் துண்டத்துள் ஊடுருவி சென்ற ஏதோ ஒரு வேதிப்பொருள் தான் வளர்ச்சியைத் தூண்டியது என்பதைக் காட்டியது.
  • தன்னுடைய ஆய்வுகளில் இருந்து முளைக்குருத்து உறையின் நுனியில் இருந்து ஊடுருவிய வேதிப்பொருளே வளர்ச்சிக்குக் காரணம் என்று வெண்ட் முடிவு செய்தார். அந்த வேதிப்பொருளுக்கு “ஆக்சின்” என்று பெயரிட்டார். அதன் பொருள் “வளர்ச்சி” என்பது ஆகும்.

3. ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.

  • தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும்போது, அது கணுவிடைப்பகுதியின் அசாதாரண நீட்சியைத் தூண்டுகிறது.

(எ.கா) மக்காச்சோளம் மற்றும் பட்டாணி.

  • நெருங்கிய இலையடுக்கம் கொண்ட தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும் போது, திடீரென தண்டு நீட்சியடைவதும் அதன் தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்கின்றன. இதற்கு போல்டிங் (Bolting) என்று பெயர்.
  • ஜிப்ரல்லின்கள் இருபாலிணைந்த தாவரங்களில் (ஓரில்லத் தாவரங்களில்) ஆண் மலர்கள் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன (வெள்ளரி).
  • ஜிப்ரல்லின்கள் உருளைக் கிழங்கின் உறக்க நிலையை நீக்குகின்றன.
  • விதைகளற்ற கனிகளைத் (கருவுறாக்கனிகள் – கருவுறுதல் நடைபெறாமலேயே கனிகள் உருவாதல்) தூண்டுவதில் ஆக்சின்களை விட ஜிப்ரல்லின்கள் திறன் மிக்கவை. (எ.கா) தக்காளி.

4. ஈஸ்ட்ரோஜன்கள் எங்கு உற்பத்தியாகின்றன? மனித உடலில் இவற்றின் பணிகள் யாவை?

ஈஸ்ட்ரோஜன், வளர்ச்சியுறும் அண்டத்தின் கிராஃபியன் செல்களினால் சுரக்கப்படுகின்றது.

ஈஸ்ட்ரோஜனின் பணிகள்

  • இது பருவமடைதலின் உடல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
  • அண்ட செல் உருவாக்கத்தைத் துவக்குகிறது
  • அண்ட பாலிக்கிள் செல்கள் முதிர்வடைவதைத் தூண்டுகிறது.
  • இரண்டாம் நிலை பால் பண்புகள் (மார்பக வளர்ச்சி, குரலில் ஏற்படும் மாற்றம் போன்றவை) வளர்ச்சியடைவதை ஊக்குவிக்கிறது.

5. ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன் (ADH) மற்றும் இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலைகள் யாவை? இவை இரண்டும் எவ்வாறு வேறுபடுகிறது?

ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன் (ADH)இன்சுலின்
ADH குறைவாக சுரப்பதால் டயாபடீஸ் இன்சிபிடஸ் எற்படுகிறதுஇன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படுவதால் உண்டாவது டயாபடீஸ் மெலிடஸ்
ADH குறைவாக சுரப்பதால் நீர் மீள உறிஞ்சப்படுவது குறைவதால் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றும் நிலை (பாலியூரியா) உண்டாகிறது.சிறுநீரில் அதிகப்படியான குளுக்கோஸ் வெளியேறுதல் (கிளைக்கோசூரியா).

IX. உயர் சிந்தனை திறன் வினாக்கள்

1. பின்வருவனவற்றில் என்ன நடைபெறும் என எதிர்பார்க்கிறாய்?

அ. ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்

ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளிக்கும்போது, அது போல்டிங்ககை தூண்டுகிறது. இது விதை உற்பத்தியை தூண்டும் இயற்கை வழீ முயற்சி ஆகும்.

ஆ. அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்

அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பப்படும்போது அழுகிய பழத்தில் இருந்து உற்பத்தியாகும் எத்திலின் பழுக்காத பழத்தினை முதிரச்சி அடைய செய்து விரைவாக பழுக்க தூண்டம்

இ. வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்ப்படாத போது

வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்ப்படாத போது, செல்பகுப்பு, வளரச்சி உருவத்தோற்றவியல் முதலியவற்றை காண இயலாது.

2. ஜப்பானில் நெற்பயிரானது ஜிப்ரல்லா பியூஜிகுராய் என்னும் பூஞ்சையால் ஏற்பட்ட பக்கானே நோயினால் பாதிக்கப்பட்டது. அதற்குக் காரணம் இப்பூஞ்சை உற்பத்தி செய்த ஹார்மோன் என முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

அ. இந்த செயல்முறையில் சம்மந்தப்பட்ட ஹார்மோனை அடையாளம் காண்க.

ஜிப்ரல்லின்கள்

ஆ. இந்த ஹார்மோனின் எப்பண்பு இந்த நோயை விளைவித்தது?

இந்த நோயை விளைவிக்க காரணமான செயல்திறன் வாய்ந்த பொருள் ஜிப்ரல்லிக் அமிலம் என அடையாளம் காணப்பட்டது.

இ. இந்த ஹார்மோனின் இரண்டு பணிகளைக் கூறுக.

  • தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும்போது, அது கணுவிடைப்பகுதியின் அசாதாரண நீட்சியைத் தூண்டுகிறது.
    (எ.கா) மக்காச்சோளம் மற்றும் பட்டாணி.
  • நெருங்கிய இலையடுக்கம் கொண்ட தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும் போது, திடீரென தண்டு நீட்சியடைவதும் அதன் தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்கின்றன. இதற்கு போல்டிங் (Bolting) என்று பெயர்.

3. செந்திலுக்கு, அதிக இரத்த அழுத்தம், பிதுங்கிய கண்கள் மற்றும் அதிகமான உடல் வெப்ப நிலை உள்ளது. இந்நிலைக்குக் காரணமான நாளமில்லாச் சுரப்பியை அடையாளம் கண்டு அதில் சுரக்கும் எந்த ஹார்மோன், இந்நிலைக்குக் காரணம் எனக் கண்டறிந்து எழுதுக.

இதற்குக் காரணமான நாளமில்லாச் சுரப்பி தைராய்டு சுரப்பி ஆகும். காரணமான ஹார்மோன் தைராய்டு ஹார்மோன் ஆகும். செந்திலின் நிலைக்கு காரணம் கிரேவின் நோய் ஆகும். ஹைபர் தைராய்டிசம் நிலையில் தைராய்டு ஹார்மோன்கள் அதிகரித்த சுரப்பின் காரணமாக கிரேவின் நோய் உண்டாகிறது.

4. சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்தான். தேர்வு துவங்கும் முன், அவனுக்கு அதிகப்படியான வியர்வையும், இதயத்துடிப்பும் காணப்பட்டன. இந்நிலை அவனுக்கு ஏன் ஏற்படுகிறது?

இந்நிலை அவனுக்கு அட்ரினலின் சுரப்பதால் ஏற்படுகிறது. தேர்வு பயத்தின் காரணமாக அட்ரினலின் சுரந்து அதிகப்படியான வியர்வை, அதிகரித்த இதயத்துடிப்பு, மூச்சுவீதம் அதிகரித்தல் போனற் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

5. சூசனின் தகப்பனார், மிகவும் சோர்வடைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், அவரது இரத்த சர்க்கரை அளவைப் பராமாரிக்க தினமும் ஊசி மூலம் மருந்து செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டார். அவருக்கு இந்நிலை ஏற்படக் காரணமென்ன? இதனை தடுக்கும் வழி முறைகளைக் கூறுக.

அடிக்கடி சிறுநீர் கழித்தல் (பாலியூரியா) என்னும் அறிகுறி இரத்தத்தில் குளகோஸின் அளவு மிகவும் அதிகரிக்கும் போது ஏற்படும் டயாபடீஸ் மெலிடஸ் என்னும் நோய் உள்ளவரிகளிடம் காணப்படும்.

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

சீரான உடற்பயிற்சி, சிறந்த உணவுக்கட்டுப்பாடு முதலியவற்றின் மூலம் டயாபடீஸ் மெலிடஸ் நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *