Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Science Books Tamil Medium Carbon and its Compounds

Samacheer Kalvi 10th Science Books Tamil Medium Carbon and its Compounds

அறிவியல் : அலகு 11 : கார்பனும் அதன் சேர்மங்களும்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு C3H6 அந்தத் சேர்மத்தின் வகை

  1. அல்கேன்
  2. அல்கீன்
  3. அல்கைன்
  4. ஆல்கஹால்

விடை ; அல்கீன்

2. ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3 – மெத்தில்பியூட்டன் – 1 – ஆல் இது எந்த வகைச் சேர்மம்

  1. ஆல்டிஹைடு
  2. கார்பாசிலிக் அமிலம்
  3. கீட்டோன்
  4. ஆல்கஹால்

விடை ; ஆல்கஹால்

3. IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை முன்னொட்டு _________

  1. ஆல்
  2. ஆயிக் அமிலம்
  3. ஏல்
  4. அல்

விடை ; ஏல்

4. பின்வரும் படி வரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது?

  1. C3H8 and C4H10
  2. C2H2 and C2H4
  3. CH4 and C3H6
  4. C2H5OH and C4H8OH

விடை ; 3C3H8 and C4H10

5. C2H5OH + 3 O2→2 CO2 + 3 H3O என்பது

  1. எத்தனால் ஒடுக்கம்
  2. எத்தனால் எரிதல்
  3. எத்தனாயிக் அமிலம் ஆக்சிஜனேற்றம்
  4. எத்தனேல் ஆக்சிஜனேற்றம்

விடை ; எத்தனால் எரிதல்

6. எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம்——-

  1. 95.5 %
  2. 75.5 %
  3. 55.5 %
  4. 45.5 %

விடை ; 95.5 %

7. கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது.

  1. கார்பாக்சிலிக் அமிலம்
  2. ஈதர்
  3. எஸ்டர்
  4. ஆல்டிஹைடு

விடை ; ஈதர்

8. TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக் குறிக்கிறது.

  1. தாது உப்பு
  2. வைட்டமின் ‘
  3. கொழுப்பு அமிலம்
  4. கார்போஹைட்ரேட்

விடை ; கொழுப்பு அமிலம்

9. கீழ்கண்டவற்றுள் டிடர்ஜெண்ட்டை பற்றி தவறான கூற்று எது?

  1. நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்பு
  2. சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு
  3. டிடர்ஜெண்ட்டின் அயனி பகுதி SO3- Na+
  4. கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்.

விடை ; நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்பு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒரு சேர்மத்தின் சிறப்பு பண்புகளுக்கு காரணமான அணு அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதி அச்சேர்மத்தின் ________________ ஆகும்.

விடை ; வினைச்செயல் தொகுதி

2. அல்கைனின் பொதுவான மூலக்கூறு வாய்ப்பாடு ________________

விடை ; CnH2n-2

3. IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்பை குறிப்பிடுவது ______________ (அடிப்படைச் சொல் / பின்னொட்டு முன்னொட்டு)

விடை ; அடிப்படைச்சொல்

4. (நிறைவுற்ற / நிறைவுறா) ______________ சேர்மங்கள் புரோமின் நீரை நிறமாற்றம் அடையச் செய்யும்.

விடை ; நிறைவுறா

5. அடர் சல்பியூரிக் அமிலத்தைக் கொண்டு எத்தனாலை நீர் நீக்கம் செய்யும் பொழுது ________________ (ஈத்தீன் / ஈத்தேன்) கிடைக்கிறது.

விடை ; ஈத்தீன்

6. 100% தூய ஆல்கஹால் ________________ என்று அழைக்கப்படுகிறது.

விடை ; தனி ஆல்கஹால்

7. எத்தனாயிக் அமிலம் _______________ லிட்மஸ் தாளை ________________ ஆக மாற்றுகிறது.

விடை ; நீல, சிவப்பு

8. கொழுப்பு அமிலங்களை காரத்தைக் கொண்டு நீராற்பகுத்தல் ________________ எனப்படும்.

விடை ; சோப்பாக்கல் வினை

9. உயிரிய சிதைவு டிடர்ஜெண்ட்கள் ________________ (கிளை / நேரான) சங்கிலி தொடரினை உடையவை.

விடை ; நேரான

III. பொருத்துக:

1. வினைச் செயல் தொகுதி – OHபென்சீன்
2. பல்லின வளையச் சேர்மங்கள்பொட்டாசியம் ஸ்டிரேட்
3. நிறைவுறா சேர்மங்கள்ஆல்கஹால்
4. சோப்புபியூரான்
5. கார்போ வளையச் சேர்மங்கள்ஈத்தீன்

விடை ; 1 – E, 2 – D, 3 – A, 4 – B, 5- C

IV.  பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப் பட்டுள்ளன. பின்வருவனவற்றுள்ளுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க. கீழ்கண்ட வினாக்களுக்கு பின்வரும் தரவுகளைப் பயன்படுத்தி விடையளி.

அ. A மற்றும் R சரி R, A ஐ விளக்குகிறது.
ஆ. A சரி R தவறு .
இ. A தவறு R சரி
ஈ.  A மற்றும் R சரி R, A க்கான் சரியான விளக்கம் அல்ல.

1. கூற்று A: கடின நீரில் சோப்பை விட டிடர்ஜெண்ட்கள் சிறப்பாக செயல் புரிகின்றன.

காரணம் R: டிடர்ஜெண்ட்கள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புக்களை வீழ்படிய செய்வதில்லை.

  • அ. A மற்றும் R சரி R, A ஐ விளக்குகிறது.

2. கூற்று: அல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள்

காரணம்: ஹைட்ரோ கார்பன்கள் சகபிணைப்பைப் பெற்றுள்ளன.

  • ஈ.  A மற்றும் R சரி R, A க்கான் சரியான விளக்கம் அல்ல.

V. சிறுவினாக்கள்.

1. எளிய கீட்டோனின் பெயரையும் மூலக்கூறு வாய்ப்பாட்டையும் எழுதுக.

பொதுப்பெயர்= அசிட்டோன்
IUPAC பெயர்= புரோப்னோன்
மூலக்கூறு வாய்ப்பாடு= CH3COCH3 (or) C3H6O

2. கீழ்க்கண்ட சேர்மங்களின் கார்பன் சங்கிலி தொடரைப் பொறுத்து வகைப்படுத்துக மற்றும் மூலக்கூறு வாய்ப்பாடை எழுதுக.

1. புரப்பேன் – CH3 – CH2 – CH3.

2. பென்சீன் – C6H6

3. வளைய பியூட்டேன் – C4H8

4. பியூரான் – C6HO

3. எத்தனாயிக் அமிலம் எத்தனாலில் இருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது. அவ்வினைக்கான சமன்பாட்டை எழுதுக.

எத்தனாலை காரங்கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் (அ) அமிலம் கலந்த பொட்டாசிம்-டை-குரோமேட் கரைசலை கொண்டு ஆக்ஸிஜனேற்றம் அடையச் செய்து எத்தனாயிக் அமிலத்தை தயாரிக்கலாம்.

 CH3CH3OHஎத்தனால்KMnO4/OH→2(O) CH4COOH + H2Oஎத்தனாயிக் அமிலம்

EthanolEthanoic Acid

4. டிடர்ஜெண்ட்கள் எவ்வாறு நீரை மாசுப்படுத்துகின்றன. இம்மாசுப்பாட்டினை தவிர்க்கும் வழிமுறை யாது?

சில டிடர்ஜெண்டகள் மிகுந்த கிளைகளை உடைய ஹைட்ரோ கார்பன் சங்கிலி தொடரை கொண்டுள்ளது. இவை நுண்ணுயிரைகளை எளிதாய் சிதைக்க இயலாது. எனவே நீரில் கரையாத உப்புகளாய் நீரில் படிந்து நீரை மாசுபடடுத்துகிறது.

இவற்றை தவிர்க்க, உயரிய சிதைவு டிடர்ஜெண்ட்களை பயன்படுத்தலாம். பொதுவாக நேரான ஹைட்ரோ கார்பன் சங்கிலி தொடரை பெற்றவை.

5. சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்டை வேறுபடுத்துக.

சோப்புடிடர்ஜெண்ட்
இது நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கார்பாசிலிக் அமிலங்களின் சோடிய உப்புகள்இது சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்புகள்
சோப்பின் அயனி பகுதி COO-Na+டிடர்ஜெண்டின் அயனிப்பகுதி SO3 Na+
விலங்குகளிடமிருந்து கிடைக்கும் கொழுப்பு மற்றும் தாவரங்களிடமிருந்து கிடைக்கும் எண்ணெய் ஆகியவற்றிலிருந்து சோப்பு தயாரிக்கப்படுகிறது.பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் ஹைட்ரோ-கார்பனிலிருந்து இவை தயாரிக்கப்படுகிறது.
கடின நீரில் பயன்படுத்த முடியாது.கடின நீரிலும் சிறப்பாக சலவை செய்யலாம்
கடின நீருடன் சேரும் போது (ஸ்கம்) படிவுகளை உருவாக்கும்.கடின நீருடன் சேரும்போது (ஸ்கம்) படிவுகளை உருவாக்காது.
குறைவான அளவில் நுரைகளை உருவாக்கும்அதிகளவில் நுரைகளை உருவாக்கும்.
உயிரிய சிதைவு அடையும் தன்மை பெற்றதுஉயிரிய சிதைவு அடையும் தன்மை அற்றது.

VI. விரிவான விடையளி.

1. படிவரிசை என்றால் என்ன? படிவரிசை சேர்மங்களின் மூன்று பண்புகளைக் கூறுக.

படி வரிசை என்பது ஒரே பொதுவான மூலக்கூறு வாய்ப்பாட்டையும் ஒத்த வேதிப் பண்புகளையும் கொண்ட ஒரே தொகுதி அல்லது ஒரே வகையில் உள்ள கரிமச் சேர்மங்களைக் குறிப்பதாகும்.

படிவரிசையில் அடுத்தடுத்த சேர்மங்கள் CH2 என்ற தொகுதியால் வேறுபடும்.

படிவரிசை சேர்மங்களின் பண்புகள்

  • • ஒரு படி வரிசையில் உள்ள அடுத்தடுத்த சேர்மங்கள் மெத்திலீன் CH2 என்ற பொது வேறுபாட்டிலும் மூலக்கூறுநிறை 14 amu (அணுநிறை அலகிலும்) வேறுபடுகின்றன.
  • ஒரு படி வரிசையில் உள்ள அனைத்து சேர்மங்களும் ஒரே வகை தனிமங்களையும், வினைச்செயல் தொகுதிகளையும் பெற்றிருக்கும்.
  • ஒரு படிவரிசையிலுள்ள அனைத்து சேர்மங்களையும் ஒரே பொது வாய்ப்பாட்டினால் குறிப்பிட இயலும். எ.கா அல்கேன்கள் CnH2n+1
  • மூலக்கூறுநிறையின் அதிகரிப்பைப் பொறுத்து சேர்மங்களின் இயற்பண்புகள் ஒழுங்கான முறையில் மாறுகின்றன.
  • எல்லாச் சேர்மங்களும் ஒத்த வேதிவினைகளில் ஈடுபடுகின்றன.
  • எல்லாச் சேர்மங்களையும் ஒரே முறையில் தயாரிக்க இயலும்.

2. CH3–CH2–CH2–OH. என்ற சேர்மத்திற்கு பெயரிடும் முறையை வரிசை கிரமமாக எழுதுக.

CH3-CH2-CH2-OH

படி 1 :

இது மூன்று கார்பன் இருக்கும் சங்கிலித்தொடர். எனவே அடிப்படைச் சொல் “புரப்:” ஆகும்.

படி 2 :

கார்பன்களுக்கு இடையே உள்ளபிணைப்புகள் எல்லாம் ஒற்றை பிணைப்புகளாக இருப்பதால் ‘யேன்’ என்ற முதன்மை பின்னோட்டை சேர்க்க வேண்டும்.

படி 3 :

கார்பன் சங்கிலியில் – OH தொகுதி இருப்பதால் இது ஒரு ஆல்கஹால். எனவே – OH தொகுதி அண்மையில் அமையும் விதமாக கார்பன் அணுவிலிருந்து எண்ணிடுதலை தொடங்க வேண்டும். (விதி 3)

3      2      1

CH3–CH2–CH2–OH

படி 4 :

OH தொகுதியின் இட எண் 1. எனவே இரண்டாம் நிலை பின்னொட்டாக 1 – ஆல் சேர்க்க வேண்டும். எனவே சேர்மத்தின் பெயர்

புரப் + யேன்+(1 – ஆல்) = புரப்பேன்-1-ஆல்

எ.கா 2: CH3COOH

3. கரும்பு சாறிலிருந்து எத்தனால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

கரும்புச் சர்க்கரை கரைசலிலிருந்து சர்க்கரையை படிகமாக்கும் பொழுது மீதமுள்ளஆழ்ந்த நிறமுள்ள கூழ் போன்ற திரவமாகும். இதில் 30% சுக்ரோஸ் உள்ளது. இதை படிகமாக்கல் முறையில் பிரித்தெடுக்க இயலாது. கீழ்க்காணும் படிகள் மூலமாக கழிவுப்பாகு எத்தனாலாக மாற்றப்படுகிறது.

1. கழிவுப்பாகினை நீர்த்தல்

கழிவுப்பாகிலுள்ள சர்க்கரையின் செறிவு 8 லிருந்து 10 சதவீதமாக நீரினால் நீர்க்கப்படுகிறது.

2. அம்மோனியம் உப்புகள் சேர்த்தல்

நொதித்தலின்போது ஈஸ்ட்டிற்க்குத் தேவையான நைட்ரஜன் கலந்த உணவினைக் கழிவுப்பாகு கொண்டுள்ளது. நைட்ரஜன் அளவு குறைவாக இருப்பின், அம்மோனியம் சல்பேட் அல்லது அம்மோனியம் பாஸ்பேட் சேர்ப்பதன் மூலம் உர மூட்டப்படுகிறது.

3. ஈஸ்ட்சேர்த்தல்

படி 2 இல்கிடைக்கும் கரைசல் பெரிய நொதித்தல் தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது. கலவை 303K வெப்பநிலையில் சில நாட்களுக்கு வைக்கப்படுகிறது. அந்த நாட்களில் ஈஸ்ட்டிலுள்ள இன்வர்டேஸ், மற்றும் சைமேஸ் ஆகிய
நொதிகள் சர்க்கரையை எத்தனாலாக மாற்றுகின்றன.

 C12H22O11+ H2Oசர்க்கரைஇன்வெர்டேஸ்→ C6H12O6 + C6H12O6குளுக்கோஸ் ப்ரோக்டோஸ்
 C6H12O6குளுக்கோஸ் அல்லது ப்ரோக்டோஸ்சைமோஸ்→ 2C2H5OH + 2CO2எத்தனால்

நொதித்த நீர்மம் கழுவு நீர்மம் என அழைக்கப்படுகிறது.

4. கழுவு நீர்மத்தைக் காய்ச்சி வடித்தல்

15 முதல் 18 சதவீதம் ஆல்கஹாலும் மீதிப்பகுதி நீராகவும் உள்ள நொதித்த நீர்மமானது பின்னக் காய்ச்சி வடித்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. முக்கியப் பின்னப்பகுதியாகக் கிடைத்த எத்தனாலின் நீர்க்கரைசல் 95.5% எத்தனாலையும் 4.5% நீரையும் பெற்றுள்ளது. இது எரிசாரயம் என அழைக்கப்படுகிறது. இக்கலவை சுமார் 5 லிருந்து 6 மணி நேரம் சுட்ட சுண்ணாம்பு சேர்த்து காய்ச்சி வடிக்கப்பட்டு 12 மணி நேரம் வைக்கப்படுகிறது. இக்கலவை மீண்டும் காய்ச்சி வடிக்கப்படும் போது தூய ஆல்கஹால் (100%) கிடைக்கிறது. இந்தத் தூய ஆல்கஹால் தனி ஆல்கஹால் எனப்படுகிறது.

4. கீழ்கண்ட வினைகளின் சமன் செய்யப்பட்ட சமன்பாட்டை எழுதுக.

அ. NaOH எத்தனாயிக் அமிலத்துடன் ஏற்படுத்தும் நடுநிலையாக்கல் வினை

CH3COOH + NaOHஎத்தனாயிக் அமிலம்C3COONa + H2Oசோடியம் எத்தனோயேட்

ஆ. எத்தனாயிக் அமிலம் NaHCO3 வினைபுரிந்து CO2 வெளியிடும் வினை

CH3COOH + NaHCO3எத்தனாயிக் அமிலம்C3COONa + H2Oசோடியம் எத்தனோயேட்

இ. எத்தனால் அமில பொட்டாசியம் டைகுரோமேட்டுடன் புரியும் ஆக்சிஜனேற்ற வினை

CH3CH2OH +எத்தனால்K2Cr2O7 / H+→2 [O]CH3COOH + H2Oஎத்தனாயிக் அமிலம்

ஈ. எத்தனாலின் எரிதல் வினை.

CH3CH2OH + 3O2எத்தனால்K2Cr2O7 / H+→2 [O]3CO2 + 3H2Oகார்பன்-டை-ஆக்ஸைடு

5. சோப்பின் தூய்மையாக்கல் முறையை விளக்குக

ஒரு சோப்பு மூலக்கூறு வேறுபட்ட இரு வேதிப் பகுதிகளை பெற்றுள்ளன. இப்பகுதிகள் நீருடன் வேறுபட்ட முறையில் வினைபுரிகிறது. ஒரு முனை சிறிய தலை போன்ற கார்பாக்சிலேட்தொகுதி கொண்ட முனைவுள்ள பகுதியையும், மறுமுனை பெரிய வால் போன்ற நீளமான ஹைட்ரோ கார்பன் சங்கிலி தொடரையுடைய முனைவற்ற பகுதியையும் பெற்றுள்ளது.

முனைவுள்ள பகுதி நீர் விரும்பும் பகுதியாக செயல்பட்டு நீருடன் ஒட்டிக் கொள்கிறது. முனைவற்ற பகுதி நீரை வெறுக்கும் பகுதியாக செயல்பட்டு ஆடைகளில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றுடன் ஒட்டிக் கொள்கிறது. நீரை வெறுக்கும் பகுதி மாசினை தன்னுள் அடக்கி கொள்கிறது. நீரை விரும்பும் பகுதி மொத்த மூலக்கூறையும் நீரில் கரைய செய்கிறது. சோப் அல்லது டிடர்ஜெண்டை நீரில் கரைக்கும் பொழுது சோப்பு மூலக்கூறுகள் ஒன்றாக இணைந்த கொத்துகளாக (Micelles) மீெசல்ஸ் உருவாகிறது.இந்த கொத்துகளில் ஹைட்ரோகார்பன் சங்கிலி பகுதியானது, அழுக்கு மற்றும் எண்ணெய் பகுதியோடு ஒட்டிக்கொள்கிறது. இவ்வாறாக சோப்பின் முனைவற்ற பகுதி அழுக்கைச் சுற்றிக் கொள்கிறது சோப்பின் கார்பாக்ஸிலேட் பகுதி, கொத்துகளை நீரில் கரையச் செய்கிறது. இவ்வாறாக அழுக்கு சோப்பினால் நீக்கப்படுகிறது.

சோப்பு செயல்படும் விதம்

VII. உயர்சிந்தனை வினாக்கள்.

1. ஆல்கஹாலின் மூலக்கூறு வாய்ப்பாடு C4H10O அதில் -OH இட எண் 2

அ. அதனுடைய அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.

CH3 – CH– CH – CH3

            |

             OH

ஆ. IUPAC பெயரினை எழுதுக.

பியூட்டன் – 2 ஆல் (அ) 2 – பியூட்டனால்

இ. இச் சேர்மம் நிறைவுற்றவையா? நிறைவுறாதவையா?

இச்சேர்மம் நிறைவுற்ற சேர்மம், ஏனென்றால் அனைத்து கார்பன் அணுக்களும் ஒற்றைப் பிணைப்பை மட்டுமே கொண்டுளள்து.

2. ஒரு கரிம சேர்மம் A என்பதன் மூலக்கூறு வாய்ப்பாடு C2H4O2 இது பதப்படுத்துதலில் பயன்படுகிறது. மேலும் எத்தனாலுடன் வினைபுரிந்து இனிய மணமுடைய சேர்மம் B யை தருகிறது.

அ. சேர்மம் A யைக் கண்டறிக.

சேர்மம் A என்பது எத்தனாயிக் அமிலம் – CH3COOH [C2H4O2]

ஆ. சேர்மம் B உருவாதல் வினையினை எழுதுக.

 CH3COOH + CH3CH2OHஎத்தனாயிக் அமிலம்               எத்தனால்அடர் H2SO4 CH3COOCH2CH3 + H2Oஎத்தில் எத்தனோயேட்
சேர்மம் B என்பது எத்தில் எத்தனோயேட் (CH3COOCH2CH3)

இ. இந்நிகழ்விற்கு பெயரிடுக.

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

எஸ்டராக்குதல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *