சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : இந்தியாவில் தாெழிலங்களின் வளர்ச்சி
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?
- கல்லிருந்து சிலையை செதுக்கதல்
- கண்ணாடி வளையல் உருவாக்குதல்
- பட்ட சேலை நெய்தல்
- இரும்பை உருக்குதல்
விடை : இரும்பை உருக்குதல்
2. _______________ தாெழில் இந்தியாவின் பழமையானை தாெழிலாகும்.
- நெசவு
- எஃகு
- மின் சக்தி
- உரங்கள்
விடை : நெசவு
3. கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம்
- பம்பாய்
- அகமதாபாத்
- கான்பூர்
- டாக்கா
விடை : கான்பூர்
4. இந்தியாவின் முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன?
- மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துல்
- எழுத்தறிவின்மையைக் குறைத்தல்
- வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்
- பெண்களுக்கு அதிகாரமளித்தல்
விடை : வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்
5. இந்தியாவில் தொழில்மயம் அழித்தலுக்கு காரணம் அல்லாதது எது?
- அரச ஆதரின் இழப்பு
- இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி
- இந்தியாவின் தொழிற்துறை கொள்கை
- பிரிட்டிஷாரின் வர்த்தக் கொள்கை
விடை : இந்தியாவின் தொழிற்துறை கொள்கை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ______________ இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.
விடை : கைவினைப்பொருட்கள்
2. தாெழிற்புரட்சி நடைபெற்ற இடம் _________.
விடை : இங்கிலாந்து
3. அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தாேற்றுவிக்கப்பட்ட ஆண்டு _________________
விடை : 1839
4. காெல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி பள்ளத்தாக்கில் _________ சணேைல் தாெழிலகம் ஆரம்பிக்கப்பட்டது.
விடை : ரிஷ்ரா
5. __________________ ஐராேப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூரத்தை
குறைத்தது
விடை : சூயஸ் கால்வாய் திறப்பு
III.பொருத்துக
1.டவேர்னியர் | செல்வச் சுரண்டல் கோட்பாடு |
2. டாக்கா | காகித ஆலை |
3. தாதாபாய் நெளரோஜி | கைவினைஞர் |
4. பாலிகன்ஜ் | மஸ்லின் துணி |
5. ஸ்மித் | பிரெஞ்சு பயணி |
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ, 5 – இ
IV. சரியா? தவறா? எனக் குறிப்பிடு
1. இந்தியா பருத்தி மற்றம் பட்டுத்துணிகளுக்கு புகழ் வாய்ந்தது.
விடை : சரி
2. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் இரயில்வே அறிமுகப்படுத்தப்ட்டது
விடை : சரி
3. நவீன முறையில் முதன்முதலாக இரும்பு ஜாம்ஷெட்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது.
விடை : தவறு
4. 1948 ஆம் ஆணடு தாெழிலக காெள்கையானது கலப்பு பொருளாதாரத்தை
காெண்டு வந்தது.
விடை : தவறு
5. பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் தீவிர வேளாண்மை உற்பத்தி வளர்ச்சிக்கு சான்றாக உள்ளது.
விடை : தவறு
V. பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு
1. பின்வருவனவற்றில் சரியானவைகளை தேர்ந்தெடுத்த குறியிடவும்
i) எட்வர்ட் பெய்ன்ஸ் கருத்துப்படி பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இங்கிலாந்து
ii) இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைக்கு முன்னால் இந்தியாவில் கிராம கைவினை தொழில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக அமைந்தது.
iii) செளராஷ்டிரா தகர தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது
iv) சூயஸ் கால்வாய் கட்டப்பட்டதால் இந்தியாவில் பிரிடிஷாரின் பொருட்கள் மலிவாக கிடைக்க வழிவகை உருவாகிறது
- i மற்றும் ii சரி
- ii மற்றும் iv சரி
- iii மற்றும் iv சரி
- i, ii மற்றும் iii சரி
விடை : ii மற்றும் iv சரி
2. கூற்று : இந்திய கைவினைஞர்கள் பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்கத்தில்
நலிவுற்றனர்.
காரணம் : பிரிட்டிஷார் இந்தியாவை தனது மூலப்போருள் தயாரிப்பாளராகவும் முடிவுற்ற பொருட்களுக்கான சந்தையாகவும் கருதினர்.
- கூற்று சரி. காரணம் கூற்றுக்கான விளக்கம்
- கூற்று சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
- கூற்றும் காரணமும் சரி
- கூற்றும் காரணமும் தவறானவை
விடை : கூற்று சரி. காரணம் கூற்றுக்கான விளக்கம்
3. சரியான இணையை கண்டுபிடி
- பெர்னியர் – ஷாஜகான்
- பருத்தி ஆலை – அகமதாபாத்
- TOSCP – ஜாம்ஜெட்பூர்
- பொருளாதார தாரளமயாக்கல் – 1980
விடை : பொருளாதார தாரளமயாக்கல் – 1980
VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளி
1. இந்தியாவின் பராம்பரிய கைவினை பொருள்களின் தொழிற்சாலைகள் யாவை?
- நெசவு
- மரவேலை
- தந்தவேலை
- மதிப்புமிக்க கற்களை வெட்டுதல்
- தோல்
- வாசனை மரங்களில் வேலைபாடுகள் செய்தல்
- உலோக வேலை மற்றும் நகைகள் செய்தல்
2. செல்வச் சுரண்டல் கோட்டுபாடு பறறி எழுது
ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம்
– தாதாபாய் நெளரோஜி
3. பெரிய அளவில் நெசவு உற்பத்திக்க பயன்படுத்திய கண்டுபிடிப்புகளின் பெயர் எழுதுக
- காட்டன் ஜின்
- பறக்கும் எறிநாடா
- நூற்கும் ஜென்னி
- நீராவி எந்திரம்
4. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு பற்றி சிறுகுறிப்பு எழுதுக
- இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு என்பது இந்தியாவில் உள்ள ஒரு வணிக சங்கம் ஆகும்.
- இது ஒர அரசு சாரா, இலாப நோக்கமற்ற, தொழிற்துறை வழிநடத்துதல் மற்றும் தொழிற்துறையை நிர்வகிக்கும் ஒரு அமைப்பாகும். இது 1985-இல் நிறுவப்பட்டது.
5. தொழில்மயமழிதல் என்றால் என்ன?
- பாராம்பரிய இந்திய கைவினை தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடு மற்றும் தேசிய வருமானத்தின் வீழ்ச்சி ஆகியன தொழில்மயமழிதல் என குறிப்பிடப்படகிறது.