அறிவியல் : அலகு 20 : வளரிளம் பருவமடைதல்
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. _____________ வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம் எனப்படும்.
- 10 முதல் 16
- 11 முதல் 17
- 11 முதல்19
- 11 முதல் 20
விடை : 11 முதல்19
2. உயிரினங்கள் பாலின முதிர்ச்சியடையும் காலம் ____________________ என்று
அழைக்கப்படுகிறது.
- பருவமடைதல்
- வளரிளம் பருவம்
- வளர்ச்சி
- முதிர்ச்சி
விடை : பருவமடைதல்
3. பருவமடைதலினபோது, இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதியானது _____________ ல் அகன்று காணப்படுகிறது.
- ஆண்கள்
- பெண்கள்
- அ மற்றும் ஆ
- எதுவுமில்லை
விடை : பெண்கள்
4. ஆடம்ஸ் ஆப்பிள் என்பது ___________ ன் வளர்ச்சியாகும்.
- தாெண்டை
- தைராய்டு
- குரல்வளை
- பாராதைராய்டு
விடை : குரல்வளை
5. வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் _______________ சுரப்பியின சுரப்பினால் உண்டாகின்றன.
- வியர்வை
- எண்ணெய்
- வியர்வை மற்றும் எண்ணெய்
- எதுவுமில்லை
விடை : வியர்வை மற்றும் எண்ணெய்
6. விந்து செல்லானது _____________ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது
- ஆண்குறி
- அண்டகம்
- கருப்பை
- விந்தகங்கள்
விடை : விந்தகங்கள்
7. நாளமில்லா சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப் பொருள்கள்
__________ எனப்படும்.
- ஹார்மோன்கள்
- நாெதிகள்
- புரதங்கள்
- காெழுப்பு அமிலங்கள்
விடை : ஹார்மோன்கள்
8. ஆன்ட்ராேஜன் உற்பத்தி __________ ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
- GH ஹார்மோன்
- LH ஹார்மோன்
- TSH ஹார்மோன்
- ACTH ஹார்மோன்
விடை : LH ஹார்மோன்
9. மாதவிடாயின் போது புராெஜெஸ்டிரானின் அளவு __________
- குறைகிறது
- அதிகரிக்கிறது
- நின்று விடுகிறது
- இயல்பாக உள்ளது
விடை : நின்று விடுகிற
10. நமது வாழ்வின பிந்தைய பகுதியில் ஆஸ்டியாேபோராேசிஸைத் தடுக்க
__________ எடுத்துக் காெள்வது அவசியாகும்.
- பொட்டாசியம்
- பாஸ்பரஸ்
- இரும்பு
- கால்சியம்
விடை : கால்சியம்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. பெண்களில் அண்டகத்தால்_____________ உற்பத்தி செய்யப்படுகிறது.
விடை : ஈஸ்ட்ரோஜன்
2. இனப்பெருக்க உறுப்புகளால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் ________ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.
விடை : பிட்யூட்ரியன் முன் கதுப்பினால்
3. பாலூட்டுதலின் போது பால் உற்பத்தியானது _____________ ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது.
விடை : ப்ரோலாக்டின்
4. ஆண் மற்றும் பெண் இனச் செல்கள் இணைந்து _______________ ஐ உருவாக்குகின்றன.
விடை : கருவுற்ற முட்டை
5. பருவமடைதலின் போது ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சி _____________ என்று அழைக்கப்படுகிறது.
விடை : பூப்படைதல்
6. பொதுவாக அண்டம் விடுபட்ட 14 நாட்களுக்குப் பின் _____________ ஏற்படுகிறது.
விடை : மாதவிடாய்
7. _____________ என்பது புரதங்கள், கார்போ ஹைட்ரேட்டுகள், காெழுப்பு மற்றும் உயிர்ச் சத்துக்களை குறிப்பிட்ட அளவில் உள்ளடக்கியதாகும்.
விடை : சரிவிகித உணவு
8. தைராய்டு சுரப்பி தாெடர்புடைய நாேய்களைத் தடுப்பதில் _____________ உதவுகிறது.
விடை : அயோடின்
9. இரும்புச் சத்துப் பற்றாக்குறை _________க்கு வழிவகுக்கிறது.
விடை : இரத்தசோகை
10. பெண்களில் கருவுறுதல் _____________ ல் நிகழ்கிறது.
விடை : ஃபெலோப்பியன் நாளத்தில்
III. சரியா? தவறா எனக் கூறு
1. ஆண்கள் மற்றும் பெண்களில் பருவமடைதலின் போது, திடீரென உயரம் அதிகரிக்கின்றது.
விடை : சரி
2. கருப்பையிலிருந்து அண்டம் வெளியேறுதல் அண்டம் விடுபடுதல் என அழைக்கப்படுகிறது.
விடை : சரி
சரியான கூற்று : அண்டகத்திலிருந்து அண்டம் வெளியேறுதல் அண்டம் விடுபடுதல் என அழைக்கப்படுகிறது.
3. கர்ப்பத்தின் போது, கார்பஸ்லூட்டியம் தாெடர்ந்து வளர்ந்து அதிக அளவில் ஈஸ்ட்ராேஜன் மற்றும் புராேஜெஸ்டிரானை உற்பத்தி செய்கிறது.
விடை : சரி
4. ஒரு முனை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் அல்லது டாம்பூன்களைப் பயன்படுத்துதல் நாேய்த் தாெற்றிற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றது.
விடை : தவறு
சரியான கூற்று : ஒரு முனை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் அல்லது டாம்பூன்களைப் பயன்படுத்துதல் நாேய்த் தாெற்றிற்கான வாய்ப்பை குறைக்கின்றது.
5. சுத்தமான கழிவறைகளை மலம் கழிக்கப் பயன்டுத்துதல் ஒரு நல்ல பழக்கமாகும்.
விடை : சரி
IV. பொருத்துக
1. பருவமடைதல் | டெஸ்டாேஸ்டீரான் |
2. ஆடம்ஸ் ஆப்பிள் | தசை உருவாக்கம் |
3. ஆண்ட்ராேஜன் | 45 முதல் 50 வயது |
4. ICSH | பாலின முதிர்ச்சி |
5. மாதவிடைவு | குரலில் மாற்றம் |
விடை : 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – இ
V. சுருக்கமாக விடையளி.
1. வளரிளம் பருவம் என்றால் என்ன?
- வளரிளம் பரவமானத ஒருவர் குழந்தைப் பருவத்தில் இருந்து வயது வந்தோர் பருவத்திற்கு மாறக்கூடிய காலகட்டமாகும். இப்பருவமானது 13 வயதில் தொடங்கி 19 வயதில் முடிவடைகின்றது.
- வளரிளம் பருவம் சொ் “அடோலசர்” (adolescere) என்ற இலத்தீன மொழி வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன பொருள் ‘வளர்வதற்கு’ அல்லது ‘முதிர்ச்சிக்கான வளர்ச்சி’ எனப் பொருள்படும்.
2. பருவமடைதலின்போது ஏற்படும் மாற்றங்களைப் பட்டியலிடுக.
- உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள்
- உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்
- முதல்நிலை பால் பண்புகளின் வளர்ச்சி
- இரண்டாம்நிலை பால் பண்புகளின் வளர்ச்சி
3. இரண்டாம்நிலை பால் பண்புகள் என்றால் என்ன?
இரண்டாம்நிலை பால் பண்புகள் ஆண்கள் பெண்கள் மற்றும் பெண்களிடையே உடல் அமைப்பில் வேறுபாட்டை ஏற்படுத்துகின்றன. ஆண்களில் விந்தகங்களால் சுரக்கப்படும் டெஸ்ட்டாேஸ்டீரான் அல்லது ஆண்ட்ராேஜன் எனப்படும் ஹார்மோனாலும், பெண்களில் அண்டகங்களால் சுரக்கப்படும் ஈஸ்ட்ராேஜன் எனப்படும் ஹார்மோனாலும் இரண்டாம் நிலை பால் பண்புகள் கடடுப்படுத்தப்டுகின்றன
4. கருவுறுதல் என்றால் என்ன?
ஆண் விந்தணுவானது, அண்டகத்திலிருந்து விடுபட்ட அண்டகத்துடன் பெலோப்பியன் நாளத்தில் இணைந்து கருவுறுதல் நடைபெறுகிறது
5. பூப்படைதல் – குறிப்பு வரைக.
பருவமடைதலின் போது முதன் முதலில் தோன்றும் மாதவிடாய் சுழற்சி பூப்படைதல் எனப்படுகிறது. பருவடைதலின் தொடக்க நிலையில் அண்டம் முதிர்ச்சியடைகிறது
6. கருவுறுதல் நிகழ்வை விளக்குக.
அண்டகத்திலிருந்து விடுபட்ட அண்டம் பெலோப்பியன் நாளத்தை அடைந்தவுடன், கருவுறுதல் நடைபெறுகிறது. கருவுற்ற முட்டை வளர்ச்சியடைந்தவுடன், அது கருப்பையில் பதிய வைக்கப்படகிறது. கார்பஸ்லூட்டியத்தின் தொடர் வளர்ச்சியனால் அதிக அளவில் புரோஜெஸ்டிரான் உற்பத்தி செய்யப்படுகிறது. இது கர்ப்பத்தை தோற்றுவிக்கிறது. பொதுவாக இது 280 நாட்கள் நீடிக்கும் இதன் முடிவில் குழந்தை பிறப்பு உண்டாகிறது.
7. பெண்களில், மாதவிடாய் சுழற்சியின் போது தூய்மையின் முக்கியத்துவம் பற்றிக் கூறுக.
மாதவிடாய் சுழற்சியின் போது, உடல் தூய்மையில் பெண்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். துணிகளுக்கு பதிலாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நாப்கின்கள் அல்லது டாம்பூன்களை பயன்படுத்துவதால் நோய் தொற்றிற்கான வாய்ப்பு குறைகிறது. மாவிடாயின் அளவைப் பொருத்த அடிக்கடி மாற்றப்பட வேண்டும்.
8. வளரிளம் பருவம் குழந்தைப் பருத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
குழந்தைப் பருவத்தில் உடல் பகுதியை விட கால்கள் அதிகமாக வளர்ச்சியுறுகின்றன. ஆனால் பருவமடைதலின்போது உடல் பகுதியும் வளரச்சியுறுகின்றது. மேலும் உடல் பகுதியில் இடுப்பு மற்றும் தோள்பட்டை ஆகியவை விரிவடைந்து உடலானது வயது வந்தோரின் தோற்றத்தை பெறுகிறது.