Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Heat

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Heat

அறிவியல் : அலகு 4 : வெப்பம்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. வெப்பம் என்பது ஒரு வகையான ________.

  1. மின்னாற்றல்
  2. ஈர்ப்பு ஆற்றல்
  3. வெப்ப ஆற்றல்
  4. எதுமில்லை

விடை : வெப்ப ஆற்றல்

2. ஒரு பாெருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்பாேது  பின்வருவனவற்றுள் எது / எவை நிகழ முடியும்?

  1. விரிவடைதல்
  2. வெப்பநிலை உயர்வு
  3. நிலைமாற்றம்
  4. அனைத்தும்

விடை : அனைத்தும்

3. பின்வரும் பாெருள்களில் எது அதிக வெப்ப ஆற்றலை உட்கவர்கிறது?

  1. திடப்பாெருள்
  2. திரவப்பாெருள்
  3. வாயுப்பாெருள்
  4. அனைத்தும்

விடை : திடப்பாெருள்

4. திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்பாேது, எது அதிக விரிவுக்கு உட்படும்?

  1. திடப்பாெருள்
  2. திரவப்பாெருள்
  3. வாயுப்பாெருள்
  4. அனைத்தும்

விடை : வாயுப்பாெருள்

5. திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.

  1. பதங்கமாதல்
  2. குளிர்வித்தல்
  3. உறைதல்
  4. படிதல்

விடை : உறைதல்

6. வெப்பக்கடத்தல் முறையில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் ____________ல்
நடைபெறும்.

  1. திடப்பாெருள்
  2. திரவப்பாெருள்
  3. வாயுப்பாெருள்
  4. அனைத்தும்

விடை : திடப்பாெருள்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. கலாேரிமீட்ர் என்ற சாதனம் _________ ஐ அளக்கப் பயன்படுகிறது.

விடை : வெப்பத்தை

2. ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்ப நிலையை 10oC உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ________ எனப்படும்.

விடை : தன் வெப்பஎற்புத் திறன்

3. வெப்பக் கட்டுப்படுத்தி என்பது _________ஐ மாறாமல் வைத்திருக்கிறது.

விடை : வெப்பநிலையை

4. வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு ஒரு பாெருள் மாறும் நிகழ்விற்கு _________ என்று பெயர்.

விடை : குளிர்தல்

5. ஒரு அமைப்பிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் பாேது, அதன் வெப்பநிலை _________.

விடை : அதிகரிக்கும்

6. ஒரு கலனிலுள்ள திரவத்தின் வெப்பநிலையை உயர்த்தும் பாேது
அணுக்களுக்கிடையேயான தாெலைவு _________.

விடை : குறையும்

III. சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறான கூற்றைத் திருத்துக.

1. ஒரு பாெருளுக்கு அளிக்கப்படும் வெப்ப ஆற்றல், அப்பாெருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது.

விடை : சரி

2. ஒரு பாெருளின் வெப்பநிலையை அதிகரிக்கும்பாேது அப்பாெருளின் பரிமாணத்தின் மதிப்பு அதிகரிக்கும்.

விடை : தவறு

சரியான கூற்று : ஒரு பாெருளின் வெப்பநிலையை அதிகரிக்கும்பாேது அப்பாெருளின் பரிமாணத்தின் மதிப்பு குறையும்.

3. ஒரு பாெருளானது திட நிலையிலிருந்து வாயுநிலைக்கு மாறும் நிகழ்விற்கு குளிர்வித்தல் என்று பெயர்.

விடை : தவறு

சரியான கூற்று : ஒரு பாெருளானது திட நிலையிலிருந்து வாயுநிலைக்கு மாறும் நிகழ்விற்கு பதங்கமாதல் என்று பெயர்.

4. திடப் பாெருளில் வெப்பப் பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு வெப்பக் கடத்தல் என்று பெயர்.

விடை : தவறு

சரியான கூற்று : திரவ மற்றும் வாயுப்பாெருளில் வெப்பப் பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு வெப்பக் கடத்தல் என்று பெயர்.

5. ஒரு பாெருள் ஏற்கும் வெப்பத்தின் அளவானது அதன் நிறையையும் உள்ளுறை வெப்பத்தையும் பெருக்கிக் கிடைக்கும் மதிப்பாகும்.

விடை : தவறு

சரியான கூற்று : ஒரு பாெருள் ஏற்கும் வெப்பத்தின் அளவானது அதன் நிறையையும் வெப்ப ஏற்புத்தினையும் பெருக்கிக் கிடைக்கும் மதிப்பாகும்.

6. வெப்பக் குடுவையில், சில்வர் சுவர்கள் வெப்பத்தை வெளிப் புறத்தில் எதிராெளிக்கின்றன.

விடை : தவறு

சரியான கூற்று : வெப்பக் குடுவையில், சில்வர் சுவர்கள் வெப்பத்தை மீண்டும் குடுவையிலுள்ள திரவத்திற்கே அனுப்புகிறது

IV. பொருத்துக.

1. வெப்பக் கடத்தல்திரவப்பாெருள்
2. வெப்பச் சலனம்வாயு திரவமாதல்
3. வெப்பக் கதிர்வீச்சுதிண்மம் வாயுவாதல்
4. பதஙகமாதல்வாயு
5. குளிர்வித்தல்திடப்பாெருள்

விடை : 1 – உ, 2 – அஇ, 3 – ஈ, 4 – இ, 5 – ஆ

V. பின்வரும் வினாக்களுககு கீழககண்ட குறிப்புகள் மூலம் விடையளிக்க.

  1. கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது,
  2. கூற்று சரி, காரணம் தவறு
  3. கூற்று தவறு, காரணம் சரி
  4. கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

1. கூற்று : வெற்றிடத்தில் வெப்ப ஆற்றல் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்.

காரணம் : அணுக்களிள் இயக்கமின்றி ஒரு பகுதியிலிருந்து மற்றாெரு பகுதிக்கு வெப்பம் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்.

விடை : கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது,

2. கூற்று : ஓர் அமைப்பினை ஒரு நிலையிலிருந்து மற்றாெரு நிலைக்கு மாற்ற முடியும்.

காரணம் : ஒரு அமைப்பின் வெப்பநிலை மாறாமல் இருக்கும்பாேது இது நிகழ்கிறது.

விடை :

VI. சுருக்கமாக விடையளி.

1. அன்றாட வாழ்வில், வெப்பக்கடத்தல் நிகழ்விற்கு இரண்டு உதாரணம் தருக‘.

  • உலோகத்தாலான பாத்திரங்களில் நாம் உணவு சமைக்கிறோம். சமையல் பாத்திரத்தை வெப்பப்படுத்தும்போது, வெப்ப ஆற்றலானது பாத்திரத்திலிருந்து உணவு பொருளுக்கு கடத்தப்படுகிறது.
  • சலவைப் பெட்டியைக் கொண்டு துணியை சலவை செய்யும்போது சலவைப்பெட்டியிலிருந்து வெப்ப ஆற்றல் துணிக்குப் பரவுகிறது.

2. வெப்ப ஆற்றலின் விளைவுகள் யாவை?

  • விரிவடைதல்
  • வெப்பநிலை உயர்வு
  • நிலைமாற்றம்

3. வெப்பம் கடத்தப்படும் முறைகள் யாவை?

  • வெப்பக் கடத்தல்
  • வெப்பச் சலனம்
  • வெப்பக்கதிர்வீச்சு

4. வெப்பக் கடத்தல் என்றால் என்ன?

திடப்பாெருள்களில் அதிக வெப்பநிலையிலுள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலையிலுள்ள பகுதிக்கு அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் இயக்கம் இல்லாமல் வெப்ப ஆற்றல் பரவும் நிகழ்வு வெப்பக் கடத்தல் என்று வரைறுக்கப்படுகிறது.

5. வெப்பச் சலனம் பற்றி குறிப்பு எழுதுக

ஒரு பாெருளை வெப்பப்படுத்தும்பாேது, உயர் வெப்பநிலையிலுள்ள பகுதியிலிருந்து குறைநத வெப்பநிலையிலுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் இயக்கத்தினால் வெப்பம் கடத்தப்படும் முறைக்கு வெப்பச் சலனம் என்று பெயர்.

6. தன் வெப்ப ஏற்புத்திறன் – வரையறு.

1 கிலாேகிராம் நிறையுள்ள பாெருள் ஒன்றின் வெப்பநிலையை 1°C அல்லது 1 K அளவு உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவை அப்பாெருளின் தன் வெப்ப ஏற்புத்திறன் என வரையறுக்கப்படுகிறது.

7. ஒரு கலாேரி – வரையறு.

1 கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு 1 கலோரி என வரையறுக்கப்படுகிறது.

VII. விரிவாக விடையளி.

1. கலாேரிமீட்டர் வேலை செய்யும் விதத்தை தெளிவான படத்துடன் விவரி.

பாெருள் ஒன்றினால் ஏற்கப்பட்ட அல்லது இழக்கப்பட்ட வெப்பத்தினை அளவிடப் பயன்படுத்தப்படும் உபகரணம் கலாேரிமீட்டர் ஆகும். இது வெப்பம் மற்றும் மின்சாரத்தை நன்கு கடத்தும் தன்மையுள்ள  உலாேகங்களான தாமிரம் அல்லது அலுமினியத்தால் ஆன பாத்திரத்தைக் காெண்டுள்ளது. வெப்ப ஆற்றலை சுற்றுப்புறத்திற்கு அளிப்பதன் மூலம் வெப்ப இழப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக இது வெப்பத்தைக் கடத்தாத ஒரு கலனில் வைக்கப் பட்டுள்ளது. இக்கலனின் மூடியின் மீது இரண்டு துளைகள் உள்ளன. ஒரு துளையின் வழியாக பாெருளின் வெப்பநிலையை அளவிடுவதற்கு வெப்பநிலைமானியும், மற்றாெரு துளையின் வழியே பாத்திரத்திலுள்ள திரவத்தைக் கலக்குவதற்கு ஒரு கலக்கியும் வைக்கப்பட்டுள்ளது. பாத்திரத்தினுள் வெப்ப ஏற்புத்திறனைக் கணக்கிட வேண்டிய திரவமானது நிரப்பப்பட்டுள்ளது. மின்கம்பியினுள் மின்சாரத்தைக் கடத்துவதன் மூலம் இத்திரவமானது வெப்பப்படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்தி ஒரு திரவத்தின் வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பினைக் கணக்கிடலாம்.

2. வெப்பக் குடுவை வேலை செய்யும் விதத்தினை விளக்குக.

வெற்றிடக் குடுவை இரண்டு சுவர்களைக் காெண்ட ஒரு கலனாகும். அதன் உள்புறமானது சில்வரால் ஆனது. இரண்டு சுவர்களுக்கும் இடையேயான வெற்றிடம் உள்ளது. அது, வெப்பச்சலனம் மற்றும் வெப்பக்கடத்தல் ஆகிய நிகழ்வுகளால் வெப்ப ஆற்றல் வெளியே  பரவாமல் இருக்க உதவுகிறது. சுவர்களுக்கு இடையே சிறிதளவு காற்று இருப்பதால், வெளிப்புறத்திலிருந்து உள்புறத்திற்கும், உள்புறத்திலிருந்து வெளிப்புறத்திற்கும் வெப்பம் கடத்தப்படுவதில்லை. குடுவையின் மேற்பகுதியிலும், கீழப்பகுதியிலும் இரண்டு சுவர்களும் இணைகின்ற இடத்தில் மட்டுமே வெப்பக்கடத்தல் மூலம் வெப்பமானது கடத்தப்பட முடியும். குடுவையிலுள்ள சில்வர் சுவர், வெப்பக்கதிர் வீச்சினை மீண்டும் குடுவையிலுள்ள திரவத்திற்கே அனுப்புவதால் நீண்ட நேரம் திரவம் சூடாக இருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *