Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Media and Democracy

Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Media and Democracy

சமூக அறிவியல் : குடிமையியல் : இரண்டாம் பருவம் அலகு -2 : ஊடகமும் ஜனநாயகமும்

பயிற்சி வினா விடை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க 

1. கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது? 

அ) வானொலி

ஆ) தொலைக்காட்சி 

இ) செய்தித்தாள்

ஈ) இணையதளம் 

விடை: இ) செய்தித்தாள் 

2. கீழ்க்கண்டவற்றில் ஒலிபரப்பு ஊடகம் என்பது. 

அ) இதழ்கள்

ஆ) அறிக்கைகள் 

இ) நாளிதழ்கள்

ஈ) வானொலி

விடை: ஈ) வானொலி 

3. உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம் 

அ) தட்டச்சு

ஆ) தொலைக்காட்சி 

இ) தொலைப்பேசி

ஈ) இவற்றில் எதுவும் இல்லை

விடை: ஆ) தொலைக்காட்சி 

4. வெகுஜன ஊடகம் என்பது 

அ) வானொலி

ஆ) தொலைக்காட்சி 

இ) அ மற்றும் ஆ

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை: இ) அ மற்றும் ஆ 

5. ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் 

அ) நிறைய பணம் ஈட்ட

ஆ) நிறுவனத்தை ஊக்கப்படுத்த 

இ) நடுநிலையான தகவலை தருவதற்கு 

‘ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை: இ) நடுநிலையான தகவலை தருவதற்கு 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. உலகத்தினை சிறியதாகவும், மிக அருகாமையிலும் கொண்டு வந்தது 

விடை: ஊடகம்

2. ஒவ்வொரு தனிமனிதனும் ——– ஆகும்

விடை:  ஊடகத்தின் வெளிப்பாடு

3. அச்சு இயந்திரம் ———- என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது

விடை:  ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் 

4. நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பு ——– ஆகும்.

விடை:  நெறிமுறை

5. இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பு நிறுவனம் ———–

விடை: ஆகாசவானி

III. பொருத்துக

1. குறு அளவிலான ஊடகம் – அ. கூகுள் இணையம்

2. சமூக ஊடகம் – ஆ. சுவரொட்டிகள்

3. அச்சு ஊடகம் – இ. கருத்தரங்கு

4. இணைய ஊடகம் – ஈ. திரைப்படங்கள்

5. ஒலிபரப்பு ஊடகம்  – உ. முகநூல்

விடைகள் 

1. குறு அளவிலான ஊடகம் – இ. கருத்தரங்கு

2. சமூக ஊடகம் – உ. முகநூல்

3. அச்சு ஊடகம் – ஆ. சுவரொட்டிகள்

4. இணைய ஊடகம் – அ. கூகுள் இணையம்

5. ஒலிபரப்பு ஊடகம்  – ஈ. திரைப்படங்கள்

IV. கீழ்க்காணும் வாக்கிங்களில் சரியானவற்றை (✔) டிக் செய்யவும் 

1. கூற்று : அச்சு ஊடகம் மக்களின் பல்கலைக்கழகம் என கருதப்படுகிறது. 

காரணம் : பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதிலும், கல்வியறிவு ஊட்டுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது மற்றும் பொதுமக்களின் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது. 

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும். 

ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல. 

இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. 

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விடை: அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும். 

2. தவறான ஒன்றை கண்டுபிடிக்க 

அ) செய்தித்தாள்கள்

ஆ) நாளிதழ்கள் 

இ) அறிக்கைகள்

ஈ) கீச்சகம் 

உ) சுவரொட்டிகள்

விடை: ஈ) கீச்சகம் 

3. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும் 

அ) ஊடகம் என்பது பொதுவாக ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளும்சாதனம் ஆகும் 

ஆ) ஊடகம் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனமாகும் 

இ) ஊடகம் மக்களிடம் பொது கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்குவகிக்கிறது 

ஈ) ஊடகத்திற்கு எந்த பொறுப்பும் கிடையாது

 i) அ, ஆ மற்றும் இ சரி

ii) அ, ஆ மற்றும் ஈ சரி

iii) ஆ, இ மற்றும் சரி

iv) அ, ஆ மற்றும் ஈ சரி

விடை : i) அ, ஆ மற்றும் இ சரி 

V. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும் 

1. ஊடகம் என்றால் என்ன?

* ஊடகம் என்பது ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளக் கூடிய சாதனமாகும். 

* ஊடகம் என்பது அச்சு, ஒலி, ஒளி என அனைத்துவகை பரப்பு சாதனங்களையும் உள்ளடக்கியதே ஆகும்.

2. சட்டமன்றத்தின் செயல்பாடுகளை மக்கள் எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்? 

* சட்டமன்றத்தில் பேச்சுவார்த்தை முடிந்த பின் பத்திரிக்கையாளர்கள் அமைச்சர்களால் வரவழைக்கப்பட்டு தேவையான தகவல்களை வெளியிடுவர். 

* பத்திரிக்கையாளர்களும், ஊடகமும், கூட்டம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வர். 

* இறுதியாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் தகவல்கள் வெளியிடப்படும். 

3. உள்ளூர் ஊடகத்தின் முக்கியத்துவம் யாவை?

உள்ளூர் ஊடகம் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மக்களின் நலனுக்காக செயல்படுவதாகும். 

4. ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் நிரூபிக்கவும்.

* ஊடகம் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது.  

* நாட்டின் தொலை தூர பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய உதவுகிறது. 

* ஊடகம் தகவல்கள் மற்றும் அறிவை வழங்கும் மிக முக்கிய சாதனமாக செயல்படுகிறது. 

5. ஊடகத்தின் ஏதாவது இரண்டு பொறுப்புகளைக் கூறுக. 

* அரசு சிறப்பாக செயல்படுவதற்கு விழிப்பான மற்றும் சுதந்திரமான ஊடகம் மிகவும் அவசியமாகும். 

* நம்பகத்தன்மையான தகவல்களை மக்களிடம் வழங்குவதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவாக விடையளிக்கவும் 

1. ஊடகத்தை எவ்வாறு வகைப்படுத்தலாம்?

1) குறுகிய தொடர்பு ஊடகம் – கேபிள் தொலைக்காட்சி, நேரடி அஞ்சல், கருத்தரங்கு 

2) தொலைத் தொடர்பு ஊடகம் – திரைப்படங்கள் தொலைக்காட்சி, வானொலி 

3) அச்சு ஊடகம் – செய்தித்தாள்கள், இதழ்கள், பத்திரிக்கைகள், புத்தகங்கள், சுவரொட்டிகள், அறிக்கைகள் 

4) இணைய ஊடகம் – கூகுள் இணைய தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் 

5) சமூக ஊடகம் – ட்விட்டர், முகநூல், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் 

2. ஜனநாயகத்தில் ஊடகம் எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறது?

* ஊடகமானது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும். 

* ஜனநாயக சமுதாயத்தில் பொதுமக்களின் கருத்துக்களை செயல்படுத்தும் சக்தியாகும். 

* ஜனநாயக மதிப்புகளை பலப்படுத்துவதோடு மக்களுக்கு அறிவையும், வலிமையும் அளிக்கிறது. 

* வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. 

* அரசின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலம் அரசைப் பற்றி மக்கள் அறிந்துகொள்கிறார்கள். 

* நடப்பு செய்தி பற்றிய விவாதத்தை ஏற்படுத்துவதனால் ஒரே பிரச்சினைகளுக்குப் பல்வேறு கருத்துக்களை பெற முடிகிறது. 

* அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை நினைவூட்டுகிறது. 

* ஊடகம் அரசிற்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுகிறது. 

* ஊடகம் இல்லாத ஜனநாயகம் என்பது சக்கரம் இல்லாத வாகனத்திற்கு ஒப்பாகும்.

3. ஊடகத்தினால் ஏற்படும் நன்மைகள் யாவை?

* ஊடகம் தகவல் மற்றும் தொழில்நுட்ப உலகில் வெகுஜன மக்களுக்கு தகவல்களை அளிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. 

* ஜனநாயகத்தில் ஊடகம் முக்கிய பங்கு வகிக்கிறது. 

* தொழில்நுட்ப மாற்றத்தினால் மக்கள் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. 

* ஊடகம் இந்த உலகை சிறியதாகவும் மக்களுக்கு மிக நெருக்கமாகவும் மாற்றியுள்ளது.

VII. உயர் சிந்தனை வினா 

1. ஊடகம் அவசியமா? ஏன்?

* ஆம், ஊடகம் நமக்கு அவசியமானது. 

* ஊடகம் உள்ளூர் அளவிலும், உலக அளவிலும் தகவல்களை பகிர்ந்து கொள்ள, உருவாக்க, பரப்புவதற்கான மிகச் சிறந்த தகவல் தொடர்பு சாதனமாகும். 

* மக்கள் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்பு கொள்ளவும், கோடிக்கணக்கான மக்களுக்கு தகவல்கள் சென்றடையவும் தேவைப்படுகிறது. 

2. பத்திரிக்கையாளர் சந்திப்பை பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.

* பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என்பது தகவல்கள் ஊடகங்களை சென்றடைவதற்கு உதவுகிறது. 

* பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு செய்திகள் மக்களை சென்றடைவதற்கு முக்கிய சேவை ஆற்றி வருகிறது. 

* பத்திரிக்கையாளர்கள் அவர்களுடைய பங்களிப்பை சிறந்த முறையில் செயலாற்ற உதவுகிறது. 

3. ஊடகம் நம் அன்றாட வாழ்க்கையில் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

* ஊடகம் நம் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்று.

* இணையதளங்களும், தொலைக்காட்சியும் நமது கண் பார்வையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணமாய் அமைகிறது. 

* அதிகமான நேரங்களை சினிமா படங்களை பார்ப்பதற்கும், நாடகங்களை பார்ப்பதற்கும் செலவிடுவதன் மூலம் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

VIII. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது) 

1. ஒரு குறிப்பிட்ட செய்தியை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய தகவல்கள் பல்வேறு ஊடகங்களில் எவ்வாறு வந்துள்ளன என்பதை ஒப்பீடு செய்க. மற்றும் அந்த செய்திகளின் ஒற்றுமை மற்றும் வேற்றுமையை எழுதுக. 

2. ஊடகத்தின் வளர்ச்சியைப் பற்றி படத்தொகுப்பு தயாரிக்கவும் (ஆரம்பம் முதல் தற்போது வரை) 

3. மாதிரி செய்தித்தாளினை தயார்செய்து, அதனை வகுப்பறையில் அனைவரும் அறியும்படி காட்சிப்படுத்துக.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *