Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Market and Consumer Protection

Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Market and Consumer Protection

TNPSC Group 1 Best Books to Buy

சமூக அறிவியல் : குடிமையியல் : மூன்றாம் பருவம் அலகு -2 : சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

TNPSC Group 4 Best Books to Buy

பயிற்சி வினா விடை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. எந்தவொரு சந்தர்ப்பத்தில் ஒரு நுகர்வோர் குறைபாடுள்ள தயாரிப்புக்காக உற்பத்தியாளருக்கு எதிராக புகார் செய்ய முடியாது? 

அ) காலாவதியாகும் தரவு குறிப்பிடப்படாதது 

ஆ) பொருட்களின் விலை 

இ) பொருட்களின் தொகுதி எண்

ஈ) உற்பத்தியாளரின் முகவரி

விடை: இ) பொருட்களின் தொகுதி எண் 

2. உற்பத்தியாளரின் முடிவில் இருந்து நுகர்வோர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றன. 

அ) நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் 

ஆ) பரந்த அளவிலான பொருட்கள் 

இ) நிலையான தரமான பொருட்கள்

ஈ) உற்பத்தியின் அளவு

விடை: அ) நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் 

3. நுகர்வோருக்கு ஒரு பொருட்கள் தயாரிப்பு பற்றிய போதுமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும். 

அ) உற்பத்தியின் முதலீடு

ஆ) பொருட்கள் விற்பனையில் முடிவு 

இ) கடனில் பொருட்கள் வாங்குதல்

ஈ) பொருட்கள் வாங்குவதில் முடிவு

விடை: ஈ) பொருட்கள் வாங்குவதில் முடிவு 

4. தேசிய, மாநில மற்றும் மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்பு, வணிகர்களின் நியாயமானதை வர்த்தக நடைமுறைகளுக்கு எதிரான நுகர்வோர் குறைகளை ஆராய்வது என அழைக்கப்படுகிறது 

அ) மூன்று அடுக்கு அமைப்பு

ஆ) ஒரு அடுக்கு அமைப்பு 

இ) இரு அடுக்கு அமைப்பு

ஈ) நான்கு அடுக்கு அமைப்பு

விடை: அ) மூன்று அடுக்கு அமைப்பு 

5. தரம் குறைவான பிற வெளிப்புற பொருள்களை ஒரு உயர்ந்த தரமான பொருளுடன் கலப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

அ) தூய்மையாக்கல்

ஆ) கலப்படம் 

இ) சுத்திகரிப்பு

ஈ) மாற்றம் 

விடை: ஆ) கலப்படம் 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ……… …………. பொருட்கள் சேவைகள் மற்றும் தகவல்களின் ஈடுபடும் சந்தை என்று அழைக்கப்படுகிறது.

விடை: பரிமாறிக் கொள்ளும்

2. ஒழங்குப்படுத்தப்பட்ட சந்தைகளில், பொருத்தமான ———–அதிகாரிகளால் சில மேற்பார்வை உள்ளது. 

விடை: அரசாங்க

3. ……………….. என்பது ஒரு சந்தை கட்டமைப்பைக் குறிக்கிறது, அதில்  முழு உற்பத்தியிலும் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு ஒற்றை தயாரிப்பு அல்லது விற்பனையாளராக இருக்கிறார். .

விடை: முற்றுரிமை

4. …….. நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சரிபார்க்க  நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மகா சாசனம் என்று கருதப்படுகிறது. 

விடை: நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

III. பின்வருவனவற்றைப் பொருத்துக 

    I                        II

1. நுகர்வோர் பாதுகாப்பு திட்டம்அ. 1955 

2. சட்ட பூர்வமான அளவீட்டு சட்டம் – ஆ. 1986 

3. இந்திய தர நிர்ணய பணியகம்இ. 2009 

4. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் – ஈ. 1986 

விடைகள்:

1. நுகர்வோர் பாதுகாப்பு திட்டம்ஈ. 1986

2. சட்ட பூர்வமான அளவீட்டு சட்டம் – இ. 2009

3. இந்திய தர நிர்ணய பணியகம்ஆ. 1986

4. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் – அ. 1955

IV. பின்வரும் கூற்றுகளை ஆய்க 

1. பொருத்தமான பதிலைத் தேர்வு செய்க. 

கூற்று : உள்ளூர் சந்தைகளில் வாங்குபவர்களும் விற்பவர்களும் உள்ளூர் பகுதி பகுதியை சேர்ந்தோர் அல்லது மட்டுமே 

காரணம் : ஒரு சந்தை இயற்க்கை இடம் அல்லது புவியியல் இருப்பிடத்திற்கு கட்டுப்படுத்தப்படவில்லை . 

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. அனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும். 

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல. 

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு 

ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி 

விடை : ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும். 

1. சந்தை என்றால் என்ன? 

* ஒரு சந்தை என்பது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அமைப்புகள் வாங்குவதிலும், விற்பதிலும் ஈடுபடுகின்ற இடமாக அமைகின்றது. 

* பொருள்கள், சேவைகள் மற்றும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் அமைப்பு சந்தை என அழைக்கப்படும். 

2. ‘நுகர்வோர் பாதுகாப்பு’ விவரிக்கவும். 

நுகர்வோர் பாதுகாப்பு என்பது நுகர்வோரின் உரிமைகள் நியாயமான வர்த்தகப் போட்டி மற்றும் துல்லியமான தகவல்கள் சந்தையில் இருக்க வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்களின் குழு ஆகும்.

3. நுகர்வோரின் உரிமைகளைப் பட்டியலிடுக.

எட்டு அடிப்படையான நுகர்வோர் உரிமைகள்: 

1) அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை 

2) பாதுகாப்புக்கான உரிமை 

3) தகவல் அறியும் உரிமை

4) தேர்ந்தெடுக்கும் உரிமை 

5) பிரதிநிதித்துவ உரிமை

6) குறை தீர்க்கும் உரிமை 

7) நுகர்வோர் கல்வி மற்றும் உரிமை

8) தூய்மையான சுற்றுப்புறச் சூழலை பெறுவதற்கான உரிமை 

4. நுகர்வோர் நீதிமன்றங்களின் பங்கு பற்றி விவாதிக்கவும்.

ஒரு தேசிய அளவிலான நீதிமன்றம் இந்தியா முழுவதற்கும் குறைதீர் ஆணையமாக செயல்படுகிறது. நுகர்வோர் நீதிமன்றங்கள் மிக உயர்ந்த மேல்முறையீட்டு நீதிமன்றமாகும். 

5. சந்தைகளின் வகைகள் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றி எழுதுக. 

1) புவியில் இருப்பிடத்தின் அடிப்படையில். 

உள்ளூர் சந்தைகள்: 

உள்ளூர் சந்தையில் வாங்குபவர்களும், விற்பவர்களும் உள்ளூர் பகுதியைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். 

பிராந்திய சந்தைகள்: 

பிராந்திய சந்தைகளானது உள்ளூர் சந்தையைவிட பரந்த அளவிலானவை, அல்லது சில சிறிய மாநிலங்கள் இணைந்த பகுதியாக இருக்கும். 

தேசிய சந்தைகள்: 

தேசிய சந்தையில் பொருள்களின் தேவை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டும் தேவையாக இருக்கலாம்.

சர்வதேச சந்தை: 

தயாரிப்புகளுக்கான தேவை சர்வதேச அளவிலானது 

2) நேரத்தின் அடிப்படையில். 

மிகக் குறுகிய கால சந்தை: 

பொருள்களின் அளிப்பு நிலையானது 

குறுகிய கால சந்தை: 

முந்தைய சந்தையை விட சற்று கூடுதல் நேரம் உடையது. 

நீண்ட கால சந்தை: 

உற்பத்தியை கணக்கிடுவதன் மூலம் விநியோகத்தை மாற்றி அமைக்கலாம். இத்தகையை சந்தையை தேவைகேற்ப மாற்றலாம். 

3) பரிவர்த்தனையின் அடிப்படையில் உடனடி சந்தை: 

பரிவர்த்தனைகள் நிகழும் இடத்திலேயே பணம் உடனடியாக செலுத்தப்படுகிறது. கடன் முறை இல்லை . 

எதிர்கால சந்தை: 

இது கடன் அடிப்படையிலான பரிவர்த்னைகள் ஆகும். 

4)  ஒழுங்குமுறையின் அடிப்படையில், 

ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை: 

பொருத்தமான அரசாங்க அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகின்றன. 

கட்டுப்பாடற்ற சந்தை: 

முற்றிலும் கட்டுப்பாடு எதுவுமற்ற சந்தை, கண்காணிப்போ, ஒழுங்குமுறையோ கிடையாது. 

5) போட்டியின் தன்மை அடிப்படையில்,

முற்றுரிமை: இது சந்தை கட்டமைப்பை குறிக்கிறது. ஒரு விற்பனையாளார் அல்லது உற்பத்தியாளர் முழு சந்தையில் கட்டுப்பாட்டை கொண்டு உள்ளார். 

ஏகபோக போட்டி: 

ஏராளமான வாங்குபவர்கள் விற்பவர்கள் உள்ளனர். ஒவ்வொரு விற்பனையாளரின் தயாரிப்பும் மற்றொன்றிலிருந்து வேறுபட்டுள்ளது. ஒலிகோபோலி: இது சந்தை வடிவத்தைக் குறிக்கிறது. ஒரே மாதிரியான அல்லது வேறுபட்ட தயாரிப்புகளில் சில விற்பனையாளர்கள் உள்ளதைக் குறிக்கிறது.

VI. செயல்பாடு (மாணவர்களுக்கானது) 

1. இன்றைய நாளில் நம் வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பத்து அத்தியாவசிய பொருட்களின் பெயர் மற்றும் அதன் விலையைப் பட்டியலிடுக.

TNPSC Group 2 Best Books to Buy

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *