Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Interior of the Earth

Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Interior of the Earth

சமூக அறிவியல் : புவியியல் : முதல் பருவம் அலகு 1 : புவியின் உள்ளமைப்பு

பயிற்சி வினா விடை

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. நைஃப் (Nife) —– ஆல் உருவானது. 

அ) நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்

ஆ) சிலிக்கா மற்றும் அலுமினியம் 

இ) சிலிக்கா மற்றும் மெக்னீசியம் 

ஈ) இரும்பு மற்றும் மெக்னீசியம்

விடை: அ) நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ் 

2. நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு விளிம்பின் அருகில் ஏற்படுகின்றது. 

அ) மலை 

ஆ) சமவெளிகள் 

இ) தட்டுகள் 

ஈ) பீடபூமிகள்

விடை: இ) தட்டுகள்

3. நிலநடுக்கத்தின் ஆற்றல் செறிவின் அளவினை_ மூலம் அளக்கலாம். 

அ) சீஸ்மோகிராஃப்

ஆ) ரிக்டர் அளவு கோல் 

இ) அம்மீட்டர்

ஈ) ரோட்டோ மீட்டர் 

விடை: ஆ) ரிக்டர் அளவு கோல் 

4. பாறைக் குழம்பு வெளியேறும் குறுகலான பிளவு —— என்று அழைக்கப்படுகிறது. 

அ) எரிமலைத்துளை

ஆ) எரிமலைப் பள்ளம் 

இ) நிலநடுக்க மையம்

ஈ) எரிமலை வாய் 

விடை: ஈ) எரிமலை வாய்

5. மத்திய தரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படும் எரிமலை 

அ) ஸ்ட்ராம்போலி

ஆ) கரக்கடோவா 

இ) பியூஜியாமா

ஈ) கிளிமாஞ்சாரோ 

விடை: அ) ஸ்ட்ராம்போலி 

6. ——- பகுதி “பசிபிக் நெருப்பு வளையம்” என்று அழைக்கப்படுகிறது. 

அ) பசிபிக் வளையம்

ஆ) மத்திய அட்லாண்டிக் 

இ) மத்திய-கண்டம்

ஈ) அண்டார்ட்டிக் 

விடை: அ) பசிபிக் வளையம் 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

1. புவிக்கருவிற்கும் கவசத்திற்கும் இடையே அமையும் எல்லைக்கோடு ——– என்று அழைக்கப்படுகிறது.

விடை: மோஹோரோவிசிக் 

2. நிலநடுக்க அலைகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர் ——– ஆகும்.

விடை: நில அதிர்வு மானி

3. பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி —– என்று அழைக்கப்படுகிறது.

விடை: எரிமலை வெளியேற்றம்

4. செயல்படும் எரிமலைக்கு உதாரணம் ———– ஆகும் 

விடை: ஸ்ட்ராம்போலி

5. எரிமலைகளின் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை —— என அழைக்கின்றனர்.

விடை: எரிமலை ஆய்வியல் 

III. பொருந்தாததை வட்டமிடுக. 

1. மேலோடு, மாக்மா, புவிக்கருவம், கவசம்

விடை: மாக்மா

2. நிலநடுக்க மையம், நில நடுக்க மேல் மையப்புள்ளி, எரிமலைவாய், சிஸ்மிக் அலைகள்

விடை: எரிமலைவாய்

3. உத்தரகாசி, சாமோலி, கெய்னா, கரக்கடோவோ

விடை: கரக்கடோவோ

4. லாவா, எரிமலைவாய், சிலிக்கா, எரிமலை பள்ளம்

விடை: சிலிக்கா

5. ஸ்ட்ராம்போலி, ஹெலென், ஹவாய், பூயூஜியாமா

விடை: பூயூஜியாமா

பொருத்துக. 

1. நிலநடுக்கம் – i. ஜப்பானிய சொல் 

2. சிமா – ii. ஆப்பிரிக்கா 

3. பசிபிக் நெருப்பு வளையம் – iii. திடீர் அதிர்வு

4. சுனாமி – iv. சிலிகா மற்றும் மக்னீசியம் 

5. கென்யா மலை – v. உலக எரிமலைகள்

[விடை : 1-iii, 2-iv, 3-V, 4-i, 5-ii]

1. நிலநடுக்கம் – iii. திடீர் அதிர்வு 

2. சிமா – iv. சிலிகா மற்றும் மக்னீசியம் 

3. பசிபிக் நெருப்பு வளையம் – v. உலக எரிமலைகள்

4. சுனாமி – i. ஜப்பானிய சொல் 

5. கென்யா மலை – ii. ஆப்பிரிக்கா 

V. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை (✔) செய்யவும். 

1. கூற்று : புவியின் உருவத்தை ஒரு ஆப்பிளோடு ஒப்பிடலாம்.

காரணம் : புவியின் உட்பகுதியானது மேலோடு, மெல்லிய புறத்தோல், புவிக்கருவம் ஆகியவற்றைக் கொண்டது. 

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது. 

ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை . 

இ) கூற்று சரி, காரணம் தவறு

ஈ) கூற்றும் காரணமும் தவறானவை 

விடை: அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

2. கூற்று : உலகின் மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் பசிபிக் கடலில் உள்ளன.

காரணம் : பசிபிக்கடலின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பசிபிக் நெருப்பு வளையம் என அழைக்கின்றோம். 

அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது. 

ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை . 

இ) கூற்று தவறு காரணம் சரி

ஈ) கூற்றும் காரணமும் தவறானவை 

விடை: அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது 

VI. ஒரு வரியில் விடைளிக்கவும். 

1. புவியின் மேலோட்டின் பெயரை எழுதுக. 

விடை: புவியின் மேலோட்டின் பெயர் கிரஸ்ட் (Crust) 

2. சியால் (SIAL) என்றால் என்ன? 

விடை: சியால் என்பது சிலிக்கா மற்றும் அலுமினியம் தாதுக்களால் ஆனது. 

3. புவிப் பாறைக்கோளத் தட்டின் நகர்வின் பெயர் என்ன? 

விடை: புவிப் பாறைக்கோளத்தட்டின் நகர்வின் பெயர் கழைதிட்டு நகர்வுகள். 

4. செயலிழந்த எரிமலைக்கு உதாரணம் தருக. 

விடை:ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சரோ. 

VII. கீழ்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும். 

1. மெல்லிய புறத்தோல் (அ) கவசம் என்றால் என்ன? 

விடை: புவி மேலேட்டின் கீழ் அடுக்கு கவசம் என அழைக்கப்படுகிறது. 

2. புவிக்கருவம் பற்றி சுருக்கமாக எழுதவும். 

விடை: புவியின் மையப்பகுதியை புவிக்கரு எனக் குறிப்பிடுகின்றனர். இது பேரிஸ்பியர் என்றும் அழைக்கப்படுகிறது. புவிக்கரு இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. அவை திரவ நிலையில் இரும்பு குழம்பாலான வெளிப்புற புவிக்கரு 2900 முதல் 5150 கிலோமீட்டர் அளவில் பரந்துள்ளது.

3. நிலநடுக்கம் வரையறு. 

விடை: நிலநடுக்கம் என்பது புவியின் மேலோட்டின் ஒரு பகுதியில் ஏற்படும் எதிர்பாராத நகர்வானது நிலத்தை அதிர வைக்கும் அசைவையும் நடுக்கத்தையும் ஏற்படுத்துவதே நிலநடுக்கம் என்கிறோம். 

4. சீஸ்மோகிராஃப் என்றால் என்ன? 

விடை: புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவியை நில அதிர்வு மானி என குறிப்பிடுகின்றனர். இதன் ஆற்றல் செறிவின் அளவினை ரிக்டர் என்பவர் கண்டுபிடித்த அளவையைக் கொண்டு கணக்கிடுகின்றன. ரிக்டர் அளவை 0 தொடங்கி 9 வரை நீடிக்கின்றது. 

5. எரிமலை என்றால் என்ன? 

விடை: எரிமலை என்றால் புவியின் மேற்பரப்பில் உள்ள பிளவு அல்லது துறை வழியே வெப்பம் மிகுந்த மாக்மா என்னும் பாறைக்குழம்பு வெளியேறுவதையே எரிமலை என்கிறோம். 

6. செயல்படும் அடிப்படையில் மூன்று எரிமலைகளின் பெயர்களை எழுதுக.

விடை: உருவத்தின் அடிப்படையில் மூன்று எரிமலைகளின் பெயர்கள் :

1. கேடய எரிமலை (Shield Volcano) 

2. தழல் கூம்பு எரிமலை (Cinder cone Volcano)

3. பல்சிட்டக் கூம்பு எரிமலை (Composite core Volcano)

VIII. காரணம் கூறு. 

1. புவியின் உட்புறத்திலிருந்து ஒருவருமே மாதிரி எடுக்கவில்லை . 

விடை: புவியின் உட்புறத்திலிருந்து ஒருவருமே மாதிரி எடுக்கவில்லை ஏன் என்றால் புவியின் உள்ளே செல்ல செல்ல அதன் வெப்பம் அதிகரித்து கொண்டு செல்லும். 

2. கண்டங்களின் மேலோடு கடலின் மேலோட்டைவிட அடர்த்தி குறைவு. 

விடை: கண்டங்களின் மேலோட்டில் சியால் இருப்பதாலும் கடலின் மேலோட்டில் சிமா இருப்பதாலும் கண்டங்கள் மேலோடு கடலின் மேலோட்டை விட அடர்த்தி குறைவாக உள்ளது. 

IX. வேறுபடுத்துக. 

1. சியால் மற்றும் சிமா 

சியால்

1. புவி மேலோடு இரண்டு பிரத்யோக பிரிவுகளை கொண்டது. 

கண்டங்களின் மேற்பகுதி கருங்கற் பாறைகளால் ஆனது.

2. இப்பகுதி முக்கிய கனிமக் கூறுகளான சிலிக்கா மற்றும் அலுமினியம் தாதுக்களால் ஆனது.

சிமா

1. மேலோட்டின் கீழ்ப்பகுதி அடர்ந்த பசால்ட் பாறைகளாலான ஒரு தொடர்ச்சியான பிரதேசமாகும். 

2. கடல் தலைகளாலான இப்பகுதி சிலிக்கா மற்றும் மக்னீசியத்தை மூலக்கூறுகளாக கொண்டு அமைந்ததாகும். 

2. செயல்படும் எரிமலை மற்றும் உறங்கும் எரிமலை

செயல்படும் எரிமலை

1. அடிக்கடி வெடித்தும், பாறைக் குழம்பை வெளியேற்றும் எரிமலைகள் செயல்படும் எரிமலைகள் என்றழைக்கப்படுகின்றன.

2. மத்திய தரைகடல் பகுதியிலுள்ள ஸ்ட்ராம்போலி, அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள செயிண்ட் ஹெலன், பிலிப்பைன்ஸ் தீவிலுள்ள பினாடுபோ மவுனா லோ எரிமலை உலகின் மிகப் பெரிய செயல்படும் எரிமலை ஆகும்.

உறங்கும் எரிமலை 

1. பல வருடங்களாக எரிமலைக் குழம்பை வெளியேற்றுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் வெளிப்படுத்தாமல், எப்போது வேண்டுமானாலும் செயல்படலாம் என்ற நிலையில் உள்ள எரிமலைகள் உறங்கும் எரிமலைகள் என அழைக்கப்படுகின்றன. 

2. இத்தாலியின் வெசுவியஸ், ஜப்பானில் பியூஜியாமா, இந்தோனேஷியாவில் கரக்கடோவா ஆகியவை இவ்வகைக்கு எடுத்துக்காட்டாகும். 

X. பத்தியளவில் விடையளி. 

1. நிலநடுக்கத்தின் விளைவுகள் பற்றி எழுதுக. 

விடை: நிலநடுக்கத்தின் விளைவுகள் :

1. நிலநடுக்கங்கள் மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவுகளை ஏற்படுத்துகின்றன. 

2. கட்டிடங்கள் இடிந்து விழுவது நிலநடுக்கத்தின் முக்கிய விளைவாகும்.

3. மண்ணாலும் செங்கற்களாலும் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து நொறுங்கி மரணக்குழிகளாக மாறுகின்றன. தீப்பற்றுதல் மற்றோர் முக்கிய ஆபத்தாகும். நிலத்தடி நீர் அமைப்பும் நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிப்படைகிறது. 

4. கடலுக்கு அடியில் நிலநடுக்கமானது கடல்நீரில் பெருத்த சேதங்களை ஏற்படுத்துகின்றன. 

5. பெரிய அலைகளும் அதனால் ஏற்படும் வெள்ளமும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய சேதத்தை உண்டாக்குகின்றன. 

6. சுனாமி என்ற ஜப்பானிய சொற்றொடர் நிலநடுக்கத்தால் கடலில் ஏற்படும் பெரிய அலைகளை குறிப்பிடுகின்றது. ஐப்பானிய கடலோரப் பகுதிகளிலும் பசிபிக் கடலோர பகுதிகளிலும் சுனாமியின் உருவாக்கம் பொதுவாக காணப்படுகிறது.

2. எரிமலை வெடிப்பின் அடிப்படையில் அதன் வகைகளை விளக்குக. 

விடை: I. எரிமலையின் வகைகள் :

1. கேடய எரிமலை (Shied Volcano) 

2. தழல் கூம்பு எரிமலை (Cinder cone Volcano) 

3. பல்சிட்டக் கூம்பு எரிமலை (Composite core Volcano) 

II. கேடய எரிமலை : 

1. சிலிக்காவின் அளவு குறைந்து மிக மெதுவாக எரிமலை குழம்பு வெளியேறும் போது கேடய எரிமலை உருவாகின்றது. 

2. இவை அகன்று மென்மையான சரிவுகளைக் கொண்ட கூம்பு வடிவத்தில் காணப்படும்.

3. ஹவாய் தீவுகளிலுள்ள எரிமலைக் குன்றுகள் இவ்வகையை சார்ந்தவையாகும். 

III. தழல் கூம்பு எரிமலை : 

1. மிகுந்த சிலிகா கொண்ட மாக்மாவை உள்ளிருக்கும் வாயுக்கள் தடுக்கும்போது ஏற்படும் அதிக அழுத்தத்தினால் வாயுக்களும் சாம்பல் துகள் சேர்ந்த ஓர் கலவை மிகுந்த சத்தத்துடன் வளிமண்டலத்தில் பல நூறு கிலோ மீட்டர் உயரத்திற்கு வெடித்து சிதறும்போது தழல் கூம்பு எரிமலைகள் உருவாகின்றன. 

2. மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா எரிமலைகள் இவ்வகையை சார்ந்தவையாகும். 

IV. பல்சிட்டக் கூம்பு எரிமலை :

1. லாவா பல்சிட்டம் எரிமலை சாம்பல் ஆகியவை மாறி மாறி அடுக்குகளாக படியும்போது பல்சிட்டக் கூம்பு எரிமலைகள் உருவெடுக்கின்றன. 

2. இவ்வகை எரிமலைகள் அடுக்கு எரிமலைகள் எனவும் அழைக்கலாம். 

3. அமெரிக்காவிலுள்ள சியாட்டல் நகரத்தின் அருகே உள்ள செயின் ஹெலன் எரிமலை பல்சிட்டக் கூம்பு எரிமலைக்கு எடுத்துக்காட்டாகும். 

3. முக்கியமான எரிமலை மண்டலங்களை எழுதி ஏதேனும் ஒன்று பற்றி விவரி. 

விடை: உலகில் மூன்று முக்கிய எரிமலை நிகழ்வு பகுதிகள் உள்ளன. அவை

1. பசிபிக் வளைய பகுதி (The Cirum Pacific belt) 

2. மத்திய கண்ட ப்பகுதி (The mid Continental belt) 

3. மத்திய அட்லாண்டிக் பகுதி (The mid Atlantic belt)

பசிபிக் வளைப்பகுதி : 

1. இந்த எரிமலை பகுதியானது குவியல் கடல் தட்டின் எல்லைப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது. 

2. பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ளது. 

3. மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் இப்பகுதியில் அமைந்திருப்பதால் இதனை பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கின்றனர்.

XI. சிந்தனை வினா (HOTs)

1. பூமியின் உட்கருவம் மிகவும் வெப்பமானது ஏன்? 

விடை: புவிக்கரு புவியின் மையப்பகுதியாகும். இதன் அடர்த்தி 13.0 கிராம்/செ.மீ3 ஆகும். இதன் வெப்பநிலை ஏறக்குறைய 5500° செல்சியஸ் முதல் 6000° செல்சியஸ் வரை காணப்படுகிறது. எனவே பூமியின் உட்கரு மிகவும் வெப்பமாக உள்ளது. 

2. எரிமலைகள் அழிவானதா அல்லது ஆக்கப்பூர்வமானதா? 

விடை: எரிமலைகள் பொதுவாக அழிவானதும் மற்றும் ஆக்கப்பூர்வமானதாகும்.

நன்மைகள் : 

எரிமலை வெடிப்பு சில நேரங்களில் புதிய நிலத்தோற்றங்களை உருவாக்குகின்றன. எரிமலைப் பாறைகள் பாறைச் சிதைவு மற்றும் வேதிப்பிரிகைகள் மூலம் மிகச் சிறந்த வளமான மண் பரப்பை ஏற்படுத்துகிறது. 

தீமைகள் : 

சூழல் மற்றும் எரிமலைக் கற்கள் மனிதர்களுக்கும், உடமைகளுக்கும் சேத்தை ஏற்படுத்துகின்றது. சில சமயங்களில் சாம்பல் மழை நீருடன் கலந்து பெரிய பரப்பளவில் முழுவதுமாக சூழ்ந்துவிடுகிறது. 

3. எரிமலை எவ்வாறு ஒரு தீவை உருவாக்குகிறது? 

விடை: போர்ட் பிளேயரிலிருந்து 135 கி.மீட்டர் வடகிழக்காக அமைந்துள்ள பேரெண் தீவு 1991 மற்றும் 1995ல் செயல்படும் எரிமலையாக இருந்தது. அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் உள்ள நார்கொண்டம் செயலிழந்த எரிமலையாகும். இதன் எரிமலைப் பள்ளம் முற்றிலும் அழிந்து விட்டது.

XII, செயல்பாடுகள் 

1. நிலநடுக்கம் மற்றும் எரிமலை பற்றிய படங்களை வைத்து ஒரு படத்தொகுப்பு தயாரிக்கவும். 

விடை: மாணவர்கள் தாங்களாகவே இச்செயல்பாட்டினை செய்ய வேண்டும். 

2. எரிமலையின் பாகங்களைக் குறிக்கவும்.

3. உலக வரைபடத்தில் பசிபிக் நெருப்பு வளையத்தைக் குறிப்பிடுக

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top