Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Equality

Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Equality

சமூக அறிவியல் : குடிமையியல் : முதல் பருவம் அலகு 1 : சமத்துவம்

பயிற்சி வினா விடை

I. சரியான விடையைத் தேர்வு செய்க. 

1. பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை ? 

அ) பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை 

ஆ) தேர்தலில் போட்டியிடும் உரிமை 

இ) அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல் 

ஈ) பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்

விடை: ஈ) பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்

2. கீழ்கண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்? 

அ) அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது. 

ஆ) இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல் 

இ) சட்டத்தின் முன் அனைவரும் சமம் 

ஈ) சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு 

விடை: இ) சட்டத்தின் முன் அனைவரும் சமம்

3. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் வயது 

அ) 21 

ஆ) 18 

இ) 25

ஈ) 31 

விடை : ஆ) 18

4. சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை 

அ) இயற்கை சமத்துவமின்மை 

ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை 

இ) பொருளாதார சமத்துவமின்மை 

ஈ) பாலின சமத்துவமின்மை

விடை: ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை 

5. சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு 

அ) 1981 

ஆ) 1971

இ) 1991 

ஈ) 1961 

விடை : ஆ) 1971

II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

1. குடிமை சமத்துவம் —- க்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.

விடை: சட்டத்திற்கு

2.  —– முதல் ——- வரையிலான இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் சமத்துவ உரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றன.

விடை : 14,18

3. தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது —— உரிமை ஆகும். 

விடை: அடிப்படை சமத்துவம்

4. சமத்துவம் என்பது முதலாவதாக —— இல்லாததாகும். 

விடை: சமூக சிறப்புரிமை

III. குறுகிய விடையளி. 

1. சமத்துவம் என்றால் என்ன? 

விடை: சமத்துவம் என்பது ஒரு தனி மனிதன் அல்லது ஒரு குழு வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் ஆகும். 

2. பாலின சமத்துவம் ஏன் தேவையானது? 

விடை: பாலின சமத்துவம் என்பது பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோர் சமமான உரிமைகள் வாய்ப்புகள் பெற வேண்டும் என்று கூறுவதோடு அவர்கள் ஒன்று போல் நடத்தப்பட வேண்டும் என யூனிசெப் நிறுவனம் கூறுகிறது.

3. குடிமை சமத்துவம் என்றால் என்ன? 

விடை: அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பதே குடிமை சமத்துவம் ஆகும். 

IV. விரிவான விடையளி. 

1. சமத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக. 

விடை:

1. சமத்துவம் பல நூறு ஆண்டுகளாக மனித சமூகத்தை ஊக்குவித்து வழி நடத்திய ஆற்றல் வாய்ந்த நீதி மற்றும் அரசியல் கோட்பாடாகும். 

2. சமத்துவம் என்ற கோட்பாடு மனித இனம் அதனுடைய சாதி, நிறம், பால், இனம் அல்லது தேசியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களும் சமமான மதிப்புள்ளவர்கள் என்ற கோட்பாட்டை அறை கூவுகிறது. 

3. மக்களாட்சிக் கோட்பாடுகளான சுதந்திரம், சமத்துவம் ஆகியவை நீதியின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும்போது மட்டுமே பொருளுடையவையாக இருக்கும். 

2. அரசியல் சமத்துவம் என்றால் என்ன? 

விடை: 

1. வாக்களிக்கும் உரிமை.

2. பொது அலுவலகத்தில் பங்கு கொள்ளும் உரிமை. 

3. அரசை விமர்சனம் செய்யும் உரிமை. 

4. குடிமக்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு சமமான வாய்ப்பினை பெற்றிருத்தல் வேண்டும். 

5. 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. 

6. 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. 

7. ஆனால் சுவிட்சர்லாந்து நாட்டில் 1971ஆம் ஆண்டில் தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. 

8. இந்தியாவில் 25 வயது பூர்த்தி அடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம். 

9. நாட்டின் பிரதமரின் வாக்கின் மதிப்பும் ஒரு சாதாரண மனிதனின் வாக்கின் மதிப்பும் பொதுத்தேர்தலில் ஒன்றே என்பது அரசியல் சமத்துவத்தைக் குறிக்கிறது. 

3. இந்திய அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்திற்கான உரிமையை எவ்வாறு பாதுகாக்கிறது? 

விடை:

1, உலகின் அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்புகளும் அதன் மக்களுக்கு சமத்துவத்தை உறுதி அளித்துள்ளன. 

2. இதே போன்று இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14-18 மூலம் சமத்துவத்தை அளிக்கிறது. 

3. சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு  சட்டப்பிரிவு 21 இல் மேலும் வலிமை படுத்தப்பட்டுள்ளது.

4. சட்டப்பிரிவு 15 பாகுபாட்டை தடைசெய்கிறது. 

5. சட்டப்பிரிவு 16 பொது வேலை வாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது. 

6. சட்டப்பிரிவு 17 தீண்டாமையை ஒழிக்கிறது.

7. சட்டப்பிரிவு 18 பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலை தடைசெய்கிறது. 

V. உயர் சிந்தனை வினா. 

1. பள்ளிகளில் சமத்துவமின்மையை நாம் எவ்வாறு அகற்ற முடியும்? 

விடை:

1. பள்ளிகளில் மாணவர்களை தகுதி, சாதி, நிறம், மதம் மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது. 

2. அனைவரையும் சமமாக நியாயமாக நடத்தல் வேண்டும். 

3. கல்வியை பெறுவதற்கு வேண்டிய அனைத்து வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். 

4. பள்ளி மாணவர்களிடையே ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்ற வேறுபாடு காட்டக்கூடாது. 

5. அவர்களின் திறனை கண்டறிந்து அதை ஊக்கப்படுத்துதல் வேண்டும்.

6. அனைவரும் சமம் என்பதை மாணவர்கள் மனதில் ஆழமாக பதிய செய்தல் வேண்டும். 

VI. வாழ்வியல் திறன்.

சமத்துவத்தின் வகைகள் பற்றி அறிதல் 

1. தகுதி, சாதி, நிறம் மதம் மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்கள் மத்தியில் எந்த பாகுபாடுகளும் இருக்கக் கூடாது.

2. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்

3. வாக்களிப்பதற்கான உரிமை, அரசாங்க அலுவலகத்தில் பணியாற்றும் உரிமை, அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை.

4. எந்த விதத்திலும் ஆணுக்கு குறைவாக என் திறமை இல்லை. 

எந்த சமத்துவ வகையை சார்ந்தது 

1. சமூக சமத்துவம் 

2. இந்திய அரசியல் அமைப்பின் சமத்துவம் 

3. அரசியல் சமத்துவம் 

4. பாலின சமத்துவம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *