அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 2 : மின்னோட்டவியல்
பயிற்சி
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், ‘x’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன ?
அ) 10 ஆம்பியர்
ஆ) 1 ஆம்பியர்
இ) 10 வோல்ட்
ஈ) 1 வோல்ட்
விடை : அ) 10 ஆம்பியர்
2. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்?
அ) சாவி L மட்டும்
ஆ) சாவி M மட்டும்
இ) சாவிகள் M மற்றும் N மட்டும்
ஈ) சாவி L அல்லது M மற்றும் N
விடை : ஈ) சாவி L அல்லது M மற்றும் N
3. சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் (mA) அளக்கப்படுகிறது. எனில், 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.
அ) 2.5 mA
ஆ) 25 mA
இ) 250 mA
ஈ) 2500 mA
விடை : இ) 250 mA
4. கீழ்க்காணும் எந்த மின்சுற்றில், மின்விளக்குகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது?
விடை :
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. மரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரானின் பாயும் திசைக்கு __________ ல் அமையும்
விடை : எதிர் முனையில்
2. ஓரலகு கூலூம் மின்னூட்டமானது ஏறக்குறைய __________ புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.
விடை : 6.242 x 1018
3. மின்னோட்டத்தை அளக்க __________ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
விடை : அம்மீட்டர்
4. மின்கடத்துப்பொருட்களில், எலக்ட்ரான்கள் அணுக்களோடு __________ பிணைக்கப்பட்டிருக்கும்.
விடை : தளர்வாக
5. மின்கடத்துத்திறனின் S.I. அலகு __________ ஆகும்.
விடை : சீமென்ஸ் / மீட்டர் (S / m)
III. சரியா – தவறா எனக் குறிப்பிடு, தவறு எனில் சரியான விடையை எழுதுக.
1. எலக்ட்ரான் ஓட்டத்தின் திசை, மரபு மின்னோட்டத்தின் திசையிலேயே அமைகிறது.
விடை : தவறு – எலக்ட்ரான் ஓட்டத்தின் திசை, மரபு மின்னோட்டத்தின் எதிர் திசையிலேயே அமைகிறது.
2. வீடுகளில் உள்ள மின் இணைப்பில், அதிக மின் பளு இருந்தால், மின் உருகு இழை உருகாது.
விடை : தவறு – வீடுகளில் உள்ள மின் இணைப்பில், அதிக மின் பளு இருந்தால், மின் உருகு இழை உருகும்.
3. பக்க இணைப்பில், மின் சாதனங்கள் கிளைகளாக பிரிக்கப்படுகின்றன.
விடை : சரி
4. மின்னோட்டத்தினை ‘A’ என்ற குறியீட்டால் குறிப்பிடுகிறோம்.
விடை : தவறு – மின்னோட்டத்தினை ‘ ɪ ‘ என்ற குறியீட்டால் குறிப்பிடுகிறோம்.
5. குறை கடத்தியின் மின் கடத்துத்திறன், கடத்தி மற்றும் கடத்தாப்பொருளின் மின்கடத்து திறனின் மதிப்புகளுக்கு இடையே அமையும்.
விடை : சரி
IV. பொருத்துக
1. மின்கலம் – அ. மின்சுற்றை திறக்க அல்லது மூட பயன்படுகிறது
2. சாவி – ஆ. மின்சுற்றில் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம்
3. மின்சுற்று – அதிக மின் பளு
4. குறு சுற்று துண்டிப்பான் – ஈ. மின்னோட்டம் செல்லும் ஒரு மூடிய பாதை
5. மின் உருகி – உ வேதி ஆற்றலை. மின் ஆற்றலாக மாற்றும் சாதனம்
விடைகள்
1. மின்கலம் – உ . வேதி ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றும் சாதனம்
2. சாவி – அ. மின்சுற்றை திறக்க அல்லது மூட பயன்படுகிறது
3. மின்சுற்று – ஈ. மின்னோட்டம் செல்லும் ஒரு மூடிய பாதை
4. குறு சுற்று துண்டிப்பான் – இ. அதிக மின் பளு
5. மின் உருகி – ஆ. மின்சுற்றில் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம்
V. ஒப்புமை படுத்துக
1. நீர் : குழாய் : மின்னோட்டம் : __________
விடை : மின் கம்பி
2. தாமிரம் : கடத்தி : மரக்கட்டை : __________
விடை : மின் அரிதிற்கடத்திகள்
3. நீளம் : மீட்டர் அளவு கோல் : மின்னோட்டம் : __________
விடை : அம்மீட்டர்
4. மில்லி ஆம்பியர் : 10-3 : மைக்ரோ ஆம்பியர் : __________
விடை : 10-6 A
VI. கூற்று – காரணம்
1. கூற்று (A) : தாமிரம், மின் கடத்துக்கம்பிகள் உருவாக்கப் பயன்படுகிறது.
காரணம் (R) : தாமிரம் குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது.
தெரிவு :
அ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை.
இ) A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
ஈ) A என்பது தவறு, ஆனால் R என்பது சரி.
விடை : அ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
2. கூற்று (A) : அரிதிற் கடத்திகள், மின்னோட்டத்தை தன் வழியே அனுமதிப்பதில்லை.
காரணம் (R) : அரிதிற் கடத்திகளில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை.
தெரிவு :
அ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை
இ) A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
ஈ) A என்பது தவறு, ஆனால் R என்பது சரி.
விடை : அ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
VII. குறு வினாக்கள்
1. மின்னோட்டத்தின் வேகம் என்ன?
• ஓரலகு காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு மின்னோட்டம் பாயும் வீதமே மின்னோட்ட வேகம் எனப்படும்.
• இது நீரோட்டம் இயங்கும் வீதத்திற்கு சமமாகும்.
2. மின்கடத்துத்திறனின் S.I. அலகு என்ன?
மின் கடத்துத்திறனின் S.I. அலகு சிமென்ஸ் / மீட்டர் (S / m) ஆகும்.
3. மின்னோட்டத்தை உருவாக்கும் சாதனத்தின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.
1. ஜெனரெட்டர்
2. சூரிய ஆற்றல்
3. புவி வெப்ப ஆற்றல்
4. நைட்ரஜன் ஆற்றல்
5. காற்று ஆற்றல்
4. மின் உருகி என்பது என்ன?
பாதுகாப்பு நிலைக்கு மேல் பாயும் மின்னோட்டத்தை உருகி துண்டிக்கும் கம்பித் துண்டை கொண்ட ஓர் தடையாக்கும் சாதனமே உருகு இழை ஆகும்.
5. மின்னோட்டத்தின் வெப்பவிளைவின் மூலம் இயங்கும் சாதனங்களைக் கூறுக.
• அறை வெப்பம் வழங்கி
• காபி தயாரிப்பு சாதனம்
• அயன் பாக்ஸ்
• முடி உலர்த்துதல்
• உணவு தயாரிப்பு சாதனம்
• மின் அடுப்பு
• வெந்நீர் கொதிகலன்
• முழகும் நீர் கொதிகலன்
6. அரிதிற்கடத்திகள் சிலவற்றைக் கூறுக.
• கண்ணாடி
• இரப்பர்
• காற்று
• பிளாஸ்டிக்
• மரக்கட்டை
7. மின்கலம் என்பது என்ன?
மின்கலம் என்பது வேதியாற்றலை மின்னாற்றலாக மாற்றும் ஓர் எளிய மின் வேதிக்கலனே ஓர் மின்கலன் ஆகும்.
VIII. சிறு வினாக்கள்
1. மின்னோட்டம் வரையறு
• மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் ஆகும்.
• ஓரலகு நேரத்தில் பொருளின் குறுக்குப் பரப்பு வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவே மின்னோட்டம் என வரையறுக்கப்படுகிறது.
2. பக்க இணைப்பு மற்றும் தொடர் இணைப்பு வேறுபடுத்துக.
தொடர் இணைப்பு
1. ஒற்றை மூடிய இணைப்பு
2. மின் விளக்கு குறைந்த பிரகாசத்துடன் ஒளிர்தல்
3. மின் விளக்குகள் மின் திறனை பகிர்ந்து கொள்ளுதல்
4. ஒரு மின் விளக்கு பழுதானால் மற்றவை ஒளிராது
பக்க இணைப்பு
1. பல கிளைகளுடன் கூடிய மின் இணைப்பு
2. மின் விளக்குகள் அதிக பிரகாசத்துடன் ஒளிர்தல்
3. ஒவ்வொரு மின் விளக்கும் மின் திறனை பெறுதல்
4. ஒரு விளக்கு பழுதானாலும் மற்ற விளக்குகள் ஒளிரும்
3. மின் கடத்துத்திறனை வரையறு.
• கடத்தி ஒன்றின் மின்னோட்டத்தை கடத்தும் திறன் அளவு அக்கடத்தியின் மின் கடத்து திறன் அல்லது தன் மின் கடத்து திறன் எனப்படும்.
• பொதுவாக σ (சிக்மா) என்ற கிரேக்க எழுத்தால் குறிப்பிடப்படுகிறது.
• மின் கடத்துத்திறனின் SI அலகு சீமென்ஸ் / மீட்டர் (S / m) ஆகும்.
IX. நெடு வினா
1. தொலைபேசி ஒன்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் பற்றி விளக்குக.
• தொலைபேசிகளில் மாறும் காந்த விளைவானது ஒரு மெல்லிய உலோகத் தாளை (டையபார்ம்) அதிர்வுக்கு உட்படுத்துகிறது.
• டையபார்ம்களானது காந்தங்களால் ஈர்க்கக்கூடிய ஒரு உலோகத்தால் செய்யப்படுகின்றன.
• தொலைபேசியின் கேட்பானில் பொருத்தப்பட்டுள்ள கம்பிச் சுருளுடன் டையபார்ம் இணைக்கப்பட்டிருக்கும்.
• கம்பிகள் வழியே மின்னோட்டம் பாயும்போது மென்மையான இரும்புப் பட்டையானது ஓர் மின்காந்தமாக மாற்றம் அடைகிறது.
• டையபார்மானது மின் காந்தத்தால் ஈர்க்கப்படுகிறது.
• மறு முனையில் உள்ள நபர் பேசும்போது பேசுபவரின் குரலானது மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மாற்றமுறச் செல்கின்றது.
• இந்த மாற்றம் பேட்பானில் உள்ள டையபார்மை அதிர்வுறச் செய்து ஒலியை உண்டாக்குகிறது.
2. மின்னோட்டத்தின் வெப்ப விளைவைப் பற்றி விளக்குக.
• ஓர் கம்பியின் வழியே மின்னோட்டம் பாயும்போது மின்னாற்றலானது வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது.
• வெப்பமூட்டும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பொருளானது அதிக உருகுநிலை கொண்டவை ஆகும்.
• நிக்ரோம் அவ்வகையானப் பொருளுக்கு எடுத்துக்காட்டாகும், (நிக்கல் இரும்பு மற்றும் குரோமியம் சேர்ந்த கலவை.
• மின்னோட்டத்தின் வெப்ப விளைவானது பல்வேறு செய்முறைப் பயன்பாடுகளை கொண்டதாகும்.
• மின் விளக்கு, வெந்நீர் கொதிகலன், மூழ்கும் நீர் கொதிகலன். இவ்வகையான விளைவினை அடிப்படையாக கொண்டது.
• இச்சாதனங்களில் அதிக மின் தடை கொண்ட வெப்பமூட்டும் கம்பிச் சுருள் இணைக்கப்பட்டிருக்கும்.
3. உலர் மின்கலம் ஒன்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் பற்றி விளக்குக.
• உலர் மின்கலன்கள் எடுத்துச் செல்லத்தக்க வடிவிலான லெக்லாஞ்சி மின்கலத்தின் ஓர் எளிய வடிவம்.
• இது எதிர் மின்வாய் அல்லது ஆனோடாகச் செயல்படும் துத்தநாக மின் தகட்டை உள்ளடக்கியது.
• அம்மோனியம் குளோரைடு மின் பகுதியாகச் செயல்படுகிறது.
• துத்தநாக குளோரைடானது அதிக அளவு நீர் உறிஞ்சும் தன்மை கொண்டதால் பசையின் ஈரப்பதத்தை பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது.
• கலனின் நடுவில் ஒரு வெண்கல மூடி கொண்டு மூடப்பட்டிருக்கும் கார்பன் தண்டானது வைக்கப்பட்டுள்ளது. இத்தண்டு நேர் மின்வாய் அல்லது கேதோடாக செயல்படுகிறது.
• இது ஒரு மெல்லிய பையில் மிக நெருக்கமாக மரக்கரி மற்றும் மாங்கனிசு டை ஆக்ஸைடு (Mnoz) நிரம்பிய கலவையால் சூழ்ந்து இருக்கும் இங்கே ஆடிண Mnoz ஆனது மின் முனைவாக்கியமாகச் செயல்படுகிறது.
• துத்தநாகப் பாண்டமானது மேலே மூடப்பட்ட நிலையில் மூடப்பட்டிருக்கும்.
• வேதிவினையின் விளைவாக உருவாகும் வாயுக்களை வெளியேற்ற எதுவாக அதில் ஓர் சிறியத்துளை உள்ளது.
• கலத்திற்குள்ளான வேதிவினையானது லெக்லாஞ்சி மின்கலம் போன்றே நடைபெறும்.
X. உயர் சிந்தனை வினா
1. மாணவர் ஒருவர், ஒரு மின்கலம், ஒரு சாவி, ஒரு டார்ச் பல்பு (கை மின் விளக்கு பிடிப்பானுடன்) மற்றும் தாமிர இணைப்புக் கம்பிகளைக் கொண்டு ஒரு மின்சுற்றை உருவாக்குகிறார். அவர், சாவியைக் கொண்டு சுற்றை மூடிய போது, மின் விளக்கு ஒளிரவில்லை. அவர், மின்சுற்றை சோதிக்கும் போது, அனைத்து இணைப்புகளும் சரியாக இருக்கிறது. எனில், அனைத்து இணைப்புகளும் சரியாக இருந்த போதிலும், மின் விளக்கு ஒளிராமல் இருக்க என்னென்ன காரணங்கள் இருக்கலாம்?
1. சிலநேரங்களில் மின்விளக்கை ஒரு மின்கலத்துடன் கம்பிகளால் இணைக்கப்பட்டிருந்தாலும் அந்த மின் சுற்று ஓளிராது.
2. விளக்கை இணைத்திருந்தால் இது போன்று நிகழலாம்.
3. மின் விளக்கின் மின்இழை (மின்கம்பி) உடைந்திருந்தால் (மின் விளக்கானது இணைக்கப்படாமல்) சற்று பூர்த்தியாகாமல் இருக்கும் எனவே மின்சாரம் அதன் (மின்கம்பி) வழியாக பரவாமல் மின் விளக்கு ஒளிர்வதில்லை.
XI. படம் அடிப்படையிலான வினாக்கள்
1. படத்தில் காட்டியுள்ளபடி, மூன்று மின் கடத்திகள் இணைக்கப்பட்டுள்ளது. கடத்தி RS வழியே 10 ஆம்பியர் மின்னோட்டமும், கடத்தி QR வழியே 6 ஆம்பியர் மின்னோட்டமும் செல்கிறது எனில், கடத்தி PR வழியே செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன?
அ) 4 ஆம்பியர்
ஆ) 6 ஆம்பியர்
இ) 10 ஆம்பியர்
ஈ) 15 ஆம்பியர்
விடை : அ) 4 ஆம்பியர்
2. பின்வரும் தொடர் மின் இணைப்பிற்கான ஒரு மின்சுற்றை வரைக.
விடை :
3. கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றைக் கவனி. சுற்றில் இரு மின்விளக்குகள் மட்டும் ஒளிர வேண்டும் எனில், பின்வரும் எந்தெந்த சாவிகள் மூடப்பட வேண்டும்.
அ) S1, S2 மற்றும் S4 மட்டும்
ஆ) S1, S3 மற்றும் S5 மட்டும்
இ) S2, S3 மற்றும் S4 மட்டும்
விடை : இ) S2, S3 மற்றும் S4 மட்டும்
4. கீழ்க்காணும் மூன்று மின்சுற்றுக்களைக் கவனி, ஒவ்வொன்றும் ஒரு கண்ணாடித்தண்டு (G), ஒருஸ்டீல்தண்டு (S) மற்றும் ஒரு மரக்கட்டைத் தண்டு (W) ஆகியவற்றைக் கொண்டுள்ளது எனில், பின்வரும் எந்த மின்சுற்றுக்களின் மின்விளக்குகள் ஒளிராது.
அ) A மட்டும்
ஆ) C மட்டும்
இ) A மற்றும் B மட்டும்
ஈ) A, B மற்றும் C
விடை : இ) A மற்றும் B மட்டும்
தீர்க்கப்பட்ட கணக்கு
தீர்க்கப்பட்ட கணக்கு 2.1
ஒரு கம்பியின் வழியே 30 கூலும் மின்னூட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது?
தீர்வு:
மின்னூட்டம் q = 30 கூலூம்
நேரம் t = 2 நிமிடம் × 60விநாடிகள்
= 120 விநாடிகள்
மின்னோட்டம் l = q/ t = 30C/120s = 0.25 A
தீர்க்கப்பட்ட கணக்குகள் 2.2
ஓர் சுற்றின் வழியே 0.002A மின்னோட்டம் பாய்கிறது எனில், அச்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மைக்ரோ ஆம்பியரில் கூறுக?
தீர்வு
மின்சுற்றில் பாயும் மின்னோட்டம் = 0.002A
1 A = 106µA
0.002A = 0.002 × 106µA
= 2 × 10-3 × 106µA
= 2 × 103µA
0.002A = 2000 µA
மாணவர்கள் செயல்பாடு
செயல்பாடு :1
உனது உலர்ந்த தலைமுடியைச் சீப்பால் சீவு, சீப்பால் தலையை சீவிய உடன் அதை சிறு காகிதத் துண்டின் அருகில் கொண்டு வரும் போது, நீ என்ன காண்கிறாய்?
பிளாஸ்டிக் நாற்காலியில் இருந்து நீ எழுந்தவுடன் நீ அணிந்திருக்கும் நைலான் சட்டை நாற்காலியுடன் ஒட்டிக்கொண்டு பட பட என ஒலியை எழுப்புகிறது, இவ்வொலி உருவாக காரணம் என்ன?
நமது கையில் தேய்க்கப்பட்ட பலூன் எந்த வித தொடுவிசையும் இன்றி சுவற்றில் ஒட்டிக் கொள்கிறது, இவை அனைத்திற்குமான காரணம் நீ அறிவாயா?
மேற்காண் அனைத்து செயல்பாடுகளிலும், ஓர் பொருளின் பரப்பின் மீது மற்றொரு பொருளின் பரப்பை தேய்க்கும் போது, அவை மின்சுமை அடைகிறது
1 மில்லி ஆம்பியர் (mA) = 10-3 ஆம்பியர்
அதாவது 1/1000 ஆம்பியர் ஆகும்
1 மைக்ரோ ஆம்பியர் (µA) = 10-6 ஆம்பியர்
அதாவது 1/1000000 ஆம்பியர் ஆகும்
செயல்பாடு : 2
வீட்டில் நாமே மின்சாரம் தயாரிக்கலாமா?
தேவையானவை
1. துத்தநாக மற்றும் தாமிர மின்வாய்கள்
2. மின் விளக்கு
3. இணைப்புக் கம்பிகள்
4. எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை மற்றும் வாழைப்பழம்
செய்முறை
• படத்தில் காட்டியுள்ளபடி ஓர் சுற்றை உருவாக்கவும்.
• சுற்றில் எலுமிச்சைப்பழம் இணைக்கப்படும் போது மின்விளக்கின் பொலிவினை உற்று நோக்கவும்,
• மற்ற பழங்களைப் பயன்படுத்தி சோதனையைத் திரும்ப செய்யவும், பட்டியலிடப்பட்ட வெவ்வேறான பழங்களை சுற்றில் மாற்றி இணைக்கப்படும் போது மின்விளக்கின் பொலிவில் ஏதேனும் வேறுபாட்டை கவனித்தாயா?
எந்தப் பழம் சுற்றில் இணைக்கப்படும் போது அதிகப் பொலிவை கொடுக்கிறது? ஏன்? (உனக்கு இதற்கான காரணம் தெரியவில்லையெனில் உனது ஆசிரியரிடம் இருந்து மிகச் சரியான காரணத்தைக் கண்டறியவும்).
காரணம் கண்டறிதல்
மேற்காண் செயல்பாட்டில் எது மின்விளக்கை பொலிவுறச் செய்தது. மின்விளக்கின் பொலிவில் ஏன் வேறுபாடு காணப்பட்டது? காரணம் என்னவெனில் மின்விளக்குடன் இணைக்கப்பட்ட பழங்கள் வெவ்வேறு அளவிலான மின்னாற்றலை உருவாக்கியதுதான்.
மிகச் சிறிய அளவிலான மின்னோட்டத்தை மிகக் குறைந்த காலத்திற்கு உருவாக்கும் மூலங்கள் மின்கலன்கள் அல்லது மின் வேதிகலன்கள் என அழைக்கப்படுகின்றன, மின்கலன்கள் வேதியாற்றலை மின்னாற்றலாக மாற்றுபவையாகும்.
செயல்பாடு : 3
நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன். நான் சோர்ந்து போகப்போகிறேன். நீங்கள் என்னை எழுப்ப விரும்பினால் எனக்கு என்ன முதலுதவி அளிப்பீர்கள்?
மின்சுற்றில் இணைப்பதன் மூலம் இரண்டாம் நிலை கலத்தில் முதலுதவி அளிப்பேன்
செயல்பாடு : 4
மின்சாவியினை உருவாக்குவோமா
நாமே நம் மின்சுற்றினுக்கு மின்சாவியை உருவாக்குவோம். 10 செ.மீ நீளமுள்ள நீளமான இரும்புத் தகட்டை எடுத்துக் கொள், படத்தில் காட்டியுள்ள படி இருமுறை மடித்துக்கொள், மரக்கட்டையின் வளைவு வழியே ஓர் ஆணியைச் செருகு, மரக்கட்டையின் மற்றொரு முனையில் ஆணியினை பயன்படுத்தி தகட்டின் மற்றொரு முனையை அமை, இரும்புத் துண்டானது முதல் ஆணியைத் தொடாவண்ணம் அதன் மேல் பொருத்தி மரக்கட்டையின் மறுமுனையில் இரும்புத் துண்டு மற்றொரு முனையை ஆணியின் உதவியால் சொருகு, தற்போது மின்சாவியானது தயாராகிவிட்டது.
உனது மின்சாவியினை சோதிக்க நீ விரும்புகிறாயா? அவ்வாறு செய்ய முதலில் படத்தில் காட்டப்பட்டுள்ள படி மின்சுற்றை அமைக்கவும், மின்சுற்றினை திறக்கவும் மூடவும் மின்சாவியினை நீ எவ்வாறு பயன்படுத்தவாய்?
மின்சாவியின் உலோகத்துண்டானது ஆணி மீது அழுத்தியவுடன் மின்விளக்கு ஒளிர்ந்தாலும் அழுத்துவது நிறுத்தப்பட்டவுடன் மின்விளக்கு ஒளிர்வது நின்றுவிட்டால் நீ உருவாக்கிய தொடுசாவியானது வேலை செய்கிறது என்பது பொருள், நீ உருவாக்கிய தொடுசாவியானது எளிய சாவியாகும், உனது வீடுகளிலும் பள்ளிகளிலும் மின்சாவிப்பலகையில் வேறுபட்ட மின்சாவிகளை நீ பார்த்திருப்பாய்.
சாவிகளானது அவற்றின் பயன்பாடு கையாளும் விதம் மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும், ஆனால் அவை அனைத்தும் ஒரே தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது, மின்சாவியானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முனைகளை உலோகத் தகட்டுடன் உள்ளகத்தே இணைக்கப்பட்ட ஓர் இயங்கு சாதனமாகும், பொதுவாக பயன்படுத்தப்படும் மின்சாவிகளானது கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
நமது உடலில் இயற்கையாக உருவாகும் மின் சைகைகளின் துலங்களாக அனைத்து தசைகளும் இயங்கும்
குறுக்கு மின்சுற்று
உன் வீட்டருகில் அமைந்திருக்கும் மின்கம்பங்களில் சில நேரங்களில் உருவாகும் தீப்பொறியை நீ கண்டு இருக்கிறாயா? அந்த மின்சார தீப்பொறி உருவாக காரணம் உனக்கு தெரியுமா? இது மின் பாதையில் ஏற்படும் குறுக்கு மின்சுற்றினால் உருவாகிறது, குறுக்குச் சுற்று என்பது இரு மின்னோட்டம் செல்லும் கடத்திகளுக்கு இடையே ஏற்படும் மிகக் குறைந்த மின்தடையினால் ஏற்படும் மின்சுற்று, குறுக்கு மின்சுற்று ஆகும்.
வெல்டிங் செய்தல், குறுக்கு மின் சுற்றின் விளைவாக உருவாகும் வெப்பத்தின் நடைமுறைப் பயன்பாடே ஆகும்.
தாமிரத்தாலான மின் கடத்திகள், மிக குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, தாமிரக் கம்பிகள் வீட்டு மின் சுற்றுகளில் பயன்படுத்துகின்றன. இவ்வகை கம்பிகள் அதிக மின் தடையைக் கொண்டுள்ள பொருட்களால் சூழப்பட்டு இருக்கும். இந்த பொருட்கள் பொதுவாக நெகிழ்வான பிளாஸ்டிக்கால் செய்யப்படுகின்றன.
சிம் கார்டுகள், கணினிகள், மற்றும் ATM கார்டுகள் எதனால் உருவாக்கப் பட்டுள்ளன என்று உனக்குத் தெரியுமா?
சிம் கார்டுகள், கணினிகள், மற்றும் ATM கார்டுகளை பயன்படுத்தப்படும் சிப்புகளானது சிலிகான் மற்றும் ஜெர்மேனியம் போன்ற குறைக்கடத்திகளால் ஆக்கப்பட்டிருக்கும். ஏனெனில், அவற்றின் மின் கடத்துத்திறன் மதிப்பானது, நற்கடத்திகள் மற்றும் காப்பான்களுக்கும் இடையில் அமையப்பெற்றிருக்கும்.
செயல்பாடு :5
தேவையானவை
* இரும்பு ஆணி
* மின்கல அடுக்கு, மின் அவிழ்பான்மற்றும் மின் கம்பி
சுமார் 75 செ.மீ நீளமான ஓர் காப்பிடப்பட்ட நெகிழும் தன்மை கொண்ட ஓர் கம்பியும் 8 முதல் 10 செ.மீ நீளம் கொண்ட ஓர் இரும்பு ஆணியையும் எடுத்துக் கொள், ஆணியைச் சுற்றி கம்பிச் சுருள் போல் கம்பியை மிகவும் நெருக்கமாக சுற்றிக் கொள், படத்தில் காட்டியுள்ளபடி மின்கலத்துடன் கம்பியின் திறந்த முனைகளை இணை, ஆணியின் முனைக்கருகில் சில குண்டூசிகளை வை, தற்போது பாயும் மின்னோட்டத்தை செலுத்தும் போதும் நிறுத்தும் போதும் என்ன நிகழ்கிறது?
மின்சாவியானது மூடிய நிலையில் உள்ள போது ஆணியின் முனைகளில் குண்டூசிகள் ஒட்டிக் கொள்ள ஆரம்பிக்கும்,
மின்சாவியானது திறந்த நிலையில் மின்னோட்டம் பாய்வது நிறுத்தப்பட்டவுடன் கம்பிச் சுருள் தனது காந்தத் தன்மையை இழந்துவிடுகிறது,
மின்னோட்டம் பாயும் திசையைப் பொறுத்து கம்பிச் சுருளின் இரு முனைகளிலும் மின்முனைவுகள் மாற்றமடையும்