Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 6th Tamil Books Chapter 9 1

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 9 1

தமிழ் : பருவம் 3 இயல் 3 : இன்னுயிர் காப்போம்

கவிதைப்பேழை: ஆசிய ஜோதி

I. சொல்லும் பொருளும்

  1. அஞ்சினார் – பயந்தனர்
  2. கருணை – இரக்கம்
  3. வீழும் – விழும்
  4. ஆகாது – முடியாது
  5. பார் – உலகம்
  6. நீள்நிலம் – பரந்த உலகம்
  7. முற்றும் – முழுவதும்
  8. மாரி – மழை
  9. கும்பி – வயிறு
  10. பூதலம் – பூமி

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. புத்தரின் வரலாற்றை கூறும் நூல் _______________

  1. ஜீவஜோதி
  2. ஆசியஜோதி
  3. நவஜோதி
  4. ஜீவன்ஜோதி

விடை : ஆசியஜோதி

2. நேர்மையான வாழ்வு வாழ்பவர் _______________

  1. எல்லா உயிர்களி்டத்தும் இரக்கம் கொண்டவர்
  2. உயிர்களைத் துன்புறுத்துவர்
  3. தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்
  4. தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்

விடை : எல்லா உயிர்களி்டத்தும் இரக்கம் கொண்டவர்

3. ஒருவர் செய்யக் கூடாதது _______________

  1. நல்வினை
  2. தீவினை
  3. பிறவினை
  4. தன்வினை

விடை : தீவினை

4. “எளிதாகும்” என்பதனைச் பிரித்து எழுதக் கிடைப்பது _______________

  1. எளிது + தாகும்
  2. எளி + தாகும்
  3. எளிது + ஆகும்
  4. எளிதா + ஆகும்

விடை : எளிது + ஆகும்

5. “பாலையெல்லாம்” என்பதனைச் பிரித்து எழுதக் கிடைப்பது _______________

  1. பாலை+யெல்லாம்
  2. பாலை+எல்லாம்
  3. பாலை+எலாம்
  4. பா+எல்லாம்

விடை : பாலை+எல்லாம்

6. “இனிமை + உயிர்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________

  1. இன்உயிர்
  2. இனியஉயிர்
  3. இன்னுயிர்
  4. இனிமைஉயிர்

விடை : இன்னுயிர்

7. “மலை + எலாம்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________

  1. மலைஎலாம்
  2. மலையெலாம்
  3. மலையெல்லாம்
  4. மலைஎல்லாம்

விடை : மலையெலாம்

III. குறுவினா

1. அரசனாலும் செய்ய முடியாத செயல் எது?

வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லோர்க்கும் எளிய செயல். ஆனால், இறந்த உடலுக்கு உயிரைக் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல்.

2. எறும்பு எதற்காகப் பாடுபடுகிறது?

எல்லா உயிர்களும் தம் உயிரைப் பெரிதாக மதித்து பாதுகாப்பது போல எறும்பும் தன் உயிரைக் காக்கப் பாடுபடுகிறது.

3. ஒரு நாளும் விட்டுச் செல்லாதது எது?

ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது.

4. உலகம் முழுமையையும் எப்போது ஆள முடியும்?

நல்ல மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையும் இரக்கத்தால் ஆட்சி செய்ய முடியும்.

IV. சிறுவினா

எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழப் புத்தர்பிரான் கூறும் அறிவுரைகள் யாவை?

வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லோர்க்கும் எளிய செயல். ஆனால், இறந்த உடலுக்கு உயிரைக் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல்.எல்லா உயிர்களும் தம் உயிரைப் பெரிதாக மதித்து பாதுகாப்பது போல எறும்பும் தன் உயிரைக் காக்கப் பாடுபடுகிறது.நல்ல மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையும் இரக்கத்தால் ஆட்சி செய்ய முடியும்.உலகில் மழை பெய்வதால் வயல் பக்குவம் அடைகிறது. எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர். இந்த மறைபொருளை அறியாதவர் பிற உயிர்களை வருத்தித் தாமும் துன்புறுவார்.காடு, மலை எல்லாம் மேய்ந்து வருகிறது ஆடு. அது தன் குட்டி வருந்திடும் வகையில் பாலை எல்லாம் மக்களுக்கு தருகிறது. அது தீய செயல் அன்று.இந்த உலகில் ஆடுகளும் உங்களை நம்பி இருக்கும் உயிர்கள். நம்மை நம்பி இருப்பவரின் வயிறு எரியும் வகையில் நடந்து கொள்வதால் உங்களுக்கு நன்மை கிடைப்பதில்லை.ஆயிரம் பாவங்கள் செய்து ஆட்டின் உயிரை எடுப்பதால் பாவங்கள் அகன்ற போகாது. ஒருவர் செய்த நன்மையும், தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது.ஆகையால் தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள். இந்த பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிவிடும் எண்ணத்தை உங்களை விட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள்

கூடுதல் வினாக்கள்

I. பிரித்து எழுதுக

  1. இன்னுயிர் = இனிமை + உயிர்
  2. நாடெங்கும் = நாடு + எங்கும்
  3. எளிதாகும் = எளிது + ஆகும்
  4. பக்குவமாவது = பக்குவம் + ஆவது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தேசிய விநாயகனார் ________________ என்னும் பட்டம் பெற்றவர்

விடை : கவிமணி

2. ஒருவர் செய்த ______________, _____________ ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது

விடை : நன்மையும், தீமையும்

3. எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே _____________ வாழ்பவர்

விடை : நேர்மையான வாழ்வு

III. வினாக்கள்

1. தேசிய விநாயகனார் பற்றி குறிப்பு வரைக

  • தேசிய விநாயகனார் 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்
  • 36 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்
  • கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்

2. ஆசியஜோதி குறிப்பு வரைக

ஆசியஜோதி ஆங்கில மொழியல் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றை கூறுகிறது

3. இரக்கம் உயிர் இரக்கம் என்றால் என்ன

பிற உயிர்களைத் தம்முயிர் போல் எண்ணிக் காக்க வேண்டும். அதுவே சான்றோர் போற்றும் உயிர் இரக்கம் ஆகும்.

அவ்விரக்கமே மனித குலத்தை வாழ வைக்கிறது.

4. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் யார்?

உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் புத்தர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *