Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 2

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 2

தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது

உரைநடை: தமிழ்நாட்டில் காந்தி

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

  1. கோவை
  2. மதுரை
  3. தஞ்சாவூர்
  4. சிதம்பரம்

விடை : மதுரை

2. காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ கற்க வேண்டும் என்று விரும்பினார்?

  1. நாமக்கல் கவிஞர்
  2. திரு.வி.க
  3. உ.வே.சா
  4. பாரதியார்

விடை : உ.வே.சா

II. பொருத்துக

1. இலக்கிய மாநாடுபாரதியார்
2. தமிழ்நாட்டுக் கவிஞர்சென்னை
3. குற்றாலம்ஜி.யு.போப்
4. தமிழ்க்கையேடுஅருவி

விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

III. சாெற்றொடரில் அமைத்து எழுதுக

1. ஆலாேசனை

  • பெரியோர்கள் ஆலோசனை வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது

2. பாதுகாக்க

  • காடுகளை அழிவின்றி பாதுகாக்க வேண்டும்

3. மாற்றம்

  • தனி மனிதனின் மாற்றமே தேசத்தின் மாற்றமாக அமையும்

4. ஆடம்பரம்

  • ஆடம்பரம் அழிவின் ஆரம்பம்

IV. குறுவினா

1. காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி இல்லாததால், காந்தியடிகள் நுழையவில்லை

2. காந்தியடிகளுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்டுத்திய நிகழ்வைக் கூறுக?

காந்தியடிகள் தமக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பலமுறை கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தகாலத்தில் தமிழ் மொழியை கற்கத் தொடங்கியுள்ளதாகத் கூறியுள்ளார்.ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். திருக்குறள் அவரைக் கவர்ந்த நூலாகும் இவை அனைத்தும் காந்தியடிகள் தமிழ் கற்கும் நிகழ்வுகள் ஆகும்.

V. சிறுவினா

1. காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அ்மைந்த நிகழ்வினை எழுதுக.

1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார். செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார்.அப்போது காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகைள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்தார்.அன்றுமுதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தாெடங்கினார். அவரது தாேற்த்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்டுத்திய பெருமை தமிழ்நாட்டுக்கு உணடு. அந்தக் கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் இருந்தார். உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் இதுவாகும்

2. காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தாெடர்பை எழுதுக.

காந்தியடிகள் தமக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பலமுறை கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழியை கற்கத் தொடங்கியுள்ளதாகத் கூறியுள்ளார்.ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். திருக்குறள் அவரைக் கவர்ந்த நூலாகும்.1937 ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சாமிநாதர் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தார். உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார்.”இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார் காந்தியடிகள். இந்நிகழ்வுகள் மூலம் ஏற்த்தாழ்வு அற்ற சமுதாயம் மலர வேணடும் என்னும் காந்தியடிகளின் உள்ள உறுதியை அறிந்து கொள்ளலாம்.மேலும் அவரே தமிழ் மாெழியின் மீது கொண்ட பற்றையும் அறிந்து கொள்ள முடிகிறது.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சென்னையில் __________________ எதிர்த்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

விடை : ரெளலட் சட்டத்தை

2. காந்தியடிகளிடம் சென்னை பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டியவர் __________________ 

விடை : பாரதியார்

3. காந்தியடிகளைக் கவர்ந்த நூல் __________________ 

விடை : திருக்குறள்

4. தமிழ்க்கையேட்டை இயற்றியவர் __________________ 

விடை : ஜி.யு.போப்

IV. குறுவினா

1. காந்தியடிகள் எதற்கெல்லாம் பாடுபட்டார்?

பெண்கள் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும்
அவர் பாடுபட்டார்.

2. காந்தியடிகள் எதனை அறமாகப் போற்றினார்?

காந்தியடிகள் எளிமையை ஓர் அறமாகப் போற்றினார்.

3. ரெளலட் சட்டத்தை ஆங்கில அரசு எப்போது நடைமுறைப்படுத்தியது?

ரெளலட் சட்டத்தை ஆங்கில அரசு 1919-ல் நடைமுறைப்படுத்தியது

3. இராஜாஜி தமிழ்நாட்டுக் கவிஞர் என காந்தியடிகளிடம் யாரை அறிமுகப்படுத்தினார்?

இராஜாஜி தமிழ்நாட்டுக்கவிஞர் என காந்தியடிகளிடம் பாரதியாரை அறிமுகப்படுத்தினார்.

4. காந்தியடிகளை தம்மை கவர்ந்த நூல்களாக கூறியவை யாவை?

ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். திருக்குறள் அவரைப் பெரிதும் கவர்ந்த நூலாகும்.

5. உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகளின் கூற்று யாது?

உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் ”இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார் காந்தியடிகள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top