Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 5

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 5

தமிழ் : பருவம் 2 இயல் 1 : கல்வி – கண்ணெனத் தகும்

இலக்கணம்: இன எழுத்துகள்

I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மெல்லினத்திற்காக இன எழுத்து இடம்பெறாத நூல் எது?

  1. மஞ்சள்
  2. வந்தான்
  3. கல்வி
  4. தம்பி

விடை : கல்வி

2. தவறான சொல்லை கண்டறிக.

  1. கண்டான்
  2. வென்ரான்
  3. நண்டு
  4. வண்டு

விடை : வென்ரான்

II. பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக.

பிழையான சொல் திருத்தம்
தெண்றல்
கன்டம்
நன்ரி
மன்டபம்
தென்றல்
கண்டம்
நன்றி
மண்டபம்

III. சிறுவினா

இன எழுத்துகள் என்றால் என்ன?

சில எழுத்துகளுக்கு இடையை ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.

கூடுதல் வினாக்கள்

1. இன எழுத்துகள் எவை?

ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும்.

2. உயிர் எழுத்துக்களின் இன எழுத்துகள் பற்றி விவரி

மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.குறில் எழுத்து இல்லாத’ஐ’ என்னும் எழுத்துக்கு ‘இ’ என்பது இன எழுத்தாகும்.‘ஔ’ என்னும் எழுத்துக்கு ‘உ’ என்பது இன எழுத்தாகும். சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.(எ. கா.) ஓஒதல், தூஉம், தழீஇ

3. தமிழ் எழுத்துகளில் இன எழுத்து இல்லாத எழுத்து எது?

தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.

 மொழியை ஆள்வோம் 

I. தொடர்களை நீட்டித்து புதிய தொடர்களை உருவாக்குங்கள்

பாடம் படித்தான்மழை பெய்தது
வகுப்பில் பாடம் படித்தான்
தமிழ் வகுப்பில் பாடம் படித்தான்
நேற்று தமிழ் வகுப்பில் பாடம் படித்தான்
அவன் நேற்று தமிழ் வகுப்பில் பாடம் படித்தான்
கன மழை பெய்தது
ஊரில் கன மழை பெய்தது
எங்கள் ஊரில் கன மழை பெய்தது
நேற்று எங்கள் ஊரில் கன மழை பெய்தது

II. இரு பொருள் தரக்கூடிய சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை அமையுங்கள்.

(நூல், மாலை, ஆறு, படி)

1. நூல்

  • ஆடை தைக்க உதவுவது நூல் / மூதுரை அற நூல்

2. மாலை

  • இரத்தின மாலை விலைமதிப்பற்றது / சூரியன் மாலை நேரத்தில் மறைகிறது

3. ஆறு

  • ராமு ஆறு மாதம் கழித்த பின் ஊருக்கு வந்தான் / தாமிரபரணி ஆறு வற்றாத ஆறு

4. படி

  • தேர்வில் வெற்றியடைய நன்றாக படி / மாணவர் வாழ்வில் முன்னேற ஆசிரியர் ஒரு ஏணிப்படி போன்று செயல்படுகிறார்கள்

III. சொற்றொடர்களை உருவாக்குங்கள்.

ஆசிரியர்
மாணவண்
கவிதை
பாடம்
எழுதுகிறார்
எழுதுகிறான்
படிக்கிறார்
படிக்கிறான்
கற்பிக்கிறார்

விடை

ஆசிரியர் கவிதை எழுதுகிறார்
ஆசிரியர் கவிதை படிக்கிறார்
ஆசிரியர் கவிதை கற்பிக்கிறார்
மாணவர் கவிதை எழுதுகிறான்
மாணவர் கவிதை படிக்கிறான்
ஆசிரியர் பாடம் எழுதுகிறார்
ஆசிரியர் பாடம் படிக்கிறார்
ஆசிரியர் பாடம் கற்பிக்கிறார்
மாணவர் பாடம் எழுதுகிறான்
மாணவர் பாடம் படிக்கிறான்

IV. உரையாடலை நிறைவு செய்யுங்கள்

மாணவர்                     : வணக்கம் ஐயா

தலைமை ஆசிரியர் : வணக்கம் மதி உனக்கு என்ன வேண்டும்?

மாணவர்                     : எனக்கு மாற்றுச் சான்றிதழ் வேண்டும் ஐயா

தலைமை ஆசிரியர் : எதற்காக மாற்றுச் சான்றிதழ் கேட்கிறாய்?

மாணவர்                     : என் தந்தைக்குப் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது ஐயா.

தலைமை ஆசிரியர் : அப்படியா! எந்த ஊருக்கு பணி மாறுதல் கிடைத்திருக்கிறது?

மாணவர்                     : மதுரைக்கு ஐயா

தலைமை ஆசிரியர் : அங்கு எந்தப்பள்ளியில் சேரப் போகிறார்?

மாணவர்                     : மதுரை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஐயா

தலைமை ஆசிரியர் : உன் பெற்றோரை அழைதத்து வந்திருக்கிறாயா?

மாணவர்                     : என் அப்பாவை அழைத்து வந்திருக்கிறேன் ஐயா.

V. தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது?

(குழந்தைகள் தினம், மாணவர் தினம், ஆசிரியர் தினம், தேசிய இளைஞர் தினம், கல்விவளர்ச்சி நாள்)

1. காமராஜர் பிறந்த நாள் ____________________

விடை : கல்வி வளர்ச்சி நாள்.

2. டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ____________________

விடை : ஆசிரியர் தினம்.

3. அப்துல்கலாம் பிறந்த நாள் ____________________

விடை : மாணவர் தினம்.

4. விவேகானந்தர் பிறந்த நாள் ____________________

விடை : தேசிய இளைஞர் தினம்.

5. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் ____________________

விடை : குழந்தைகள் தினம்

VI. இன எழுத்துக்கள் அமைந்துள்ள சொற்களை கண்டறிக

1. கங்கை, பக்கம், வண்டு, மண்டபம், மங்கை

விடை : பக்கம்

2. வெந்தயம், தந்தம், பஞ்சு, பச்சை, தக்காளி, மஞ்சள்

விடை : பச்சை, தக்காளி

3. கம்பளம், குன்று, காக்கை, செங்கடல், தேங்காய்

விடை : காக்கை

VII. சொற்களுள் அமைந்துள்ள இன எழுத்துக்களை எடுத்து எழுதுங்கள்

சங்கு, நுங்கு, பிஞ்சு, வஞ்சகம், பட்டணம், சுண்டல், வண்டி, பந்தயம், பந்து, கற்கண்டு, தென்றல், நன்று

  1. சங்கு / நுங்கு
  2. பிஞ்சு / வஞ்சகம்
  3. சுண்டல் / வண்டி
  4. பந்தயம் / கற்கண்டு
  5. தென்றல் / நன்று

VIII. வினாவிற்கேற்ற விடையளிக்கவும்

காமராசரின் வீட்டுக்ள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களை தடுப்பதை காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். “யாரைப் பார்க்க வந்தீங்க?” என்று அன்புடன் வினவினார். ” எங்க அண்ணனுக்கு தேர்வுக்கு பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால்,,,,” என்று சிறுமி கூறி முடிப்பதற்குள் “அம்மா அனுப்பி விட்டாரா?” என்று காமராசர் கேட்டார். “இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுதான் எங்களை படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்.

மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். “ஐயா தேர்வுக்கு பணம் கட்டியாச்சு. இந்த இரசீதை (பற்று சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றனர். அதனைக் கேட்டுக் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.

1. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள் ____________

  1. பெற்றோர்
  2. சிறுவன், சிறுமி
  3. மக்கள்
  4. ஆசிரியர்கள்

விடை : சிறுவன், சிறுமி

2. இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது

  1. ஏழ்மை
  2. நேர்மை
  3. உழைப்பு
  4. கல்லாமை

விடை : நேர்மை

3. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் _________________

விடை : நெகிழ்ந்தார்

4. சிறுவனும், சிறுமியும் எதற்காக காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?

சிறுவனின் தேர்வுக்கு பணம் கட்டுவதற்கு காமராசரிடம் உதவி கேட்டு வந்தனர்

5. காமராசர் செய்த உதவி யாது?

சிறுவனின் தேர்வுக்கு பணம் கட்டுவதற்காக காமராசரிடம் பண உதவி செய்தார்

 மொழியோடு விளையாடு 

I. “கல்விக்கண் திறந்த காமராசர்” இத்தொடரிலுள்ள எழுத்துகளை பயன்படுத்தி புதிய சொற்களை உருவாக்குங்கள்

கல், வில், தில், விண், கண், விண்கல், கல்வி, திறந்தகண், விக்கல், மண், காவி, காண், மதி, சதி, தந்தி, கதி

II. சரியான இடத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க.

1. முளையிலே விளையும் தெரியும் பயிர்

விடை : விளையும் பயிர் முளையிலே தெரியும்

2. ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை

விடை : கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்

III. கட்டங்களில் உள்ள இன எழுத்துகளை எழுதுக

ண்ம்
திந்கி
கிபிம்துளிங்
தென்ல்ங்கு
ள்விஞ்ள்
  1. மண்டபம்
  2. தென்றல்
  3. சங்கு
  4. மஞ்சள்
  5. பந்து

IV. கலைச்சொல் அறிவோம்

  1. Education – கல்வி
  2. Mail – அஞ்சல்
  3. Primary school – ஆரம்ப பள்ளி
  4. Compact disk(CD) –குறுந்தகடு
  5. Higher Secondary School – மேல்நிலைப்பள்ளி
  6. E-Library – மின் நூலகம்
  7. Library – நூலகம்
  8. E-Book – மின் புத்தகம்
  9. Escalator – மின்படிக்கட்டு
  10. E-Magazine – மின் இதழ்கள்
  11. Lift – மின்தூக்கி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *