தமிழ் : பருவம் 2 இயல் 1 : கல்வி – கண்ணெனத் தகும்
கவிதைப்பேழை: துன்பம் வெல்லும் கல்வி
I. சொல்லும் பொருளும்
- தூற்றும் படி – இகழும் படி
- மூத்தோர் – பெரியோர்
- மேதைகள் – அறிஞர்கள்
- மாற்றார் – மற்றவர்
- நெறி – வழி
- வற்றாமல் – அழியாமல்
II.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர் பிறர் _______ நடக்கக் கூடாது.
- போற்றும்படி
- தூற்றும்படி
- பார்க்கும்படி
- வியக்கும்படி
விடை : தூற்றும்படி
2. நாம் _______ சொற்படி நடக்க வேண்டும்.
- இளையோர்
- ஊரார்
- மூத்தோர்
- வழிப்போக்கர்
விடை : மூத்தோர்
3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- கையில் + பொருள்
- கைப் + பொருள்
- கை + பொருள்
- கைப்பு + பொருள்
விடை : கை+பொருள்
4. மானம் + இல்லா என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- மானம்இல்லா
- மானமில்லா
- மானமல்லா
- மானம்மில்லா
விடை : மானமில்லா
III. சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. மனமாற்றம்
விடை : மனிதன் தீயவழியிலிருந்து நல்வழிக்கு மனமாற்றம் அடைய வேண்டும்.
2. ஏட்டுக்கல்வி
விடை : மாணவர்கள் ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அனுபவ கல்வியையும் கற்றுக்கொள்ள வேண்டும்
3. நல்லவர்கள்
விடை : இந்த உலகில் நல்லவர்கள் என்று யாரும் கிடையாது
4. சோம்பல்
விடை : சோம்பல் மனித வாழ்க்கைக்கு எதிரி
IV. குறுவினா
1. நாம் யாருடன் சேரக்கூடாது?
நாம் தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது
2. எதை நம்பி வாழக்கூடாது?
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது
3. இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் நினைவூட்டும் திருக்குறள் எது?
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
4. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?
மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின் படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும், விருதுகளையும், பெருமைகளையும் பெறலாம்
V. சிறுவினா
நாம் எவ்வாறு வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்?
நாம் நூல்களைக் கற்றதோடு இருந்து விடக்கூடாது. கற்றதன் பயனை மறக்கக் கூடாது. நம் நாட்டின் நெறி தவறி நடக்கக் கூடாது. நல்லவர்கள் குறை சொல்லும்படி வளரக்கூடாது.பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்பு நெறி மாறக் கூடாது. பிறர் உழைப்பில் வாழக் கூடாது.தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும். சோம்பலை போக்கிட வேண்டும்.பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டு விட வேண்டும். வானைத்தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும், விருதுகளையும், பெருமையையும் பெற வேண்டும்.பெற்ற தாயின் புகழும் நம் தாய் நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார் |
துன்பம் வெல்லும் – கல்வி கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. துன்பத்தை வெல்ல _______________ வேண்டும்
விடை : கல்வி
2. நெறி என்னும் சொல் தரும் பொருள் _______________
விடை : வழி
3. மானமில்லா _______________ சேரக்கூடாது
விடை : கோழையுடன்
4. _______________ என்னும் சிறப்பினை பெற்றவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
விடை : மக்கள் கவிஞர்
5. திரையாசைப் பாடல்களில் _______________ உயர்வைப் போற்றினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
விடை : உழைப்பாளிகளின்
6. துன்பத்தை நீக்கும் _______________ கற்க வேண்டும்
விடை : கல்வியினைக்
7. வானைத்தொடும் அளவுக்கு ______________ வளர்த்துக் கொள்ள வேண்டும்.
விடை : அறிவை
II. பிரித்து எழுதுக
- குணமிருந்தால் = குணம் + இருந்தால்
- கைப்பொருள் = கை + பொருள்
III. பாடலில் எதுகை, மேனைச் சொற்களை கூறுக
மேனைச் சொற்கள் | எதுகைச் சொற்கள் |
நடந்துவிடாதே – நல்லவர்கள் | வெற்றிமேல் – வெற்றிவர |
மாற்றார் – மானமில்லா | பெற்ற – வற்றாமல் |
வம்பு – வளர்ச்சி | மண்ணில் – வேண்டும் |
வெற்றிமேல் – வெற்றிவர | கொல்லும் – கல்வி |
கல்வி – கற்றிட | மீற – மாற |