Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 6th Science Books Tamil Medium The Living World of Plant

Samcheer Kalvi 6th Science Books Tamil Medium The Living World of Plant

அறிவியல் : முதல் பருவம் அலகு 4 : தாவரங்கள் வாழும் உலகம்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1.  குளம் ______________ வாழிடத்திற்கு உதாரணம்

  1. கடல்
  2. நன்னீர் வாழிடம்
  3. பாலைவனம்
  4. மலைகள்

விடை : நன்னீர் வாழிடம்

2. இலைத் துளையின் முக்கிய வேலை ____________________ .

  1. நீரைக் கடத்துதல்
  2. நீராவிப் பாேக்கு
  3. ஒளிச்சேர்க்கை
  4. உறிஞ்சுதல்

விடை : நீராவிப் பாேக்கு

3. நீரை உறிஞ்சும் பகுதி ____________________ ஆகும்.

  1. வேர்
  2. தண்டு
  3. இலை
  4. பூ

விடை : வேர்

4. நீர் வாழ் தாவரங்களின் வாழிடம் ___________________ .

  1. நீர்
  2. நிலம்
  3. பாலைவனம்
  4. மலை

விடை : நீர்

II. சரியா? தவறா? – தவறு எனில் சரியான விடையை எழுதக

1. தாவரங்கள் நீர் இன்றி வளர முடியும்

விடை : தவறு

சரியான விடை : தாவரங்கள் நீர் இன்றி வளர முடியாது

2. தாவரங்கள் அனைத்திலும் பச்சையம் காணப்படும்

விடை : தவறு

சரியான விடை : தாவரங்களின் இலைகளில் மட்டும் பச்சையம் காணப்படும்

3. தாவரங்களின் மூன்று பாகங்கள் – வேர், தண்டு, இலைகள்.

விடை : தவறு

சரியான விடை : தாவரங்களின் நான்கு பாகங்கள் – வேர், தண்டு, இலைகள் மற்றும் மலர்கள்

4. மலைகள் நன்னீர் வாழிடத்திற்கு ஓர் உதாரணம்

விடை : தவறு

சரியான விடை : மலைகள் நில வாழிடத்திற்கு ஓர் உதாரணம்

5. வேர் முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது.

விடை : தவறு

சரியான விடை : இலைகள் முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது.

6. பசுந்தாவரங்களுக்கு ஒளிச்சேர்க்கை தேவை.

விடை : சரி

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. புவிப்பரப்பில் நீரின் அளவு _____________.

விடை : 70%.

2. பூமியில் மிகவும் வறண்ட பகுதி ___________________ .

விடை : பாலைவனம்.

3. ஊன்றுதல், உறிஞ்சுதல் இரண்டும் ___________________  வேலை

விடை : வேரின்

4. ‘ஒளிச்சேர்க்கை நடைபெறும் முதன்மை ___________________ 

விடை : இலைகள்.

5. ஆணிவேர்த் தொகுப்பு ___________________  தாவரங்களில் காணப்படுகிறது.

விடை : இருவித்திலைத்

IV. தாவரங்களின் பாகங்கள் மற்றும் பணிகளில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக.

1. இலைகள் – தண்டு – வேர் – மலர்கள்

விடை : வேர் – தண்டு – இலைகள் – மலர்கள்

2. நீராவிப்போக்கு – கடத்துதல் – உறிஞ்சுதல் – ஊன்றுதல்

விடை : ஊன்றுதல் – உறிஞ்சுதல் – கடத்துதல் – நீராவிப்போக்கு

V. பொருத்துக

1. மலைகள்ஒரு வித்திலைத் தாவரங்கள்
2. பாலைவனம்கிளைகள்
3. தண்டுவறண்ட இடங்கள்
4. ஒளிச்சேர்க்கைஇமயமலை
5. சல்லிவேர்த்தொகுப்புஇலைகள்

Ans : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – உ, 5 – அ

VI.வினாக்களுக்கு விடையளி

1. வாழிடத்தை அடிப்படையாகக் காெண்டு தாவரங்களை வகைப்படுத்துக

நீர் வாழ்வன

  • நன்னீர் வாழிடம் – ஆகாயத்தாமரை
  • கடல் நீர் வாழிடம் – கடல் பாசிகள்

நில வாழ்வன

  • காடுகள் – இரப்பர் மரம்
  • புல்வெளி – புற்கள்
  • பாலைவனம் – சப்பாத்திக்கள்ளி

2. பாலைவனத் தாவரங்களை அடையாளம் காண்க

சப்பாத்திக்கள்ளி, அகேல், சோற்றுக்கற்றாழை

3. வாழிடம் என்பதை வரையறு.

ஒவ்வொரு உயிரினமும், உயிர் வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் தேவைப்படும் இடமானது அதன் வாழிடம் ஆகும்.

4. இலைக்கும், ஒளிச்சேர்க்கைக்கும் இடையே உள்ள தாெடர்பு என்ன?

இலை :

இலை என்பது ஒரு மெல்லிய, பரந்த மற்றும் பசுமையான பகுதியாகும். பச்சை நிற இலைகள் உணவு தயாரிக்கின்றன.

ஒளிச்சேர்க்கை :

சூரிய ஒளி, கார்பன் டை ஆக்சைடு, நீர் மற்றும் குளோரோஃபில் ஆகியவற்றின் உதவியுடன் ஒளிச்சேர்க்கை தயாரிப்பது ஒரு இலைகளின் செயல்பாடாகும்.

VI. குறுகிய வினா

1. மல்லிகைக்காெடி ஏன் பின்னு காெடி என அழைக்கப்படுகிறது?

மல்லிகைக் கொடியின் தண்டு பலவீனமானது மற்றும் அவைகளால் நேராக நிற்க முடியாது.

ஆகையால் அத்தண்டுகள் பற்றுக்கம்பியாகக மாறியுள்ளது. அருகில் உள்ள தாவரத்தை ஆதாரமாக பற்றிக்கொண்டு வளர்கிறது.

எனவே மல்லிகைக்காெடி பின்னு காெடி என அழைக்கப்படுகிறது

2. ஆணிவேர் மற்றும் சல்லிவேர் தாெகுப்புகளை ஒப்பீடு செய்க

ஆணிவேர்சல்லிவேர்
1. முளைவேர் ஆணி வேரை உருவாக்குகிறதுதாவரத்தின் கணு ஆணி வேரை உருவாக்குகிறது
2. இருவித்திலைத் தாவரத்தில் காணப்படும்ஒருவித்திலைத் தாவரத்தில் காணப்படும்
எ.கா. அவரை, மாஎ.கா. நெல், புல்

3. நில வாழிடம் மற்றும் நீர் வாழிடத்தை வேறுபடுத்துக.

நில வாழிடம்நீர் வாழிடம்
1. நிலத்தை வாழிடமாக கொண்டள்ளதுநீரினை வாழிடமாக கொண்டள்ளது
(எ.கா.)காடுகள் – இரப்பர் மரம்
புல்வெளி – புற்கள்
பாலைவனம் – சப்பாத்திக்கள்ளி
(எ.கா.)நன்னீர் வாழிடம் – ஆகாயத்தாமரை
கடல் நீர் வாழிடம் – கடல் பாசிகள்

1. உங்களுடைய பள்ளித் தோட்டதில் உள்ள தாவரங்களை பட்டியலிடுக.

  • வேப்பமரம்
  • ஆலமரம்
  • புங்க மரம்

VI. விரிவான விடையளி

1. வேர் மற்றும் தண்டு ஆகியவற்றின் பணிகளைப் பற்றி எழுதுக

வேர் பணிகள்

 தாவரங்கள் வாழும் உலகம்

  • வேர்கள் தாவத்தை பூமியில் நிலைநிறுத்துகின்றன.
  • மண்ணை இறுப பற்றிக் கொள்ள உதவுகிறது
  • மண்ணில் உள்ள நீரையும், கனிமச்சத்துக்களையும் உறிஞ்சி தாவரத்தின் பிற பாகங்களுக்கு அனுப்புகிறது
  • சில தாவரங்கள் உணவைத் வேர்களில் சேமிக்கின்றன
  • எகா. பீட்ரூட். கேரட்

தண்டு பணிகள்

தாவரங்கள் வாழும் உலகம்
  • தண்டானது கிளைகள், இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவற்றை தாங்குகின்றன
  • வேரினால் உறிஞ்சப்பட்ட நிர் மற்றும் தனிமங்கள் தண்டின் வழியாக தாவரத்தின் மற்ற பாகங்களக்கு கடத்தப்படுகிறது
  • இலையினால் தயாரிக்கப்பட்ட உணவு தண்டின் வழிகாய மற்ற தாவரத்தின் பாகங்களுக்கு கடத்தப்படுகின்றன
  • சில தாவரங்கள் உணவை தண்டுகளில் சேமிக்கின்றன
  • எகா. கரும்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *