Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Measurements

Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Measurements

அறிவியல் : முதல் பருவம் அலகு 1 : அளவீடுகள்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது

  1. மீட்டர் அளவுகோல்
  2. மீட்டர் கம்பி
  3. பிளாஸ்டிக் அளவுகோல்
  4. அளவுநாடா

விடை : அளவுநாடா

2.  7மீ என்பது செ.மீ-ல்

  1. 70 செ.மீ
  2. 7 செ.மீ
  3. 700 செ.மீ
  4. 7000 செ.மீ

விடை : 700 செ.மீ

3.  அளவிடப்படக்கூடிய அளவிற்கு ………………….. என்று பெயர்

  1. இயல் அளவீடு
  2. அளவீடு
  3. அலகு
  4. இயக்கம்

விடை : இயல் அளவீடு

4. சரியனதை தேர்ந்தெடு

  1. கி.மீ > மி.மீ > செ.மீ > மீ
  2. கி.மீ > மி.மீ > செ.மீ> கி.மீ
  3. கி.மீ > மீ > செ.மீ > மி.மீ
  4. கி.மீ > செ.மீ >மீ > மி.மீ

விடை : கி.மீ > மீ > செ.மீ > மி.மீ

5.  அளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை அளவிடும்போது உனத கண்ணின் நிலை ………………….. இருக்க வேண்டும்

  1. அளவிடும் புள்ளிக்கு இடது புறமாக
  2. அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக
  3. புள்ளிக்கு வலது புறமாக
  4. வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்

விடை : அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக

II. கீழ்க்காணும் வாக்கியங்கள் சரியா? தவறா ? திருத்தி எழுதுக.

1. நிறையை 126 கிகி எனக் கூறுவது சரியே.

விடை : சரி

2. ஒருவரின் மார்பளவை அளவுகோல் பயன்படுத்தி அளவிட முடியும்.

விடை : தவறு

3. 10 மி.மீ என்பது 1 செ.மீ ஆகும்

விடை : சரி

4. முழம் என்பது நீளத்தை அளவிடும் நம்பத் நகுந்த முறையாகும்.

விடை : தவறு

5. அலகு முறை என்பது உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அலகு முறையாகும்.

விடை : சரி

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. SI  அலகு முறையில் நீளத்தின் அலகு _____________ 

விடை : மீ

2. 500 கிராம் = _____________ கிலோகிராம்.

விடை : அரை

3.  டெல்லிக்கும், சென்னைக்கும் இடையில் உள்ள தொலைவு _____________

விடை : கிலோமீட்டர்

4. 1 மீ = _____________ செ.மீ என அளவிடப்படுகிறது

விடை : 100

5. 5 கி.மீ = _____________ மீ

விடை : 5000

IV. ஒப்புமை தருக.

1. சர்க்கரை : பொதுத்தராசு : எலுமிச்சை சாறு : அளவு சாடி ____________?

விடை : அளவு சாடி

2. மனிதனின் உயரம் : செ.மீ ; கூர்மையான பென்சிலின் முனையின் நீளம் ____________?

விடை : மி.மீ

3. பால் : பருமன் : காய்கறிகள் : ____________ ?

விடை : நிறை

V.பொருத்துக

1. முன்கையின் நீளம்மீட்டர்
2. நீளத்தின் SI அலகுவிநாடி
3. நானோ103
4. காலத்தின் SI அலகு10-9
5. கிலோமுழம்

விடை : 1 – உ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ, 5 – இ

VI. பொருத்தமற்றதை கூறு

கன அளவுமீ3
நிறைகிலோகிராம்.
சுண்டு விரலின் நீளம்செ.மீ

VII. பின்வரும் அலகினை ஏறு வரிசையில் எழுதுக.

1. 1 மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லி மீட்டர்

விடை : 1 மில்லி மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 மீட்டர் மற்றும் 1 கிலோ மீட்டர்

VIII. பின்வரும் வினாக்களுக்கு ஒரிரு வாக்கியங்களில் விடையளி

அளவீடுகள் பாட விடைகள் 2021

1. 10-3 என்பது

  • மில்லிமீட்டர்

2. காலத்தின் அலகு

  • விநாடி

3. சாய்வாக அளவிடுவதால் எற்படுவது

  • பிழை

4. கடிகாரம் காட்டுவது

  • நேரம்

5. ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு

  • நிறை

6. பல மாணவர்களின் பதிவுகளிலிருந்து கடைசியாக எடுக்கப்படும் ஒரு தனி மனித அளவீடு

  • சராசரி

7. ______________ என்பது ஒரு அடிப்படை அளவு

  • நீளம்

8.  வாகனங்கள் கடக்கும் தொலைவைக் காட்டுவது

  • ஓடோ மீட்டர்

9. தையல்காரார் துணியைத் தைக்க அளவிடப் பயன்படுத்துவது

  • நாடா

10. நீர்மங்களை அளவிட உதவும் அளவீடு

  • லிட்டர்

IX. ஓரிரு வார்த்தைகளில் விடையளி

1. SI என்பதன் விரிவாக்கம் என்ன?

The International System of Units.

2. நிறையை அளவிடப் பயன்படும் ஒரு கருவி

பொதுத்தராசு

3. பாெருந்தாததைத் தேர்ந்தேடு

கிலோகிராம்மில்லி மீட்டர்சென்டி மீட்டர்நேனோ மீட்டர்

கிலோகிராம்

4. நிறையின் SI அலகு என்ன?

கிலோகிராம்

5. ஒரு அளவீட்டில் இருக்கும் இரு பகுதிகள் என்ன?

எண் மதிப்பு மற்றும் அலகு

X. ஓரிரு வரிகளில் விடை தருக

1. அளவீடு – வரையறு.

தெரிந்த ஒரு அளவைக் கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவது அளவீடு எனப்படும்.

2. நிறை வரையறு

நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவே ஆகும்.

3.  இரு இடங்களுக்கு இடையே உள்ள தொலைவு 43.65 கி.மீ இதன் மதிப்பை மீட்டரிலும், சென்டிமீட்டரிலும் மாற்றுக

மீட்டராக மாற்றுதல்

1கிலோ மீட்டர்= 1000 மீட்டர்
43.65 கிலோ மீட்டர்= 43.65 x 1000
= 43,650 மீட்டர்

சென்டிமீட்டராக மாற்றுதல்

1 மீட்டர்= 100 சென்டி மீட்டர்
43650 மீட்டர்= 43650 x 100
= 43,65,000 சென்டி மீட்டர்

4. ஒழுங்கற்ற பாெருட்களின் பருமனை எவ்வாறு அளவிடுவாய்?

ஒழுங்கற்ற பொருட்களின் பருமனை அளந்தறிய நீர் இடப்பெயர்ச்சி முறை பயன்படுகிறது.

5. அளவுகாேலில் அளவிடும்பாேது, துல்லியமான அளவீடு பெறப் பின்பற்றப்படும் விதிமுறைகள் என்ன?

அளவு கோலின் 0 அளவை பொருளின் ஒரு முனையில் வைத்து பொருளின் மறுமுனை அளவுகோலில் எந்த அளவைக் குறிக்கிறதோ அதுவே அப்பொருளின் அளவீடாகக் கருதப்படுகிறது.

X. கீழ்காண்பவற்றை தீர்க்க

1. உனது வீட்டிற்கும் உனது பள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு 2250மீ. இநத் தொலைவினை கிலோமீட்டரின் குறிப்பிடுக

தீர்வு :

வீட்டிற்கும் உனது பள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு= 2250 மீட்டர்
1000 மீட்டர்= 1 கிலோ மீட்டர்
= 2250/1000
= 225/100 = 2.25
2250 மீட்டர் = 2.25 கிலோ மீட்டர்

2. கூர்மையான ஒரு பென்சிலின் நீளத்தை அளவிடும்போது அளவுகோலின் ஒரு முனை 2.0 செ.மீ. மற்றும் அடுத்த முனை 12.1 செ.மீ. என்ற இரு அளவுகளை காட்டினால் பென்சிலின் நீளம் என்ன?

தீர்வு :

அளவுகோலின் ஒரு முனை= 2.0 செ.மீ.
அளவுகோலின் அடுத்த முனை= 12.1 செ.மீ.
பென்சிலின் நீளம்= 12.1 – 2.0 = 10.1
பென்சிலின் நீளம்= 10.1 செ.மீ.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *