Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Air

Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Air

அறிவியல் : பருவம் 2 அலகு 4 : காற்று

மதிப்பீடு

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.  காற்றில் நைட்ரஜனின் சதவீதம் _______

  1. 78%
  2. 21%
  3. 0.03%
  4. 1%

விடை : 78%

2. தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் ________ ஆகும்

  1. இலைத்துளை
  2. பச்சையம்
  3. இலைகள்
  4. மலர்கள்

விடை : இலைத்துளை

3. காற்று கலவையின் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி ___________ ஆகும்.

  1. நைட்ரஜன்
  2. கார்பன்-டை-ஆக்சைடு
  3. ஆக்சிஜன்
  4. நீராவி

விடை : ஆக்சிஜன்

4.  உணவு பதப்படுத்தும் தாெழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் _________

  1. உணவிற்கு நிறம் அளிக்கிறது
  2. உணவிற்கு சுவை அளிக்கிறது.
  3. உணவிற்கு புரதத்தையும், தாது உப்பையும் அளிக்கிறது
  4. உணவுப் பாெருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.

விடை : உணவுப் பாெருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.

5.  காற்றில் உள்ள __________ மற்றும் _____________ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99 சதவீத இயைபாகிறது.

i) நைட்ரஜன்ii) கார்பன்-டை-ஆக்சைடு
iii) மந்த வாயுக்கள்iv) ஆக்சிஜன்
  1. I மற்றும் ii
  2. I மற்றும் iii
  3. ii மற்றும் iv
  4. I மற்றும் iv

விடை : I மற்றும் iv

II. சரியா? தவறா? 

1. உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு உள்ளது.

விடை : தவறு

சரியான விடை : உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு ஆக்சிஜன் உள்ளது.

2. புவி வெப்பமயமாதலை மரங்களை நடுவதன் மூலம் குறைக்கலாம்.

விடை :சரி

3. காற்றின் இயைபு எப்பாெழுதும் சமமான விகிதத்தில் இருக்கும்.

விடை : தவறு

சரியான விடை : காற்றின் இயைபு இடத்திற்கு இடம் மாறுபட்டு இருக்கும்.

4. திமிங்கலம் ஆக்சிஜனை சுவாசிக்க நீரின் மேற்பரப்பிற்கு வரும்.

விடை : சரி

5. காற்றில் ஆக்சிஜனின் இயைபானது, தாவரங்களின் சுவாசம் மூலமும், விலங்குகளின் ஒளிச்சேர்க்கை மூலமும் சமன் செய்யப்படுகிறது.

விடை : தவறு

சரியான விடை : காற்றில் ஆக்சிஜனின் இயைபானது, தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மூலமும், விலங்குகளின் சுவாசம் மூலமும் சமன் செய்யப்படுகிறது.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. காற்றில் காணப்படும் எளிதில் வினைபுரியக்கூடிய பகுதி ___________ ஆகும்

விடை : ஆக்சிஜன்

2. சுவாசக் கோளாறு உள்ள நாேயாளிக்கு கொடுக்கப்படும் வாயு ______________ ஆகும்.

விடை : ஆக்சிஜன்

3.  ஒளிச்சேர்க்கையின் பாெழுது வெளிவரும் வாயு _________ ஆகும்.

விடை : ஆக்சிஜன்

4. இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் ___________ காண முடியும்.

விடை : தாதுப்பொருட்களை

5. ______________ வாயு சுண்ணாம்பு நீரை பால் பாேல மாற்றும்

விடை : கார்பன்-டை-ஆக்சைடு

IV.பொருத்துக

1. இயங்கும் காற்றுஅடிவளிமண்டலம்
2. நாம் வாழும் அடுக்குஒளிச்சேர்க்கை
3. வளிமண்டலம்தென்றல் காற்று
4. ஆக்சிஜன்ஓசோன் படலம்
5. கார்பன்–டை-ஆக்சைடுஎரிதல்

விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – உ, 5 – ஆ

V. ஒப்புமை தருக

1. ஒளிச்சேர்க்கை : ______________ : : சுவாசம்: ஆக்சிஜன்

விடை : கார்பன்-டை-ஆக்சைடு

2. காற்றின் 78% : எரிதலுக்கு துணை புரிவதில்லை : : ______________ : எரிதலுக்கு துணை புரிகிறது

விடை : 21%

VI. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக

1. தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.

2. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.

3. தாவரங்களும் விலங்குகளைப் போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்– டை–ஆக்சைடை வெளியிடுகின்றன.

4. தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில், பச்சையத்தின் துணையோடு, வளி மண்டலத்திலிருந்து கார்பன்–டை–ஆக்சைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.

5. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.

6. இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

விடை :

2. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.

3. தாவரங்களும் விலங்குகளைப் போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்– டை–ஆக்சைடை வெளியிடுகின்றன.

4. தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில், பச்சையத்தின் துணையோடு, வளி மண்டலத்திலிருந்து கார்பன்–டை–ஆக்சைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.

1. தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.

6. இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

5. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.

VII. கொடுக்கப்பட்டுள்ள படத்தை கூர்ந்து கவனித்து, கேள்விக்கு பதிலளிக்கவும்.

காற்று பாட விடைகள் 2021

1. மீன்காட்சியகத்தில் தொட்டியில் உள்ள தாவரங்களை நீக்கினால் என்னவாகும்?

தாவரங்களை நீக்கினால் தொட்டியில் ஆக்சிஜன் அளவு குறைய ஆரம்பிக்கும்

2. மீன் காட்சியகத்தில் உள்ள மீன்களை நாம் நீக்கிய பின், தாவரங்களுடன் அதனை ஓர் இருண்ட அறையினுள் வைத்தால் என்னவாகும்?

தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்ய முடியாமல் இறந்தபோகும். மேலும் மீன் நீரை விட்டு எடுத்தாலும் மீனும் இறந்துபோகும்

VII. மிகக் குறுகிய விடையளி

1.  வளிமண்டலம் என்றால் என்ன? வளிமண்டலத்தில் உள்ள ஐந்து அடுக்குகளின் பெயர்களைத் தருக.

நமது பூமியானது காற்றாலான ஒரு மிகப்பெரிய மேலுறையால் மூடப்பட்டுள்ளது. இது வளிமண்டலம் என்று அழைக்கப்படுகிறது.

வளிமண்டலமானது ஐந்து வெவ்வேறு அடுக்குகளால் ஆனது. அவையாவன:

  1. அடிவளி மண்டலம் (Troposphere)
  2. அடுக்குவளி மண்டலம் (Stratosphere)
  3. இடைவளி மண்டலம் (Mesosphere)
  4. அயனி மண்டலம் (Ionosphere)
  5. புறவளி மண்டலம் (Exosphere).

2. நிலத் தாவரங்களின் வேர்கள், சுவாசத்திற்கான ஆக்சிஜனை எவ்வாறு பெறுகின்றன?

நிலத் தாவரங்களின் வேர்கள், சுவாசத்திற்கான ஆக்சிஜனைமண்ணில் காணப்படும் சிறிய காற்று இடைவெளிகள் வழியாக பெறுகின்றன

3. ஒருவரின் ஆடையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?

அவர் உடனே தரையில் படுத்து உருள வேண்டும். காரணம் உருளும்போது தீயின் வேகம் குறையும்

4. நீங்கள் வாய் வழியாக சுவாசித்தால், என்ன நிகழும்?

வாய் வழியாக சுவாசித்தால் நம்முடைய தசைகளுக்கு ஆக்ஸிஜன் வேகமாக கடத்தப்படும்

VII. குறுகிய விடையளி

1. மழைக்காலங்களில் பிஸ்கட்டை மூடாமல் வைக்கும்பொழுது, மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது? ஏன்?

காற்றில் ஈரப்பதம் அதிகம். அதனால் மழைக்காலங்களில் மழைக்காலங்களில் பிஸ்கட்டை மூடாமல் வைக்கும்பொழுது, மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது

2. பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?

காற்றவெளியல் உள்ள கிருமிகள் மூலம் தொற்றி ஏற்படாமலும், தூது போன்ற மாசுக்களால் பாதிப்பு வராமலும் தடுக்க பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிகிறார்கள்

VIII. விரிவான விடையளி

1. தாவரங்களும், விலங்குகளும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்–டை–ஆக்சைடு, இவற்றின் இடையே உள்ள சமநிலையை எவ்வாறு பாதுகாக்கின்றன?

தாவரங்களின் சுவாசம்

தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே தாவரங்களிலும் சுவாசம் நடைபெறுகிறது. சுவாசித்தலின்பொழுது, தாவரங்கள் விலங்குகளைப் போலவே ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன்–டை–ஆக்சைடை வெளிவிடுகின்றன. தாவரங்கள் வளிமண்டலக் காற்றுடன் நிகழ்த்தும் வாயுப்பரிமாற்றம் அவற்றின் இலைகளிலுள்ள ஸ்டொமட்டா என்ற மிகச்சிறிய இலைத்துளைகள் மூலம் நடைபெறுகிறது.

தாவரங்கள், சுவாசித்தலின்பொழுது எடுத்துக் கொண்ட ஆக்சிஜனை விட அதிக அளவு ஆக்சிஜனை ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவிடுகின்றன.

விலங்குகளின் சுவாசம்

உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழக் காரணமாக இருக்கும் மிக முக்கியமான தனிமமான ஆக்சிஜன் காற்றில் உள்ளது என்பதை நாம் அறிவோம். நாம் சுவாசிக்கும் காற்றில் ஆக்சிஜன் 21% உள்ளது. ஆக்சிஜன் இன்றி உயிர்கள் வாழ இயலாது.

சுவாசத்தின் போது உருவாகும் கார்பன்–டை- ஆக்சைடு இரத்தத்தில் கலந்து, நுரையீரல்கள் மூலம் வெளியேற்றபடுகின்றது.

நாம் உள்ளிழுக்கும் மற்றும் வெளியிடும் காற்றில் ஒரே மாதிரியான வாயுக்கள் உள்ளன. ஆனால் நைட்ரஜனைத் தவிர, மற்ற வாயுக்களின் அளவுகளில் மாற்றம் ஏற்படும். உள்ளிழுக்கும் காற்றில் ஆக்சிஜன் அளவு அதிகம், வெளியிடும் காற்றில் கார்பன்–டை– ஆக்சைடின் அளவு அதிகம்.

இவ்வாறு தாவரங்களும், விலங்குகளும் ஆக்சிஜன் மற்றம் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுக்களின் சமநிலையை பாதுகாக்கின்றது.

2. பூமியில் உயிரினங்கள் வாழ வளிமண்டலம் ஏன் தேவைப்படுகிறது?

நமது பூமியானது காற்றாலான ஒரு மிகப்பெரிய மேலுறையால் மூடப்பட்டுள்ளது. இது வளிமண்டலம் என்று அழைக்கப்படுகிறது.

புவிப்பரப்பிலிருந்து 800 கி.மீ தொலைவிற்கு மேல் பரந்து விரிந்துள்ள வளிமண்டலமானது புவியின் ஈர்ப்புவிசையால் பூமியின் கட்டுப்பாட்டில் நிலை நிறுத்தப்படுகிறது. வளிமண்டலமானது சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கக் கூடிய பெரும்பாலான கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. காற்றின் பரவலானது புவிக்கு அருகில் மிக அதிகமாகவும், மேலே செல்லச் செல்லக் குறைவாகவும் காணப்படும். ஏனெனில், நாம் மேலே செல்லச்செல்ல புவியின் ஈர்ப்புவிசை குறைவதால், அதிக அளவு காற்றினை புவியால் ஈர்க்க முடியாமல் போகிறது.

வளிமண்டலமானது ஐந்து வெவ்வேறு அடுக்குகளால் ஆனது. அவையாவன:

அடிவளி மண்டலம் (Troposphere), அடுக்குவளி மண்டலம் (Stratosphere), இடைவளி மண்டலம் (Mesosphere), அயனி மண்டலம் (Ionosphere), புறவளி மண்டலம் (Exosphere).

அடிவளி மண்டலமானது பூமிக்கு அருகிலுள்ள நாம் வாழும் அடுக்கு ஆகும். இது புவி மேற்பரப்பிலிருந்து 16 கி.மீ உயரம் வரையிலானது. காற்றின் இயக்கம் இந்த அடுக்கில்தான் நடைபெறும். இவ்வடுக்கில் உள்ள நீராவிதான் மேகங்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது. பூமியில் நாம் அனுபவிக்கும் வானிலைக்கு இந்த அடுக்கே காரணமாகிறது. வலுவான காற்று மற்றும் மாறுபாடான வானிலையைத் தவிர்ப்பதற்காக இவ்வடுக்குக்கு மேல்தான் வானூர்திகள் பறக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *