Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 9th Tamil Books Chapter 8 4

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 8 4

தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே

கவிதைப்பேழை: யசோதர காவியம்

I. சாெல்லும் பாெருளும்

  • அறம் – நற்செயல்
  • வெகுளி – சினம்
  • ஞானம் – அறிவு
  • விரதம் – மேற்கொண்ட நன்னெறி

II. இலக்கணக் குறிப்பு

  • காக்க, நோக்குக, போக்குக, ஆக்குக – வியங்கோள் வினைமுற்று

III. பகுபத உறுப்பிலக்கணம்

காக்க – கா + க் +க

  • கா – பகுதி
  • க் – சந்தி
  • க – வியங்கோள் வினைமுற்று விகுதி

IV. பலவுள் தெரிக

ஞானம் என்பதன் பொருள் யாது?

  1. தானம்
  2. தெளிவு
  3. சினம்
  4. அறிவு

விடை : அறிவு

V. குறு வினா

யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன்  அவந்தி நாட்டு மன்னன் யசோதரன்

VI. சிறு வினா

1. நாம் கடை பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளாக யசோதர காவியம் குறிப்பிடுவன யாவை?

நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் பயன்தரத்தக்க நற்செயலாக இருத்தல் வேண்டும்.நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்க வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.ஆராய வேண்டுமானல் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.இடை விடாது போற்றிக் காக்க வேண்டுமென்றால் நன்னெறியினைக் காக்க வேண்டும்.

2. யசோதர காவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கை நெயியைத் திருக்குறளுடன் ஒப்பிடுக

திருக்குறள் :-” ஒல்லும் வகையால் அறவினை யோவதேசெல்லும்வா யெல்லாஞ் சிறப்பு”யசோதர காவியம் :-நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்க வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.
திருக்குறள் :-” மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும் ”யசோதர காவியம் :-ஆராய வேண்டுமானால் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்
திருக்குறள் :-” எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்செல்லும்வா யெல்லாஞ் சிறப்பு ”யசோதர காவியம் :-இடைவிடாது போற்றிக் காக்க வேண்டுமென்றால் நன்னெறியினைகள் காக்க வேண்டும்

3. பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களை குறிப்பிடுக?

சூளாமணி, புரட்சிக்காப்பியம், பெருங்கதை, மனோன்மணீயம், இரட்சண்ய யாத்ரிகம், கம்பராமாயணம்

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. யசோதர காவியம் _____________ காப்பியங்களுள் ஒன்று

விடை : ஐஞ்சிறு

2. வட மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப்பெற்ற நூல் _____________

விடை : யசோதர காவியம்

3. யசோதர காவியம் _____________ என்ற மன்னனின் வரலாற்றை கூறுகிறது.

விடை : யசோதரன்

4. அவந்தி நாட்டு மன்னன் _____________ ஆவான்

விடை : யசோதரன்

II. குறு வினா

1. நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்க வேண்டுமாயின் முதலில் எதை நீக்க வேண்டும்?

நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்க வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.

2. ஆராய வேண்டுமானல் எதனை ஆராய வேண்டும்?

ஆராய வேண்டுமானல் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.

3. இடை விடாது போற்றிக் காக்க வேண்டுமென்றால் எதனை காக்க வேண்டும்?

இடை விடாது போற்றிக் காக்க வேண்டுமென்றால் நன்னெறியினைக் காக்க வேண்டும்.

4. நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் எப்படி இருத்தல் வேண்டும்?

நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் பயன்தரத்தக்க நற்செயலாக இருத்தல் வேண்டும்.

யசோதர காவியம் – பாடல் வரிகள்

ஆக்குவது ஏதேனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக
நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக
காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *