தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே
இலக்கணம்: ஆகுபெயர்
பலவுள் தெரிக.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அஃகசாலை என்பது ……………………. த்தைக் குறிக்கும்.
- அங்காடிகள் அமைந்துள்ள இடம்
- யவனர்கள் இருக்கின்ற இடம்
- நாணயங்கள் அச்சடிக்கும் இடம்
- அரேபியர்க ளின் பந்தர் இடம்
விடை : நாணயங்கள் அச்சடிக்கும் இடம்
2. கூற்று 1 – காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் துறைமுகமாகும்.
கூற்று 2 – வண்டியூர் என்னும் ஊர் காஞ்சி மாநகரத்தில் அமைந்துள்ளது.
- கூற்று 1, 2 சரி
- கூற்று 1, 2 தவறு
- கூற்று 2 சரி, 1 தவறு
- கூற்று 1 சரி, 2 தவறு
விடை : கூற்று 1 சரி, 2 தவறு
3. ‘யவனப்பிரியா’ என்பது எதனைக் குறிக்கும்?
- மிளகு
- முத்து
- சங்கு
- தந்தம்
விடை : மிளகு
4. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் சங்க நூல்கள்
- பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு
- குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து
- மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை
விடை : மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு
5. விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க.
- காவிரியாற்றின் கழிமுகம் ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது.
- பகலில் இயங்கும் கடைகள் நாளங்காடிகள்.
- காவிரியாற்றின் கழிமுகம் எதற்காக அமைந்திருந்தது? – பகலில் இயங்கும் கடைகள் எவ்விதம் அழைக்கப்பட்டன?
- காவிரியாற்றின் கழிமுகம் எவ்வாறு அமைந்திருந்தது? – பகலில் இயங்கும் கடைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
- காவிரியாற்றின் கழிமுகம் எங்கு அமைந்திருந்தது? – பகலில் கடைகள் எவ்வாறு இயங்கின?
- காவிரியாற்றின் கழிமுகம் எதனால் அமைந்திருந்தது? – பகலில் இயங்கும் கடைகள் எப்படி அழைக்கப்பட்டன?
விடை : காவிரியாற்றின் கழிமுகம் எவ்வாறு அமைந்திருந்தது? – பகலில் இயங்கும் கடைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
கற்பவை கற்றபின்…
I. ஆகுபெயரைக் கண்டறிக.
அ.
- தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்தாள். – தொழிலாகு பெயர்
- தமிழரசி வள்ளுவரைப் படித்தாள் – கருத்தாவாகு பெயர்
ஆ.
- மாமாவின் வருகைக்கு வீடே மகிழ்கிறது – இடவாகு பெயர்
- நாடும் வீடும் நமது இரு கண்கள் – சினையாகு பெயர்
இ.
- கலைச்செல்வி பச்சை நிற ஆடையை உடுத்தினாள் – தொழிலாகு பெயர்
- கலைச்செல்வி பச்சை உடுத்தினாள் – பொருளாகுபெயர் (முதலாகு பெயர்)
ஈ.
- நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி – எண்ணலளவையாகு பெயர்
- நாலடி நானூறும் இரண்டடித் திருக்குறளும் வாழ்வுக்கு உறுதி தரும். – காரியவாகு பெயர்
உ.
- ஞாயிற்றை உலகம் சுற்றி வருகிறது – தொழிலாகு பெயர்
- நீங்கள் கூறுவதை உலகம் ஏற்குமா? – இடவாகு பெயர்
II. ஆகுபெயர் அமையுமாறு தொடர்களை மாற்றி எழுதுக.
அ. மதுரை மக்கள் இரவிலும் வணிகம் செய்கின்றனர்.
- மதுரையில் இரவு வணிகம் உண்டு
ஆ. இந்தியா வீரர்கள் எளிதில் வென்றனர்.
- இந்தியா எளிதில் வென்றது.
இ. நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கத்தில் உள்ளவர்கள் சிரித்தனர்.
- நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கமே சிரித்தது
ஈ. நீரின்றி இவ்வுலக மக்களால் இயங்க முடியாது
- நீரின்றி உலகு இயங்காது
மொழியை ஆள்வோம்
I. தொடரில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து நீக்குக.
அ. மலையேறிய மக்கள் மாலையின் வேகவேகமாய்க் கீழிறங்கின.
- மலையேறி மக்கள் மாலையில் வேகவேகமாய்க் கீழிறங்கின
ஆ. எங்கள் ஊர் சந்தையில் காய்க்கறிகள் கிடைக்கும்.
- எங்கள் ஊர் சந்தையில் காய்கறிகள் கிடைக்கும்.
இ. பண்டைத் துறைமுகங்களில் ஏற்றுமதிச் செய்யப்பட்டது.
- பண்டைத் துறைமுகங்களில் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஈ. சிட்டுக்கு சிறகுகள் முளைத்தது.
- சிட்டுக்கு சிறகுகள் முளைத்தன
II. ஆகுபெயர்களை அட்டவணைப்படுத்துக.
விமலா கூடத்தில் உள்ள தட்டிலிருந்த டிசம்பரைத் தலையில் சூடிக்கொண்டாள் . மல்லிகையைப் படத்திற்குச் சூட்டினாள். அடுப்பிலிருந்து பாலை இறக்கினாள். பின்பு தோட்டத் திற்குச் சென்றாள். விமலாவைப் பார்த்தவுடன் தோட்டம் அமைதியானது!“தலைக்கு இருநூறு கொடுங்கம்மா ” என்று தோட்டத்தில் வேலை செய்தவருள் ஒருவர் சொன்னார். வெள்ளை மனங்கொண்ட வேலையாட்களின் கூலியைக் குறை க்க விரும்பாமல் அதனை அவளும் ஏற்றுக்கொண்டாள். அவர்கள் சென்றதும், காலையில் சாப்பிடப் பொங்கல் வைத்தாள்.வீட்டில் சமையல் செய்ய, எந்தெந்தப் பொருள்கள் குறைவாக உள்ளன என்பதை ப்பற்றிச் சிந்தித்தாள். “சாப்பாட்டிற்கு ஐந்து கிலோ வாங்க வேண்டும். தாளிப்பதற்கு மூன்று லிட்டர் வாங்க வேண்டும். துணி உலர்த்துவதற்கு நான்கு மீட்டர் வாங்க வேண்டும்” எனத் திட்டமிட்டாள்.அலைபேசி அழைத்தது. அரை நிமிடம் அலைபேசியில் வந்த வயலின் கேட்டு மகிழ்ந்தாள் . பிறகு எடுத்துப் பேசினாள் . கடைக்குப் போய்விட்டு வந்த பிறகு, பாதியில் விட்டிருந்த சிவசங்கரியைப் படித்து முடிக்கவேண்டும் என்று நினைத்தாள் . |
டிசம்பரைத் தலையில் சூடிக்கொண்டாள் | டிசம்பர் என்னும் காலப்பெயர் பூவுக்கு ஆகி வந்ததால் (காலவாகு பெயர்) |
பாலை இறக்கினாள் | பால் கொதித்த பாத்திரத்தை இறக்கினாள், கருவி பாலுக்கு அகி வந்தது (கருவியாகு பெயர்) |
தலைக்கு இருநூறு | ஒவ்வொருவருகு்கும் என்பதைத் தலை என்னும் சினைப்பெயரால் உணர்த்துகிறது (சினையாகு பெயர்) |
சாப்பாட்டிற்கு ஐந்து கிலோ வாங்க வேண்டும். | 5 கிலோ அரிசியை குறிக்க… எடுத்து அளந்து தருவது (நிறுத்து) (எடுத்தலளவை ஆகு பெயர்) |
தாளிப்பதற்கு மூன்று லிட்டர் வாங்க வேண்டும். | முகந்து அளக்கும் எண்ணெய் (முகத்தலளவையாகு பெயர்) |
துணி உலர்த்துவதற்கு நான்கு மீட்டர் | நீட்டி அளக்கும் துணி உலர்த்தும் கொடியை குறிக்கும் (நீட்டலளவையாகு பெயர்) |
சிவசங்கரியைப் படித்து முடிக்க வேண்டும் | சிவசங்கரி நூலைக் குறிக்கும் (கருத்தாவாகு பெயர்) |
III. வரைபடத்தை உற்றுநோக்கி வினாக்களுக்கு விடையளிக்க.
அ. வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ள பண்டைய நகரங்கள் எவை?
- கீழடி
- மதுரை
- காஞ்சி
- கொடுமலை
- கரூர்
- உறையூர்
ஆ. பண்டைய நகரங்களாகவும் துறைமுகங்களாகவும் விளங்கி, இன்று அகழாய்விற்குரிய இடங்களாகத் திகழ்வன எவை?
- அரிக்கமேடு
- கீழடி
- ஆழகன்குளம்
- கொற்கை
இ. பண்டைத் துறைமுகம், இன்றைய துறைமுகம் – வரைபடம் உணர்த்தும் வேறுபாடுகளைச் சுட்டுக.
- சிவப்பு வண்ணம் – பண்டைய துறைமுகம்
- நீல வண்ணம் – இன்றைய துறைமுகம்
ஈ. முத்துக் குளித்தலுக்குப் பெயர் பெற்ற துறைமுகங்கள்
- தூத்துக்குடி
- கொற்கை
உ. புகழ்பெற்ற பண்டைத் துறைமுகங்கள் இன்று இல்லாமைக்கான காரணங்களைச் சிந்தித்து எழுதுக
- கடல்கோல்களால் அழிந்தன
- சரியாக பராமரிக்கப்படாதலால் ஆழயாமில்லாமல் அழிந்தன
IV. ஆகுபெயர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
(விளைச்சல் , பால், முழம், மதுரை, வெள்ளை, பள்ளி.
1. விளைச்சல்
- வெள்ளத்தினால் நெல் விளைச்சல் பாதித்தது
2. பால்
- பசும்பால் உடம்புக்கு நல்லது
3. முழம்
- ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
4. மதுரை
வைகை ஆறு மதுரை மாவட்டத்தில் ஓடுகிறது
5. வெள்ளை
- பாலும், கள்ளுமும் வெள்ளை நிறத்தில் காணப்படும்
6. பள்ளி
- அறிவுக்கண் தருவது பள்ளி
மொழியை விளையாடு
I. ஒளிந்துள்ள தமிழ்நாட்டின் துறைமுகங்களைக் கண்டறிந்து எழுதுக.
1. கல்வியில் தடம் பதித்தவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.
- கடலூர்
2. பூம்பொழில் புகும் கார் கால மேகம்
- பூம்புகார்
3. தூக்கத்தில் துள்ளிக் குதிக்கும் கரடி-
- தூத்துக்குடி
4. எட்டும் தொண் ணூறும் எண்ணுப்பெயர்கள்
- எண்ணூர்
II. அகராதியில் காண்க.
1. தரங்கம் – அலை
2. தொள்ளை – துளை
3. நியமம் – தெரு
4. பாடிலம் – நாடு
5. மாறன் – பாண்டியன்
III. வட்டத்திற்குள் உள்ள எழுத்துகளைக்கொண்டு காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. சொற்களை உருவாக்குக.
கால், காலை, கான், புத்தகம், புல், புத்தி, அகல், அவல், கல், அதிகம், கறி, தறி, புதன், வலை, அறிவன், கலை, கத்தி, கவலை, காவல், அலை, தில்லை, தலை
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
IV. வினைமுற்றை வினையாலணையும் பெயராக்கித் தொடர்களை இணைக்க.
1. மதுரையில் தமிழ் வளர்க்கச் சங்கம் அமைத்தார்கள் ; அவர்கள் பாண்டிய மன்னர்கள்
- மதுரையில் தமிழ் வளர்க்கச் சங்கம் அமைத்தவர்கள் பாண்டிய மன்னர்கள் .
2. நேற்று ஒருவன் வந்தான்; அவன் என் தம்பி.
- நேற்று வந்தவன் என் தம்பி
3. அவர் மகிழுந்தை நிறுத்தினார்; வீட்டிற்குள் நுழைந்தார்.
- மகிழ்வதை நிறுத்தியவர் வீட்டிற்குள் நுழைந்தார்
4. கூண்டுக்குள் கிளியைக் கண்டார்; அதை வானில் பறக்கவிட்டார்.
- கூண்டுக்குள் கிளியை கண்டவர் அதை வானில் பறக்கவிட்டார்
5. எனக்குக் கவிதை நூலைத் தருவார்; அவரே அதன் பதிப்பாளர்.
- எனக்கு கவிதை நூலைத் தந்தவர் அதன் பதிப்பாளர்
கலைச்சொல் அறிவோம்
- கழிமுகங்கள் – Estuaries
- கலங்கரைவிளக்கம் – Lighthouse
- துறைமுகங்கள் – Ports
- பண்டமாற்றுமுறை – Commodity Exchange
- இளநீர் – Tender Coconut, அகழி – Moat
- கரும்புச் சாறு – Sugarcane Juice
- காய்கறி வடிசாறு – Vegetable Soup
அறிவை விரிவுசெய்
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு – மு.மேத்தா
- தமிழ்பழமொழிகள் – கி.வா.ஜகந்நாதன்
- இருட்டு எனக்கு பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) – ச.தமிழ்ச்செல்வன்