Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 9th Tamil Books Chapter 3 5

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 3 5

தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர்

வாழ்வியல்: திருக்குறள்

I. படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க.

அ) நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
      பேணாமை பேதை தொழில்.

ஆ) விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
      கேளாது நட்டார் செயின்.

இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
      செல்வத்துள் எல்லாந் தலை

விடை :-

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை

II. பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.

பாடல்:-

ஆண்டில் இளையவனென்று அந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் – மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.

குறள்:-

அ) செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.

இ) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

விடை:-

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.

பொருள்:-

நமக்கு நல்ல வசதியும் வாய்ப்பும் இருக்கிறது என்றெண்ணி ” இவருக்கு இத்தீங்கை செய்தால் எவர் நம்மை என்ன செய்ய முடியும்?” என்ற இறுமாப்புக் கொண்டு தீங்கிழைத்தவர்களையும் பொறுமைப் பண்பால் வெற்றி கொள்ள வேண்டும். (பொறையுடைமை – 8வது குறள்

III. பொருத்துக

1. பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்றுஅ. ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்
2. தத்தம் கருமமே கட்டளைக்கல்ஆ. அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்
3. அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்இ. சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போல

விடை : 1 -இ, 2 – அ, 3 – ஆ

4. தீரா இடும்பை தருவது எது?

 1. ஆராயாமை, ஐயப்படுதல்
 2. குணம், குற்றம்
 3. பெருமை, சிறுமை
 4. நாடாமை, பேணாமை

விடை : ஆராயாமை, ஐயப்படுதல்

IV. சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக.

அ. நுணங்கிய கேள்வியர் – நுட்பமான கேள்வியறிவு உடையவர்

 • தொடர் : ராமு நுணங்கிய கேள்வியராக விளங்கினான்

ஆ. பேணாமை – பாதுகாக்காமை

 • தொடர் : உழவனால் பேணாத பயிர் வீணாகும்

இ. செவிச் செல்வம் – கேட்பதால் பெறும் அறிவு

 • தொடர் : செவிச்செல்வம் பெற்றவர் சாதனையாளராக உருவாகின்றனர்

ஈ. அறனல்ல செய்யாமை – அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல்

 • தொடர் : காந்தியடிகள் அறனல்ல செய்கைகளைச் செய்யாதவர்

V. குறு வினா

1. நிலம் போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்?

தன்னை இகழ்பவரிடம் நிலம் போலப் பொறுமை காக்க வேண்டும்

2. தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். – இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.

தீயவை தீயவற்றையே தருதலால் தீயைவிடக் கொடியதாகக் கருதி அவற்றைச் செய்ய அஞ்சவேண்டும

3. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். – இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எழுதுக.

எதுகை நயம் – இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதுஒற்றொற்றித் – மற்றுமோர்ஒற்றினால் – ஒற்றிக்மோனை நயம் – முதலாம் எழுத்து ஒன்றி வருவதுஒற்றொற்றித் – ஒற்றினால் – ஒற்றிக்

4. கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?

செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிக்காது

VI.கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.

மெளனவிரதம் என்னும் தலைப்பில் நான்கு நண்பர்கள் ஒரு சொற்பொழிவைக் கேட்டனர். தாங்களும் ஒரு வாரத்துக்கு மெளனவிரதம் இருப்பதாகத் தீர்மானம் செய்தனர். மெளனவிரதம் ஆரம்பமாகி விட்டது! கொஞ்ச நேரம் போனதும் ஒருவன் சொன்னான், “எங்கள் வீட்டு அடுப்பை அணைத்துவிட்டேனா தெரியவில்லையே!“ பக்கத்திலிருந்தவன் “அடப்பாவி! பேசிட்டியே!“ என்றான். உடனே மூன்றாவது ஆள், “நீ மட்டும் என்ன? நீயும்தான் பேசிவிட்டாய்!“ என்றான். நான்காவது ஆள், “நல்லவேளை! நான் மட்டும் பேசவில்லை!“ என்றான். இப்படியாக அவர்களின் மெளனவிரதம் முடிந்துபோனது.

1. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
   அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

2. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
   அறனல்ல செய்யாமை நன்று.

3. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
   பேதையின் பேதையார் இல்.

விடை:-

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.

கூடுதல் வினாக்கள்

I. குறு வினா

1. எது தலை சிறந்தது என திருக்ககுறள் கூறுகிறது?

தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போலத் தன்னை இகழ்பவரைப் பொறுப்பது தலைசிறந்தது என திருக்குறள் கூறுகிறது.

2. செருக்கினால் துன்பம் தந்தவரை எப்படி வெல்ல வேண்டும்?

செருக்கினால் துன்பம் தந்தவரை நம்முடைய பொறுமையால் வெல்ல வேண்டும்

3. செல்வத்தில் சிறந்த செல்வம் எது?

செல்வத்தில் சிறந்தது செவியால் கேட்டறியும் கேள்விச்செல்வம். அது பிற வழிகளில் வரும் செல்வங்களைவிடத் தலைசிறந்தது.

4. கேட்ட எதனால் அளவுக்குப் பெருமை உண்டாகும்?

எவ்வளவு சிறிதானாலும் நல்லவற்றைக் கேட்டால், கேட்ட அளவுக்குப் பெருமை உண்டாகும்.

5. யார் அடக்கமான சொற்களைப் பேசுவது அரிதாகும்?

நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர் அடக்கமான சொற்களைப்பேசுவது அரிது.

6. ஆராய்ந்து அறியும் உரைகல் எது?

ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரது செயல்பாடுகளே ஆராய்ந்து அறியும் உரைகல் ஆகும்.

7. தாயின் பசியைக் கண்டபோதும் எச்செயலை செய்யக் கூடாது?

தாயின் பசியைக் கண்டபோதும் சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யக் கூடாது

8. திருக்குறள் உலகப் பொதுமறை என அழைக்கப்படக் காரணம் யாது?

இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் திருக்குறள் முன்னிலைப்படுத்தவில்லை. எனவே திருக்குறள் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது.

II. சிறு வினா

1. திருக்குறளின் வேறு பெயர்கள் யாவை?

 • முப்பால்
 • பொதுமறை
 • பொய்யாமொழி
 • வாயுறை வாழ்த்து
 • தெய்வநூல்
 • தமிழ்மறை
 • முதுமொழி
 • பொருளுறை

2. திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதியவர் யார்?

 • தருமர்
 • மணக்குடவர்
 • தாமத்தர்
 • நச்சர்
 • பரிதி
 • பரிமேலழகர்
 • திருமலையர்
 • மல்லர்
 • பரிப்பெருமாள்
 • காளிங்கர்

3. திருவள்ளுவரின் சில சிறப்பு பெயர்கள் யாவை?

 • நாயனார்
 • தேவர்
 • முதற்பாவலர்
 • தெய்வப்புலவர்
 • நான்முகனார்
 • மாதானுபங்கி
 • செந்நாப்பேதார்
 • பெருநாவலர்

கலைச்சொல் அறிவோம்

 • அகழாய்வு – Excavation
 • கல்வெட்டியல் – Epigraphy
 • நடுகல் – Hero Stone
 • பண்பாட்டுக் குறியீடு – Cultural Symbol
 • புடைப்புச் சிற்பம் – Embossed sculpture
 • பொறிப்பு – Inscription

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *