Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 9th Tamil Books Chapter 1 2

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 1 2

தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர்

கவிதைப்பேழை: தமிழோவியம்

I. இலக்கணக்குறிப்பு

  • எத்தனை எத்தனை – அடுக்குத்தொடர்
  • விட்டு விட்டு – அடுக்குத்தொடர்
  • ஏந்தி – வினையெச்சம்
  • காலமும் – முற்றுமரம்

II. பகுபத உறுப்பிலக்கணம்

வளர்ப்பாய் – வளர் + ப் + ப் + ஆய்

  • வளர் – பகுதி
  • ப் – சந்தி
  • ப் – எதிர்கால இடைநிலை
  • ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

III. பலவுள் தெரிக

காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே!
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!……….. இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

  1. முரண், எதுகை, இரட்டைத் தொடை
  2. இயைபு, அளபெடை, செந்தொடை
  3. எதுகை, மோனை, இயைபு
  4. மோனை, முரண், அந்தாதி

விடை : எதுகை, மோனை, இயைபு

IV. குறு வினா

1. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக் காலமும் நிரலோய் இருப்பதும் தமிழே!என்ற அடி  என்னைக் கவர்ந்த அடிகளாகும். பழைமையான மொழியாக இருந்தாலும், காலம் கடந்து நிற்கும் மொழியாகும் என்பதை இத் தொடர் வழி அறியலாம்.

2. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் – இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வரிகள் உணர்த்துவன யாவை?

இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வரிகள்  அகப்பொருள், புறபொருள் ஆகியவற்றை உணர்த்துகின்றன.

V. சிறு வினா

1. காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

சங்க இலக்கியத்தில் எண்ணற்ற தமிழ்ச்சொற்கள் காலத்திற்கேற்றப்படி புதுபித்துக் கொள்ளும் வகையில் உள்ளன.மேலும், ” கடி சொல் இல்லைக் காலத்துப்படினே” என்ற தொல்காப்பிய நூற்பா வரிகள் புதிய சொல்லுருவாக்கத்திற்கு வழி செய்வதாலும் காலந்தோறும் தமிழ்மொழி தன்னை புதுப்பித்துக் கொள்கின்றது.

2. புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்- உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

தமிழில் உள்ள அறிவியல் செய்திகளை மேலும் வெளிக் கொணர்வோம்கன்னித் தமிழ் மாறாது கண்ணித் தமிழ் ஆக்குவோம்.அயல்மொழி மோகம் கொண்டு திரிவோரை அன்னைத் தமிழ் மோகம் கொள்ள வைப்போம்.

கூடுதல் வினாக்கள்

I. பலவுள் தெரிக

1. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் எனக் கூறும் நூல் _____________

  1. வணக்கம் வள்ளுவ
  2. பிங்கல நிகண்டு
  3. தமிழோவியம்
  4. தமிழன்பன் கவிதைகள்

விடை : பிங்கல நிகண்டு

2. காலம் பிறக்கும் முன் பிறந்தது _____________

  1. தமிழ்
  2. உருது
  3. சமஸ்கிருதம்
  4. மலையாளம்

விடை : தமிழ்

3. உலகத் தாய்மொழி நாள் _____________

  1. மார்ச் 21
  2. ஏப்ரல் 21
  3. பிப்ரவரி 21
  4. ஜனவரி 21

விடை : பிப்ரவரி 21

4. வணக்கம் வள்ளுவ என்ற நூலுக்குச் சாகித்ய அகாடமி விருது கிடைத்த ஆண்டு _____________

  1. 2007
  2. 2005
  3. 2006
  4. 2004

விடை : 2004

5. ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் _____________

  1. சுரதா
  2. ஜெகதீசன்
  3. சுப்புரத்தினம்
  4. காளமேகம்

விடை : ஜெகதீசன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ________________ ஆட்சி மொழி தமிழ் மொழி

விடை : இலங்கை, சிங்கப்பூரில்

2. பல சமயங்களையும் ஏந்தி வளர்த்தால் தமிழைத் ________________ எனலாம்

விடை : தாய்

3. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று ________________  பாடினார்

விடை : பாரதியார்

4. ________________  காலம் பிறக்கும் முன் பிறந்தது

விடை : தமிழ்மாெழி

III. சிறு வினா

1. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் எவை?

  • இலங்கை
  • சிங்கப்பூர்

2. மானிட மேன்மையைச் சாதித்திட எதன் வழி, ஓதி நடக்க வேண்டும் என்று ஈரோடு தமிழன்பன் கூறுகின்றார்?

மானிட மேன்மையைச் சாதித்திட திருக்குறள் வழி, ஓதி நடக்க வேண்டும் என்று ஈரோடு தமிழன்பன் கூறுகின்றார்?

IV. குறு வினா

1. ஈரோடு தமிழன்பன் குறிப்பு வரைக

சிறுகதை, புதுக்கவிதை முதலிய படைப்புகள் வெளியிட்டுள்ளார்ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ புது வடிவங்களில் கவிதை நூல்களில் தந்துள்ளார்.2004-ல் அவரின் வணக்கம் வள்ளுவ நூல் சாகித்திய அகாடமி விருது பெற்றது.தமிழன்பன் கவிதைகள் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது.

2. தமிழோவியம் கவிதையில் கவிஞர் சுட்டும் கருத்துகளை எழுதுக

காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழ், எந்தக் காலத்திலும் நிலையாய் இருப்பது தமிழ் மொழி ஆகும்இலக்கியங்களும், இலக்கணங்களும் இணையில்லாத காப்பியத் தோட்டங்கள். அவர மனதில் ஊர்வலம் நடத்தும்.இருட்டைப் போக்கும் விளக்காய், உயர்வு தரும் குறள் வழி நடந்தால் போதும்பல சமயங்களை வளர்த்த தாயானவள் தமிழ்புதிய சிந்தைனயைச் சித்தர் நெறிகள் கூறும்.விரலில் இல்லை, வீணையில் உள்ளது இசை என்று கூறுவார்போல குறை சொல்லாமல் தமிழ் வளர்ப்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *