Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 9th Science Books Tamil Medium Universe

Samacheer Kalvi 9th Science Books Tamil Medium Universe

அறிவியல் : அலகு 9 : அண்டம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. இவற்றுள் எது சரியான வாக்கியம்?

A) நம் சூரிய மண்டலத்தில் எட்டு காேள்கள் உள்ளன.

B) செவ்வாய் காேளைத் தவிர, அனைத்துக் காேள்களும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன.

  1. A மட்டும் சரியானது
  2. B மட்டும் சரியானது
  3. A மற்றும் B சரியானது
  4. இரு வாக்கியங்களும் தவறு

விடை : A மட்டும் சரியானது

2. சூரிய மையக் காெள்கையை முன்மாெழிந்தவர் யார்?

  1. டைக்காே பிராஹே
  2. நிகாேலஸ் காேபர்நிக்கஸ்
  3. டாலமி
  4. ஆர்க்கிமிடிஸ்

விடை : நிகாேலஸ் காேபர்நிக்கஸ்

3. இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள காேள் அல்ல?

  1. புதன்
  2. சனி
  3. யுரேனஸ்
  4. நெஃப்டியூன்

விடை : புதன்

4. செரஸ் என்பது _______________.

  1. விண்கல்
  2. விண்மீன்
  3. காேள்
  4. சிறுகாேள்

விடை : சிறுகாேள்

5. A என்ற சூரியனைச் சுற்றி வர எடுத்துக் காெள்ளும் சுழற்சி நேரம் B என்ற காேளை விட எட்டு மடங்கு அதிகம் எனில், காேள் A வின் தூரம் காேள் B யின் தூரத்தை விட எத்தனை மடங்கு அதிகம்?

  1. 4
  2. 5
  3. 2
  4. 3

விடை : 4

6. _________________ ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.

  1. 13.7 மில்லியன்
  2. 15 மில்லியன்
  3. 13 மில்லியன்
  4. 20 மில்லியன்

விடை : 13.7 மில்லியன்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

1. சூரியனின் திசைவேகம் ……………………… கி.மீ/வி.

விடை : 1.250

2. முனைகளில், சூரியனின் சுழற்சி வேகம்………………………. நாட்கள்.

விடை : 2.36

3. இந்தியாவின் முதல் செயற்கைக்காேள் …………………….

விடை :  ஆரியபட்டா.

4. கெப்ளரின் மூன்றாம் விதியை ……………………………………….. விதி என்றும் அழைப்பர்.

விடை : ஒத்திசைவுகளின்

5. ……………………….. எனும் இயற்கைத் துணைக்காேள் மட்டுமே காேள் சுழலும் திசைக்கு எதிர் திசையில் அமைந்துள்ளது.

விடை : டிரைட்டான்

6. நம் சூரிய குடும்பத்திலுள்ள காேள்களின் எண்ணிக்கை ………………….. ஆகும்.

விடை : 8

III. சரியா? தவறா? எனக் கூறுக:

1. சனி மற்றும் யுரேனஸ் காேள்களுக்கிடையே உள்ள தாெலைவு, பூமி மற்றும் புதனுக்கிடையே உள்ள தாெலைவின் 10 மடங்குகள் ஆகும். ( தவறு )

விடை : சனி மற்றும் யுரேனஸ் காேள்களுக்கிடையே உள்ள தாெலைவு, பூமி மற்றும் புதனுக்கிடையே உள்ள தாெலைவின் 20 மடங்குகள் ஆகும்

2. பன்னாட்டு விண்வெளி மையம் என்பது சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு ஆதாரமாகும். ( சரி )

3. ஹேலிஸ் வால்மீன் 67 மணி நேரங்களுக்கு சுழலும் பின்னர் தாேன்றும். ( தவறு )

விடை : ஹேலிஸ் வால்மீன் 76 வருடங்களுக்கு சுழலும் பின்னர் தாேன்றும்

4. பூமிக்கு அருகே உள்ள காேள்களுக்கு சுழலும் திசைவேகம் குறைவாக இருக்கும். ( தவறு )

விடை : பூமிக்கு அருகே உள்ள காேள்களுக்கு சுழலும் திசைவேகம் அதிகமாக இருக்கும்.

5. புதன் காேள் சிவப்புக்காேள் என்றழைக்கப்படுகிறது. ( தவறு )

விடை : செவ்வாய் காேள் சிவப்புக்காேள் என்றழைக்கப்படுகிறது

IV. பொருத்துக

1. வியாழன்17.2 மணிகள்
2. புதன்10.7 மணிகள்
3. வெள்ளி87.97 நாட்கள்
4. சனி9 மணி 55 நிமிடங்கள்
5. செவ்வாய்243 நாட்கள்
87.97 நாட்கள்
24 மணி 37 நிமிடங்கள்

விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – ஆ, 5 – ஊ

V. சுருக்கமாக விடையளி.

1. சூரிய மண்டலம் என்றால் என்ன?
சூரியனும் அதைச் சுற்றி வரும் விண்பொருள்களும் சேர்ந்து சூரிய மண்டலம் என
அழைக்கப்படுகின்றன.

2. காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன?
ஒரு நாெடிக்கு 250 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் சூரியன் (9 lakh கி.மீ/ம) பால்வெளியை ஒரு முறை சுற்றிவர 225 மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இந்தக் காலம் தான் காஸ்மிக் ஆண்டு எனப்படுகிறது.

3. சுழற்சித் திசைவேகம் வரையறு.

காேளிலிருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ச உயரத்தில், செயற்கைக் காேள் ஒன்று வட்டப் பாதையில் சுற்றி வருவதற்கு அளிக்கப்படும் கிடைமட்டத் திசைவேகம் சுழற்சித் திசைவேகம் என வரையறுக்கப்படுகிறது.

4. சுற்றுக்காலம் வரையறு

புவியை ஒரு முறை முழுமையாக சுற்றி வர இரு செயற்கைக்கோள் எடுத்துக்கொள்ளும் காலம் சுற்றுக்காலம் எனப்படும்

5. துணைக்கோள் என்றால் என்ன? துணைக்கோளின் இருவகைகள் யாவை?

ஒரு சுற்றுப்பாதையில் கோளைச் சுற்றிவரும் பொருள் துணைக்கோள் என்றழைக்கப்படும்

  1. இயற்கை துணைக்கோள்
  2. செயற்கை துணைக்கோள்

VI. சுருக்கமாக விடையளி

1. உட்புறக்கோள் குறிப்பு வரைக

உட்புற சூரிய மண்டலத்தில் காணப்படும் நான்கு கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகியவை உட்புறக்கோள்கள் என்றழைக்கப்படுகின்றன.

2. வால் விண்மீன்கள் என்றால் என்ன?

அதி நீள்வட்டப் பாதையில் நம் சூரியனைச் சுற்றிவரம் தூசு மற்றும் பனி நிறைந்த பொருள்களே வால் விண்மீன்கள் எனப்படும். இவை சூரியனை நெருங்கும்போது ஆவியாகி தலை மற்றும் வால் ஆகியவை உருவாகின்றன

3. கெப்பளரின் விதிகளை வரையறு

முதல்விதி – நீள்வட்டங்களின் விதி

சூரியனின் மையம் ஒரு குவியத்தில் உள்ளவாறு நீள்வட்டப் பாதையில் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன.

இரண்டாம் விதி – சமபரப்புகளின் விதி

கோளின் மையத்தையும் சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக்கோடு சமகாலங்களில் சம பரப்புகளை கடக்கிறது.

மூன்றாம் விதி – ஒத்திசைவுகளின் விதி

எந்த இரு கோள்களுக்கும் சுற்றுக் காலங்களின் இருமடிகளின் விகிதம் சூரியனலிருந்து அவற்றின் பாதியளவு பேரச்சுகளின் மும்முடிகளின் விகித்திற்கு சமம்

4. சுகன்யான் – குறிப்பு வரைக

2022-ம் ஆண்டில் இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும். இதன் முதல் பணிக்குழுவில் மூன்று விண்வெளி வீரர்கள் இருப்பர். ஐி.எஸ்.எல்.வி.-II ராக்கெட் மூலம் விண் வெளிக்கு இவர்களை எடுத்து செல்லும் திட்டம் சுகன்யான் என்றழைக்கப்படுகிறது.

5. பூமியில் உயிர் வாழ்வதற்கான காணிகள் யாவை?

சூரிய மண்டலத்திலுள்ள கோள்களிலேயே நாம் வாழும் பூமியில் மட்டும் தான் உயிர் வாழத் தகுதியான சூழல் உள்ளது. சூரியனிலிருந்து சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி கொண்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *