Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 9th Science Books Tamil Medium Light

Samacheer Kalvi 9th Science Books Tamil Medium Light

அறிவியல் : அலகு 6 : ஒளி

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. இவற்றுள் பார்வைப் புலம் அதிகம் உள்ளது.

  1. சமதள ஆடி
  2. குழியாடி
  3. குவியாடி

விடை : குவியாடி

2. ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்பாேது எந்த
படுகாேணத்தில் ஒளிவிலகல் அடையாது?

  1. 0o
  2. 45o
  3. 90o

விடை : 0o

3. கை மின்விளக்கில் எதிராெளிப்பானாகப் பயன்படுவது …………………………

  1. குழியாடி
  2. குவியாடி
  3. சமதள ஆடி

விடை : குழியாடி

4. பெரிதான, மாயபிம்பங்களை உருவாக்குவது ………………………….

  1. குழியாடி
  2. குவியாடி
  3. சமதள ஆடி

விடை : குழியாடி

5. எதிராெளிக்கும் பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பின், அது

  1. குழியாடி
  2. குவியாடி
  3. சமதள ஆடி

விடை : குவியாடி

6. குழியாடியின் குவியத்தோறலவு 5 தச.மீஎனில் அேன் வறளவு ஆரம்

  1. 5 செ.மீ
  2. 10 செ.மீ
  3. 2.5 செ.மீ

விடை : 10 செ.மீ

7. முப்பட்டகம் ஒன்றின் வழியே ஒளிக்கற்றை பாயும் பாேது ……………………….

  1. எதிராெளிக்கப்படுகிறது
  2. விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது
  3. விலகல் மட்டும் அடைகிறது

விடை : விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது

8. ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ளது ……………………………

  1. வெற்றிடத்தில்
  2. கண்ணாடியில்
  3. வைரத்தில்

விடை : வெற்றிடத்தில்

9. பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பத்தை உருவாக்குவது ……………………

  1. குவியாடி
  2. சமதள ஆடி
  3. குழியாடி

விடை : குழியாடி

10. முழு அக எதிராெளிப்பைப் பற்றிய சரியான கூற்று எது?

  1. படுகாேணம் மாறுநிலைக் காேணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்
  2. அதிக ஒளிவிலகல் எண் ஊடகத்திலிருந்து குறைந்த ஒளிவிலகல் எண் காெண்ட ஊடகத்திற்கு ஒளி செல்ல வேண்டும்.
  3. (அ) மற்றும் (ஆ) இரண்டும்

விடை : (அ) மற்றும் (ஆ) இரண்டும்

II. சரியா, தவறா – தவறெனில் திருத்தியமைக்க

1. ஒளிவிலகல் காேணம் ஒளிவிலகல் எண்ணைப் பாெருத்தது.  ( சரி )

2. ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்பாேது, விலகல் அடைவில்லை. ( தவறு )

விடை: – ஊடகத்தின் அடர்த்தியைப் பாெருத்து ஒளிக்கதிர் விலகல் அடையும்

3. குவியாடியிலிருந்து ஈரிலாத் தொலைவில் உள்ள பாெருளினால் ஏற்படும் பிம்பமும் ஈரிலாத் தொலைவில் உருவாகும். ( தவறு )

விடை : பிம்பம் முக்கியக் குவியத்தில் (F) உருவாகிறது.

4. சமதள ஆடியிலிருந்து ஒரு பாெருள் 3 செ.மீ தொலைவில் உள்ளது எனில் அப்பாெருளுக்கும் அதன் பிம்பத்திற்கும் இடைப்பட்ட தொலைவு 3 செ.மீ ( தவறு )

விடை:அப்பாெருளுக்கும் அதன் பிம்பத்திற்கும் இடைப்பட்ட தொலைவு 6 செ.மீ செ.மீ ஆகும்.

5. குவியாடி எப்பாேதும் சிறிதாக்கப்பட்ட, நேரான, மாய பிம்பத்தை உருவாக்கும். ( சரி )

6. ஒரு காேளக ஆடியின் வளைவு மையத்திற்கும் ஆடி மையத்திற்கும் இடைப்பட்ட தொலைவு குவியத்தொலைவு எனப்படும். ( தவறு )

விடை : ஆடியின் மையத்திற்கும் முதன்மை குவியத்திற்கும் இடைப்பட்ட தொலைவு குவியத்தொலைவு எனப்படும்.

7. குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பாெருள் வைக்கப்படும் பாேது மாய பிம்பம் உருவாகும். ( தவறு )

விடை: குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பாெருள் வைக்கப்படும் பாேது அதே அளவுள்ள மெய் பிம்பம் உருவாகும்

8. 3 X 108 மீ/வி என்ற அளவு காெண்ட மிகக் குறைந்த வேகத்தில் செல்லும் ஆற்றலே ஒளியாகும். ( தவறு )

விடை: 3 X 108 மீ/வி என்ற அளவு காெண்ட மிக அதிக வேகத்தில் செல்லும் ஆற்றலே ஒளியாகும்

9. எந்தப் படுகாேணத்திற்கு விலகு காேணம் 0o ஆக உள்ளதோ அதையே மாறு நிலைக் காேணம் என்பர். ( தவறு )

விடை: எந்தப் படுகாேணத்திற்கு விலகு காேணம் 90o ஆக உள்ளதோ அதையே மாறு நிலைக் காேணம் என்பர்.

10. வைரங்கள் மின்னுவதற்குக் காரணம் ஒளியின் முழு அக எதிராெளிப்பே.   ( சரி )

III. காேடிட்ட இடத்தை நிரப்புக

1. அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும்பாேது அது ……………………………………………………. செல்கிறது.

விடை : குத்துக்காேட்டை நாேக்கி

2. படுகாேணத்தின் சைன் மதிப்பிற்கும் ………………………………………………………. சைன் மதிப்பிற்கும் இடையேயான தகவு ஒரு மாறிலி.

விடை : விலகு கோணத்தின்

3. தெரு விளக்குகளில் (street light) எனப்படும் ஆடி …………………………………….

விடை : குழியாடி

4. முப்பட்டகம் ஒன்றில் ஏற்படும் விலகு காேணம் …………………………. பாெறுத்தது.

விடை : படுகாேணத்தை

5. 5 செ.மீ குவியத் தொலைவு காெண்ட குழியாடியின் வளைவு ஆரம் = ……………………

விடை : 10 செ.மீ

6. காேளக ஆடியின் எதிராெளிக்கும் பரப்பு வெளிநாேக்கி வனைந்திருந்தால் அது ………………………………..

விடை : குவியாடி.

7. சூரிய அடுப்புகளில் சூரிய ஒளியைக் குவித்து வெப்பம் உண்டாக்கப் பயன்படுவது பெரிய …………………………………………

விடை : குழியாடி.

8. முதன்மை அச்சுக்கு இணையான அனைத்து தொலைவுகளும் ஆடியின் ஆடி
……………………………………………… எடுக்கப்படுகின்றன.

விடை : மையத்திலிருந்து

9. உருப்பெருக்கத்தின் மதிப்பில் காணப்படும் எதிர்க்குறி (-) பிம்பம் …………………………………. என்று காட்டுகிறது.

விடை : மெய்

10. ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளி செல்லும்பாேது அதன் …………………………………………. மாறுவதால் ஒளிவிலகல் ஏற்படுகிறது.

விடை : வேகம்-அலை நீளம்

VI. பொருத்துக

1.

1. பிம்பத்தின் உயரத்திற்கும் பாெருளின்
உயரததிற்கும் இடையேயான தகவு
குழியாடி
2. மணல்களில் காணப்படும் மிகக் குறுகிய வளைவுகளில் பயன்படுவதுமுழு அக எதிராெளிப்பு
3. தண்ணீருக்குள் உள்ள நாணயம் சற்று மேலே உள்ளது பாேல் தெரிவதுஉருப்பெருக்கம்
4. கானல் நீர்குவியாடி
5. பல் மருத்துவர் பயன்படுத்துவதுஒளிவிலகல்

Ans : 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 – ஆ, 5 – அ

2.

பாெருள் வைக்கப்படும்
இடம்
பிம்பம் கிடைக்கும்
இடம்
பிம்பத்தின் அளவும் அதன் தன்மையும்
1. முக்கியக் குவியத்திற்கு உட்பட்ட நிலைF க்கும் C க்கும் இடையேபெரிதாக்கப்பட்ட, தலை கீழான மெய் பிம்பம்
2. முக்கியக் குவியத்தில் (F)C இல்பெரிதாக்கப்பட்ட, நேரான மாய பிம்பம்
3. முக்கியக் குவியத்திற்கும் (F) வளைவு மையத்திற்கும் (C) இடையேஆடிக்குப் பின்னேசிறிதாக்கப்பட்ட, தலை கீழான மெய் பிம்பம்
4. வளைவு மையத்தில்ஈரிலா தொலைவில்மிகவும் சிறிதாக்கப்பட்ட, தலை கீழான மெய் பிம்பம்
5. வளைவு மையத்திற்கு அப்பால் பாெருள் வைக்கப்படும் இடம்F இல்எந்த பிம்பமும் தெரியாது
6. ஈரிலா தொலைவில்C அப்பால்தலை கீழான அதே அளவுடைய மெய் பிம்பம்

விடை: 1 – C – B, 2 – D – E, 3 – F – A, 4 – B – F, 5 – A – C, 6 – E – D

V. வலியுறுத்தல் மற்றும் காரணக் கேள்விகள்

  1. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
  2. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும்காரணம் கூற்றின் தவறான விளக்கம
  3. கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
  4. கூற்று தவறு ஆனால் காரணம் உண்மை.

1. கூற்று : மலைப்பாறைகளில் உள்ள காெண்டை ஊசி வளைவில் பாேக்குவரத்து நெரிசலை கண்காணிக்க குவி ஆடி மற்றும் குழி ஆடியை விட சமதள ஆடியை விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது.

காரணம் : ஒரு குவி ஆடியானது சமதள ஆடி அல்லது குழி ஆடியை விட மிக அதிகமான பார்வைப் புலம் உடையது. .

விடை: கூற்று தவறு ஆனால் காரணம் உண்மை.

2. கூற்று : படுகதிர் காேளக ஆடியின் வளைவு மையத்தில் பட்டு எதிராெளித்த பின் மீண்டும் அதே பாலையில் திரும்புகிறது.

காரணம்: படுகாேணம் I = எதிராெளிப்புக் காேணம் (r) = 0o

விடை: கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

VI. குறுவினாக்கள்

1. காற்றை விட அடர்மிகு, ஒளிபுகும் ஊடகங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

  1. நீர்
  2. கண்ணாடி.

2. குறியீட்டு மரபுகளின் அடிப்படையில், எந்த ஆடி மற்றும் எந்த லென்ஸ் எதிர்க்குறி
குவியத்தொலைவு காெண்டது.

  1. குழி ஆடி
  2. குழி லென்ஸ்

3. ஒரு கண்ணாடி முகவையுள் வைக்கப்பட்ட நாணயம், அதில் நீரை ஊற்றும் பாேது மேல் எழும்புவது பாேல் தெரிகிறது. இதற்குக் காரணம் என்ன?

ஒளி விலகலினால் ஏற்படும் நிகழ்வு ஆகும்.

4. i. நேரான, பெரிதாக்கப்பட்ட பிம்பம்
ii. அதே அளவுள்ள தலைகீழான பிம்பம் இவற்றை தரக்கூடிய ஆடி(கள்) எது/எவை?

(i). குழி ஆடி

(ii) குழி ஆடி

5. i. மாய முக்கியக் குவியம்
ii.மெய் முக்கியக் குவியம்

இவற்றை தரக்கூடிய ஆடி(கள்) எது/எவை?

(i). குவி ஆடி (ii) குழி ஆடி

6. குழியாடி ஒன்றின் குவியத்தில் பாெருள் வைக்கப்படும்பாேது, பிம்பம் எங்கே உருவாகும்?

பிம்பம் ஈரிலாத் தொலைவில் கிடைக்கும்.

7. ஒர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளி செல்லும் பாேது ஏன் ஒளிவிலகல் ஏற்படுகிறது?

  • மாறுபட்ட அடர்த்தி காெண்ட ஊடகம்
  • ஒளியின் திசைவேகத்தில் ஏற்படும் மாறுபாடு.

8. வெற்றிடத்தில் ஒளியின் வேகம் என்ன? முதன் முதலில் ஒளியின் வேகத்தைக் கண்டறிந்தவர் யார்?

  • வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3 X 108 மீட்டர்/விநாடி
  • ஓரே ராேமர் என்ற டேனிய வானியலாளர் முதன் முதலில் ஒளியின் வேகத்தைக் கண்டறிந்தார்.

9. பல்லை ஆராய பல் மருத்துவர்கள் குழியாடியையடி பயன்படுத்துகின்றனர் ஏன்?

நேரான, பெரிதாக்கப்பட்ட பல்லின் பிம்பம் கிடைப்பதற்காக பல் மருத்துவர்கள் குழியாடியை பயன்படுத்துகின்றனர்.

10. காேளக ஆடியில் அதே திசையில் எதிராெளிக்கப்படும் படு கதிர் எது ? ஏன் என்று
காரணம் கூறுக.

ஆடியின் வளைவு மையம் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர், எதிராெளிக்கப்பட்ட பின்பு அதே பாறையில் திரும்பிச் செல்லும்.

காரணம் :

படுகதிர் காேளக பரப்பிற்கு செங்குத்தாக படக்கூடிய காரணத்தால் அதே பாறையில் திரும்பிச் செல்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *