அறிவியல் : அலகு 3 : பாய்மங்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு
- குறையும்
- அதிகரிக்கும்
- அதே அளவில் இருக்கும்
- குறையும் அல்லது அதிகரிக்கும்
விடை : அதிகரிக்கும்
2. வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு, அவற்றின் குறைந்த _______ காரணமாகும்.
- அடர்த்தி
- அழுத்தம்
- திசைவேகம்
- நிறை
விடை : அடர்த்தி
3. அழுத்த சமையற்கலனில் (pressure cooker) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்கு காரணம், அதனுடைய
- அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையைக் குறைக்கிறது.
- அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
- குறைக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
- அதிகரிக்கப்பட்ட அழுத்தம் உருகு நிலையைக் குறைக்கிறது.
விடை : அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
4. நீருள்ள வாளியில், காற்றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. பாட்டில் கீழ்நோக்கி தள்ளப்படும்போது, அதன் அடிப்பகுதியில் செயல்படும் விசையானது அதிகரிக்கிறது. இதனை கீழுள்ள வரைபடம் விளக்குகிறது. இதற்கான காரணம் என்ன?
- அதிக பருமனுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது
- அதிக எடையுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது
- ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது
- மேலே கூறிய யாவும்
விடை : ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
1. பாய்மங்களில் உள்ள ஒரு பொருளின் மீது மிதப்பு விசை செயல்படுகிறது. ஏனெனில் அதன் _____________ பகுதியில் உள்ள அழுத்தம் அதன் மேல் பகுதியில் உள்ள அழுத்தத்தைவிட அதிகமாகும்.
விடை : கீழ்
2. பொருளானது திரவத்தில் மூழ்கி இருக்கும்போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட _____________ ஆகத் தோன்றும்.
விடை : குறைவானதாக
3. வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி _____________ ஆகும்.
விடை : காற்றழுத்தமானி
4. திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதிப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் _____________ ஐப் பொறுத்தது.
விடை : அடத்தியை
5. பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் _____________ மூலம் வேலை செய்கிறது.
விடை : வளிமண்டல அழுத்தத்தின்
III. சரியா? தவறா?
1. இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீரின் எடை மிதப்பு விசையைத் தீர்மானிக்கிறது. ( சரி )
2. ஒரு பொருளின் வடிவம் அப்பொருள் மிதக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது. ( சரி )
3. மிக உயரமாள கட்டடங்களின் அடிப்பாகம் அகலமாக இருப்பதால், கட்டடம் அதிக அழுத்தத்தை புவியின் மீது செலுத்துகிறது. ( சரி )
4. ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும். ( சரி )
5. நீரியல் அழுத்தி எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுக்க பயன்படுகிறது. ( சரி )
IV. பொருத்துக
1. அடர்த்தி | hρg |
2. 1 கிராம் எடை | பால் |
3. பாஸ்கல் விதி | நிறை / பருமன் |
4. பாய்மம் ஏற்படுத்தும் அழுத்தம் | அழுத்தம் |
5. பால்மானி | 980 டைன் |
விடை : 1 – இ, 2 – உ, 3 – ஈ, 4 – அ, 5 – ஆ
V. சுருக்கமாக விடையளி.
1. திரவம் ஏற்படுத்தும் அழுத்தம் எந்தெந்த காரணிகளைப் பொறுத்தது?
திரவங்களால் ஒரு புள்ளியில் செயல் படுத்தப்படும் அழுத்தமானது கீழ்கண்டவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது.
- ஆழம் (h)
- திரவத்தின் அடர்த்தி (ρ)
- புவியீர்ப்பு முடுக்கம் (g)
2. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பது ஏன்?
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பதற்கு காரணம் ஹீலியம் வாயுவின் நிறை காற்றின் நிறையை விட குறைவு.
3. ஆற்று நீரில் நீந்துவது கடல் நீரில் நீந்துவதைவிட எளிதாக இருப்பது ஏன்?
கடல் நீரின் அடர்த்தி அதிகம் எனவே அதன் மிதப்பு விசையும் அதிகம்
4. வளி மண்டல அழுத்தம் என்றால் என்ன?
பூமியானது குறிப்பிட்ட உயரம் வரை (ஏறத்தாழ 300 கிமீ) காற்றால் சூழப்பட்டுள்ளது. இதனை புவியின் வளிமண்டலம் என்றழைக்கிறோம்.
5. பாஸ்கல் விதியைக் கூறு
அழுத்தமுறா திரவங்களில் செயல்படும் புறவிசையானது, திரவங்கங்களின் அனைத்துத் திசைகளிலும் சீராக கடத்தப்படும் என்பதே பாஸ்கல் விதி ஆகும்.
VI. கூற்று மற்றும் காரணம் வினாக்கள்.
கீழ்க்காணும் ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
- கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
- கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
1. கூற்று: பொருளானது அதன் எடைக்குச் சமமான எடை கொண்ட திரவத்தை இடப்பெயர்ச்சி செய்வதன் மூலம் மிதக்கிறது.
காரணம்: இந்த நிகழ்வில் பொருளானது எந்தவொரு கீழ்நோக்கிய நிகர விசையையும் பெற்றிருக்கவில்லை.
விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
2. கூற்று : நீரியல் தூக்கியானது பாஸ்கல் விதியின் தத்துவத்தில் செயல்படுகிறது.
காரணம் : அழுத்தம் என்பது ஓரலகு பரப்பில் செயல்படும் உந்து விசையாகும்.
விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
3. கூற்று : ஒரு கொள்கலனில் நிலையாக உள்ள திரவத்தின் பரப்பின் மீது புவிஈர்ப்பினால் செயல்படும் விசை எப்பொழுதும் கிடைத்தளத்தில் செயல்படும்.
காரணம்: நிலையாக உள்ள பாய்மத்தின் மீது செயல்படும் விசை பரப்பிற்கு குத்தாக இருக்கும்.
விடை : கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
4. கூற்று : உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெத்தைகளின் மீது படுக்கும் போது உடலின் அதிகமான பரப்பு படுக்கையுடன் தொட்டுக் கொண்டிருக்கும்படி தயாரிக்கப்பட்டிருக்கும்.
காரணம் : இதனால் உடலின் மீது செயல்படும் அழுத்தம் குறைக்கப்பட்டு நிறைவான உறக்கம் கிடைக்கிறது.
விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
5. கூற்று : ரயில் தண்டவாளத்தின் அடியில் அகலமான மரப்பலகைகளை வைப்பதன் மூலம் தண்டவாளத்தின் மீதான அழுத்தம் குறைக்கப்பட்டு, தண்டவாளம் பூமியில் புதையுண்டு போகாமல் காக்கப்படுகிறது.
காரணம் : அழுத்தமானது அது செயல்படும் பரப்புடன் நேர்விகிதத் தொடர்புடையது.
விடை : கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.