Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 9th Science Books Tamil Medium Chemical Bonding

Samacheer Kalvi 9th Science Books Tamil Medium Chemical Bonding

அறிவியல் : அலகு 13 : வேதிப்பிணைப்பு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கார்பன் அணுவில் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?

  1. 2
  2. 4
  3. 3
  4. 5

விடை :  4

2. சாேடியத்தின் அணு எண் 11, அது _____________ நெருக்கமான மந்த வாயுக்களின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது.

  1. ஒரு எலக்ட்ரானை ஏற்று
  2. இரண்டு எலக்ட்ரானை ஏற்று
  3. ஒரு எலக்ட்ரானை இழந்து
  4. இரண்டு எலக்ட்ரானை இழந்து

விடை :  ஒரு எலக்ட்ரானை இழந்து

3. இணைதிறன் ஆற்றல் மட்டத்தில் 1,2 அல்லது 3 எலக்ட்ரான்களைக் காெண்டுள்ள அணுக்கள் ____________ அயனியாக மாற வல்லவை

  1. நேர் அயனி
  2. எதிர் அயனி

விடை : நேர் அயனி

4. வேதிவினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம்

  1. பொட்டாசியம்
  2. கால்சியம்
  3. புளூரின்
  4. இரும்பு

விடை : புளூரின்

5. உலாேகங்களுக்கும் அலாேகங்களுக்கும் இடைய தாேன்றும் பிணைப்பு

  1. அயனிப் பிணைப்பு
  2. சகப் பிணைப்பு
  3. ஈதல் சகப் பிணைப்பு

விடை : அயனிப் பிணைப்பு

6. _____________ சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் காெதிநிலை காெண்டவை.

  1. சகப் பிணைப்பு
  2. ஈதல் சகப் பிணைப்பு
  3. அயனிப் பிணைப்பு

விடை : அயனிப் பிணைப்பு

7. சகப்பிணைப்பு _____________ மூலம் உருவாகிறது.

  1. எலக்ட்ரான் பரிமாற்றத்தின்
  2. எலக்ட்ரான் பங்கீடு
  3. ஒரு இணை எலக்ட்ரான்களின் பங்கீடு

விடை : எலக்ட்ரான் பங்கீடு

8. ஆக்ஸிடனேற்றிகள் ____________ எனவும் அழைக்கப்படுகின்றன.

  1. எலக்ட்ரான் ஈனி
  2. எலக்ட்ரான் ஏற்பி

விடை : எலக்ட்ரான் ஏற்பி

9. வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைபற்ற தனிமங்கள் ____________,

  1. ஹாலாேன்களை
  2. உலாேகங்கள்
  3. மந்த வாயுக்கள்
  4. அலாேகங்கள்

விடை : மந்த வாயுக்கள்

10. அ. ஓர் அணு எலக்ட்ரானை இழந்து …………………………………………..

விடை : நேர் அயனியாகிறது

ஆ. ஓர் அணு எலக்ட்ரானை ஏற்று …………………………………………..

விடை : எதிர் அயனியாகிறது

II. சிறுவினாக்கள்

1. தனிமங்கள் எவ்வாறு மந்த வாயுக்களின் எலக்டரான் அமைப்பிறகு மாறுகின்றன?

தனிமங்கள் இணைதிறன் கூட்டில் உள்ள எலக்ட்ரானை ஏற்றோ (அல்லது) வழங்கியோ நிலையான மந்த வாயவின் எலக்ட்ரான் அமைப்பை பெறுகிறது.

2. CCl4 நீரில் கரைவதில்லை. ஆனால் NaCl நீரில் கரைகிறது. காரணம் கூறு.

  • CCl– சகபிணைப்பு சேர்மம் ஆனால்
  • NaCl – அயனி சேர்மம்
  • நீர் ஒரு முனைவுற்ற கரைப்பான்

எனவே NaCl முனைவுற்ற கரைப்பானில் கரையும்

CClமுனைவற்ற கரைப்பானில் கரையும்

3. எண்ம விதியை எடுத்துக்காட்டுடன் கூறுக.

ஒவ்வொரு அணுவும் எலக்ட்ரானை இழந்தோ (அல்லது) ஏற்றோ தன் இணைதிறன் கூட்டில் 8 – எலக்ட்ரான்கள் பெற்று நிலையா மந்த வாயுவின் அமைப்பை பெறுகிறது.

எகா –  NaCl

மேற்கண்ட படத்தில் சோடியம் அணு ஒரு எலக்ரானை இழந்து தன் இணைதிறன் கூட்டில் 8 எலக்ட்ராகளை பெற்று மந்த வாயு நியானின் எலக்ட்ரானின் அமைப்பை பெறுகிறது.

4. பிணைப்பின் வகைகள் யாவை?

  • அயனிப் பிணைப்பு
  • சகப் பிணைப்பு
  • ஈதல் சகப் பிணைப்பு

5. பொருந்தாததைத் தேர்ந்தெடு

a. H2, Cl2, NaCl, O2, N2

NaCl

b. H2O2, MnO4, LiAlH4, Cr2O22–

LiAlH

6. தவறான கூற்றைக் கண்டறிந்து அவற்றை சரி செய்க

அ. அயனிச் சேர்மங்கள் முனைவற்ற கரைப்பான்களில் கரையும்.

அயனிச் சேர்மங்கள் முனைவுற்ற கரைப்பான்களில் கரையும்

ஆ. சகப் பிணைப்புச் சேர்மங்கள் உருகிய நிலையிலும், கரைசல் நிலையிலும் மின்சாரத்தைக் கடத்தும்

சகப் பிணைப்புச் சேர்மங்கள் உருகிய நிலையிலும், கரைசல் நிலையிலும் மின்சாரத்தைக் கடத்தாது

7. அட்டவணையை நிரப்புக

தனிமம்அணு எண்எலக்ட்ரான் அமைப்புஇணைதிறன் எலக்ட்ரான்லூயிஸ் புள்ளி அமைப்பு
லித்தியம்32,11
போரான்52,33
ஆக்சிஜன்82,66

8. கார்பன்-டை-ஆக்ஸைடு (CO2) உருவாதல் வினையின் எலக்டரான் அமைப்பை வரைக.

9. Žகீழ்க்கண்ட மூலக்கூறுகளில் உள்ள பிணைப்பின் வகையின் அடிப்படையில் அட்டவணையை நிரப்புக.

CaCl2, H2O, CaO, CO, KBr, HCl, CCl4, HF, CO2, Al2Cl6

அயனிப் பிணைப்புசகப் பிணைப்புஈதல் சகப் பிணைப்பு
CaCl2H2O, CCl4CO
CaO, KBrHF, CO2…………
HClAl2Cl6………….

10 சரியாகப் பாெருந்துவதைத் தேர்ந்தெடு

அயனிச் சேர்மங்களின் பாெதுவான பண்புகள்

அ. இவை அறை வெப்பநிலையில் வாயுக்கள்

ஆ. இவை கடினமான மற்றும் நாெறுஙகும் தன்மை காெண்டவை

இ. இவை மூலக்கூறு வினைகளுக்குட்படுகிறது.

ஈ. இவற்றின் உருகுநிலை குறைவு.

11. Žகீழ்க்கண்ட வினைகள் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகளா எனக் காண்க.

a. Na → Na+ + e

ஆக்ஸிஜனேற்ற வினை

b. Fe3+ + 2e → Fe+

ஒடுக்க வினை

12. காெடுக்கப்பட்ட பண்புகளின் அடிப்படையில் சேர்மங்களின் வகையைக் கண்டறிக

(அயனி / சக / ஈதல் சகப்பிணைப்பு)

அ. முனைவற்ற கரைப்பான்களில் கரையும்

சகப்பிணைப்பு

ஆ. வினையின் வேகம் மிக அதிகம்

அயனி பிணைப்பு

இ. மின்சாரத்தைக் கடத்துவதில்லை

சகப்பிணைப்பு

ஈ. அறை வெப்பநிலையில் திண்மங்கள்

ஈதல் சகப்பிணைப்பு

13. அணு எண் 20 காெண்ட X என்ற தனிமம், அணு எண் 8 காெண்ட Y என்ற தனிமத்துடன் இணைந்து XY என்ற மூலக்கூறை உருவாக்குகிறது என்க. XY மூலக்கூறு உருவாதலின் புள்ளி அமைப்பு வரைபடம் வரைக.

14. MgCl2வை அயனிசேர்மமாகவும், CHசகப்பிணைப்புச் சேர்மமாகவும் காெண்டு, இவ்விரு சேர்மங்களுக்கும் உள்ள ஏதேனும் இரண்டு வேறுபாடுகளை எழுதுக.

அயனிசேர்மம்சகப்பிணைப்புச் சேர்மம்
1. எலக்ட்ரான் இடம் பெயர்வுஎலக்ட்ரான் பங்கீடு
2. அறை வெப்ப நிலையில் திண்மங்கள்வாயு, நீர்மம், மென்மையானவை

15. மந்த வாயுக்கள் ஏன் மந்தத் தன்மையுடன் ்காணப்படுகின்றன?

மந்த வாயுக்கள் அனைத்தும் தன் இணைதிறன் கூட்டில் எட்டு எலக்ட்ரான்களைப் பெற்று மந்தத் தன்மையுடன் காணப்படுகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *