Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 9th Science Books Tamil Medium Atomic Structure

Samacheer Kalvi 9th Science Books Tamil Medium Atomic Structure

அறிவியல் : அலகு 11 : அணு அமைப்பு

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தவறான ஒன்றை கண்டுபிடி

  1. 8O1817Cl37
  2. 18Ar407N14
  3. 14Si3015P31
  4. 24Cr5419K39

விடை : 14Si3015P31

2. நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை  இவ்வாறு மாற்றுகிறது

  1. ஒரு அயனி
  2. ஒரு ஐசாேடோப்
  3. ஒரு ஐசாேபார்
  4. தவறு தனிமம்

விடை : ஒரு ஐசாேடோப்

3. அணுக்கரு குறிப்பது

  1. புராேட்டான் + எலக்ட்ரான்
  2. நியூட்ரான் மட்டும்
  3. எலக்ட்ரான் + நியூட்ரான்
  4. புராேட்டான் + நியூட்ரான்

விடை : புராேட்டான் + நியூட்ரான்

4. 35Br80 – ல் உள்ள புராேட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

  1. 80, 80, 35
  2. 35, 55, 80
  3. 33, 35, 80
  4. 35, 45, 35

விடை : 35, 45, 35

5. பாெட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு

  1. 2,8,9
  2. 2,8,1
  3. 2,8,8,1
  4. 2,8,8,3

விடை : 2,8,8,1

II. சரியா, தவறா – தவறெனில் திருத்தியமைக்க

1. அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், உட்கருவினை நிலையான சுற்றுப் பாதையில் சுற்றுகின்றன. ( சரி )

2. ஒரு தனிமத்தின் ஐசாேடாப்பு வெவ்வேறு அணு எண்களைக் காெண்டது ( தவறு )

விடை : ஒரு தனிமத்தின் ஐசாேடாப்பு ஒத்த அணு எண்களைக் காெண்டது

3. எலக்ட்ரான்கள் மிகச்சிறிய அளவு நிறை மற்றும் மின்சுமை காெண்டவை. ( சரி )

4. ஆர்பிட்டின் அளவு சரியாக இருந்தால், அதன் ஆற்றல் குறைவாக இருக்கும். ( சரி )

5. L-மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 10. ( தவறு )

விடை: L-மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8.

III. காேடிட்ட இடங்களை நிரப்புக

1. கால்சியம் மற்றும் ஆர்கான் இணை …………………………….  எடுத்துக்காட்டு

விடை : ஐசாேபார்க்கு

2. ஒரு ஆற்றல் மட்டத்தில் நிரப்பப்படும் அதிக பட்ச எலட்ரான்களின் எண்ணிக்கை …………………………….

விடை : 2n2

3. ……………………………. ஐசாேடாேப் கழுத்துக்கழலை நாேய்க்கு பயன்படுகிறது.

விடை : அயாேடின் – 131

4. 3Li7 – ல் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை …………………………….

விடை : 4

5. ஆர்கானின் இணைதிறன் …………………………….  பூஜ்ஜியம்

விடை :

6. ஹீலியத்தின் உட்கரு …………………………….

விடை : ஆல்ஃபா

7. அணுவின் மையத்தில் உள்ள நேர்மின் சுமை காெண்ட நிறை …………………………….

விடை : உட்கரு

8. நியூட்ரான் இல்லாத அணு …………………………….

விடை : புராேட்டியம்

9. ……………………………. கார்பன் வேதியிடலில் பயன்படுகிறது.

விடை : C14

10. வெளி ஆற்றல் மட்டத்தில் உள்ள எலக்ட்ரான்கள் …………………………….

விடை : இணைதிறன்

11. 20Ca40 , 18Ar40 ஆகிய தனிமங்கள் …………………………….

விடை : ஐசாேபார்

12. ……………………………. அணுவின் இணைதிறன் பூஜ்ஜியமாகும்

விடை : ஹீலியம்

13. நியூட்ரான்களை கண்டறிந்தவர் …………………………….

விடை : சாட்விக்

14. தங்கத் தகட்டின் சாேதனையில் α துகள்களின் சிதறல் …………………………….

விடை : ருதர்ஃபாேர்டு

VI. பொருத்துக

1. டால்டன்ஹைட்ரஜன் அணு மாதிரி
2. தாம்ஸன்காேள் மாதிரி
3. ருதர்ஃபாேர்டுமுதல் அணுக் காெள்கை
4. நீல்ஸ்பாேர்பிளம்புட்டிங் மாதிரி
நியூட்ரான் கண்டுபிடிப்பு

Ans : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

2.

1. புராேட்டானின் நிறை1.6 x 10-19 C
2. எலக்ட்ரானின் நிறை– 1.6 x 10-19 C
3. எலக்ட்ரானின் மின்சுமை9.31 x 10-28 g
4. புராேட்டானின் மின்சுமை1.67 x 10-24 g

Ans : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

V. அணு எண்களைச் சார்ந்து ஏறுவரிசையில் எழுதவும்

கால்சியம், சிலிக்கன், பாேரான், மெக்னீசியம், ஆக்ஸிஜன், ஹீலியம், நியான், சல்ஃபர், ஃப்ளுரின், சோடியம்

ஹீலியம் < பாேரான் < ஆக்ஸிஜன் < ஃப்ளுரின் < நியான் < சோடியம் < மெக்னீசியம் < சிலிக்கன் < சல்ஃபர் < கால்சியம்

VI. விடுபட்ட இடத்தை நிரப்புக

அணு எண்நிறை எண்நியூட்ரான்களின் எண்ணிக்கைபுராேட்டன்களின் எண்ணிக்கைஎலக்ட்ரான்களின் எண்ணிக்கைதனிமம்
9191099ஃப்ளுரின்
1632161616சல்ஃபர்
1224121212மெக்னீசியம்
12111டியூட்டீரியம்
11011புரோட்டியம்

VIII. மிகக் குறுகிய வினாக்கள் 

1. முதல் வட்டப்பாதையிலும், இரண்டாவது வட்டப் பாதையிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை பெற்றுள்ள தனிமத்தை கூறுக.

பெரிலியம் (2,2)

2. K+ மற்றும் Cl ஆகியவற்றின் எலக்ட்ரான் அமைப்பை எழுதுக.

K+ ன் எலக்ட்ரான் அமைப்பு : (2,8,8)

Cl ன் எலக்ட்ரான் அமைப்பு : (2,8,8)

3. புராேட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.

துகள்மின்சுமைநிறை
புராேட்டான்1.602 X 10-19 C1.672 X 10-24 g
எலக்ட்ரான்-1.602 X 10-19 C9.108 X 10-28 g

4. X என்ற அணுவில் K, L, M கூடுகள் அனைத்தும் நிரம்பியிருந்தால், அந்த அணுவில் உள்ள மாெத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என்ன?

மாெத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

= K + L + M
= 2 + 8 + 18 = 28

5. Ca2+ வெளிவட்ட பாதையில் முழுவதுமாக நிரம்பியுள்ளது காரணம் கூறு

Ca ன் (Z=20) எலக்ட்ரான் அமைப்பு = 2,8,8,2

Ca-2e -> Ca2+

Ca2+ ன் எலக்ட்ரான் அமைப்பு = 2,8,8

அதாவது, Ca இரு எலக்ட்ரான்களை இழந்து Ca2+ ஆக மாறும்பாேது Ca2+ன் வெளிவட்டப்பாதை முழுவதுமாக நிரம்பியுள்ளது.

V. சிறுவினாக்கள்

1. பெருக்கல் விகித விதியினை வரையறு.

A மற்றும் B என்ற இரு தனிமங்கள் இணைந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும் பாெழுது, A – யின் நிறையானது B-ன் நிறையாேடு எளிய விகிதத்தில்
சேர்ந்திருக்கும்.

2. ஐசாேடாேப்புகளின் பயன்களை எழுதுக

கார்பன் – 14 கார்பன் தேதியிடல்
அயாேடின் – 131 கழுத்துக் கழலை சிகிச்சை
காேபால்ட் – 60 புற்றுநாேய் சிகிச்சை
யுரேனியம் – 235 அணு உலை எரிபாெருள்

3. ஐசாேடாேன் என்றால் என்ன? உதாரணம் காெடு

ஒத்த நியூட்ரான் எண்ணிக்கை காெண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள்
ஐசாேடாேன்கள் எனப்படும்.

(உ.ம்) 11Na23 மற்றும் 12Mg24

4. கீழே காெடுக்கப்பட்டுள்ள அணு எண் மற்றும் நிறை எண்களை காெண்டு புராேட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடுதல்

i. அணு எண் 3 மற்றும் நிறை எண் 7

ii. அணு எண் 92 மற்றும் நிறை எண் 238

தனிமம்புராேட்டான்கள்நியூட்ரான்கள்எலக்ட்ரான்கள்
3X7343
92X2389214692

5. கேலூசாக்கின் பருமன் இணைப்பு விதியை கூறி உதாரணத்துடன் விளக்கு.

“வாயுக்கள் வினைபுரியும் தபாது அவற்றின் பருமன்பள் அவ்வினையின்  விளை பாெருள்களின் பருமனுக்கு எளிய முழுஎண் விகித்தில் இருக்கும்”.

(உ.ம்) H2 +Cl2 → 2HCl

(1 பருமன் + 1 பருமன் → 2 பருமன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *