தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்
உரைநடை: சட்டமேதை அம்பேத்கர்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ___________
- இராதாகிருட்டிணன்
- அம்பேத்கர்
- நௌரோஜி
- ஜவஹர்லால் நேரு
விடை : அம்பேத்கர்
2. பூனா ஒப்பந்தம் __________ மாற்ற ஏற்படுத்தப்பட்டது.
- சொத்துரிமையை
- பேச்சுரிமையை
- எழுத்துரிமையை
- இரட்டை வாக்குரிமையை
விடை : இரட்டை வாக்குரிமையை
3. சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் ________
- சமாஜ் சமாத சங்கம்
- சமாத சமாஜ பேரவை
- தீண்டாமை ஒழிப்புப் பேரவை
- மக்கள் நல இயக்கம்
விடை : சமாஜ் சமாத சங்கம்
4. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ______ விருது வழங்கியது.
- பத்மஸ்ரீ
- பாரத ரத்னா
- பத்மவிபூசண்
- பத்மபூசன்
விடை : பாரத ரத்னா
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் ___________
விடை : புத்தரும் அவரின் தம்மமும்
2. அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் ___________
விடை : சுதந்திர தொழிலாளர் கட்சி
3. பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் ___________ சென்றார்.
விடை : இலண்டன்
III. குறு வினா
1. அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக்கொண்டார்?
பீமாராவ் ராம்ஜி படித்த பள்ளியில் மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர், பீமாராவ் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார்.இதனால், பீமாராவ் என்னும் தம் பெயரைப் அம்பேதகர் என்று மாற்றிக் கொண்டார். |
2. தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் மேற்கொண்ட பணிகள் இரண்டினை எழுதுக.
தீண்டாமைக்கு எதிராக, “ஒடுக்கப்பட்ட பாரதம்” என்னும் இதழை 1927-ம் ஆண்டு தொடங்கினார்.மேலும் 1930-ம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தி வெற்றி கொண்டார். |
3. வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது யாது?
வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன்னர் “என் மக்களுக்குகாக நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமே, அதற்காகப் போராடுவேன். அத சமயத்திர் சுயராஜ்ஜிய கோர்க்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன்” என்று கூறினார். |
IV. சிறு வினா
1. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் யாவை?
மக்கள் ஆட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றில் இருந்து இந்திய நடைமுறைகளுக்குப் பொருந்தும் சட்டக் கூறுகளையும், இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, அயர்லாந்து முதலிய நாடுகளின் சட்டங்களையும் ஆராய்ந்து இந்திய நாட்டிற்கான சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கினார். |
2. அம்பேத்கரின் முதல் தேர்தல் வெற்றி குறித்து எழுதுக.
1935-ம் ஆண்டில் மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர் நலனைப் பாதுகாக்க தேர்தலில் போட்டியிட அம்பேத்கர் விரும்பினார்.சுதந்திர தொழிலாளர் கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார்.அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் 15 பேரையும் வெற்றி பெறச் செய்தார். |
V. நெடு வினா
பூனா ஒப்பந்தம் பற்றி எழுதுக
“ஒடுகக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும்” என்று இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்.இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது.அதனால் இதை ஏற்க மறுத்த காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.இதன் விளைவாக 24.09.1931-ல் காந்தியடிகளும், அம்பேத்கரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.அதன்படி, ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.ஒந்த ஒப்பந்தமே பூனா ஒப்பந்தம் எனப்பட்டது. |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை ____________
விடை : அம்பேத்கர்
2. அம்பேத்கர் பிறந்த ஆண்டு ____________
விடை : 1891
3. அம்பேத்கர் 1912-ம் ஆண்டு ____________ பெற்றார்
விடை : இளங்கலைப் பட்டம்
4. அம்பேத்கருக்கு ____________ முனைவர் பட்டம் வழங்கியது
விடை : கொலம்பியா பல்கலைக்கழகம்
5. 1924-ம் ஆண்டு அம்பேத்கர் ____________ அமைப்பை நிறுவினார்.
விடை : ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை
6. 1935-ம் ஆண்டு ____________ வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் இயற்றப்பட்டது
விடை : மாநில சுயசாட்சி
7. முதலாவது வட்ட மேசை மாநாடு நடைபெற்ற இடம் ____________
விடை : 1930
8. ஒடுக்கப்பட்டோர் பாரதம் என்றும் இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு ____________
விடை : 1927
9. அம்பேத்கருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு ____________
விடை : 1990
10. அம்பேத்கர் மறைந்த ஆண்டு ____________
விடை : 1956
II. குறு வினா
1. அம்பேத்கர் எங்கு பிறந்தார்?
அம்பேத்கர் 14.04.1891-ல் மகாராட்டிர மாநிலத்திலுள்ள இரத்தினகிரி மாவட்டத்தில் அம்பவாதே என்னும் ஊரில் பிறந்தார்.
2. அம்பேத்கரின் பெற்றோர் யாவர்?
ராம்ஜி சக்பால் – பீமா பாய்
3. அம்பேத்கரின் பொன் மொழி யாது?
நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று
- முதல் தெய்வம் – அறிவு
- இரண்டாவது தெய்வம் – சுயமரியாதை
- மூன்றாவது தெய்வம் – நன்னடத்தை
III. சிறு வினா
1. எந்தெந்த நாட்டின் சட்டங்களை ஆராய்ந்து இந்திய நாட்டின் சட்டம் இயற்றப்பட்டது?
- இங்கிலாந்து
- கனடா
- ஐக்கிய அமெரிக்கா
- சோவியத் யூனியன்
- அயர்லாந்து
- ஜெர்மனி
- ஆஸ்திரேலியா
- தென் ஆப்பிரிக்கா
2. முதலாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொணடவர் யாவர்?
இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதைப் பற்றி முடிவு செய்ய 1930-ம் ஆண்டு நவம்பர் திங்கள் இங்கிலாந்தில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடைபெற்றது.அம்பேத்கருடன் தமிழகத்தின் இராவ் பகதூர் இரட்டை மலை சீனிவாசனும் கலந்து கொண்டார். |
3. அம்பேத்கர் புத்த சமயம் மீது கொண்ட பற்று பற்றி விவரி
அம்பேத்கர் புத்த சமயக் கொள்கையின் மீது ஈடுபாடு கொண்டவர்.இலங்கையில் நடைபெற்ற புத்த துறவிகள் கருத்தரங்கிலும், உலக பெளத்த சமய மாநாடுகளிலும் கலந்து கொண்டார்.1956-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் நாளில் நாக்பூரில் புத்த சமயத்தில் இணைத்து கொண்டார்.அவர் எழுதிய புத்தரும் அவரின் தம்மும் என்ற புத்தகம் அவரது மறைவுக்கு பின் 1957-ம் ஆண்டு வெளியானது. |