தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்
கவிதைப்பேழை: இளைய தோழனுக்கு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. உன்னுடன் நீயே_____கொள்.
- சேர்நது
- பகை
- கைகுலுக்கிக்
- நட்பு
விடை : கைகுலுக்கிக்
2. கவலைகள்_____அல்ல
- சுமைகள்
- சுவைகள்
- துன்பங்கள்
- கைக்குழந்தைகள்
விடை : கைக்குழந்தைகள்
3. ‘விழித்தெழும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- விழி + எழும்
- விழித்து + எழும்
- விழி + தெழும்
- விழித் + தெழும்
விடை : விழித்து + எழும்
4. ‘போவதில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- போவது + இல்லை
- போ + இல்லை
- போவது + தில்லை
- போவது + தில்லை
விடை : போவது + இல்லை
5. ‘படுக்கையாகிறது’என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- படுக்கை + யாகிறது
- படுக்கையா + ஆகிறது
- படுக்கையா + கிறது
- படுக்கை + ஆகிறது
விடை : படுக்கை + ஆகிறது
6. ‘தூக்கி + கொண்டு’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- தூக்கிகொண்டு
- தூக்குக்கொண்டு
- தூக்கிக்கொண்டு
- தூக்குகொண்டு
விடை : தூக்கிக்கொண்டு
7. ‘விழித்து + எழும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- விழியெழும்
- விழித்தெழும்
- விழித்தழும்
- விழித்துஎழும்
விடை : விழித்தெழும்
II. குறு வினா
1. கவலைகளைக் கவிஞர் எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
கவலைகளைக் கவிஞர் கைக்குழந்தைகளாக உருவகப்படுத்துகிறார்
2. தோல்வி எப்போது தூண்டுகோலாகும்?
நெய்யாகவும், திரியாகவும் நீ மாறினால் தோல்வியும் உனக்கு தூண்டுகோலாகும்.
III. சிறு வினா
பூமி எப்போது பாதையாகும்?
- நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய் படுக்கையாகும்
- நீ பிடித்து நடந்தால் அந்த பூமியே உனக்குப் பாதையாகும்.
கூடுதல் வினாக்கள்
I. பிரித்து எழுதுக
- மட்டுமல்ல = மட்டும் + அல்ல
- போவதில்லை = போவது + இல்லை
- உனக்கொரு = உனக்கு + ஒரு
- தூக்கிக்கொண்டு = தூக்கி + கொண்டு
- கைக்குழந்தைகள் = கை + குழந்தைகள்
- குழந்தைகளல்ல = குழந்தைகள் + அல்ல
- ஒருவருமில்லையா = ஒருவரும் + இல்லையா
- படுக்கையாகிறது = படுக்கை + ஆகிறது
- பாதையாகிறது = பாதை + ஆகிறது
- விழித்தெழும் = விழித்து + எழும்
- நம்முடையது = நம் + உடையது
II. குறு வினா
1. நம்பிக்கை என்பது என்ன?
மனித உடலில் இரண்டு கைகள் உண்டு. உள்ளத்தில் இருக்கவேண்டிய ‘கை’ ஒன்று உண்டு. அதுவே நம்பிக்கை.
2. வாழ்க்கையில் நம்பிக்கை எதற்கு உறுதுணையாக இருக்கிறது?
நம்பிக்கையின் ஆற்றலை உணர்ந்து, வாழ்வுக்கு உறுதுணையாக்கினால் வாழ்வில் வெற்றி பெறலாம்
3. உள்ளத்தில் எதனை தேங்க விடக் கூடாது?
கவலைகளை உள்ளத்தில் தேங்க விடக் கூடாது
4. புத்துணர்வு ஊட்டுபவர் யார்?
- உன்னை பராட்டி புத்துணர்வு அளிக்க ஒருவரும் இல்லை என்று வருந்தாதே!
- உன்னை விட ஒருவரும் உன்னைப் பாராட்டி புத்துணர்வு ஊட்ட முடியாது.
5. பூமியின் கிழக்கு என் மேத்தா எதனைக் குறிப்பிடுகிறார்?
நீ செயல்பட புறப்படும் திசை தான், இனி இந்தப் பூமிக்கு கிழக்கு என்று மேத்தா குறிப்பிடுகிறார்.
6. மு.மேத்தா எழுதியுள்ள நூல்கள் யாவை?
- கண்ணீர்ப் பூக்கள்
- சோழ நிலா
- மகுட நிலா
7. மு. மேத்தா அவர்களுக்கு எதற்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?
மு. மேத்தா எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புக்கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.