Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 1

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 1

தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்

கவிதைப்பேழை: உயிர்க்குணங்கள்

I. சொல்லும் பொருளும்

  1. நிறை – மேன்மை
  2. அழுக்காறு – பொறாமை
  3. பொறை – பொறுமை
  4. மதம் – கொள்கை
  5. பொச்சாப்பு – சோர்வு
  6. இகல் – பகை
  7. மையல் – விருப்பம்
  8. மன்னும் – நிலைபெற்ற
  9. ஓர்ப்பு – ஆராய்ந்து தெளிதல்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அடுத்தவர் வாழ்வைக் கண்டு _____ கொள்ளக்கூடாது.

  1. உவகை
  2. நிறை
  3. அழுக்காறு
  4. இன்பம்

விடை : அழுக்காறு

2. நாம் நீக்க வேண்டியவற்றுள் ஒன்று _____ .

  1. பொச்சாப்பு
  2. துணிவு
  3. மானம்
  4. எளிமை

விடை : பொச்சாப்பு

3. ‘இன்பதுன்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.

  1. இன்பம் + துன்பு
  2. இன்பம் + துன்பம்
  3. இன்ப + அன்பம்
  4. இன்ப + அன்பு

விடை : இன்பம் + துன்பம்

4. ‘குணங்கள் + எல்லாம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. குணங்கள்எல்லாம்
  2. குணமெல்லாம்
  3. குணங்களில்லாம்
  4. குணங்களெல்லாம்

விடை : குணங்களெல்லாம்

III. பொருத்துக

1. நிறைஅ. பொறுமை
2. பொறைஆ. விருப்பம்
3. மதம்இ. மேன்மை
4. மையல்ஈ. கொள்க

விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

IV. குறு வினா

1. மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது யாது?

அறிவுகருணை
அச்சம்அன்பு
சினம்நாணம்
பொறாமைஎளிமை
துணிவுஇன்பம்
பொறுமைகொள்கையைப் பின்பற்றுதல்
மானம்அறம்
மகிழ்ச்சிஊக்கம்
வெற்றிபகை
முதுமைமறதி
ஆசைசோர்வு
இரக்கம்வெறுப்பு
மேன்மைவிருப்பம்
நினைவுஇளமை
துன்பம்ஆராய்ந்து தெளிதல்

ஆகியன மனிதர்களின் பொது இயல்புகள் ஆகும்

2. மனிதர்களிடம் உள்ள பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவனவற்றுள் நற்பண்புகள் யாவை?

அறிவுகருணைஅன்பு
இரக்கம்மேன்மைஎளிமை
பொறுமைஅறம்வெற்றி

கொள்கையைப் பின்பற்றுதல் ஆகியனவாகும்.

V. சிறு வினா

மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன யாவை?

அறிவுகருணை
அச்சம்அன்பு
சினம்நாணம்
பொறாமைஎளிமை
துணிவுஇன்பம்
பொறுமைகொள்கையைப் பின்பற்றுதல்
மானம்அறம்
மகிழ்ச்சிஊக்கம்
வெற்றிபகை
முதுமைமறதி
ஆசைசோர்வு
இரக்கம்வெறுப்பு
மேன்மைவிருப்பம்
நினைவுஇளமை
துன்பம்ஆராய்ந்து தெளிதல்

ஆகியன மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாக் கன்னிப்பாவை நூல் கூறுகிறது.

கூடுதல் வினாக்கள்

I. பிரித்து எழுதுக

  1. அறிவருள் = அறிவு + அருள்
  2. இன்பதுன்பம் = இன்பம் + துன்பம்
  3. குறைவற = குறைவு + அற
  4. குணங்களெல்லாம் = குணங்கள் + எல்லாம்
  5. பூத்தேலோ = பூத்து + ஏலோ
  6. பெண்ணரசி = பெண் + அரசி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. திருப்பாவை என்றும் நூலைப் பாடியவர் ______________

விடை : ஆண்டாள்

2. திருவெம்பாவை நூலை இயற்றியவர் ______________

விடை : மாணிக்கவாசகர்

3. பொறாமை என்னும பொருள் தரும் சொல் ______________

விடை : பொறை

III. சிறு வினா

1. மனிதனின் கடமை என்ன?

ஒவ்வொரு மனிதனிடமும் பலவகையான பண்புகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றுள் நற்பண்புகளும் உண்டு ; தீய பண்புகளும் உண்டு. தீயனவற்றை விலக்கி, நல்லனவற்றை வளர்த்து வாழ்வாங்கு வாழ்வதே மனிதனின் கடமையாகும்.

2. பாவை நூல் யாவை?

  • திருப்பாவை
  • திருவெம்பாவை
  • கன்னிப்பாவை

3. பாவை நோன்பு என்றால் என்ன?

மார்கழி மாதம் பொழுது விடியும் முன்பே, பெண்கள் தூக்கத்திலிருந்து எழுந்து பிற பெண்களை எழுப்பிக்கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கம் பாவை நோன்பு ஆகும்.

4. திருப்பாவை – பற்றிக் குறிப்பிடுக.

திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்கள் எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல் திருப்பாவை ஆகும்.ஆண்டாள் இந்நூலை பாடியுள்ளார்.

5. திருவெம்பாவை – பற்றிக் குறிப்பிடுக.

சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருப்பாவை ஆகும்.இந்நூலை பாடியவர் மாணிக்கவாசகர்.

6. கன்னிப்பாவை நூலை எழுதியவர் யார்?

கன்னிப்பாவை நூலை எழுதியவர் இறையரசன்

7. இறையரசன் – குறிப்பு வரைக

இறையரசனின் இயற்பெயர் சேசுராசா என்பதாகும்கல்லூரி ஒன்றில் தமிழப்பேராசிரியராகப் பணிபுரிந்தார்ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *