Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 3

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 3

தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்

உரைநடை: அயோத்திதாசர் சிந்தனைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அயோத்திதாசர்_____சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

 1. தமிழக
 2. இந்திய
 3. தென்னிந்திய
 4. ஆசிய

விடை : தென்னிந்திய

2. அயோத்திதாசர் நடத்திய இதழ்_____.

 1. ஒருபைசாத் தமிழன்
 2. காலணாத் தமிழன்
 3. அரைப்பைசாத் தமிழன்
 4. அரையணாத் தமிழன்

விடை : ஒருபைசாத் தமிழன்

3. கல்வியோடு _____ கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.

 1. சிலம்பமும்
 2. கைத்தொழிலும்
 3. கணிப்பொறியும்
 4. போர்த்தொழிலும்

விடை : கைத்தொழிலும்

4. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது ________.

 1. ஆழ்ந்த படிப்பு
 2. வெளிநாட்டுப்பயணம்
 3. இதழியல் பட்டறிவு
 4. மொழிப்புலமை

விடை : ஆழ்ந்த படிப்பு

5. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ________.

 1. வானம்
 2. கடல்
 3. மழை
 4. கதிரவன்

விடை : மழை

II. சிறு வினா

1. அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் யாவை?

 • நல்ல சிந்தனை
 • சிறப்பான செயல்
 • உயர்வான பேச்சு
 • உவப்பான எழுத்து
 • பாராட்டத்தக்க உழைப்பு

2. ஒரு சிறந்த வழிகாட்டி எவ்வாறு இருக்கவேண்டும் என அயோத்திதாசர் கூறுகிறார்?

ஒரு சிறந்த வழிகாட்டி இருக்க அயோத்திதாசர் ஒருவர்

 • ஒரு சிறந்த வழிகாட்டி மக்களுள் மாமனிதராக
 • அறிவாற்றல் பெற்றவராக
 • நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும்

3. திராவிட மகாஜன சங்கம் எவற்றுக்காகப் போராடியது?

அயோத்திதாசரின் கொள்கைகளை வலியுறுத்தவும்ஒடுக்கபட்டோர் நலன் பாதுகாக்கவும்சாலைகள் அமைக்கவும்,கால்வாய்களை பராமரிக்கவும்,குடிகளின் பாதுகாப்புக் காவல்துறையினை நியமதித்தல்,பொது மருத்துவமனைகள் அமைத்தல்,சிறார்கள் தோறும் கல்விகூடங்கள் ஏற்படுத்துதல்ஆகியவற்றிற்காக திராவிட மகாஜன சங்கம் போராடியது

III. சிறு வினா

1. அயோத்திதாசரின் இதழ்ப்பணி பற்றி எழுதுக.

1907-ம் ஆண்டு சென்னையில் “ஒரு பைசா தமிழன்” என்னும் வார இதழைக் காலணா விலையில் தொடங்கினார்.ஓராண்டிற்குப் பிறகு அதன் பெயரைத் “தமிழன்” என மாற்றினார்.மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை ஆகியவற்றைத் தெளிவு படுத்துவதே இந்த இதழின் நோக்கம் என்று அயோத்திதாசர் குறிப்பிட்டார்.தமிழன் இதழ் தமிழ்நாடு மட்டுமின்றி மைசூர், கோலார், ஐதராபாத், இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் பகுத்தறிவுச் சிந்தனை, இன உணர்வு, சமுகச் சிந்தனை ஆகியவற்றை ஊட்டினார்.

2. அரசியல் விடுதலை பற்றிய அயோத்திதாசரின் கருத்துகள் யாவை?

விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் அன்று. அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும் என்பது அயோத்திதாசரின் கருத்து.சுயைராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக் கூடாது.மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அது அமைய வேண்டும்.மக்களின் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய, நாடு முன்னேற முடியாது என்று ஆணித்தரமாக் கூறினார் அயோத்திதாசர்.

IV. நெடு வினா

வாழும் முறை, சமத்துவம் ஆகியன பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக

வாழும் முறைஅன்பு கொண்டு வாழ வேண்டும். கோபம், பொறாமை, களவு, பொய் போன்றவற்றை நீக்கி வாழ வேண்டும்.பிற உயிர்களுக்கு துன்பம் செய்யக் கூடாது.அறிவை அழிக்கும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாதுசமத்துவம்அயோத்திதாசர் மக்கள் அனைவரும் சம உரிமை பெற்று சமத்துவமாக வாழ வேண்டும் என்று விரும்பினார்.கல்வி, வேளாண்மை, காவல் துறை போன்ற அனைத்து துறைகளிலும் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் எல்லா வகுப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம்  வழங்கப்பட வேண்டும்.இந்து, பெளத்தம், கிறிஸ்துவர், இஸ்லாமியர், ஆங்கிலோ இந்தியர், ஐரோப்பியர் போன்ற அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் அயோத்திதாசர்

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. அயோத்திதாசரின் இயற்பெயர் __________

விடை : காத்தவராயன்

2. அயோத்திதாசரின் ஆசிரியர் _________

விடை : பண்டிதர்

3. சென்னையில் 1907-ல் _____________ என்ற வார இதழை தொடங்கினார்

விடை : ஒரு பைசாத்தமிழன்

4. ஒரு மனிதனின் அறிவு வளர்ச்சியடைய _____________ அவசியம் என அயோத்திதாசர் கருதினார்

விடை : கல்வி அறிவு

II. குறு வினா

1. அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் எவை?

போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்தினச் சுருக்கம், பாலவாகடம்

2. அயோத்திதாசர் எழுதிய நூல்கள் யாவை

 • புத்தரது ஆதிவேதம்
 • இந்திரர் தேச சரித்திரம்
 • விவாக விளக்கம்
 • புத்தர் சரித்திரப்பா

3. அயோத்திதாசர் எப்போது பிறந்தார்?

அயோத்திதாசர் 20.05.1845-ல் சென்னையில் பிறந்தார்

4. யாரெல்லாம் சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கினார்கள்?

சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை மக்களிடம்
பரவலாக்கியவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஆவர்.

5. தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்கரும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்?

தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்கரும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் அயோத்திதாசர் ஆவார்.

6. திராவிட மகாஜனசங்கம் என்ற அமைப்பினை எதற்காக, எப்போது தோற்றுவித்தார்?

அயோத்திதாசரின் தமது கொள்கைகளை வலியுறுத்தவும், ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை பாதுகாக்கவும் 1892-ல் திராவிட மகாஜன சங்கம் என்ற அமைப்பினை தோற்றுவித்தார்

7. கல்வியோடு கற்க வேண்டியவைகளாக அயோத்திதாசர் கூறுவது எவை?

 • கைத்தொழில்
 • வேளாண்மை
 • தையல்
 • மரம் வளர்த்தல்

8. அயோத்திதாசர் தொடங்கிய வார இதழின் பெயர் என்ன?

ஒரு பைசாத்தமிழன் (1907)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *