Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 3

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 3

தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம்

உரைநடை: கொங்குநாட்டு வணிகம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் _____.

 1. தொல்காப்பியம்
 2. அகநானூறு
 3. புறநானூறு
 4. சிலப்பதிகாரம்

விடை : தொல்காப்பியம்

2. சேரர்களின் தலைநகரம் _____.

 1. காஞ்சி
 2. வஞ்சி
 3. தொண்டி
 4. முசிறி

விடை : வஞ்சி

3. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது _____.

 1. புல்
 2. நெல்
 3. உப்பு
 4. மிளகு

விடை : நெல்

4. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு _____.

 1. காவிரி
 2. பவானி
 3. நொய்யல்
 4. அமராவதி

விடை : அமராவதி

5. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் _____.

 1. நீலகிரி
 2. கரூர்
 3. கோயம்புத்தூர்
 4. திண்டுக்கல்

விடை : கோயம்புத்தூர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் ____________

விடை : சேலம்

2. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் ____________

விடை : சின்னாளப்பட்டி (திண்டுக்கல்).

3. சேரர்களின் நாடு ____________ எனப்பட்டது.

விடை : குடநாடு

4. பின்னலாடை நகரமாக ____________ விளங்குகிறது.

விடை : திருப்பூர்

III. குறுவினா

1. மூவேந்தர்களின் காலம் குறித்து எழுதுக.

மூவேந்தர்களின் காலத்தை வரையறுத்துக் கூறமுடியவில்லை.வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.இதனால் இவர்கள் பன்னெடுங் காலத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை அறியலாம்.

2. கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?

கொங்குநாட்டுப் பகுதியில் காவிரி, பவானி, நொய்யல், ஆன்பொருநை (அமராவதி) ஆகிய ஆறுகள் பாய்கின்றன.

3. ‘தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?

தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊர் திண்டுக்கல்.மலர் உற்பத்தியில் முதலிடம் வகிப்பதால், தமிழ்நாட்டின் ஹாலந்து என்று திண்டுக்கல் போற்றப்படுகிறது.

IV. சிறு வினா

1. கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் யாவை?

வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனி மலை, மேற்கே வெள்ளி மலை, கிழக்கே மதிற்கூரை என இந்நான்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியாக கொங்கு மண்டலம் விளங்கியதாகச் கொங்கு மண்டல சதகம் கூறுகிறது

2. கரூர் மாவட்டம் பற்றிய செய்திகளைச் சுருக்கி எழுதுக.

கரூர் நகரத்திற்கு “வஞ்சிமா நகரம்” என்ற பெயரும் உண்டு.கிரேக்க அறிஞர் தாலமி கரூரைத் தமிழகத்தின் முதன்மை உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை இங்குப் பயிரடப்படுகின்றன.கல்குவாரித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன.கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டமாகக் கரூர் விளங்குகிறது.தோல் பதனிடுதல், சாயம் ஏற்றுதல், சிற்ப வேலைகள் போன்ற தொழில்களும் நடைபெறுகின்றன.பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாகக் கரூர் விளங்குகிறது.

V. நெடு வினா

கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டுவணிகம் குறித்து எழுதுக.

உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கி உள்ளனர். கடல் வணிகத்தில் சேர நாடு சிறப்புற்றிருந்தது.உள்நாட்டு வணிகம்சேர நாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்று இருந்ததுமக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லின் விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்து என்பர்.உப்பும், நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை அகநானூற்றின் 390வது பாடல் மூலம் அறியலாம்வெளிநாட்டு வணிகம்முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது.இங்கிருந்து தான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானை, தந்தங்கள், மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.பொன்மணிமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடுகள் அமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. திரைகடல் ஓடியும் ______________ தேடு

விடை : திரவியம்

2. சேரர்களின் நாடு ______________  எனப்பட்டது

விடை : குடநாடு

3. மூவேந்தர்களில் பழமையானவர்கள் ______________

விடை : சேரர்

4. சேரர்களின் கொடி ______________

விடை : வில்கொடி

5. ______________ மருவி  கோயம்புத்தூர் என மாற்றம் பெற்றது.

விடை : கோவன்புத்தூர்

II. பொருத்துக

1. தூத்துக்குடிஅ. தூங்கா நகரம்
2. சிவகாசிஆ. தீப நகரம்
3. மதுரைஇ. முத்து நகரம்
4. திருவண்ணாமலைஈ. குட்டி ஜப்பான்

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

III. பொருத்துக

1. திண்டுக்கல்அ. மாங்கனி நகரம்
2. திருப்பூர்ஆ. மஞ்சள் சந்தை
3. ஈரோடுஇ. பின்னலாடை நகரம்
4. சேலம்ஈ. ஏழைகளின் ஊட்டி
5. ஏற்காடுஉ. தமிழ்நாட்டின் ஹாலந்து

விடை : 1 – உ, 2 – இ, 3 – ஆ, 4 – அ, 5 – ஈ

IV. குறு வினா

1. முடியுடைய மூவேந்தர்களில் சேரர்களே பழமையானவர்கள் என்று கூறக்காரணம் என்ன.

சேர, சோழ, பாண்டியர் என்னும் தொடரையே இதற்குச் சான்றாகக் காட்டுவர்.

மேலும் தொல்காப்பியமும் “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” எனச் சேரரை முன் வைக்கின்றது.

2. சேரர்கள் சிறுகுறிப்பு வரைக

சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது.

 • தலைநகர் – வஞ்சி
 • பரவல் – மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும் பேரியாற்றங்கரையில் வரை
 • சிறப்பு பெயர் – கருவூர்
 • துறைமுக பட்டினங்கள் – தொண்டி, முசிறி, காந்தளூர்
 • கொடி – விற்கொடி ஆகும்.
 • பூ – பனம்பூ

3. கொங்கு நாட்டுப் பகுதிகள் யாவை?

சேலம், கோவை பகுதிகள் கொங்கு நாட்டுப் பகுதிகள் ஆகும்

4.  கார்மேகக் கவிஞர் இயற்றிய நூல் எது

கார்மேகக் கவிஞர் இயற்றிய நூல் கொங்கு மண்டலச் சதகம்

5. கொங்குநாட்டுப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறுகள் யாவை?

கொங்குநாட்டுப் பகுதியை காவிரி, பவானி, நொய்யல், ஆன்பொருநை என்று அழைக்கப்படும் அமராவதி ஆகிய ஆறுகள் வளம் செழிக்கச் செய்கின்றன.

6. எது விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது?

நெல்லே விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது

7. எந்த அகப்பாடல் மூலம் உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதனை அறியலாம்?

உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை,

நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும் – (அக. 390)

என்னும் அகப்பாடல் மூலம் அறியலாம்.

8. திண்டுக்கல் தமிழ்நாட்டின் ஹாலந்து என்றும் சிறப்பிக்கப்பட காரணம் யாது?

திண்டுக்கல் பகுதி மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது. எனவே தமிழ்நாட்டின் ஹாலந்து என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

9. தமிழகத்தில் மஞ்சள் சந்தை எங்கு நடைபெறுகின்றது.

தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை ஈரோட்டில் நடைபெறுகின்றது.

10. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா எங்கு அமைந்துள்ளது

இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்காவான நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

11. முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவில் எந்த மாவட்டம் முதன்மையான இடம் வகிக்கின்றது. 

முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவில் நாக்கல் முதன்மையான இடம் வகிக்கின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *