Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 2

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 2

TNPSC Group 1 Best Books to Buy

தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது

கவிதைப்பேழை: பாடறித்து ஒழுகுதல்

I. சொல்லும் பொருளும்

  1. அலந்தவர் – வறியவர்
  2. கிளை – உறவினர்
  3. செறாஅமை – வெறுக்காமை
  4. பேதையார் – அறிவற்றவர்
  5. நோன்றல் – பொறுத்தல்
  6. மறாஅமை – மறவாமை
  7. போற்றார் – பகைவர்
  8. பொறை – பொறுமை

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

TNPSC Group 4 Best Books to Buy

1. பசியால் வாடும் _____ உணவளித்தல் நமது கடமை.

  1. பிரிந்தவர்க்கு
  2. அலந்தவர்க்கு
  3. சிறந்தவர்க்கு
  4. உயர்ந்தவர்க்கு

விடை : அலந்தவர்க்கு

2. நம்மை _____ப் மபொறுத்துக் கொள்ள வேண்டும்.

  1. இகழ்வாரை
  2. அகழ்வாரை
  3. புகழ்வாரை
  4. மகிழ்வாரை

விடை : இகழ்வாரை

3. மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும்.

  1. சிறை
  2. அறை
  3. கறை
  4. நிறை

விடை : நிறை

4. ‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. பாட் + அறிந்து
  2. பா + அறிந்து
  3. பாடு + அறிந்து
  4. பாட்டு + அறிந்து

விடை : பாடு + அறிந்து

5. முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. முறையப்படுவது
  2. முறையெனப்படுவது
  3. முறைஎனப்படுவது
  4. முறைப்படுவது

விடை : முறையெனப்படுவது

III. குறு வினா

1. பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?

  • பண்பு என்பது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
  • அன்பு என்பது உறவினர்களோடு வெறப்பின்றி வாழ்தல்.

2. முறை, பொறை என்பவற்றுக்குக கலித்தொகை கூறும் விளக்கம் யாது?

  • முறை என்பது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்
  • பொறை என்பது தம்மை இகழ்பவரையும் பொறுத்தல்.

IV. சிறு வினா

நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.

இல்வாழ்க்கை என்பது ஏழைகளுக்கு உதவி செய்தல்.பாதுகாத்தல் என்பது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.அன்பு என்பது உறவினர்களோடு வெறப்பின்றி வாழ்தல்.அறிவு என்பது அறிவற்றவர்கள் கூறும் சொற்களை பொறுத்தல்.செறிவு என்பது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.நிறை என்பது மறைபொருளை அழியாமல் காத்தல்.முறை என்பது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.பொறை என்பது தம்மை இகழ்பவரையும் பொறுத்தல்.இத்தகைய பண்புகளைப் பின்பற்றி வாழ வேண்டும் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கலித்தொகை ______________ நூல்களுள் ஒன்று.

விடை : எட்டுத்தொகை

2. கலித்தொகையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை ______________

விடை : 150

3. கலித்தொகையை தொகுத்தவர் ______________

விடை : நல்லந்துவனார்

4. நல்லந்துவனார் கலித்தொகையில் ______________ கலி பாடியுள்ளார்

விடை : நெய்தல்

4. கிளை என்பதற்கு ______________ என்று பொருள்

விடை : உறவினர்

II. சிறு வினா

1. ஒவ்வொரு மனிதனும் வளர்த்துக் கொள்ள வேண்டிய உயர்குணங்கள் யாவை?

அன்பு, அறிவு, பண்பு

2. இல்வாழ்வு என்பது என்ன?

இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல் ஆகும்.

3. பொறுமை எனப்படுவது யாது?

பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரை பொறுத்தல் ஆகும்.

4. நீதிமறை எனப்படுவது யாது?

நீதிமறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல் ஆகும்

5. அறிவு என கலித்தொகை கூறுவது என்ன?

அறிவற்றவர்கள் கூறும் சொற்களை பொறுத்து கொள்ளுதலே அறிவு என கலித்தொகை கூறிகிறது

III. குறு வினா

1. நல்லந்துவனார் – குறிப்பு வரைக

  • கலித்தொகையைச் தொகுத்த நல்லந்துவனார் சங்க காலப் புலவர்களுள் ஒருவர்
  • கலித்தொகையின் நெய்தல்கலிப் பாடல்களை இயற்றியவர்

2. கலித்தொகையின் பிரிவுகளை எழுதுக

குறிஞ்சிக்கலிமுல்லைக்கலிமருதக்கலிநெய்தற்கலிபாலைக்கலிஎன்னும் ஐந்து பிரிவுகளை உடையது.

3. கலித்தொகை குறிப்பு வரைக

கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றுகலிப்பா என்னும் பாவகையால் ஆனது150 பாடல்களை கொண்டதுகுறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது.கலித்தொகையை தொகுத்தவர் நல்லந்துவனார்
TNPSC Group 2 Best Books to Buy

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *