Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 1

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 1

தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது

கவிதைப்பேழை: திருக்கேதாரம்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கொட்டிலிருந்து வந்த _____ கரும்பைத் தின்றன.

  1. முகில்கள்
  2. முழவுகள்
  3. வேழங்கள்
  4. வேய்கள்

விடை : வேழங்கள்

2. ‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. கனகச் + சுனை
  2. கனக + சுனை
  3. கனகம் + சுனை
  4. கனம் + சுனை

விடை : கனகம் + சுனை

3. ‘முழவு + அதிர’ என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது _____.

  1. முழவுதிர
  2. முழவுதிரை
  3. முழவதிர
  4. முழவுஅதிர

விடை : முழவதிர

II. குறு வினா

தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?

புல்லாங்குழல் மற்றும் முழுவு ஆகியவற்றைத் தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுகின்றார்

III. சிறு வினா

திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?

பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்.நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும்.இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் என்று சுந்தரர் வருணனை செய்கிறார்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர் _____________

விடை : சுந்தரர்

2. தேவாரத்தைத் தொகுத்தவர் _____________

விடை : நம்பியாண்டார் நம்பி

3. பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை இயற்றியவர் _____________

விடை : சுந்தரர்

4. _____________ எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பேழை பாடலை இயற்றியவர் சுந்தரர்

விடை : திருக்கேதாரம்

5. பதிகம் என்பது _____________ பாடல்களை கொண்டது

விடை : பத்து

6. _____________ பொன் வண்ண நிறமாக இருந்ததாகச் சுந்தரர் குறிப்பிடுகிறார்

விடை : நீர் நிலைகள்

7. _____________ வைரங்களைப் போல இருந்ததாகத் திருகேதாரம் குறிப்பிடுகிறது

விடை : நீர் திவலைகள்

II. சிறு வினா

1. தேவாரத்தை பாடியவர்கள் யார்?

  • திருஞானசம்பந்தர்
  • திருநாவுக்கரசர்
  • சுந்தரர்

2. பதிகம் எத்தனை பாடல்களை கொண்டது?

பதிகம் பத்து பாடல்களை கொண்டது

3. தேவாரம் பெயர்க்காரணம் கூறுக.

  • தே + ஆரம் = இறைவனுக்கு சூடப்படும் மாலை
  • தே + ஆரம் = இனிய இசை பொருந்திய பாடல்

4. கண்ணுக்குக் குளிர்ச்சி தருபவை என்று சுந்தரர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?

பொன் வண்ண நீர்நிலைகள் கண்ணுக்குக் இனிய குளிர்ச்சி தருபவை என்று சுந்தரர் எவற்றைக் குறிப்பிடுகிறார்

5. நீர் நிலைகள் மற்றும் நீர்த் திவலைகள் ஆகியவற்றிற்குக் கூறப்பட்ட உவமை யாது?

  • நீர் நிலைகள் – பொன் வண்ணம்
  • நீர் திவலைகள் – வைரம்

6. மத யானைகளின் செயல்களாக் சுந்தரர் குறிப்பிடுவன யாவை?

நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மத யானைகள் மணிகளை வாரி வாரி வீசும் என்று சுந்தரர் குறிப்பிடுகிறார்.

7. உயிர்கள் அனைத்தையும் இசைவிப்பது எது?

உயிர்கள் அனைத்தையும் இசைவிப்பது இசை

8. இசைக் கருவிகளின் ஓசையோடு பாடல் இணையும் போது அது எவற்றிற்கு விருந்தாகிறது?

இசைக் கருவிகளின் ஓசையோடு பாடல் இணையும் போது அது செவிக்கு மட்டுமன்றி, சிந்தைக்கும் விருந்தாகிறது

9. சுந்தரர் குறிப்பு வரைக

சுந்தரர் தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *