Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 4

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 4

தமிழ் : இயல் 4 : கல்வி கரையில

துணைப்பாடம்: ஆன்ற குடிப்பிறத்தல்

மதிப்பீடு

திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக.

முன்னுரை

ஒரு மாணவனின் உள்ளததில் ஆசிரியர் விதைத்த விதை எவ்வாறு பய்ன தந்நது என்பதை இக்கதை மூலம் காணலாம்.

காணாமல் போன வேட்டி

ஒரு சிற்றூர் பள்ளியின் தலைமை ஆசரியர் அவர். எளிய குடிசை வீடு தான் அவருடைய வீடு. ஒருநாள் காலை எட்டு முழு வேட்டியைத் தும்பைப் பூவைப் போலத் துவைத்து கொடியில் காயப் போட்டு விட்டு, பள்ளிக்குச் சென்றிருந்தார். பள்ளி முடிந்து வந்து பார்க்கும் போது, அந்த வேட்டியைக் காணவில்லை

ஊர் மக்கள் கூற்று

கிணற்றில் பல முறை தண்ணீர் எடுப்பதற்குச் சிகாமணி தான் அந்தப் பக்கம் அடிக்கடி வந்தான். எல்லோரும் வேலைக்கு போய் இருந்த நேரத்தில், அவன் அந்த வேட்டியை எடுத்து இருப்பான். சிகாமணியின் தந்தை பண்டுக் கிழவர். இவனும் ஒரு திருடன். இவன் மகனும் ஒரு திருடன் என்று ஊரார் கூறினார்கள்.

திருக்குறள் வகுப்பு

சிகாமணியின் மகன் சகாதேவன். அவனும் அந்த ஆசிரியரின் பள்ளியில் தான் நான்காம் வகுப்பு படிக்கிறான். வேட்டி விஷயத்தை அந்தப் பையனிடம் அவர் காட்டிக் கொள்ளவில்லை

அன்புடைமை ஆன்ற குடிபிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

என்னும் குறளை ஆசிரியர் நடத்தத் தொடங்கினார். சிறந்த குடியில் பிறப்பது யார் கையில் உள்ளது? எனவே திருவள்ளுவர் அப்படி கூறியிருக்க மாட்டார். அப்பன் திருடனாக இருக்கலாம். மகன் நல்லவனாக இருப்பான் என்று விளக்கம் தந்தார்.

சகாதேவன் செயல்

மதிய உணவிற்காக ஆசிரியர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞன் ஆசிரியரின் வேட்டியைக் கொண்டு வந்தான். இதனைச் சகாதேவன் கொடுத்தததாகவும் தாங்கள் நடத்திய பாடத்தால், அப்பா திருடி வைத்திருந்த உங்களுடைய வேட்டியை அவன் கொடுக்க சொன்னான் என்றான். ஊரார் ஒன்று கூடி விட்டனர்.

ஆசிரியரின் எண்ணம்

சிகாமணி தான் திருடன் என்பதை, அவன் மகன் சகாதேவன் சொல்லி விட்டான். “அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கலாம் வாருங்கள்” என்று ஆசிரியரை ஊரார் அழைத்தனர். சிகாமணிக்கு தண்டனை கிடைத்தால், சகாதேவனுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஆசிரியர் எண்ணினார். ஊரார் எவ்வளவு கூறியும் ஆசிரியர் ஏற்றுக் கொள்ளவில்லை. என் வீட்டில் திருடு போகவில்லை என்று நான் சாட்சியம் சொல்வேன் என்றார். மக்களுக்கு எல்லாம் புரிந்தது.

முடிவுரை

“வள்ளுவரின் குறட்பாக்கள் ஒருவரின் மனதை மாற்றம் செய்யும் என்பதில் ஐயமில்லை” என்பதை இக்கதை வாயிலாக நாம் அறிய முடிகின்றது. உலகப்பொதுமறை கற்று அதன் வழி நடப்போம்.

கூடுதல் வினாக்கள்

1. எது ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் உயர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது

ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் உயர்த்துவதில் கல்வி பெரும்பங்கு வகிக்கிறது.

2. கல்வியின் நோக்கம் யாது?

  • புதிய செய்திகளைக் கற்பது மட்டும் கல்வியன்று.
  • மனிதனின் உள்ளத்தில் புதைந்துகிடக்கும் நற்பண்புகளை வெளிக் கொண்டு வருவதும் அவனது வாழ்வில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதும் கல்வியின் நோக்கங்களாகும்.

3. பி.ச. குப்புசாமி படைப்புகள் யாவை?

ஜெயகாந்தனாேடு பல்லாண்டு, ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *