Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 1

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 1

தமிழ் : இயல் 4 : கல்வி கரையில

கவிதைப்பேழை: கல்வி அழகே அழகு

I. சொல்லும் பொருளும்

  • கலன் – அணிகலன்
  • முற்றை – ஒளிர
  • வேண்டாவாம் – தேவையில்லை

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கற்றவருக்கு அழகு தருவது ________.

  1. தங்கம்
  2. வெள்ளி
  3. வைரம்
  4. கல்வி

விடை : கல்வி

2. ‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

  1. கலன் + லல்லால்
  2. கலம் + அல்லால்
  3. கலன் + அல்லால்
  4. கலன் + னல்லால்

விடை : கலன் + அல்லால்

III. சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. அழகு

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

2. கற்றவர்

  • கல்வி கற்றவர்கள் உலகில் சிறந்தவராய் விளங்குவார்கள்.

3. அணிகலன்

  • மனிதனுக்கு கல்விதான் சிறந்த அணிகலன்

IV. குறுவினா

யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?

கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும்.ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

V. சிறுவினா

நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை.கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

கூடுதல் வினாக்கள்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. குமரகுருபரரின் காலம் ________.

  1. கி.பி. 15
  2. கி.பி. 17
  3. கி.பி. 18
  4. கி.பி. 16

விடை : கி.பி. 17

2. நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள்  ________.

  1. 100
  2. 102
  3. 103
  4. 104

விடை : 102

3. “அழகு” என்பதற்கு பொருள்  ________.

  1. எழில்
  2. வாய்மை
  3. பொய்
  4. நேர்மை

விடை : எழில்

3. “கலன்” என்பதற்கு பொருள்  ________.

  1. அழகு
  2. வனப்பு
  3. அணிகலன்
  4. பாவை

விடை : அணிகலன்

II. எதிர்சொல் தருக

  1. கற்றோர் x கல்லாதோர்
  2. அழகு x அழகற்ற
  3. ஒளி x இருள்
  4. தேவை x தேவையற்ற
  5. சேர்க்கும் x நீக்கும்
  6. படைத்தல் x அழித்தல்

III. “கல்வி அழகே அழகு” என்ற பாடலில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை கூறுக.

மோனைச் சொற்கள் :-

  • கற்றோர் – கல்வி – கலனல்லால்
  • முற்ற – முழுமணி
  • பூணுக்கு – பூண்வேண்டா
  • அழகுக்கு – அழகு

எதுகைச் சொற்கள் :-

  • நலனே – கலனல்லால்
  • அழகுக்கு – அழகு

IV. குறு வினா

1. குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

2. நீதிநெறி விளக்கம் என பெயர் பெறக் காரணம் யாது?

மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுட்டிக் காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.

3. நீதிநெறி விளக்கத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளது?

நீதிநெறி விளக்கத்தில் 102 வெண்பாக்கள் உள்ளது.

V. சிறு வினா

1. மனிதர்கள் பயன்படுத்திய உலோகங்கள் எதனால் செய்யப்பட்டவை?

  • மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள எண்ணற்ற அணிகலன்களைப் பயன்படுத்துகின்றனர்.
  • அவை தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்பு மிக்க உலோகங்களால் செய்யப்பட்டவையாக உள்ளன.

2. குமரகுருபரர் படைத்துள்ள சிற்றிலக்கியங்கள் எவை?

சுந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

3. குமரகுருபரர் – குறிப்பு வரைக

  • குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
  • இவர் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களை படைத்துள்ளார்.
  • சுந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *