Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 2

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 2

TNPSC Group 1 Best Books to Buy

தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை

கவிதைப்பேழை: கோணக்காத்துப் பாட்டு

I. சொல்லும் பொருளும்

  1. முகில் – மேகம்
  2. வின்னம் – சேதம்
  3. கெடிகலங்கி – மிக வருந்தி
  4. வாகு – சரியாக
  5. சம்பிரமுடன் – முறையாக
  6. காலன் – எமன்
  7. சேகரம் – கூட்டம்
  8. மெத்த – மிகவும்
  9. காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

TNPSC Group 4 Best Books to Buy

1. வானில் கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர்.

  1. முகில்
  2. துகில்
  3. வெயில்
  4. கயல்

விடை : முகில்

2. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும்.

  1. பாலனை
  2. காலனை
  3. ஆற்றலை
  4. நலத்தை

விடை : காலனை

3. ‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. விழுந்த + அங்கே
  2. விழுந்த + ஆங்கே
  3. விழுந்தது + அங்கே
  4. விழுந்தது + ஆங்கே

விடை : விழுந்தது + அங்கே

4. ‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. செ + திறந்த
  2. செத்து + திறந்த
  3. செ + இறந்த
  4. செத்து + இறந்த

விடை :  செத்து + இறந்த

5. ‘பருத்தி + எல்லாம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. பருத்திஎல்லாம்
  2. பருத்தியெல்லாம்
  3. பருத்தெல்லாம்
  4. பருத்திதெல்லாம்

விடை : பருத்தியெல்லாம்

III. குறுவினா

1. கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?

எமனைப் போல வந்த பெருமையும், சூழல் காற்றும் கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகும்.

2. புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?

தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகப் புயல் காற்றால் ஒடிந்து விழுந்தன.

3. கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?

சித்தர்கள் வாழும் மலை கொல்லிமலை. அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் புல் அடித்தது.

IV. சிறுவினா

1. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகப் புயல் காற்றால் ஒடிந்து விழுந்தன.

2. கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?

திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு வீழ்ந்தன.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ____________ அடிக்கடி புயலால் தாக்கப்படும் பகுதியாகும்.

விடை : தமிழ்நாடு

2. சேகரம் என்பதன் பொருள் ____________

விடை : கூட்டம்

3. ____________ கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று

விடை : காங்கேய நாடு

4. பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்த நாடு ____________

விடை : காங்கேய நாடு

II. பிரித்து எழுதுக

  1. வீடுகளெல்லாம் = வீடுகள் + எல்லாம்
  2. தென்னம்பிள்ளை = தென்னம் + பிள்ளை
  3. சுவரெல்லாம் = சுவர் + எல்லாம்
  4. தானடந்து = தான் + அடைந்து
  5. நாடெல்லாம் = நாடு + எல்லாம்
  6. செத்திறந்து = செத்து + இறந்து
  7. மார்க்கமான = மார்க்கம் + ஆன
  8. வேகமுடன் =  வேகம் + உடன்

III. குறுவினா

1. புலவர் செ.இராசு தொகுத்த நூல் எது?

பஞ்சக் கும்மிகள்

2. வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய பாடல் யாது?

வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய பாடல் கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டிச் சிந்து

3. புயலால் அடிக்கடி தாக்கப்படும் பகுதி எது?

புயலால் அடிக்கடி தாக்கப்படும் பகுதி தமிழ்நாடு

4. கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?

எமனைப் போல வந்த பெருமையும், சூழல் காற்றும் கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகும்.

5. புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?

தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகப் புயல் காற்றால் ஒடிந்து விழுந்தன.

6. கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?

சித்தர்கள் வாழும் மலை கொல்லிமலை. அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் புல் அடித்தது.

7. பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் புலவர்கள் எத்தகையப் பாடல்களை பாடினார்

  • நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாகப் பாடினார்.
  • பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன.

8. இயற்கை எப்பட்டது?

இயற்கை மிகவும் அழகானது; அமைதியானது; மக்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவது.

9. இயற்கை சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் என்ன நேரிடும்?

சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும்

10. மாடி வீடுகள் எப்படி விழந்தன?

அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன

11. யாரெல்லாம் எப்படி அலறியபடி ஓடினர்?

ஆடவர்கள் மனைவி பிள்ளைகளுடன் “கூ” “கூ” என்று அலறியபடி ஓடினர்

12 எந்த நாட்டில் பருத்திச் செடிகள் சிதைந்தன?

அழவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின

TNPSC Group 2 Best Books to Buy

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *