Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 8th Tamil Books Chapter 1 2

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 1 2

தமிழ் : இயல் 1 : தமிழ் இன்பம்

கவிதைப்பேழை: தமிழ்மொழி மரபு

I. சொல்லும் பொருளும்

  1. விசும்பு – வானம்
  2. மரபு – வழக்கம்
  3. மயக்கம் – கலவை
  4. திரிதல் – மாறுபடுதல்
  5. இருதிணை – உயர்திணை, அஃறிணை
  6. செய்யுள் – பாட்டு
  7. வழாஅமை – தவறாமை
  8. தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)
  9. ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

இளமைப்  பெயர்கள்

புலிபறழ்
சிங்கம்குருளை
யானைகன்று
பசுகன்று
கரடிகுட்டி

ஒலி மரபு

புலிஉறுமும்
சிங்கம்முழங்கும்
யானைபிளிறும்
பசுகதறும்
கரடிகத்தும்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பறவைகள் _________ பறந்து செல்கின்றன.

  1. நிலத்தில்
  2. விசும்பில்
  3. மரத்தில்
  4. நீரில்

விடை : விசும்பில்

2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________.

  1. மரபு
  2. பொழுது
  3. வரவு
  4. தகவு

விடை : மரபு

3. ‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

  1. இரண்டு + திணை
  2. இரு + திணை
  3. இருவர் + திணை
  4. இருந்து + திணை

விடை : இரண்டு + திணை

4. ‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

  1. ஐம் + பால்
  2. ஐந்து + பால்
  3. ஐம்பது + பால்
  4. ஐ + பால்

விடை : ஐந்து + பால்

III. குறுவினா

1. உலகம் எவற்றால் ஆனது?

நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐந்தால் உலகம் ஆனது

2. செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?

செய்யுளில் மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும்

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை ___________ எனப்படும்.

விடை : ஒழுக்கம்

2. மொழிக்குரிய ஒழுங்குமுறை ___________ எனப்படும்.

விடை : மரபு

3. தொல்காப்பியத்தின் ஆசிரியர் ___________ .

விடை : தொல்காப்பியர்

4. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ___________ ஆகும்.

விடை : தொல்காப்பியம்

5. ___________, ___________ உள்ள தொடர்பைப்பற்றித் தொல்காப்பியம் கூறும் நூல்

விடை : செய்யுளுக்கும், மரபுக்கும்

II. குறுவினா

1. தொல்காப்பியம் – குறிப்பு வரைக

தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.இந்நூல் எழுத்து, சாெல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது.ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.

2. தொல்காப்பியத்தின் அதிகாரங்கள் யாவை?

எழுத்து, சாெல், பொருள்

3. தமிழின் மரபு யாது?

உலகத்து பொருள்களை இரு திணையாகவும், ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ் மரபு ஆகும்

4. இவ்வுலக பொருள்களை எவ்வாறு கூறுதல் வேண்டும்?

திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலக பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும்

5. எவ்வகையான சொற்களை செய்யுளில் பயன்படுத்த வேண்டும்?

மரபான சொற்களை செய்யுளில் பயன்படுத்த வேண்டும் தமிழ்மொழிக்கெனச் சில மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகின்றன.

6. செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப்பற்றித் கூறும் நூல் எது?

செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப்பற்றித் தொல்காப்பியம் கூறும் நூல்

7. உயிரளபெடை என்றால் என்ன?

செய்யுளில் ஓசை குறையும்போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துக்கள் ஏழும் அளபெடுக்கும். இது உயிரளபெடை எனப்படும்

III. இளமை பெயர்களை பொருத்துக

1. புலிகன்று
2. சிங்கம்குட்டி
3. பசுகுருளை
4. கரடிபறழ்

விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ

IV. ஒலி மரபுகளை பொருத்துக

1. புலிகதறும்
2. சிங்கம்உறுமும்
3. யானைமுழங்கும்
4. பசுகத்தும்
5. கரடிபிளிறும்

விடை : 1 – ஆ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஈ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *