Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 6th Social Science Books Tamil Medium Understanding Diversity

Samacheer Kalvi 6th Social Science Books Tamil Medium Understanding Diversity

சமூக அறிவியல் : குடிமையில் : பருவம் 1 அலகு 1 : பன்முகத்தன்மையினை அறிவோம்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. இந்தியாவில் ________________ மாநிலங்களும், ______________ யூனியன் பிரரதைங்களும் உள்ளன.

  1. 27, 9
  2. 29, 7
  3. 28, 7
  4. 28, 9

விடை : 29, 7

2. இந்தியா ஒரு ______________________ என்று அழைக்கப்படுகிறது.

  1. கண்டம்
  2. துணைக்கண்டம்
  3. தீவு
  4. இவற்றில் எதுமில்லை

விடை : துணைக்கண்டம்

3. மிக அதிக மழைப்பொழிவுள்ள மெளசின்ராம் __________________ மாநிலத்தில் உள்ளது.

  1. மணிப்பூர்
  2. சிக்கிம்
  3. நாகலாந்து
  4. மேகாலயா

விடை : மேகாலயா

4. கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை?

  1. சீக்கிய மதம்
  2. இஸ்லாமிய மதம்
  3. ஜொராஸ்ட்ரிய மதம்
  4. கன்ஃபூசிய மதம்

விடை : கன்ஃபூசிய மதம்

5. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை ______

  1. 25
  2. 23
  3. 22
  4. 26

விடை : 22

6. _______________ மாநிலத்தில் ஓணம் பண்டிகை காெண்டாடப்படுகிறது

  1. கேரளா
  2. தமிழ்நாடு
  3. பஞ்சாப்
  4. கர்நாடகா

விடை : கேரளா

7. மோகினியாட்டம் ______________ மாநிலத்தில் செவ்வியல் நடனம் ஆகும்.

  1. கேரளா
  2. தமிழ்நாடு
  3. மணிப்பூர்
  4. கர்நாடகா

விடை : கேரளா

8. “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலினை எழுதியவர் __________________ .

  1. இராஜாஜி
  2. வ.உ..சி
  3. நேதாஜி
  4. ஜவகர்லால் நேரு

விடை : ஜவகர்லால் நேரு

9. வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _____________

  1. ஜவகர்லால் நேரு
  2. மகாத்மா காந்தி
  3. அம்பேத்கார்
  4. இராஜாஜி

விடை : ஜவகர்லால் நேரு

10. வி.ஏ.ஸ்மித் இந்தியாவை ________________ என்று அழைத்தார்.

  1. பெரிய ஜனநாயகம்
  2. தனித்துவமான பன்முகத்தன்மை கொண்ட நிலம்
  3. இனங்களின் அருங்காட்சியகம்
  4. மதச்சார்பற்ற நாடு

விடை : இனங்களின் அருங்காட்சியகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒரு பகுதியின் ___________________ நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் கால நிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றன

விடை : பொருளாதார

2. மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் ___________________ மாநிலத்தில் உள்ளது. 

விடை : இராஜஸ்தான்

3. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு  ___________________

விடை : 2004

4. பிஹு திருவிழா ___________________ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது

விடை : அஸ்ஸாம்

III. பொருத்துக:

1. நீக்ரிட்டோக்கள்மதம்
2. கடற்கரை பகுதிகள்இந்தியா
3. ஜொராஸ்ற்றியம்மீன்பிடித்தொழில்
4. வேற்றுமையில் ஒற்றுமைஇந்திய இனம்

விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ

IV. வினாக்களுக்கு விடையளி

1. பன்முகத்தன்மையினை வரையறு.

நாம் ஒவ்வாெருவரும் பல மாெழிகள், உணவு முறைகள், விழாக்கள் முதலியவற்றைப் பின்பற்றுகிறாேம். நமது வாழ்க்கை முறையிலும் வேறுபட்ட பின்புலங்கள், பண்பாடுகள் வழிபாட்டு முறைகளைச் சார்ந்திருக்கிறாேம். இதுவே பன்முகத்தன்மை என அறியப்படும்.

2. பன்முகத்தன்மையின் வகைகள் யாவை?

  • இந்தியாவின் நில அமைப்புகள் மற்றும் வாழ்வியல் முறைகளில் பன்முகத்தன்மை
  • சமூக பன்முகத் தன்மை
  • சமய பன்முகத் தன்மை
  • பண்பாடு பன்முகத் தன்மை

3. இந்தியா ஏன் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது?

ஒரு கண்டத்திற்கான பல்வேறு இயற்கைப் பிரிவுகள் மற்றம் காலநிலைக் கூறுகளை பெற்றிருப்பதால் இந்தியா துணைக்கண்டம் என்ற அழைக்கப்படுகிறது

4. இந்தியாவில் காெண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் எவையேனும் மூன்றை பற்றி எழுதுக.

  • இந்துக்கள் – தீபாவளி பண்டிகை
  • இஸ்லாமியர்கள் – ரம்ஜான் பண்டிகை
  • கிறிஸ்தவர்கள் – கிறிஸ்துமஸ் பண்டிகை

5. இந்தியாவில் புகழ்பெற்ற செவ்வியல் நடனங்களை பட்டியலிடு.

  • பரத நாட்டியம்
  • குச்சிபுடி
  • கதகளி
  • கதக்
  • யக்ஷகானம்
  • ஒடிசி
  • சத்ரியா
  • மன

6. இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை” நிலவும் நாடு என ஏன்  அழைக்கப்படுகிறது?

  • இந்தியா பன்முகத் தன்மை நிறைந்த நாடாக இருப்பினும் நாட்டுப்பற்று என்ற உணர்வால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.
  • இதனால் இந்தியா வேற்றமையில் ஒற்றுமை நிலவும் நாடு என அழைக்கப்படுகிறது.

V. விரிவான விடையளி

1. மாெழிசார் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு பன்முகத்தன்மையினை விவரி

மாெழிசார் பன்முகத்தன்மை

  • இந்தியாவின் 2001-ஆம் ஆண்டு மக்கள் தாெகை கணக்கெடுப்பின்படி, இங்கே 122 முக்கிய மாெழிகளும், 1599 பிற மாெழிகளும் உள்ளன.
  • இதில் திராவிடக் குடும்பத்தின் பழமைமிகு மாெழியாக தமிழ் விளங்குகிறது.

பண்பாட்டு பன்முகத்தன்மை

  • பண்பாடு என்பது மக்களின் மாெழி, உடை, உணவு முறை, சமயம், சமூக பழக்க வழக்கங்கள், இசை, கலை, கட்டடக் கலைகளின் பாரம்பரியத்தை குறிக்கிறது.
  • இந்தியாவின் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரேதசங்களும் தங்களுக்கான உயர்ந்த மரபையும் நுண்கலைச் சிறப்புகளையும் பெற்றுள்ளன

2.  இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளாேம் – கலந்துரையாடுக.

  • இந்தியா பன்முகத் தன்மை நிறைந்த நாடாக இருப்பினும் நாட்டுப்பற்று என்ற உணர்வால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.
  • நம் நாட்டின் தேசியக்கொடி, தேசிய கீதம் ஆகியவை நம் தாய்நாட்டப் பற்றை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது
  • சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற விழாக்கள் நாம் அனைவரும் ஒரே நாட்டினர் என்ற உணர்வையும் நாட்டுப்பற்றினையும் உயிர்பிக்கச் செய்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *