Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 6th Social Science Books Tamil Medium Understanding Disaster

Samacheer Kalvi 6th Social Science Books Tamil Medium Understanding Disaster

சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 3 : பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

I. விடையளிக்க

1. பேரிடர் – விளக்குக.

ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித உயிர் மற்றும் உைடமைக்கு ஆபத்தை விளைவிக்கும்படியான தொடர்ச்சியான இடையூறுகளே பேரிடர் எனப்படுகிறது.

2. பேரிடரின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.

  • இயற்கை பேரிடர்
  • மனிதனால் உண்டாகும் பேரிடர்கள்

என இருபெரும் பிரிவுகளாகப் பேரிடரைப் பிரிக்கலாம்.

இயற்கை பேரிடர்

  • நிலநடுக்கம்
  • எரிமலை
  • சுனாமி
  • சூறாவளி
  • வெள்ளம்
  • நிலச்சரிவு
  • பனிச்சரிவு
  • இடி மற்றும் மின்னல்

மனிதனால் உண்டாகும் பேரிடர்கள்

  • நெருப்பு
  • கட்டடங்கள் இடிந்து போதல்
  • தொழிற்சாலை விபத்துக்கள்
  • போக்குவரத்து விபத்துகள்
  • தீவிரவாதம்
  • கூட்ட நெரிசல

3. இடி, மின்னல்- குறிப்பு வரைக.

  • வளிமண்டல காலநிலையினால் திடீரென்று தொடச்சியாக மின்சாரம் வெளிப்படும் நிகழ்வு இடி ஆகும்.
  • இதனால் திடீர் ஒளியும், அதிரும் ஒலி அலைகளும் ஏற்படுகிறது. இது மின்னல் என்றும் இடி என்றும் அழைக்கப்படுகிறது.

4. நிலச்சரிவு, பனிச்சரிவு – வேறுபடுத்துக.

நிலச்சரிவு

பாறைகள், பாறைச் சிதைவுகள் மண் போன்ற பொருள்கள் சரிவை நோக்கி மொத்தமாகக் கீழே நகர்வது.

பனிச்சரிவு

பெரும் அளவிளான பனி மற்றும் பனிப்பாறை மிக வேகமாக சரிவை நோக்கி வருவது பனிச்சரிவு ஆகும்.

II. ஒரு பத்தியில் விடையளி

1. வெள்ளம் என்றால் என்ன? வெள்ளத்தின் போது செய்யக்கூடியவை எவை?, செய்யக்கூடாதவை எவை?

வெள்ளப் பெருக்கு

அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரையே வெள்ளப்பெருக்கு என்கிறோம். இஃது அவற்றின் கரைகளை அல்லது சிற்றாறுகளின்  கரைகளைத் கடந்து வழிந்தோடிப் பள்ளமான பகுதிகளை மூழ்கடிக்கின்றது.

வெள்ளப் பெருக்கின் போது செய்ய வேண்டியவை

  • மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பினைத் துண்டிக்க வேண்டும்.
  • கழிப்பிடத் துளை மீதும், கழிவுநீர் வெளியேறும் துளை மீதும் மணல் மூட்டைகளை வைக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட அல்லது நன்கு தெரிந்த பாதையில் உடனடியாக வெளியேற வேண்டும்.
  • குடிநீரைக் காய்ச்சிக் குடித்தல் வேண்டும்.
  • பிளிச்சிங் பவுடர் கொண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  • எரிவாயுக் கசிவு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே, தீக்குச்சி மற்றும் மெழுகுவர்தியைப் பயன்படுத்த வேண்டும்.
  • வயிற்றுப் போக்கு இருந்தால் அதிக அளவில் உணவு உண்ணக் கூடாது.
  • நீரில் மிதந்து வரும் பொருட்களை எடுக்க முயற்சிக்கக்கூடாது

வெள்ளப் பெருக்கின் போது செய்யக் கூடாதவை

  • துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை உடனே இணைத்தல் கூடாது.
  • வண்டிகளை இயக்குதல் கூடாது.
  • வெள்ளத்தில் நீந்த முயற்சித்தல் கூடாது.
  • வெள்ளப் பெருக்கு காலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.

2. வெள்ளப் பெருக்கின் வகைகளை விவரி?

திடீர் வெள்ளப் பெருக்கு,

அதிக மழைப் பொழிவின் போது ஆறு மணி நேரத்திற்குள் ஏற்படும் வெள்ளப்பெருக்கு திடீர் வெள்ளப்பெருக்காகும்.

ஆற்று வெள்ளப்பெருக்கு

ஆற்றின் நீர்ப்பிடிப்புப்பகுதிகளில் ஏற்படும் அதிகமான மழைப் பொழிவு அல்லது பனிக்கட்டி உருகுதல் அல்லது இரண்டும் சேர்ந்த சூழல் ஆற்று வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது.

கடற்கரை வெள்ளப்பெருக்கு

சில சமயங்களில் வெள்ளப் பெருக்கானது, சூறாவளி, உயர் ஓதம் மற்றும் சுனாமி ஆகியவற்றோடு தொடர்பு படுத்தப்பட்டு கடற்கரை சமவெளிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.

3. இயற்கை பேரிடர் பற்றி விரிவாக எழுதுக

நிலநடுக்கம்

சிறிய கால அளவில் திடீரென்று பூமியில் ஏற்படக்கூடிய அதிர்வு நிலநடுக்கம் ஆகும். நிலநடுக்கமானது சில வினாடிகளில் இருந்து சில நிமிடங்கள் வரை நீடிக்கலாம். எந்தப் புள்ளியில் நிலநடுக்கம் தோன்றுகிறதோ இப்புள்ளி நிலநடுக்கம் மையம் (focus) எனப்படுகிறது. நிலநடுக்க மையத்திலிருந்து செங்குத்தாகப் புவிப்பரப்பில் காணப்படும் பகுதி மையப்புள்ளி (epicenter) ஆகும்.

எரிமலை

புவியின் உட்பகுதியிலிருந்து சிறிய திறப்பு வழியாக, லாவா சிறிய பாறைகள் மற்றும் நீராவி போன்றவை புவியின் மேற்பரப்பிற்கு உமிழப்படுவதே எரிமலை எனப்படும்.

சுனாமி

நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் மற்றும் கடலடி நிலச்சரிவுகளால் தோற்றுவிக்கப்படும் பேரலையே சுனாமி ஆகும்.

சூறாவளி

அதிக அழுத்தம் உள்ள காற்றால் சூழப்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதியிலிருந்து சூறாவளி உருவாகும்.

வெள்ளம்

மழை பெய்யும் பகுதிகளில் இயல்பான அளவையும் மீறி மிக அதிக அளவில் நீர் வழிந்தோடுவது வெள்ளம் எனப்படும்.

நிலச்சரிவு

பாறைகள், பாறைச் சிதைவுகள் மண் போன்ற பொருள்கள் சரிவை நோக்கி மொத்தமாகக் கீழே நகர்வது

பனிச்சரிவு

பெரும் அளவிளான பனி மற்றும் பனிப்பாறை மிக வேகமாக சரிவை நோக்கி வருவது பனிச்சரிவு ஆகும்.

இடி மற்றும் மின்னல்

வளிமண்டல காலநிலையினால் திடீரென்று தொடச்சியாக மின்சாரம் வெளிப்படும் நிகழ்வு இடி ஆகும். இதனால் திடீர் ஒளியும், அதிரும் ஒலி அலைகளும் ஏற்படுகிறது. இது மின்னல் என்றும் இடி என்றும் அழைக்கப்படுகிறது.

4. மனிதனால் உண்டாகும் பேரிடர்களை விவரி

நெருப்பு

மனிதர்களின் கவனக்குறைவாலும், மின்னல், வறட்சி மற்றும் அதிக வெப்பத்தாலும் மேலும் பிற நடைமுறை காரணிகளாலும் மிகப் பரந்த அளவில் தீ உண்டாகிறது. கட்டடங்கள் இடிந்து போதல் மனிதனின் செயல்பாடுகளால் கட்டடங்கள்  இடிந்து விழுகின்றன.

தொழிற்சாலை விபத்துக்கள்

மனிதத் தவறுகளால் தொழிற்சாலைகளில் ஏற்படும் வேதியியல், உயிரியியல் சார்ந்த விபத்துகள் நிகழ்கின்றன.

(எ.கா. போபால் விஷவாயு கசிவு)

போக்குவரத்து விபத்துகள்

சாலைவிதிகளை மீறுவதாலும், கவனக் குறைவினாலும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

தீவிரவாதம்

சமூக அமைதியின்மை அல்லது கொள்கை வேறுபாடுகள் போன்றவைகள் தீவிரவாதத்திற்கு வழிவகுக்கின்றன.

கூட்ட நெரிசல்

ஓரிடத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதால் ஏற்படும் நெரிசலை, கூட்ட நெரிசல் என்கிறோம். இதனால் ஏற்படும் மிதிபடுதல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக காயமடைதலும் மரணமும் ஏற்படுகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *