Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 4

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 4

தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி

துணைப்பாடம்: ஒருவன் இருக்கிறான்

பாடநூல் வினாக்கள்

கு.அழகிரிசாமியன் “ஒருவன் இருக்கிறான்” சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுதம் கதைமாந்தர் குறித்து எழுதுக

முன்னுரை:-

கு.அழகிரிசாமியின் “ஒருவன் இருக்கிறான்” சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுதம் கதைமாந்தர் வீரப்பன். அவர் தான் வறுமைப்பட்ட போதும் தம் அன்பையும் அருளையும் கொண்டு நட்பைப் போற்றினார்.

அன்பாளர்:-

வீரப்பன் காஞ்சிபுரத்தில் விறகு கடையில் வேலை செய்து வந்தார். அவர் ஏழையாக இருந்தாலும் நண்பன் குப்புசாமி மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அனாதையான குப்புசாமிக்கு அவன் உறவினர்களும் உதவ முன்வரவில்லை. ஆனால் தன்னுடைய வறுமையையும் பொருட்படுத்தாமல் வீரப்பன், குப்புசாமியுடன் மனித நேயத்துடன் இருக்கின்றார்.

கொடையாளர்:-

குப்புசாமி நோய்வாய்ப்பட்டு வேலை இழந்தபோது வீரப்பன் அவரை தன் வீட்டிற்கு அழைத்து வந்து உணவு கொடுப்பார். மேலும் தான் கடன் வாங்கி அதனைக் குப்புசாமிக்குக் கொடுப்பார். சென்னைக்கு செல்லும் ஆறுமுகத்திடம் கடிதம் ஒன்றையும் மூன்று ரூபாயையும் குப்புசாமியிடம் கொடுத்து அனுப்பினார் வீரப்பன்.

பண்பாளர்:-

வீரப்பன் குப்புசாமி குணமடைய நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வேண்டுகிறார். அவருக்கு வேலை இல்லாதபோதும் நண்பர் குப்புசாமிக்கு கொடுக்க ஒருவரிடம் மூன்று ரூபாய் கடன் வாங்கி சென்னைக்கு செல்லும் ஆறுமுகத்திடம் கொடுத்து அனுப்பினார். குப்புசாமியைப் பார்க்க வரலாம் என்றால், இந்த மூன்று ரூபாய் பேருந்துக்கு செலவாகிவிடம் என்பதால் கொடுத்தனுப்புகிறேன். இன்னோரு இடத்திலும் பணம் கேட்டிருப்பதாகவும் கிடைத்தவுடன் குப்புசாமியைப் பார்க்க விரைவாக வருவதாகவும் வீரப்பன் தெரிவித்தார்.

முடிவுரை:-

ஏழ்மையிலும் நட்பைப் பாராட்டி உதவும் வீரப்பன் மனித நேயத்தின் மாமாகுடமாகத் திகழ்கின்றார். அவரின் செயல்பாடுகள் கல் மனதையும் கரைத்து மனிநேயத்தை சுரக்க வைக்கின்றது. ஒருவன் இருக்கிறான், மனித நேயத்திற்குச் சான்றாக அவன் இருக்கின்றான்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. “ஒருவன் இருக்கிறான்” கதையின் ஆசிரியர் …………

  1. அண்ணாதுரை
  2. அழகர்சாமி
  3. அழகிரிசாமி
  4. சுஜாதா

விடை : அழகிரிசாமி

2. அரசுப் பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர் …………..

  1. அண்ணாதுரை
  2. அழகர்சாமி
  3. சுஜாதா
  4. அழகிரிசாமி

விடை : அழகிரிசாமி

3. ………….. வரிசையில் மூத்தவர் அழகிரிசாமி

  1. கரிசல் எழுத்தாளர்கள்
  2. கணையாழியில் எழுதியவர்கள்
  3. மணிக்கொடி
  4. வானம்பாடி

விடை : கரிசல் எழுத்தாளர்கள்

4. அழகிரிசாமி ………………… நாட்டில் படைப்பாளர்களுக்கான படைப்பு பயிற்சி அளித்தார்

  1. இந்தியா
  2. இலங்கை
  3. தாய்லாந்து
  4. மலேசியா

விடை : மலேசியா

5. “ஒருவன் இருக்கிறான் கதை” வெளியான ஆண்டு …………

  1. 1956
  2. 1976
  3. 1966
  4. 1986

விடை : 1966

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *