Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 3

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 3

தமிழ் : இயல் 8 : பெருவழி

கவிதைப்பேழை: காலக்கணிதம்

I. பலவுள் தெரிக.

காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்………

  1. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
  2. என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
  3. இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
  4. என்மனம் இறந்துவிடாது இகழ

விடை : இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

II. குறு வினா

‘கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’

அ) அடி எதுகையை எடுத்தெழுதுக.

ஆ) இலக்கணக் குறிப்பு எழுதுக – கொள்க, குரைக்க

அ) அடி எதுகைகொள்வோர் – உள்வாய்ஆ) இலக்கணக் குறிப்புகொள்க – வியங்கோள் வினைமுற்றுகுரைக்க – வியங்கோள் வினைமுற்று

III. நெடு வினா

காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!

– கண்ணதாசன்

திரண்ட கருத்து:-

கவிஞன் நானே காலத்தை கணிப்பவன். உள்ளத்தில் உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்த ஒரு உருவமாய் அவற்றை நான் படைப்பதால் இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம் பொன்னை விட விலையுயர்ந்த செல்வம் என்னுடைய கருத்துகள். சரியானவற்றை எடுத்துச் சொல்வதும், தவறானவற்றை எதிப்பதும் என் பணி. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை.

மோனை நயம்:-

காட்டுக்கு யானை

பாட்டுக்கு மோனை

செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.

கவிஞன் – கருப்போடு, இவை சரி – இவை தவறாயின்….

மோனை நயம் பெற்று வந்துள்ளது.

எதுகை நயம்:-

மதுரைக்கு வைகை

செய்யுளுக்கு எதுகை

செய்யுளில் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.

கருப்படு – பொருளை – உருப்பட : சீர் எதுகை வந்துள்ளது.

முரண்:-

நாட்டுக்கு அரண்

பாட்டுக்கு முரண்

செய்யுளில் அடியிலோ, சீரிலோ எதிரெதிர் பொருள் தரும் வகையில் தொடுக்கப்படுவது முரண் ஆகம்

ஆக்கல் X அழித்தல் என்று முரண்பட்ட சொற்கள் அமைத்து தொடுந்திருப்பதால் முரண் நயமும் உள்ளது.

இயைபு நயம்:-

அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத்தொடுப்பது இயைபு ஆகும்

…. புகழுடைத் தெய்வம்

…. பொருளென் செல்வம் – இயைபு நயமும் உள்ளது

அணி நயம்:-

கண்ணதாசன் இப்பாடலில், கடவுளுக்கு இணையாக

யானோர் காலக்கணிதம்

நானோர் புகழுடையத் தெய்வம்

என உருவகப்படுத்தி உள்ளதால் இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.

சந்த நயம்:-

சந்தம் தமிழக்குச் சொந்தம் என்பதற்கு ஏற்ப, இப்பாடலில் எண்சீர் கழிநெடிலடி ஆசரிய விருத்தம் இடம் பெற்றுள்ளது. அகவலோசையுடன் இனிய சந்த நயமும் பெற்றுள்ளது.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கவிஞன் _________ காலத்தை வென்றவனாகிறான்.

விடை : காலத்தைக் கணிப்பதால்

2. கண்ணதாசனின் இயற்பெயர் _________

விடை : முத்தையா

3. சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக கண்ணதாசன் _________ பெற்றவர்

விடை : சாகித்திய அகாதெமி விருது

4. _________ மாவட்டத்தில பிறந்தவர் கண்ணதாசன்.

விடை : சிவகங்கை

II. குறு வினா

1. கவிஞன் என்பவன் யார்?

மனம் என்னும் வயலில், சொல்லேர் உழவனாக, சிந்தனை விதையைத் தூவி, மடமைக்களை பறித்து, தத்துவ நீர் பாய்ச்சி, அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன்.

2. கவிஞன் எதனால் காலத்தை வென்றவனாகிறான்?

  • கவிஞன் காலத்தைக் கணிப்பதால் காலத்தை வென்றவனாகிறான்.
  • கண்ணதாசன் எதற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
  • கண்ணதாசன் சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

காலக்கணிதம் – பாடல் வரிகள்

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோ ர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!
செல்வர்தங்கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!
பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்!
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்!
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்!
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மம் இறந்து விடாது!
வளமார் கவிகள் வாக்குமூலங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!
கல்லாய் மரமாய்க் காடுமேடாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்!
*மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *