Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 2

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 2

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்

கவிதைப்பேழை: பூத்தொடுத்தல்

I. பலவுள் தெரிக.

மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

  1. அள்ளி முகர்ந்தால்
  2. தளரப் பிணைத்தால்
  3. இறுக்கி முடிச்சிட்டால்
  4. காம்பு முறிந்தால்

விடை : தளரப் பிணைத்தால்

II. சிறு வினா

நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.

இறுக்கி முடிச்சிட்டால்
காம்புகளின் கழுத்து முறியும்.
தளரப் பிணைத்தால்
மலர்கள் தரையில் நழுவும்.
வாசலில் மரணம் நிற்பதறிந்தும்
வருந்தாமல் சிரிக்கும்
இந்தப் பூவை
எப்படித் தொடுக்க நான்- நவீன கவிதை
கையாலே பூவெடுத்தா – மாரிக்குக்
காம்பழுகிப் போகுமின்னு
விரலாலே பூவெடுத்தா – மாரிக்கு
வெம்பி விடுமென்று சொல்லி
தங்கத் துரட்டி கொண்டு – மாரிக்குத்
தாங்கி மலரெடுத்தார்- நாட்டுப்புறப் பாடல்

விடை:-

நவின கவிதையில்

பூவின் மென்மை, அழகு, நளினத்தன்மை, எதற்கும் வருந்தாமல் சிரிக்கும் மலரைப் பெண்ணோடு ஓப்பிட்டுள்ளார்.

நாட்டுப்புறப் பாடலில்

பெண் தெய்வமாகிய மாரியோடு ஒப்பிட்டுப் பாடப்பட்டுள்ளது.

நவீன கவிதை கருத்துநாட்டுப்புறப் பாடல் கருத்து
பூவைக் இறுக்கி முடிச்சிட்டால் காம்பின் கழுத்து முறிவது போல பெண்களின் கழுத்து முறியும்.மரியாகிய பெண் தெய்வத்திற்குக் கையாலே பூப்பறித்தால் காம்பு அழுகிவிடும் என்று கையாலே பூப்பறிக்கவில்லை.
தளப்பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவுவது போல பெண் தளர்ந்தால் வாழ்வு நழுவும்.விரால் பூப்பறித்தால் பயனற்றதாய் வெம்பிவிடும் என்று விரலால் பூப்பறிக்கவில்லை.
வாசலிலே மரணம் வந்து நின்றாலும் வருந்தாமல் சிரிக்கும் பூவைப் போல பெண்ணும் வருத்தங்கள் வந்தபோது அவற்றைச் சுமையாகக் கருதாமல் கும்பத்தைக் காப்பாள்.மேற்கண்ட காரணத்தால் மாரியாகி பெண் தெயவத்துக்குத் தங்கத் துரட்டி கொண்டு பூப்பறித்தார்.

மேற்கண்ட இரு பாடலிலும் பெண்ணை மலரோடு ஒப்பிட்டுப் பாடுவதை அறிய முடிகிறது.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ________________ மனித வாழ்விற்கு அழகூட்டுபவை

விடை : கலைகள்

2. கவிஞர் உமா மேகஸ்வரி ________________ மாவட்டத்தில் பிறந்தவர்.

விடை : மதுரை

3. கவிஞர் உமா மேகஸ்வரி ________________ வாழ்ந்து வருகிறார்.

விடை : தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில்

II. இலக்கணக் குறிப்பு

  • தளர –  பெயரச்சம்
  • இறுக்கி – வினையெச்சம்

III. பகுபத இலக்கணம்

1. இறுக்கி = இறுக்கு + இ

  • இறுக்கு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

2.  சிரிக்கும் = சிரி + க் + க் + உம்

  • சிரி – பகுதி
  • க் -சந்தி
  • க் – எதிர்கால இடைநிலை
  • உம் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று விகுதி

IV. சிறு வினா

1. கலை எவற்றுடன் தன்னை பிணைத்து கொண்டுள்ளது?

அழகியல், மண்ணுயிர்கள் அனைத்தையும் தம் வாழ்வியல் சூழலுடன் பிணைத்து கொண்டுள்ளது

2. பூக்களை தொடுக்கும் போது இறுக்கி முடிச்சிடுவதாலும், தளரப் பினைப்பதாலும் நிகழ்வது என்ன?

பூக்களை தொடுக்கும் போது

  • இறுக்கி முடிச்சிடுவதால் காம்புகளின் கழுத்து முறியும்.
  • தளரப் பினைப்பதால் மலர்கள் தரையில் நழுவும்.

3. பூத்தொடுத்தல் என்னும் கவிதையில் பூவை என்ற சொல் யாரைக் குறிக்கிறது? அப் பூவைத் தொடுப்பது எப்படி?

  • பூவை என்ற சொல் பெண்ணைக் குறிக்கிறது.
  • மனமாகிய நுட்பமான நூலால் மட்டுமே தொடுக்க முடியும்.

4. கவிஞர் உமா மேகஸ்வரி படைத்துள்ள  கவிதைத் தாெகுதிகளை கூறுக

  • நட்சத்திரங்களின் நடுவே
  • வெறும் பாெழுது
  • கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தாெகுதிகளைப் படைத்துள்ளார்

5. கவிஞர் உமா மேகஸ்வரி பற்றி சிறு குறிப்பு வரைக

  • கவிஞர் உமா மேகஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்.
  • தற்பாேது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாழ்ந்து வருகிறார்.
  • நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பாெழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தாெகுதிகளைப் படைத்துள்ளார்
  • கவிதை, சிறுகதை, புதினம் என்று பல தளங்களில் படைத்து வருகிறார்.

பூத்தொடுத்தல் – பாடல்வரிகள்

இந்தப் பூவை த் தொடுப்பது எப்படி?
சாந்தமானதொரு பிரப ஞ்சத்தைச்
சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்.
இறுக்கி முடிச்சிட்டால்
காம்புகளின் கழுத்து முறியும்.
தளரப் பிணைத்தால்
மலர்கள் தரையில் நழுவும்.
வாசலில் மரணம் நிற்பதறிந்தும்
வருந்தாமல் சிரிக்கும்
இந்தப் பூவை
எப்படித் தொடுக்க நா ன்-
ஒருவேளை,
என் மனமே நூலாகும்
நுண்மையுற்றாலொழிய.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *