Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Tamil Books Chapter 5 3

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 5 3

TNPSC Group 1 Best Books to Buy

தமிழ் : இயல் 5 : மணற்கேணி

கவிதைப்பேழை: திருவிளையாடற் புராணம்

I. சொல்லும் பொருளும்

  • கேள்வியினான் – நூல் வல்லான்
  • கேண்மையினான் – நட்பினன்
  • தார் – மாலை
  • முடி – தலை
  • முனிவு – சினம்
  • அகத்து உவகை – மனமகிழ்ச்சி
  • தமர் – உறவினர்
  • நீபவனம் – கடம்பவனம்
  • மீனவன் – பாண்டிய மன்னன்
  • கவரி – சாமரை ( கவரிமாவின் முடியில் செய்த விசிறியாகிய அரசச் சின்னம்)
  • நுவன்ற – சொல்லிய
  • என்னா – அசைச்சொல்

II. இலக்கணக் குறிப்பு

  • கேள்வியினான் – வினையாலைணையும் பெயர்
  • காடனுக்கும் கபிலனுக்கும் – எண்ணும்மை

III. பகுபத உறுப்பிலக்கணம்

TNPSC Group 4 Best Books to Buy

தணிந்தது = தணி + த் (ந்) + த் + அ +து

  • தணி- பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • அ – சாரியை
  • து – படர்க்கை வினைமுற்று விகுதி

IV. பலவுள் தெரிக.

இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ……… இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ……….

  1. அமைச்சர், மன்னன்
  2. அமைச்சர், இறைவன்
  3. இறைவன், மன்னன்
  4. மன்னன், இறைவன்

விடை : மன்னன், இறைவன்

V. குறு வினா

1. “கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்“

-இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?

  • கழிந்த பெரும் கேள்வியினான் (மிகுந்த கல்வியறிவு உடையவர்) –
  • குலேசபாண்யடின் காதல்மிகு கேண்மையினான் (கபிலரிடம் நட்பு கொண்டவர்) – இடைக்காடனார்

2. அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அமர்ந்தான் = அமர் + த் (ந்) + த் +ஆன்

  • அமர் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

VI. சிறு வினா

மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.

குலேச பாண்டியன் தமிழ் புலமை வாய்ந்தவன்.அவன் அவையில் புலவர் இடைக்காடனார் பாடிய பாடலை மன்னன் பொருட்படுத்தாமல் அவமதித்தான்.இடைக்காடனார் கடம்பவனத்து இறைவனிடம் முறையிட்டார்இறைவன் கடம்பவனம் கோயிலை விட்டு நீங்கி வைகை ஆற்றின் தெற்கே கோயில் உருவாக்கி அமர்ந்தார்.இதையறிந்த மன்னர் யான் என்ன தவறு செய்தேன்? ஏன் இங்கு அமர்நதீர்? என்று வருந்தினான்.இறைவன் இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றமே தவிர, வேறு எந்த தவறும் இல்லை என்றார்.தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாரை அழைத்து மங்கல ஒப்பனை செய்து, பொன் இருக்கையில் அமர்த்தி, பணிந்து வணங்கி தம் தவறைப் பொறுத்தருள வேண்டினான்.

VII. நெடு வினா

இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.

குறிப்புச் சட்டம்மன்னனின் அவையில் இடைக்காடனார்இடைக்காடனாரின் புலமையை அவமதித்தல்இடைக்காடனார் இறைவனிடம் முறையிடுதல்இறைவன் கோவிலை விட்டு வெளியேறுதல்இறைவனிடம் மன்னன் வேண்டுதல்இறைவனின் பதில்பிழையைப் பொறுத்தருள இறைவனிடம் வேண்டுதல்மன்னன் இடைக்காடனாருக்குப் பெருமை செய்தல்மன்னன் புலவரிடம் வேண்டுதல்மன்னனின் அவையில் இடைக்காடனார்:-வேப்பமாலை அணிந்த குலேச பாண்டியன் மிகுந்த கல்வியறிவு உடையவன். இதைக் கேள்வியுற்ற இடைக்காடனார் குலேசனின் அவைக்கு சென்று தான் இயற்றிய கவிதையப் படித்தார்.இடைக்காடனாரின் புலமையை அவமதித்தல்:-வேப்பமாலை அணிந்த குலேச பாண்டியன் மிகுந்த கல்வியறிவு உடையவன். தமிழறியும் பெருமான், அடியார்க்கு நல்நிதி போன்றவன், பொருட்செல்வமும், கல்விச் செல்வமும் உடையவன் என்று கேட்டுணர்நது தாங்கள் முன் சுவை நிரப்பிய கவிதை பாடினார் இடைக்காடனார். பாண்டியன் சிறிதேனும் பாடலைப் பொருட்படுத்தாமல் புலவரின் புலமையை அவமதித்தான்.இடைக்காடனார் இறைவனிடம் முறையிடுதல்:-இறைவா! பாண்டியன் என்னை இகழவில்லை. சொல்லின் வடிவான பார்வதியையும், பொருளின் வடிவான உம்மையும் அவமதித்தான் என்று சினத்துடன் இறைவனிடம் கூறினார்.இறைவன் கோவிலை விட்டு வெளியேறுதல்:-இடைக்காடனாரின் வேண்டுகோளை ஏற்று வைகை ஆற்றின் தெற்கே கோயில் அமைத்து குடி கொண்டார் இறைவன். உடனே கபிலரும் மகிழ்ந்து இடைக்காடனாேராடு வெளியேறினார்.இறைவனிடம் மன்னன் வேண்டுதல்:-இதையறிந்த மன்னன் இறைவனிடம் என் படைகளால், பகைவரால், கள்வரால், விலங்குகளால் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் ஒழுக்கம் குறைந்தாேரா? தவமும், தானமும் சுருங்கியதோ? இல்லறமம், துறவறமும் தத்தம் வழயில் தவறினவோ? தந்தையே நான் அறியேன் என்றார் குலசேகர பாண்டியன்.இறைவனின் பதில்:-“வயல் சூழ்ந்த கடம்ப வனத்தை விட்டு ஒருபோது நீங்க மாட்டோம்.” “இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர உன்னிடம் குற்றம் இல்லை” என்றார். “இடைக்காடன் மீது கொண்ட அன்பினால் இங்கு வந்தோம்” என்றார்.பிழையைப் பொறுத்தருள இறைவனிடம் வேண்டுதல்:-வானிலிருந்து ஒலித்த இறைவனின் சொல் கேட்டான் குலேச பாண்டியன், மகிழ்ந்து, பரம்பொருளே! புண்ணியனே! சிறியவரின் குற்றம் பொறுப்பு பெரியவர்க்குப் பெருமை என்று குற்றத்தைப் பொறுக்க வேண்டினான்.மன்னன் இடைக்காடனாருக்குப் பெருமை செய்தல்:-மன்னன் மாளிகை வாழை, சாமரை இவற்றாலன விதானமும் விளக்கும் உடையது. பூரண கும்பம் மாலை, கொடி இவற்றால் ஒப்பனை செய்யப்பட்டது. புலவர்கள் குழு இடைக்காடனாரை மங்கலாமாக ஒப்பனை செய்து பொன் இருக்கையில் அமர்த்தினர்மன்னன் புலவரிடம் வேண்டுதல்:-மன்னன் புலவர்களிடம், தான் இடைக்காடனாருக்குச் செய்த குற்றத்தைப் பொறுத்து கொள்ள வேண்டும் என்றான். புலவர்களும், நீர் கூறிய அழுதம் போன்ற சொல்லால் எங்கள் சினம் தணிந்து விட்டது என்றார்.

கூடுதல் வினாக்கள்

I. குறு வினா

1. திருவிளையாடற் புராணத்தின் காண்டங்களை கூறுக.

திருவிளையாடற் புராணம் மூன்று காண்டங்களை கொண்டது. அவை

  • மதுரைக் காண்டம்
  • கூடற்காண்டம்
  • திருவாலவாய் காண்டம்

2. திருவிளையாடற் புராணம் எத்தனை படலங்களை கொண்டது?

திருவிளையாடற் புராணம் 64 படலங்களை கொண்டது.

3. பரஞ்சோதி முனிவர் குறிப்பு வரைக

திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர்.17-ம் நூற்றாண்டில் சேர்ந்தவர்சிவபக்தி மிக்கவர்வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி முதலியன இவர் இயற்றிய வேறு நூல்களாகும்.

திருவிளையாடற் புராணம் – பாடல் வரிகள்

இடைக்காடனார் மன்னனின் அவையில் கவிதை படித்தல்கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்
பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென் சொல்
மொழிந்து அரசன் தனைக் காண்டும் எனத் தொடுத்த பனுவலொடு மூரித் தீம் தேன்
வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு தொடுத்து உரைப்பனுவல் வாசித்தான் ஆல்.(2615)
மன்னன் தன் புலமையை மதிக்காமை குறித்து இறைவனிடம் முறையிடல்சந்நிதியில் வீழ்ந் து எழுந்து தமிழ் அறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர்
நல் நிதியே திரு ஆலவா ய் உடை ய நாயகனே நகுதார் வேம்பன்
பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன் என்று புகலக் கேட் டுச்
சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிது முடி துளக்கான் ஆகி.(2617)என்னை இகழ்ந்தனனோ சொல் வடிவா ய் நின்இடம் பிரியா இமையப் பாவை
தன்னை யும் சொல் பொருளான உன்னையுமே இகழ்ந்தனன் என் தன க்கு யாது என்னா
முன்னை மொழிந்து இடைக்காட ன் தணியாத முனிவு ஈர்ப்ப முந்திச் சென்றான்
அன்ன உரை திருச்செவியின் ஊறுபா டு என உறைப்ப அருளின் மூர்த்தி.(2619)
இறைவன் கோவிலை விட்டு நீங்குதல்போனஇடைக் காடனுக்கும் கபிலனுக்கும் அகத்துவகை பொலியுமாற்றான்
ஞானமய மாகியதன் இலிங்கவுரு மறைத் துஉமையாம் நங்கை யோடும்
வானவர்தம் பிரானெழுந்து புறம்போய்த்தன் கோ விலின்நேர் வடபால் வையை
ஆனநதித் தென்பாலோர் ஆலயங்கண்டு அங்கு இனிதின் அமர்ந்தான் மன்னோ.(2620)
கோவிலைவிட்டு நீங்கிய காரணம் அறியாது மன்ன ன் இறைவனை வேண்டுதல்
அல்லதை என் தமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து
எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ் நாட்டில் எய்திற்றாலோ
தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம் தருமம் சுருங்கிற்றாலோ
இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோயான் அறியேன் எந்தாய்! எந்தாய்!.(2629)
இறைவனின் பதில்ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்
நீங்குவம் அல்லேம் கண்டா ய் ஆயினும் நீயும் வேறு
தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே
ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா.(2637)
மன்னன் தன் பிழையைப் பொறுத்து அருளுமாறு இறைவனிடம் வேண்டுதல்பெண்ணினைப் பாகம் கொண்ட பெருந்தகைப் பரம யோகி
விண்ணிடை மொழிந்த மாற்றம் மீனவன் கேட்டு வானோர்
புண்ணிய சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை அன்றோ
எண்ணிய பெரியோர்க்கு என்னா ஏத்தினான் இறைஞ்சினானே .(2638))
மன்னன், புலவருக்கு மரியாதை செய்தல்விதிமுறை கதலி பூகம் கவரிவா ல் விதானம் தீபம்
புதியதோர் நிறைநீர்க் கும்பங் கதலிகை புனைந்த மன்றல்
கதிர்மணி மாடத் தம்பொற் சேக்கைமே ற் கற்றோர் சூழ
மதிபுனை காடன் தன்னை மங்கல அணிசெய் தேற்றி.(2641)
மன்னன், புலவரிடம் மன்னிப்பை வேண்டுதல்புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்
பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்
நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்
தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.(2644)
TNPSC Group 2 Best Books to Buy

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *