தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு
வாழ்வியல்: திருக்குறள்
1. ‘நச்சப் படாதவன்’ செல்வம்’ – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
நச்சப் படாதவன் – பிறருக்கு உதவி செய்யாதவன்
2. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.
கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம் – இன்னிசை அளபெடைகள்
3. பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.
உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் | ஒழுக்கத்தின் எய்துவர் |
ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது. | உயிரினும் ஓம்பப் படும் |
ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் | நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ
4. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பப்பாடு எது?
- கூவிளம் தேமா மலர்
- கூவிளம் புளிமா நாள்
- தேமா புளிமா காசு
- புளிமா தேமா பிறப்பு
விடை : கூவிளம் தேமா மலர்
II. சிறு வினா
வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலோடு நின்றாள் இரவு – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
இப்பாடலில் உவமை அணி பயின்று வந்துள்ளது.
அணி இலக்கணம்:-
உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் ஒரு வாக்கியமாகவும், உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி ஆகும்.
உவமை:-வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிபறி செய்தல்
உவமேயம்:-ஆட்சி அதிகாரத்தை கொண்டு மன்னர் வரி விதித்தல்
உவம உருபு:-போல (வெளிப்படை)
விளக்கம்:-ஆட்சியதிகாரத்தை கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தை கொண்டு வரி விதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது ஆகும்.
திருக்குறள் பற்றிய கவிதை
உரை(றை) ஊற்றி ஊற்றிப் பார்த்தாலும் புளிக்காத பால்! தந்தை தந்த தாய்ப்பால் முப்பால்!– அறிவுமதி |
திருக்குறளும் அணிகளும்
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவுஅணி : உவமையணி |
பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்.அணி: எடுத்துக்காட்டு உவமையணி |
நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.அணி : உவமையணி |
கூடுதல் வினாக்கள்
II. குறு வினா
1. ஒழுக்கம் எதற்கு மேலானதாகப் பேணிக் காக்க வேண்டும்?
ஒழுக்கம் எல்லோர்க்கும் சிறப்பைத் தருவதால் அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்க வேண்டும்.
2. ஒழுக்கமாக வாழ்பவர், ஒழுக்கம் தவறுபவர் எதனை அடைவர்?
ஒழுக்கமாக வாழும் எல்லோரும் மேன்மை அடைவர். ஒழுக்கம் தவறுபவர் அடையக்கூடாத பழிகளை அடைவர்.
3. எவை அழிந்தால் அவற்றால் வரும் துன்பம் அழியும் என வள்ளுவர் கூறுகிறார்?
ஆசை, சினம், அறியாமை அழிந்தால் அவற்றால் வரும் துன்பம் அழியும் என வள்ளுவர் கூறுகிறார்.
4. யார் பகைவர் இன்றி தானே கெடுவான்?
குற்றங்களை கண்டபோது இடித்துக் கூறும் பெரியாரைத் துணைக் கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னனே பகைவர் இன்றி தானே கெடுவான்.
5. எப்பொருளை காண்பது அறிவு என வள்ளூவர் கூறுகிறார்?
எந்தப் பொருள் எந்த இயல்பினதாய்த் தோன்றினாலும், அந்தப் பொருளின் உண்மைப் பொருளை காண்பது அறிவு என வள்ளூவர் கூறுகிறார்.
6. கிடைத்தற்கரிய பெரும்பேறு எது?
பெரியோரைப் போற்றி துணையாக்கி கொள்ளுதலே கிடைத்தற்கரிய பெரும்பேறாகும்.
7. எவரால் பிறருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்-
விடா முயற்சி என்ற உயர்பண்பு கொண்டவர்களால் தான் பிறருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்.
8. இரக்கமில்லா கண்கள் எதனைப் போன்று பயனற்றது?
பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை அதைப் போல இரக்கம் இல்லாத கண்களாலும் பயனில்லை.
9. உலகமே உரிமையுதாகும் எப்போது?
நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும்.
10. ஒருவருக்கு பெருமை தருவது எது?
விரும்பத்தக்க இரக்ககுணம் கொண்டவர்கள் நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் ஏனெனில் பிறர் நன்மை கருத்திக் தமக்கு நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணுவர்.
11. முயற்சி பற்றி வள்ளூவர் கூறுவன யாவை?
முயற்சி செய்தால் ஒருவர்க்குச் செல்வம் பெருகும். முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையே வந்து சேரும்.