தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு
துணைப்பாடம்: கோபல்லபுரத்து மக்கள்
கரிசல் இலக்கியம்
கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம்.
காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையை ச் சார்ந்து வாழ்கிற மானா வாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் இவை.
கரிசல் மண்ணின் படைப்பாளி கு. அழகிரிசாமி கி.ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கியவர்.
கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் கி.ராஜநாராயணன்.
அந்தக் கரிசல் இலக்கியப் பரம்பரை இன்றளவும் தொடர்கிறது பா.செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ.தர்மன், வேல ராமமூர்த்தி, இன்னும் பலரின் மூலமாக…
பாடப்பகுதியிலுள்ள வட்டார வழக்குச் சொற்களை எழுதுக
- பாச்சல் – பாத்தி
- பதனம் – கவனமாக
- நீத்துப்பாகம் – மேல்கஞ்சி
- கடிச்சு குடித்தல் – வாய் வைத்துக் குடித்தல்
- மகுளி – சோற்றுக் கஞ்சி
- வரத்துக்காரன் – புதியவன்
- சடைத்து புளித்து – சலிப்பு
- அலுக்கம் – அழுத்தம் (அணுக்கம்)
- தொலவட்டையில் – தொலைவில்
2. கிராமத்து விருந்தோம்பல் – சிறுகுறிப்பு வரைக
கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் மனசுக்குள் எப்பவும் பசுமையாக இருக்கும். அவர்களது இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் மதிய வேக்காட்டில் நடந்து வந்த களைப்பை மறக்கடிக்கச் செய்யும். பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்பல்.