Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 3

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 3

தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு

கவிதைப்பேழை: மலைபடுகடாம்

I. சொல்லும் பொருளும்

  • அசைஇ – இளைப்பாறி
  • அல்கி – தங்கி
  • கடும்பு – சுற்றம்
  • நரலும் – ஒலிக்கும்
  • ஆரி – அருமை
  • படுகர் – பள்ளம்
  • வயிரியம் – கூத்தர்
  • வேவை – வெந்தது
  • இறடி – திசை,
  • பொம்மல் – சோறு

II. பகுபத உறுப்பிலக்கணம்

1. மலைந்து = மலை + த் (ந்) + த் + உ

  • மலை – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

2. பொழிந்த = பொழி + த் (ந்) + த் + உ

  • பொழி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

III. இலக்கணக் குறிப்பு

  • கெழீஇ, அசைஇ – சொல்லிசை அளபெடை
  • குரூஉக்கண், பரூஉக் – செய்யுளிசை அளபெடை

IV. பலவுள் தெரிக.

“சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது-

  1. புத்தூர்
  2. மூதூர்
  3. பேரூர்
  4. சிற்றூர்

விடை : பேரூர்

V. குறு வினா

இறடிப் பொம்மல் பெறுகுவிர் – தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக

தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.

VI. சிறு வினா

1. முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவு வகைகள் யாவை?

திணைகிடைக்கும் உணவுப் பொருட்கள்
முல்லைவரகு, சாமை
மருதம்செந்நெல், வெண்ணெல்

2. கூத்தனைக் கூத்தன் ஆற்றப்படுத்தலைக் கூத்தாராற்றப்படை எவ்வாறு காட்டுகிறது.

வழிகாட்டல்:-

பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள். இரவில் சேர்ந்து தங்குங்கள். எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள். சிவந்த பூக்கள் கொண்ட அசோக மூங்கில்கள் ஓசை எழுப்பும் மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையங்கள்.

நன்னின் கூத்தர்கள்:-பகைவரே இல்லாமல் ஆட்சி செய்பவன், பகை வந்தாலும் எதிர் கொள்ளும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

இன் சொற்கள்:-

நீங்கள் உரிமையுடன் உங்கள் வீட்டிற்கு போவது போலவே அவர்களுடைய வீட்டிற்குள் நுழையுங்கள். அவர்களும் உங்களிடம், உறவினர் போலப் பழகி இனிய சொற்களைப் பேசுவார்கள்.

உணவு:-

நெய்யில் வெந்த மாசிசம், தினைச் சோறு ஆகியவற்றை உணவாக அளிப்பர். அவற்றை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

VII. நெடு வினா

ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

உணவு

கல்வி

தொழில்

நன்னடை

முடிவுரை

முன்னுரை:-

அன்றைய நிலையில் பொருளுக்காக ஆற்றப்படுத்துவது நிகழ்ந்தது. ஆனால் இன்று ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து விலகி வேறுபடுகின்றது.

உணவு:-

அன்றைய பாணர்கள், கூத்தர்கள் மன்னனிடமோ, வள்ளலிடமோ ஆற்றுப்படுத்தினர். ஆனால் இன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு தரும் அன்னச் சத்திரங்கள் பற்றியும், அன்னதானம் நடைபெறும் இடங்களைப் பற்றியும் ஆற்றுப்படுத்துகின்றனர்.

கல்வி:-

கல்வி கற்க முடியாதவர்களுக்கு  கல்வி உதவித் தொகை அளிக்கும் அரசின் திட்டங்கள் பற்றியும், உதவும் தொண்டு நிறுவனங்கள் குறித்தும் இன்று பல் வழிகாட்டல் செய்கின்றனர்.

தொழில்:-

இன்று வேலைவாய்ப்பின்மை பெருகி வருகின்றது. அதனைப் போக்க அரசும் பொதுத்துறை நிறுவனங்களும் தொழிற்பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லாமல் திண்டாடுவோருக்கு அவை குறித்த வழிகாட்டல்கள் இன்று செய்யப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் ஓரவு போக்கப்படுகின்றது.

நன்னடை:-

சமுதாயத்தில் இன்று வன்முறை பெருகியுள்ளது. இதற்குக் காரணம் சினம், பொறாமை, சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவையே! அவற்றைக் கட்டுப்படுத்த, அனைவருக்கும் மனதை ஒருநிலைப்படுத்த தியானப் பயிற்சி செய் இன்று வழிகாட்டல்கள் செய்கின்றனர்.

முடிவுரை:-

வழிகாட்டல் என்பது நெறிபிறழும் சமுதாயத்தைக் காக்க உதவும் ஒரு இன்றியமையாத கருவியாகும். வழிகாட்டலுக்கு வித்து ஆற்றப்படுத்தல் இலக்கியங்களே சான்றாகும்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ______________ கறுப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கைத் தங்கமாகும்

விடை : கம்பு

2. மலைபடுகடாம் ______________ நூல்களுள் ஒன்று.

விடை : பத்துபாட்டு

3. மலைபடுகடாம் நூலை ______________  எனவும் அழைக்கின்றனர்.

விடை : கூத்தராற்றுப்படை

4. நன்னன் என்னும் குறுநில மன்னன் மலைபடுகடாம் நூலின் ______________  ஆவான்.

விடை : பாட்டுடைத் தலைவன்

5. இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் ______________ மலைபடுகடாம் நூலை பாடியுள்ளார்.

விடை : பெருங்கெளசிகனார்

6. நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்றவர் ______________ 

விடை : கூத்தர்

II. குறு வினா

1. பண்டைத் தமிழர்கள் எவற்றிலெல்லாம் சிறந்து விளங்கினர்?

பண்டைத் தமிழர்கள் பண்பிலும், கலைகளிலும் சிறந்து விளங்கினர்.

2. யாரெல்லாம் கலைத்திறன்களை நிகழ்த்திக்காட்டி மக்களை மகிழ்வித்தனர்?

கூத்தர், பாணர், விறலியர் போன்ற கலைஞர்கள் ஊர் ஊராகச் சென்று தம் கலைத்திறன்களை நிகழ்த்திக்காட்டி மக்களை மகிழ்வித்தனர்.

3. தினைச்சோற்று விருந்து எவற்றை காட்சிபடுத்தகிறது?

தம் கலைத்திறன்களை நிகழ்த்திக்காட்டி மக்களை மகிழ்வித்த கூத்தர், பாணர், விறலியர் போன்ற கலைஞர்களுக்கு மன்னர்களும் வள்ளல்களும் விருந்தோம்பியும் பரிசளித்தும் போற்றினர். அவ்வகையாக விருந்தோம்பிய தன்மையைக் காட்சிப்படுத்துகிறது தினைச்சோற்று விருந்து.

4. மலைப்படுகடாம் பெயர்க்காரணம் கூறுக

மலைக்கு யானையை உருவாகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைப்படுகடாம் எனப்பெயர் பெற்றது.

5. நன்னனின் ஊரில் கூத்தர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் யாவை?

  • நெய்யில் வெந்த மாசித்தின் பொரியல்
  • தினைச் சோறு

6. கறுப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கைத் தங்கம் எது

கம்பு கறுப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கைத் தங்கமாகும்

மலைப்படுகடாம் – பாடல்வரிகள்

அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி,
கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலைச் செப்பம் போகி,அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி
நோ னாச் செருவின் வலம்படு நோன்தா ள்
மான விறல்வேள் வயிரியம் எனினே,நும்இல் போ ல நில்லாது புக்கு,
கிழவிர் போலக் கேளாது கெழீஇ
சேட் புலம்பு அகல இனிய கூறி
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்அடி : 158 – 169

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *