Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 4

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 4

தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை

துணைப்பாடம்: புயலிலே ஒரு தோணி

குறு வினா

1. கப்பித்தான், தொங்கான் பொருள் தருக

  • கப்பித்தான் – தலைமை மாலுமி (கேப்டன்)
  • தொங்கான் – கப்பல்

2. புயலின் பெயர்கள் எதற்கு உதவும்?

புயலுக்கு முன்பு பேரழிவு பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, பேரிடர் மேலாண்மை, பாதிப்புக்
குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.

3. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை எந்த ஆண்டில் தொடங்கியது?

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.

4. புயல்களுக்குப் பெயர் வைப்பது எது?

புதுதில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம்

5. உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் புயல்களுக்கு பெயர் வைக்க எத்தனை பெயரைப் பட்டியலிட்டுள்ளது?

உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.

6. புயலுக்கு பெயர் வழங்கியுள் நாடுகள் எவையெவை?

வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து

7. இந்தியா புயலுக்க கொடுத்த புயலின் பெயர்களை எழுதுக.

பயன்படுத்தப்பட்ட பெயர்கள்

அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்),

கடைசியாக

லெஹர் (அலை).

இன்னும் வரவிருப்பவை

மேக், சாஹர், வாயு.

8. இலங்கை புயலுக்கு தந்த பெயர் எது?

இலங்கை புயலுக்கு தந்த பெயர் ‘கஜா’

9. ‘பெய்ட்டி’ புயல் பெயர் தந்த நாடு எது?

அடுத்து வந்த ‘பெய்ட்டி’ புயல் பெயர் தாய்லாந்து தந்தது.

10. இடம்புரிப் புயல்கள் தாக்கும் இடங்களை யாவை?

வங்கக் கடலில் வீசும் புயலும், அமெரிக்காவை , ஜப்பானை, சீனாவைத் தாக்கும் புயல்களும் இடம்புரிப் புயல்கள்!

11. வலம்புரிப் புயல்கள் தாக்கும் இடங்களை யாவை?

ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள் வலம்புரிப் புயல்கள்!

12. கொரியாலிஸ் விளைவை கண்டுபிடித்தவர் யார்?

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் இந்த விளைவை 1835இல் கண்டுபிடித்தார்.

13. கொரியாலிஸ் விளைவு என்றால் என்ன?

புயலின் இந்த இருவகைச் சுழற்சிக்குக் கொரியாலிஸ் விளைவு என்று பெயர்.

14. பிலவான் எங்குள்ளது

பிலவான் இந்தோனேசியாவில் உள்ளது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *