Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 3

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 3

தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை

கவிதைப்பேழை: முல்லைப்பாட்டு

I. சொல்லும் பாெருளும்

  • நனந்தலை உலகம் – அகன்ற உலகம்
  • நேமி – வலம்புரிச்சங்கு
  • காேடு – மலை
  • காெடுஞ்செலவு – விரைவாகச் செல்லுதல்
  • நறுவீ – நறுமணமுடைய மலர்கள்
  • தூஉய் – தூவி
  • விரிச்சி – நற்சாெல்
  • சுவல் – தாேள்

II. இலக்கணக்குறிப்பு

  • மூதூர் – பண்புத்தாெகை
  • உறுதுயர் – வினைத்தாெகை
  • கைதாெழுது – மூன்றாம் வேற்றுைமத் தாெகை
  • தடக்கை – உரிச்சாெல் தாெடர்

III. பகுபத உறுப்பிலக்கணம்

பாெறித்த – பாெறி + த் + த் +அ

  • பாெறி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயெரச்ச விகுதி

IV. பலவுள் தெரிக

“பாடுஇமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

  1. கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
  2. கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
  3. கடல் நீர் ஒலித்தல்
  4. கடல் நீர் கொந்தளித்தல்

விடை : கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

V. குறு வினா

1. பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

தம்பி அழாதே! அப்பாவும் அம்மாவும் விரைவில் வந்துவாடுவார்கள். வரும்போது உனக்கு விளையாட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு வருவார்கள்.

2. மாஅல் – பொருளும், இலக்கணக் குறிப்பும் தருக

மா அல்
பொருள்திருமால்பேருருவம்
இலக்ககணக்குறிப்புசெய்யுளிசை அளபெடைஉரிச்சொல் தொடர்

VI. நெடு வினா

முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்தியை விவரித்து எழுதுக

குறிப்புச்சட்டம்மழைதெய்வ வழிபாடுகன்றின் வருத்தம்வருந்தாதேமுதுபெண்டிர் தலைவியிடம் கூறியதுமழை:-மேகம் அகன்ற உலகத்தை வளைத்து பெருமழை பொழிகிறது. மாவலி மன்னன் திருமாலுக்கு நீர்வார்த்துத் தரும்போது மண்ணுக்கும், விண்ணுக்கும் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மழை மேகம் ஒலிக்கும் கடலின் குளர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு வலமாய் எழுகிறது. மலையைச் சூழந்து விரைந்து வேகத்துடன் பெரு மழையைப் பொழிகிறது.தெய்வ வழிபாடு:-முது பெண்கள் காவலையுடைய ஊர்பக்கறம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுக்ள நறுமணம் கொண்ட பூக்களைச் சுற்றி ஆரவாரிக்கும். மலர்ந்து முல்லைப் பூவோடு நெல்லையும் சேர்த்து தெய்வத்தின் முன் தூவி வழிபடுவபர். தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நிற்பர்.கன்றின் வருத்தம்:-“சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்உறுதுயர் அலமரல் நோக்கி”சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள்வருந்தாதே:-புல்லை மேய்ந்த உன் தாய்மாரை வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட என் இடையர் இப்பொழுது ஓட்டு வந்து விடுவார் “வருந்தாதே” என்றாள் இடைமகள்.முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது:-இடைமகள் மூலம் நற்சொல்லைக் கேட்டாேம். நின் தலைவன் பகைவரை வென்று திறைப் பொருளோடு வருவது உறுதி. மனத்தடுமாற்றம் கொள்ளாேதே!

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. முல்லைப்பாட்டு _____________ நூல்களுள் ஒன்று.

விடை : பத்துபாட்டு

2. முல்லைப்பாட்டு ___________ அடிகளை கொண்டது

விடை : 103

3. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை கொண்ட நூல் _____________

விடை : முல்லைப்பாட்டு

4. இயற்கைச் சூழல் நமக்குள் _____________  தூண்டுகிறது.

விடை : இனிய உணர்வுகளைத்

5. தமிழர்கள் _____________ இயைந்த வாழ்வைக் காெண்டிருந்தனர்.

விடை : இயற்கையாேடு

II. பொருத்துக

1. நேமிஅ. மலை
2. காேடுஆ. வலம்புரிச்சங்கு
3. விரிச்சிஇ. தாேள்
4. சுவல்ஈ. நற்சாெல்

விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

III. பொருத்துக

1. கைதாெழுதுஅ. வினைத்தாெகை
2. உறுதுயர்ஆ. பண்புத்தாெகை
3. தடக்கைஇ. மூன்றாம் வேற்றுைமத் தாெகை
4. மூதூர்ஈ. உரிச்சாெல் தாெடர்

விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 -ஆ

IV. குறு வினா

1. நப்பூதனார் குறிப்பு வரைக

  • முல்லைப் பாட்டினை பாடியவர்.
  • காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனாவார்.

2. முல்லை நிலத்திற்குரிய பொழுதுகள் யாவை?

  • பெரும்பொழுது – கார்காலம் (ஆவணி, புரட்டாசி)
  • சிறுபொழுது – மாலை.

3. முல்லைப்பாட்டில் இடம் பெற்றுள்ள கருப்பொருள்கள் யாவை?

  • நீீர் – குறுஞ்சுனை நீர், காட்டாறு
  • மரம் – கொன்றை, காயா, குருத்தம்
  • பூ – முல்லை, பிடவம், தோன்றிப்பூ

4. முல்லைப்பாட்டில் இடம் பெற்றுள்ள உரிப்பொருள்கள் யாவை?

இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்)

முல்லைப்பாட்டு – பாடல்வரிகள்

நல்லோர் விரிச்சி கேட்டல்நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை,
அருங்க டி மூதூர் மருங்கில் போகி,
யாழ்இசை இன வண்டு ஆர்ப்ப, நெல் லொடு,
நாழி கொண்ட, நறுவீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,
பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக் கி, ஆய்மக ள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்அடி : 1-17

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *