Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 10th Tamil Books Chapter 1 3

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 1 3

தமிழ் : இயல் 1 : அமுதஊற்று

கவிதைப்பேழை: இரட்டுற மொழிதல்

I. சொல்லும் பொருளும்

  • துய்ப்பது – கற்பது, தருதல்
  • மேவலால் – பொருந்துதல், பெறுதல்

II. குறு வினா

1. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்தக்காட்டுத் தருக.

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.எ.கா, சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான்– இத் தொடர் எவ்வித மாற்றமுமின்றி இரண்டு விதமான பொருளைத் தருகிறது.சீனியில் (சர்க்கரை) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது.சீனிவாசனாகிய திருமால் பாற்கடலில் துயில் கொள்கிறார்.

III. சிறு வினா

தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.

பாடல் அடிகள்தமிழ்கடல்
முத்தமிழ் துய்ப்பதால்இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழாய் வளர்ந்தது.முத்தினை அமிழ்ந்து தருகிறது.
முச்சங்கம் கண்டதால்முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது. வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது.
மெத்த வணிகலமும் மேவதால் ஐம்பெருங்காப்பியங்கள் அணிகலனாய்ப் பெற்றது.மிகுதியான வணிகக் கப்பல்கள் வந்து சென்றது.
நித்தம் அணை கிடந்தே சங்கத்தவர் காக்கசங்கப் பலகையில் அமர்ந்து சங்கப் புலவர்கள் பாதுகாத்தனர்.தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காத்தது.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கடல் மூன்று வகையான ______________ தருகிறது

விடை : சங்கினைத்

2. தமிழ் ______________ அணிகலனாய்ப் பெற்றது.

விடை : ஐம்பெருங்காப்பியங்களை

3. கடல் ______________, ______________ தருகிறது.

விடை : முத்தினையும், அமிழ்தினையும்

4. தமிழழகனாரின் மற்றொரு பெயர் ______________

விடை : சந்தக்கவிமணி

5. தமிழழகனாரின் இயற்பெயர் ______________

விடை : சண்முகசுந்தரம்

6. தமிழழகனாரின் _____________ சிற்றிலக்கிய  நூல்களைப் படைத்துள்ளார்.

விடை : 12

II. குறு வினா

1. ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • சீவகசிந்தாமணி
  • வளையாபதி
  • குண்டலகேசி

2. தமிழ் எப்படி வளர்ந்தது?

தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது

3. தமிழ் எவற்றால் வளர்க்கப்பட்டது;

தமிழ் முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது

4. தமிழ் எவற்றை அணிகலனாய் பெற்றது?

ஐம்பெருங்காப்பியங்கள் என அழைக்கப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றை அணிகலன்களாகப் பெற்றது

5. தமிழ் யாரால் காக்கப்பட்டது?

தமிழானது சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

6. கடல் எவற்றையெல்லாம் தருகிறது?

முத்து, அமிழ்து, வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம்

ஆகியவற்றை தருகிறது

7. கடல் எவை செல்லும்படி இருக்கிறது?

மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது;

8. கடல் தன் அலையால் எதனை தடுத்து நிறுத்திக் காக்கிறது?

கடல் தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.

9. இரட்டுற மொழிதல் அணி என்றால் என்ன?

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.

10. சிலேடைகள் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன?

சிலேடைகள் செய்யுள், உரைநடை, மேடைப்பேச்சு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

11. தமிழ் எவற்றோடெல்லாம் இணைத்து பேசப்படுகிறது?

தமிழ் விண்ணோடும், முகிலோடும், உடுக்களோடும், கதிரவனோடும், கடலோடும் இணைத்து பேசப்படுகிறது

III. சிறு வினா

1. தமிழ் குறித்து தமிழழகனார் கூறுவன யாவை?

தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது.முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

2. கடல் குறித்து தமிழழகனார் கூறுவன யாவை?

கடல், முத்தினையும் அமிழ்தினையும் தருகிறதுவெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறதுமிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது;
தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.

இரட்டுற மொழிதல் – பாடல் வரிகள்

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் -நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு– தனிப்பாடல் திரட்டு– சந்தக்கவிமணி தமிழழகனார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *