சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது ____________________ .
- தூத்துக்குடி
- கோயம்புத்தூர்
- சென்னை
- மதுரை
விடை : சென்னை
2. குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது ____________________.
- சேலம்
- கோயம்புத்தூர்
- சென்னை
- தருமபுரி
விடை : கோயம்புத்தூர்
3. ____________________ என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும்
- வேளாண்மை
- தொழில்
- இரயில்வே
- மேற்கண்ட எதுவுமில்லை
விடை : தொழில்
4. திருப்பூர் ____________________ தொழிலுக்குப் பெயர்பெற்றது.
- தோல் பதனிடுதல்
- பூட்டு தயாரித்தல்
- பின்னலாடை தயாரித்தல்
- வேளாண் பதப்படுத்துதல்
விடை : பின்னலாடை தயாரித்தல்
5. ____________________ இல் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்டது.
- ஓசூர்
- திண்டுக்கல்
- கோவில்பட்டி
- திருநெல்வேலி
விடை : ஓசூர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் தமிழ்நாட்டில் _______________ மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளன.
விடை : வேலூர்
2. சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகள் _____________ ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை : ஏப்ரல் 2020
3. ______________________ என்பவர் புத்தாக்க சிந்தனைகள் மற்றும் வணிக செயல்முறைகளின் புத்தாக்கம் புனைபவர் ஆவார்
விடை : தொழில் முனைவோர்
III. தவறான ஒன்றினை தேர்வு செய்க
1. பின்வருவனவற்றில் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது?
அ) ராணிப்பேட்டை | ஆ) தர்மபுரி |
இ) ஆம்பூர் | ஈ) வாணியம்பாடி |
விடை : தர்மபுரி |
2. பின்வருவனவற்றில் எது தொழில்துறை வளர்ச்சி நிறுவனம் அல்ல?
அ) TIDCO | ஆ) SIDCO |
இ) MEPG | ஈ) SIPCOT |
விடை : MEPG |
IV. பின்வருவனவற்றைப் பொருத்துக.
1. தொழில்முனைவோர் | ஏற்றுமதி செயலாக்க மண்டலம் |
2. MEPZ | கோயம்புத்தூர் |
3. இந்திய ஒழுங்குமுறை | அமைப்பாளர் தொழிற்சாலை |
4. TNPL | அரவங்காடு |
5. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் | கரூர் |
விடை 1-இ , 2-அ, 3-ஈ, 4-உ, 5- ஆ
V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி
1. விவசாயத்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?
- நிலத்தின் இறுதிநிலை உற்பத்தித்திறன் குறைவதால் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடிவதில்லை
- பெருமளவிலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையை நம்பியிருப்பதாலும் ஊதியம் குறைவாக உள்ளது.
2. தொழில்துறை தொகுப்பு என்றால் என்ன?
தொழில் தொகுப்புகள் என்பது பொதுவான சந்தைகள் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுக்கான தேவைகளை பகிர்ந்துகொள்ள வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும்.
3. தொழில் தொகுப்புகள் உருவாவதற்கான வழிகள் யாவை?
- தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. ஒரு சில தொழில் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் குடியேறி நெடுங்காலமாக அங்கு தங்கி இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
- கைத்தறி நெசவுத்தொழில் வளர்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
- சில துறைகளில், ஒரு பெரிய நிறுவனம் நிறுவப்படும்போது, அதன் உள்ளீடு மற்றும் பணிகளின் தேவைகளை கவனித்துக் கொள்வதற்காக தொழில் தொகுப்பு நிறுவனங்கள் தோன்றகூடும்.
- சில நேரங்களில், ஒரு வட்டாரத்திலிருந்து மூலப்பொருள்களைப் பயன்படுத்தி உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கங்கள் முடிவு செய்யலாம், இது தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு வழிவகுக்கும்.
4. தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக.
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்
- 1971இல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது
தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்
- 1970இல் தமிழக அரசால் நம் மாநிலத்தில் சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும்.
- சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற் நுட்ப உதவிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம்
- நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றுமொரு அரசு நிறுவனமாகும்.
5. தற்போது தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் சிக்கல்கள் யாவை?
- தமிழகம், நமது நாட்டின் சிறந்த
தொழில்மயமான மாநிலமாக இருந்த போதிலும்
சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. - வேதிப்பொருள்கள், நெசவுத் துறை மற்றும் தோல் தொகுப்புகள் மூலம் வரும் திரவக் கழிவுகள் நமது சுகாதாரத்தை கெடுக்கிறது.
- இந்த திரவக் கழிவுகள் சேரும் நீர் நிலைகளை மட்டுமல்லாமல் அதையொட்டியுள்ள விவசாய நிறுவனங்களையும் மாசுபடுத்துகிறது.
- உலகளாவிய அளவில் போட்டிப் போடுவதற்காக முதன்மையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதால் நிலையான வேலை வாய்ப்புக்கான குறை ஏற்படுகிறது.
- பணியாளர்களின் தரமானது, இன்றைய காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப் படுவதால் குறைகிறது.
6. தொழில்முனைவோர் என்பவர் யாவர்?
- ஒரு “தொழில் முனைவோர்” என்பவர் புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைகளுக்கும் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.
- இவர்களிடம் சிறந்த நிர்வாகத் திறன்கள், வலிமையான குழுவை அமைக்கும் திறமைகளும் மற்றும் தேவையான தலைமைக்கான பண்புகளும் இருக்கும்.
7. தொழில்முனைவு என்றால் என்ன?
- தொழில் முனைவோர் தங்கள் தொழிலை பெருக்குவதற்கான செயல்முறைகளே தொழில் முனைவு எனப்படும்.
- இவை ஒன்றை உருவாக்குவதற்கும் மேலும் பெரிதுபடுத்துவதற்குமான திறன் ஆகும்.
V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி
1. வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் யாவை?
- சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகாமையில் இருத்தல்.
- துறை சார்ந்த சிறப்பு கவனம். நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான அல்லது பரஸ்பர முறையில் இணைந்திருத்தல்.
- புத்தாக்கத்தினால் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி.
- நம்பிக்கையை எளிதாக்கும் ஒரு சமூக கலாச்சார அடையாளம்
- பல்வேறு திறமையான தொழிலாளர்கள்
- சுய உதவி குழுக்கள் செயல்படுதல்
- வட்டார மற்றும் நகராட்சிகளுக்கு அரசின் ஆதரவு.
போன்றவற்றால் நிறுவனங்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரமாக ஒத்துழைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் அவர்கள் தங்கள் திறனை விரிவுபடுத்த முடியும். போட்டியின் மூலம் அவர்கள் மிகவும் திறமையானவர்களாக மாற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
2. தமிழ்நாட்டில் நெசவுத்தொழில் தொகுப்பு பற்றி எழுதுக?
பருத்தி நெசவு ஆலைகள்
- இந்தியாவில் மிகப்பெரிய நெசவுத் தொழில் துறைகளுக்கு தமிழ்நாடு தாயகமாக விளங்குகிறது. காலனித்துவ காலத்திலிருந்து பருத்தி நெசவுத் தொழில் வளர்ச்சியின் காரணமாக கோயம்புத்தூர் “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என அழைக்கப்படுகிறது.
- தற்போது நெசவு ஆலைகளில் பெரும்பாலானவை கோயம்புத்தூரைச் சுற்றியுள்ளன. நமது நாட்டின் மிகப் பெரிய பருத்தி நெசவு தொழில் உற்பத்தியில் தமிழகம் பெரும்பங்கு
வகிக்கிறது
விசைத்தறி நெசவு
- கோயம்புத்தூரை சுற்றி அருகிலுள்ள பல்லடம் சோமனூர் மற்றும் சிறு நகரங்கள், கிராமங்களில் நன்கு செயல்படும் விசைத்தறி நெசவுத் தொழில் தொகுப்புகள் தங்களது வீடுகளிலேயே சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
- ஈரோடு மற்றும் சேலம் பகுதியிலும் அதிகளவிலான மின்தறி அலகுகள் இருப்பதால் மின்விசைத்தறித் தொழில் மிகவும் பரவலாக உள்ளது.
பின்னலாடை
- திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும். இது நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80%
பங்கினைக் கொண்டுள்ளது. - 1980களின் பிற்பகுதியிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
- இது உள்நாட்டுச் சந்தையில் ஒரு மிகப்பெரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது.
- இந்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலகச் சந்தையில் உலகின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு சக்தி வாய்ந்த தொகுப்பாக இந்த இடம் உள்ளது.
- ஆரம்பத்தில் உள்ளூர் தொழில்முனைவோரால் பெரும்பாலான நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
- தற்போது இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் இங்கு தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளனர்.
வீட்டு அலங்கார பொருள்கள்
- மேசைத்துணி, திரைச்சீலைகள், படுக்கைவிரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்கார பொருள்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது.
- மேலும் பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்திச் செய்யும் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன.
பட்டு மற்றும் கைத்தறி
- பட்டு மற்றும் கைத்தறிப் புடவைகளுக்கு பிரபலமான மதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய கைவினைத் தொகுப்புகளும் உள்ளன.
3. தொழில்மயமாதலுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் வகைகள் பற்றி விரிவாக எழுதுக.
கல்வி
- திறமை வாய்ந்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது.
- நமது மாநிலமானது தொடக்கக் கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண் கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
- இது நாட்டில் மிக அதிகப்படியான தொழில்நுட்ப வல்லுநர்களைத் தருவதிலும் பெயர் பெற்ற இடமாகும்.
- இந்தியாவில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி மையங்கள் போன்றவைகளின் புகலிடமாக தமிழகம் உள்ளது.
உள்கட்டமைப்பு
- மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்மயமாதல் பரவுதலுக்கு மின்சார விநியோகம் சிறப்பான பங்கினை வகிக்கிறது.
- மின்சார விநியோகம் மட்டுமல்லாது, தமிழ்நாடானது மிகச் சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்புக்குப் பெயர் போனது ஆகும்.
- குறிப்பாக கிராமப்புறங்கள் சிறு சாலை வசதிகளால் அருகிலுள்ள சிறு நகரங்களுடனும், பெரு நகரங்களுடனும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
- பொது மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் ஒருங்கிணைந்து கிராமப்புற மற்றும் நகர்புறங்களின் இணைப்பை எளிதாக்கியுள்ளது, சிறு உற்பத்தியாளர்களை சந்தைகளோடு இணைத்து அவர்களுக்கு நற்பலனைக் கொடுக்கிறது.
தொழில்துறை ஊக்குவிப்பு
- கல்வி, போக்குவரத்து மற்றும் ஆற்றல் வாய்ந்த உள்கட்டமைப்புகளுக்கு முதலீடு செய்வது மட்டுமல்லாமல், சிறந்த தொழிற்பிரிவுக்கான தொழிற்சாலை விரிவாக்கங்களை சிறந்தபகுதிகளில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- பொருளாதார சீர்திருத்தத்திற்கு பின் குறிப்பிட்ட காரணிகளான தானியங்கி, தானியங்கிக் கருவிகள், உயிரி தொழில்நுட்பம், செய்தி மற்றும் செய்தித் தொடர்புக்கான பிரிவுகள் ஆகியவை சிறந்த முறையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
- எனவே பெரிய, சிறிய மற்றும் நடுத்தர பிரிவில் மேம்படுத்த உதவும் உள்கட்டமைப்புகளை நாடு முழுவதும் பல இடங்களில் தொழில்துறை மேம்பாட்டு முகமைகளை அரசு நிறுவியுள்ளது.
4. தொழில்முனைவோரின் பங்கிளை பற்றி விளக்குக
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தொழில் முனைவோரின் பங்கு மிக முக்கிய மானதாகும்.
- தொழில் முனைவோர் கிராமப்புற மற்றும் பின்தங்கிய தொழிற்சாலைகளை முன்னேற்றுவதுடன், நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வட்டார ஏற்றதாழ்வுகளை நீக்குகிறார்கள்.
- இவர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தலா வருமானம் உயர்வதற்கு உதவி புரிகிறார்கள்.
- குடிமக்களின் அசையா சேமிப்புகள் மற்றும் நாட்டின் ஏற்றுமதி வியாபாரம் மூலமாக மூலதனத்தைச் செயல்பட வைக்கிறார்கள்.
- தொழில்முனைவோர் கைவினைஞர்கள், தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்குகிறார்கள். இலாபத்தினை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.
- தொழில்முனைவோர், குறைந்த விலையில் சிறந்த தரமான பொருள்களைப் பெற மக்களுக்கு உதவுகின்றனர், இதன் விளைவாக அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.